​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 3 March 2017

சித்தன் அருள் - 602 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


  அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

விதியிலே, ஒரு மனிதனுக்கு, அவன் எத்தனை நல்லவனாக இருந்தாலும்கூட, நல்லவனாக இருந்துவிட்ட அல்லது இருக்கின்ற காரணத்தினாலேயே இறை தரிசனமோ அல்லது சித்தர்கள் தரிசனமோ கிடைக்கவேண்டும் என்பது இல்லை. அல்லது, ஓலை மூலம்தான் சித்தர்களின் வாக்கை அறிந்து முன்னேறவேண்டும் என்ற நிலையும் இல்லை. வேறு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. இஃதொப்ப காலத்திலே பக்தி மார்க்கமும், பரிபூரண சரணாகதி தத்துவமும், அஃதோடு தக்க ஏழைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வதும், அந்த தர்ம குணத்தை எப்படியாவது இறையிடம் போராடி பெற்று, இன்னும் கூறப்போனால், மனித அறிவு ஏற்றுக்கொள்ள முடியாத எத்தனையோ விஷயங்களை நாங்கள் கூறினாலும் அதில் உச்சகட்டமாக இங்கு வருபவர்கள் வெளியில் ஏளனம் செய்வது "ருணம் பெற்று அறம் செய்" என்று நாங்கள் கூறுகின்ற கருத்தை, அதுவும் எல்லோருக்கும் நாங்கள் கூறவில்லை, சிலருக்கு சிலவற்றை மனதிலே வைத்து கூறுகிறோம். அந்த தர்மத்தை, எவனொருவன் தன்முனைப்பு இல்லாமல் செய்கிறானோ அவனுக்கு எஃதும் கூறவேண்டியதே இல்லையப்பா. அந்த தர்மத்தை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு எத்தனை இடர், எதிர்ப்பு, சோதனை, வேதனை வந்தாலும், "நீ தர்மம் செய்தாயே? அவன் உன்னை நன்றாக ஏமாற்றிவிட்டான். அவனைப்போன்ற ஏமாற்றுக்காரனுக்கெல்லாம் நீ ஏனப்பா உதவி செய்கிறாய்?" என்று இன்னொருவன் வந்து குழப்பத்தை ஏற்படுத்தினாலும்கூட "என் கடன் தர்மம் செய்து கிடப்பதே" என்று எவன் தொடர்ந்து தர்மவழியில் வருகிறானோ அவனுக்கு எஃதும் கூறவேண்டாம். இறையே அவனை வழிநடத்தும். அதைதான் நாங்களும் தர்மம், தர்மம், தர்மம் என்று பலருக்கும் பலமுறை கூறுகிறோம். ஆனால் கேட்க விடவேண்டுமே அவனவன் கர்மா!

4 comments:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ருணம் பெற்று??

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ அகத்தியாய சரணம்....ஐயனின் திருவருள் வாக்கை மீண்டும் இன்று பெற்றதால் நிம்மதிபெறுகிறேன்....நன்றி ஐயா.....

    ReplyDelete