​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 20 March 2017

சித்தன் அருள் - 617 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒருவன் உலகியல் சார்ந்து சுகமாக வாழ்வதற்கு, இறைவனோ, மகான்களோ வழிகாட்டாத வரையில் அவன் எதனையும் ஏற்கப்போவதில்லை என்பது எமக்குத் தெரியும். இறைவன் அருளாலே, நேர்மையான பக்தியும், நேரிய வழியில் வாழ்கின்ற வாழ்க்கையும், தளராத, தடைபடாத ஸ்தல யாத்திரையும், நுணுகி, நுணுகி பார்க்காமல் அள்ளி, அள்ளி தருகின்ற தர்மகுணமும் மட்டுமே, இறையருளை பெறுவதற்கு வழியாகும். ஆனாலும்கூட, இவற்றையெல்லாம் கேட்கின்ற ஆத்மாக்கள் "நடைமுறையில் இவையெல்லாம் சாத்தியமில்லை" என்று தமக்குத்தாமே முடிவு எடுத்துக்கொண்டு வாழ்வதால்தான், அந்த ஆத்மாக்களின் விதி அந்த மதியை அழைத்து செல்கிறது. எனவேதான், தவறான ஆன்மீகவாதிகளின் வழிகாட்டுதல் வழியாக சென்று ஏமாறக்கூடிய நிலையும், ஆன்மீகம் என்றாலே, ஏமாற்றுகின்ற நிலைதான் என்கிற ஒரு எண்ணமும் வந்துவிடுகிறது.

இறைவன் அருளாலே, நோக்கம் தெளிவாகவும், உயர்வாகவும் இருக்கும் பட்சத்திலே ஒரு ஆத்மாவிற்கு வழிகாட்ட, இறைவன் எல்லாவகையிலும் தன் கருணையைக் காட்டுவார், என்பதே மெய்யிலும் மெய்யாகும்.

1 comment:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete