அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
எல்லோருக்கும் பொதுவாக அருளிய அறிவுரை:-
யார் என்ன கூறினாலும், மனக்குழப்பம் அடையாமல், நாங்கள் முன்பே கூறியது போல், தவறை செய்கின்ற மனிதன், தொடர்ந்து தவறுக்கு மேல் தவறு செய்து, பாவத்திற்கு மேல் பாவத்தை சேர்க்கின்ற மனிதன் யார் சொன்னாலும் கேட்கிறானா? யார் சொன்னாலும் தன்னை மாற்றிக்கொள்கிறானா? தவறு செய்கின்ற மனிதனுக்கு இருக்கின்ற உறுதி ஏனடா நல்லது செய்கின்ற உனக்கு (மனிதனுக்கு) இல்லாமல் போகிறது? ஏன் தடுமாற்றம் வருகிறது? ஏன் குழப்பம் வருகிறது? அங்கு இப்படி கூறுகிறார்கள், இங்கு இப்படி கூறுகிறார்கள். இதை இப்படி நம்பவேண்டும், அதை அப்படி நம்பவேண்டும், இங்கு கூறுவதையெல்லாம் ஏற்க முடியவில்லை, என்றெல்லாம் ஏன் குழப்பம் வருகிறது? குழப்பம் வருகிறது என்றாலே பாவங்கள் இன்னும் இருக்கிறது என்பதுதான் பொருள். எனவே தொடர்ந்து அறவழியில், சத்யவழியில் அனைவரும் வர நல்லாசிகள்.
[ வணக்கம் அகத்தியர் அடியவர்களே. தவிர்க்க முடியாத காரணத்தால், ஒரு வார இடைவேளைக்குப்பின், "அகத்தியரின் இன்றைய அருள்வாக்கை" தொடர்கிறேன். பொருத்தருளக. ஓம் அகத்தீசாய நமஹ! ]
ஐயா வணக்கம்
ReplyDeleteதங்கள் பதிவுக்கு நன்றி
ஓம் சரவணபவ
ஓம் லோபமுத்ரா சமேத அருள்மிகு அகத்தியர் அம்மனே துணை
ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
ReplyDeleteஐயா ஓம் ஶ்ரீ அகத்திய பெருமான் லோபா முத்திரை தாயார் திருவடிகள் போற்றி
ReplyDeleteஓம் ஸ்ரீ அகத்தியாய நமஹ
ReplyDelete