​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 14 February 2017

சித்தன் அருள் - 593 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

கல்வி குறித்து :-

குமரகுருபரர் அருளிய ‘ சகலகலாவல்லி ‘ மாலையை ஓதலாம். ஹயக்ரீவர், அன்னை கலைவாணி வழிபாடுகளை வாய்ப்புள்ள பொழுது தொடர்ந்து செய்யலாம். இது பக்தி வழி. இன்னொன்று. கல்வி என்ற ஒரு நிலையை மனிதன் காலம்தோறும் தன்னுடைய பார்வையிலேயே பார்த்து பழகிவருகிறான். எம்மைப் பொருத்தவரை கல்வி, வித்தை என்பது பொருள் ஈட்டுவதற்கு மட்டுமல்ல, அருள் ஈட்டுவதற்கு எந்த கல்வி உதவுகிறதோ அதுதான் கல்வி. அருள் ஈட்டுவதற்கு உதவாமல் வெறும் பொருள் ஈட்டுவதற்கு உதவுகின்ற கல்வி, கல்வியல்ல. எனவே மிகக் கடுமையான கட்டுப்பாடுகளோடு கற்றுத்தரப்படும் எந்தவொரு விஷயமும் மனிதனை ஈர்க்காது. மனிதன் அவனாகவே, எதனை நோக்கி செல்கிறானோ அதுதான் பல்வேறு தருணங்களில் அவனை உயர்த்திவைக்கும். சில விஷயங்களைத் தவிர மனிதன் இதுபோன்ற விஷயங்களில் சர்வ சுதந்திரத்தை  பெறுவது அவசியம். ஆனால் இங்கேயோ, காலகாலம் கர்மவினைகளின் காரணத்தாலோ, வேறு சாபங்களின் காரணத்தாலோ இந்த மண்ணுக்குரிய உயர்ந்த கல்வி முறை புறக்கணிக்கப்பட்டு, ஆழிதாண்டிய கல்வி முறை திணிக்கப்படுகிறது.  இது எந்த வகையிலும் ஆரோக்யத்தை தராது.

13 comments:

  1. ஆழிதாண்டிய கல்வி முறை = கடல் தாண்டிய கல்வி முறை /அயல் நாட்டு கல்வி முறை

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ அகத்தியரே சரணம் சரணம் சரணம்

    ReplyDelete
  3. when this lands own education was in place, it was only taught for certain group of people and rejected for other groups. As of my little knowledge, I think that was a sin caused today's ill state.

    ReplyDelete
  4. What our guru say is very much correct. Even if the kids are not interested they are grilled by olympiads, so many other classes even if the kid is not meant for it. My request here, to some one among us, who are very much close to our parama guru, to seek his guidance and bring the necessary mode of education that our guru is hinting us in his arul vakku. IF some one gets the answer please post it also. Thank you.
    Om Agatheesaya Namah.

    ReplyDelete
  5. 2010ல் அகத்தியரை சந்தித்தேன் ( கணேசன் மூலம் ).

    முதல் முறை சென்றபோது " முதலில் ராமேஸ்வரம் சென்று ஒரு தில யாகம் செய்து விட்டு வா பிறகு உறைகிறேன்" என்றார் . நானும் செய்தேன் மறுபடியும் சென்றபோது நிறைய விஷயங்களை கூறினார் . பூர்விக சாபம் இருக்கிறது அது தில யாகம் செய்ததால் சற்று குறைந்து உள்ளது இன்னும் சில காலம் பிறகு அது கழிந்துவிடும் என்றார் .


    என்னை பற்றி கேட்டும்போது மிகவும் அன்பாக பாசமாக பதில் கூறினார்!! . எனக்கு முப்பது வருடங்களா திக்கு வாய் பிரச்சனை உள்ளது . அதற்கு சரஸ்வதி காயத்ரி மந்திரம் கூற சொன்னார் . அனால் ஏனோ என் மனம் அதை சொல்ல விரும்பவில்லை நான் யாரிடமும் யாசகம் பெற விரும்பவில்லை . குனமகவேண்டும் என்று விதி இருந்தால் குணமாகட்டும் இல்லையில் வேண்டாம் . அவர் கூறும்போது ஆறு மாதம் என்றார் அதற்க்கு நான் " இன்னும் ஆறு மாதமா ? " என்றேன் அவர் சொன்னார் " பல ஜென்மங்களாய் செய்த பாவத்தை ஒரே ஜென்மத்தில் கழிக்க வேண்டும் என்று ஆசைபட்டால் எப்படி " என்று கேட்டார் நான் புன்னகைத்து மௌனமானேன் ! பிறகு கேட்டேன் " கடமை செய் அதன் பலனை எதிர்பாகதே என்பதின் அர்த்தம் என்ன என்று ? அதற்கு அவர் சொன்னார் " இன்னவன் கேப்பது ஒன்றும் சாதாரணமான விஷயம் அல்ல இதற்கு நான் பதில் கூறவேண்டும் எனில் இன்னவனுகாக இன்றுமுதல் நீ (கணேசன்) ஓம் நமசிவய மந்திரத்தை கூறு " என்றார் பிறகு நான் என்றேன் அதற்கு அவர் " தைவீக ரகசியத்தை எல்லாம் உடனடியாக சொல்லமுடியாது" என்றார் ..இறுதியாக கிளம்பும்போது " தங்கள் அருள் எனக்கு உண்டா என்று சிறு பிள்ளை போல கேட்டேன் அதற்கு அவர் " என் அருள் இல்லாமல் நீ இங்கு வரமுடியுமா என்றார் ! " நான் மெய்சிலிர்த்து போனேன் .. இதையெல்லாம் என் இங்கு சொல்கிறான் என்றால் தங்கள் அடுத்தமுறை நாடி புரட்டும்போது என்னை பற்றி அவரிடம் நினைவு கூறுங்கள் . அவர் நிச்சயம் பதில் சொல்வர் சொல்லியே ஆகவேண்டும் இல்லையென்றால் நான் இறுதிவரை விடமாட்டேன்!!!


    இப்படிக்கு
    பிரவீன் குமார் (தாம்பரம்)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திரு பிரவீன் குமார் அவர்களே! நமக்கு வரும் உடல் பிரச்சினைகள், மனநல பிரச்சினைகள், பணப்பிரச்சினைகள் கர்மாவினால் வருகிறது. அகத்தியப் பெருமானின் முன் அமர்ந்து, நம் மனதில் வரும் கேள்விகளை கேட்கவே ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதிலும், மிக கனிவாக என் சேயும் நன்றாக வாழ்ந்துவிட்டு போகட்டும் என்று தீர்மானித்து, கனிவாக நல்ல வார்த்தைகள் கூறி, மந்திர உபதேசமும் செய்தால், அதை வேண்டாம் என்று வைக்கிற மனது உங்களுக்கு வந்தது? இங்கு அவனவன், அகத்தியரை மிக நம்பி, நமக்கு கரையேற ஏதேனும் மந்திர குரு உபதேசம் செய்யமாட்டாரா என ஏங்கி கிடப்பவர்கள் எத்தனையோ பேர். ஏன் இப்படி செய்ய உங்களுக்கு இறைவன் ஒரு மனதை கொடுத்தார் என்று புரியவில்லை. அவர் காலடியில் விடாப்பிடியாக அமர்ந்தால் மட்டும் போதாது. மிக உண்மையாக அவர் பாதத்தை அவர் சொல்படி பிடித்துக் கொள்ளவும் வேண்டும்.

      Delete
    2. ​நாம் எல்லோருமே பிச்சைக்காரர்கள்தான். யாசகம் பெறுவது ஒன்றும் அத்தனை எளிய விஷயம் அல்ல. நிறுத்தி, நிதானமாக யோசித்தால், ஒரு யாசகத்தின் பின் உள்ள சூஷ்ம விஷயங்கள் பிடிபடும். அப்போது அசந்து போவீர்கள். அது போகட்டும். உங்கள் பெற்றோரை நீங்கள் கேட்டு வாங்கவில்லை. அம்மாவிடம், ஒரு நாள் கூட, "எனக்கு பசிக்கிறது, சாப்பிட ஏதேனும் தாயேன்!" என்று கேட்டதில்லையா? உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று வீட்டுக்குள் இருந்து யாசகம் ​செய்கிறீர்கள். அதையே, இயலாமையால், வேறொருவன் பிச்சைக்காரன் என்கிற பெயரில், வாசலில் நின்று கேட்கிறான். இந்த யாசகத்தில் உங்களுக்கும், அந்த வெளியே நிற்பவனுக்கும் ஒன்றும் வித்யாசமே இல்லையே.

      Delete
    3. தங்கள் அறிவுரைக்கு நன்றி தாங்கள் கூறுவது அதனையும் உண்மை . ஏனோ எனக்கு அது பிடிக்கவில்லை எனக்கு அவர் அரில் மட்டும் இருந்தால் போதும் வேர் எதுவும் வேண்டாம் முதலில் நான் அங்கு சென்றதே என்னுடைய ஆன்மீக சந்தேகங்களை தீர்க்க தான் எனக்கு தெரியும் கர்மவினை இருக்கும்வரை அது கிட்டாது என்று இருபினும் ஒரு நம்பிக்கையுடன் சென்றேன் . நான் சிறு வயது முதலே கீதை படிக்கிறேன் கிருஷ்ணனின் வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தது . அகவே தான் அப்படி பேசினேன் . கீதை படிப்பவர்கள் அப்படி தான் இருப்பார்கள் !!! ..

      மற்றவற்றை தங்களை நேரில் சந்திக்கும்போது கூறுகிறேன் :)

      நன்றி :)

      Delete
  6. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  7. 5வருடங்களுக்கு முன்னாள் அகத்தியரை சந்தித்தேன் ( கணேசன் அய்யா மூலம் ).

    முதல் முறை சென்றபோது " முதலில் ராமேஸ்வரம் சென்று ஒரு தில யாகம் செய்து விட்டு வா பிரபு உறைகிறேன் ' என்றார் . நானும் செய்தேன் மறுபடியும் சென்றபோது நிறைய விஷயங்களை கூறினார் . பூர்விக சாபம் இருக்கிறது அது தில யகன் செய்ததால் சற்று குறைந்து உள்ளது இன்னும் சில காலம் பிறகு அது கழிந்துவிடும் என்றார் .


    என்னை பற்றி கேட்டும்போது மிகவும் அன்பாக பாசமாக பதில் கூறினார் . எனக்கு முப்பது வருடங்களா திக்கு வாய் பிரச்சனை உள்ளது . அதற்கு சரஸ்வதி காயத்ரி மந்திரம் கூற சொன்னார் .

    ReplyDelete
  8. பிரவீன் குமார்
    என்னைப் போன்றவர்கள் சித்தர்களின் அருள்வாக்கினை பெற ஏங்கிக் கொண்டிருக்கும் போது அகத்திய பெருமான் முன்பு சாதாரணமாக உரையாடி இருக்கிறீர்களே..

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே எனக்கும் அதான் ஆச்சரியம் ஆனால் என் ஜாதகப்படி அந்த நேரத்தில் எனக்கு மகான் ஆசி கிடைக்கவேண்டும் என்று விதி . அப்போது எனக்கு சனி திசை - ராகு புக்தி . விருசிக லக்னம் (சனி சுக் 1ல் செவ் ராகு 5ல் குரு சந்திரன் 4ல்) .. நான் சற்றும் எதிர்பாக்காத ஒரு நிகழ்வு ... எல்லாம் அவர் லீலை ....

      Delete
    2. ஆம் இதில் என்ன இருக்கிறது அகத்தியரை என் குடும்ப உறுபினராக தான் பார்கிறேன் அவரை என் தாய் ஸ்தானத்தில் வைத்துள்ளேன் . இனி வாழ்வில் ஒவொவொரு நிகழ்கவுகளுக்கு அவரே பொறுப்பு . அகத்தியருடன் நான் பேசிய நேரம் அப்போ எனக்கு சனி திசை - ராகு புக்தி . விருசிக லக்னம் சனி சுக் ஒன்றில் குரு சந்திரன் நான்கில் . ஒரு மகான் சந்திப்பு நடக்க வேண்டும் என்று விதி ..... எல்லாம் அவர் செயல் ..

      Delete