​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 9 March 2017

சித்தன் அருள் - 608 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஆன்மீகம் என்றாலே, தற்சமயம் அது பலவகையான ஆன்மீகமாக மனிதனால் பார்க்கப்படுகிறது. இந்த ஜீவ அருள் ஓலையிலே நாங்கள் சுட்டிக்காட்டுகின்ற வழியானது மிக, மிக, ஞானியர் என்று மனிதர்களால் மதிக்கப்படுகின்ற ஞானியர்களாலேயே, ஏற்றுக்கொள்ளப்படாத வழிமுறையாகத்தான் இருக்கும். நீ கற்ற, கற்கின்ற ஆன்மீக நூல்கள், நீ பார்க்கின்ற ஆன்மீக மனிதன், உன் செவியில் விழுகின்ற ஆன்ம செய்திகள், இதுவரை கற்ற பல்வேறு ஆன்மீக விஷயங்கள் எல்லாம்கூட நாங்கள் காட்டுகின்ற வழியிலே முரணாகத் தோன்றும். எமது வழிமுறையில் வரவேண்டும் என்று நீயோ, உன்னொத்து சிலரோ எண்ணலாம். நாங்கள் வாழ்த்துகிறோம். ஆனால் அதனால் மிகப்பெரிய உலகியல் நன்மையோ அல்லது உளவியல் நன்மையோ வந்துவிடாதப்பா. அதிக துன்பங்களும், அவமானங்களும் வரும். அதை சகித்துக் கொள்கின்ற பொறுமையும், சகிப்புத்தன்மையும் இருந்தால் எமது வழியில் நீயும் வரலாம். யாங்கள் தடுக்கவில்லை. வந்து வெற்றிபெற நல்லாசி கூறுகிறோம்.

4 comments:

  1. ஓம் ஸ்ரீ அகத்திய சித்த குருசுவாமியே சரணம்.....

    ReplyDelete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  3. ஓம் லோபமுத்திரா சமேத அகத்தீசாய நமஃ

    அகத்தியம் திருமந்திரம்

    நடுவுநில்லாது இவ்வுலகஞ் சரிந்து
    கெடுகின்றதெம்பெருமானென்ன ஈசன்
    நடுவுள அங்கி அகத்திய நீபோய்
    முடுகிய வையத்து முன்னிரென்றானே

    அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
    அங்கி உதயஞ் செய் மேல் பாலவனோடு
    மங்கி உதய வடபால் தவமுனி
    எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே

    ReplyDelete
  4. Agasthiyar Jeeva Naadi at Viruddhachalam ( Kadalur District).
    Ph : 9566372741

    ReplyDelete