அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
தேகத்தைப் போற்றவேண்டும். தேகத்தை நன்றாக பேணவேண்டும். தேகத்தை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள வேண்டும். அஃதல்ல. யாங்கள் அடிக்கடி கூறுவதுபோல, 100 ஆண்டுகள் மேலும் வாழ்வதற்கு என்ன வழியோ அதனை தேகத்திற்கு ஒருவன் செய்துகொள்ளலாம், தவறில்லை. ஆனால், அடுத்த கணம் மரணம் வந்தாலும் ஏற்க மனதையும் தயாராக வைத்திருக்கவேண்டும். உடம்பு 100 வயதையும் தாண்டி வாழ்வதற்குண்டான பயிற்சியை மேற்கொண்டு வஜ்ர தேகமாக மாற்றி வைத்து கொள்ளவேண்டும். மனது, எப்பொழுது மரணம் வந்தாலும் அதை ஏற்கும் நிலைக்கு ஆயத்தமாக இருக்கவேண்டும். இதுதான் சித்தர்களின் வழியாகும். இஃதொப்ப சுயநலமற்று, பந்த, பாசங்களில் சிக்காமல், கடமைகளில் இருந்து தவறாமல், கடமைகளை செய்கிறேன் என்று பாசத்தில் வழுக்கி விழாமல், கடமைகளை செய்கிறேன் என்பதற்காக நேர்மை தவறாமல் ஒருவன் தன்னையும் பாதுகாத்துக்கொண்டு தன் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொண்டு மனதை இறைவனின் திருவடியை நோக்கி வைத்துக்கொண்டு சதாசர்வகாலம் அந்த இறை சிந்தனையிலே வாழவேண்டும். ஏன்? ஒருவன் எதை எண்ணுகிறானோ அதுவாகவே மாறிவிடுகிறான். இந்த கருத்து பல மனிதர்கள் அறிந்ததே.
ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
ReplyDelete