அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
"இறைவன் அருளாலே எம்மைப் பார்த்து ‘ஒரு தர்ம காரியம் செய்ய வேண்டும். செய்யலாமா?" என்று கேட்டால் "வேண்டாம்" என்று சொன்னால் எல்லோரும் என்ன கூறுவீர்கள்? "சித்தர்கள் திருவாக்காலேயே வேண்டாம்" என்று வந்துவிட்டது. சித்தர்களே தர்மத்தை செய்ய வேண்டாம் என்று கூறும்பொழுது, நாமும் அதை அனுசரித்தே நடக்க வேண்டும்" என்று அனைவருமே எண்ணுவார்கள். "சரி, செய்து கொள்ளலாம்" என்று கூறிவிட்டால், நடைமுறையில் சிக்கல் வரும்பொழுது, "இப்படியெல்லாம் சிக்கல்கள் வருகிறதே, எதற்காக சித்தர்கள் அருளாசி தந்தார்கள்?" என்று எம்மை நோக்கி, வினா எழுப்புவார்கள். எனவே தர்மத்தை செய்ய வேண்டாம் என்று நாங்கள் ஒருபொழுதும் கூறவில்லை. ஆனால் அதே சமயம் "இப்படியொரு தர்ம காரியம் நடந்துகொண்டிருக்கிறது அல்லது நடக்க இருக்கிறது. எனவே பொருள் தாருங்கள், பொருள் தாருங்கள்" என்று பலரிடம் சென்று யாரும் வினவ வேண்டாம். இயல்பாக, இங்கு நடப்பதையெல்லாம் புரிந்துகொண்டு, தன்னை இணைத்துக்கொள்ளக்கூடிய மனிதன் வந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையென்றால் வேண்டாம். ஏனென்றால் மனிதர்களைப் பொருத்தவரை அவனாக விதிவழியாக சென்று எத்தனை லகரம் தனத்தையும் ஏமாற சித்தமாக இருப்பான். ஆனால் தானாக முன்வந்து ஒரு அறச்செயலுக்கு தனம் தருவது என்பது மிக, மிகக் கடினம். அதற்கும் விதியில் இடம் வேண்டும். தருபவன் உயர்ந்த ஆத்மா, தராதவன் தாழ்ந்த ஆத்மா என்ற ரீதியில் நாங்கள் கூறவில்லை. தராத நிலையில் அவன் பாவக்கணக்கு இன்னும் இருக்கிறது. அவனுடைய பாவங்களும் தீரவேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியேதுமில்லை.
Om Agasthiyar Ayyane Sri lobamudra thaaye thunai
ReplyDeleteஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
ReplyDelete