​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Sunday, 5 March 2017

சித்தன் அருள் - 604 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

பரந்துபட்ட உலகமும், இந்த பேரண்டமும், நீக்கமற நிறைந்துள்ள அனைத்தும் பரம்பொருள்தான் என்பதை ஒரு மனிதன் நன்றாக உள்வாங்கி, திடமாக நம்பி "எல்லாம் அவன் செயல்"  என்று தன்னை பரிசுத்த மனிதனாக மெல்ல, மெல்ல மாற்றிக்கொண்டால், அப்படி மாற்றிக்கொள்கின்ற மனிதனுக்கு, அப்படி மாற்றிக்கொண்டு "உண்மையாக வாழவேண்டும், உண்மை வழியில் செல்லவேண்டும்" என்று எண்ணுகின்ற மனிதனுக்கு அவன் எங்கிருந்தாலும், இறைவன், எம்போன்ற மகான்கள் மூலமாகவோ, வேறு வழி மூலமாகவோ வழிகாட்டிக் கொண்டேயிருப்பார் அப்பா. அஃதொப்ப ஆத்மாக்களுக்கு யாங்களும் இறைவனருளால் வழிகாட்டிக் கொண்டிருக்கிறோம். இங்கு (குடிலுக்கு) வந்துதான் அவன் வழிமுறைகளைப் பெறவேண்டும் என்பதல்ல. நாங்கள் எத்தனையோ வழிமுறைகளை வைத்திருக்கிறோம். அதில் ஒன்றுதான் ஓலை மூலம் பேசுவது. வேளை வரும்பொழுது வேறு, வேறு மார்க்கங்களையும் நாங்கள் கடைபிடிப்போம்.

3 comments:

  1. ஓம் ஸ்ரீ அகத்திய சித்த குருசுவாமியே சரணம்....

    ReplyDelete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  3. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யா துணை

    ReplyDelete