​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 7 March 2017

சித்தன் அருள் - 606 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளாலே ஆன்மா லயிக்கின்ற இடம் ஆலயம் என்பார்கள். இஃதொப்ப ஆன்மா என்றால், தன்னுடைய உடலுக்குள் உள்ளே உணரமுடியாமல் இருக்கின்ற உயிர் என்றும், இயக்கம் என்றும் மனிதனால் கருதப்படுகின்ற ஒன்று, என்று வைத்துக்கொள்ளலாம். தொடர்ந்த எண்ணங்களா? தொடர்ந்த சிந்தனை வாதமா ? அல்லது குருதியும், சதையும், எலும்பும் கொண்ட கூட்டமா? இதில் எது ஆத்மா? என்பதை ஒரு மனிதன் என்று உணர்கிறானோ அப்பொழுது அவன் சரியான நேர்பாதைக்கு செல்வதற்கு வாய்ப்பு வரும். பிறர் மீது வெறுப்பு வராது. ஏனென்றால் எல்லா கூட்டிற்குள்ளும் இருப்பது ஆத்மாதான். இதிலே உயர்வு, தாழ்வு ஏதுமில்லை. வினைகள்தான் குறுக்கே மறைத்துக் கொண்டிருக்கின்றது.  அந்த வினைகளை நிஷ்காம்யமாக செயல்களை செய்து, போக்கிக் கொள்ளவேண்டும என்ற உணர்வு வரும். அந்த உணர்வு அனைவருக்கும் வர இறைவனருளால் நல்லாசிகளைக் கூறுகிறோம். 

1 comment:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete