17/7/2025 ஆடி முதல் தேதி அஷ்டமி திதியில் குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், செஞ்சி வட்டம். விழுப்புரம் மாவட்டம்.
எங்கும் நிறைந்திருக்கும் இறைவா!!!... இறைவி!! போற்றியே!!!.... பணிந்து.. வாக்குகளாக ஈகின்றேன் அகத்தியன்.
அன்பென்று அப்பப்பா!!!
அருள்தரும் என்றென்றும் கூட!!!
என்றென்றும் பின் தங்கினாலும்... எங்கெங்கும் சென்று இவ் அம்மை.. கடை அறிந்தும் புரிந்தும்... வருடத்தில் பல இடங்களுக்குச் சென்று அறிந்தும் இதைத்தன் தெரியாமல்... அலைந்தும் திரிந்தும் இவற்றை.. என்று உண்டு... அல்லது பின் அவ்வாறு இல்லை என்றாலும் அப்பனே பின்... நல்விதமாகவே அப்பனே பின்...
ஆடி முழுவதும் கூட அப்பனே... இங்கு தங்கி இருக்கும் அப்பனே பின்.. அனைவருக்கும் தரிசனங்கள் கொடுத்து.. அப்பனே அறிந்தும் புரிந்தும்.. அப்பனே எவ்வாறு அப்பனே... பல வழிகளிலும் கூட வருடத்திற்கு.. ஒருமுறை அறிந்தும்.. அப்பனே பின் பல வழிகளிலும் கூட செய்வினைகள் ஏவல் நிலைகள்... அப்பனே அறிந்தும் கூட பின் பல வினைகளைக் கூட அப்பனே பின் இவ் மாதத்தில் மட்டுமே அப்பனே... பரிசுத்தமாக இங்கே அமர்ந்து (அம்பாள்) அப்பனே பின் அனைத்து வழிகளிலும்... (வினைகளை) நீக்கிக் கொண்டே இருக்கின்றாள் அப்பனே!!!
அவை மட்டும் இல்லாமல் பௌர்ணமி.. திதிகளிலும் கூட அமாவாசை திதிகளிலும் கூட...
அப்பனே நிச்சயம் தன்னில் கூட வந்து சில சில அப்பனே மணித்துளிகளே அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட மக்களை பின் குறைதீர்க்க!!!
ஆனாலும் அப்பனே ஓடோடி அறிந்தும் புரிந்தும் கூட அமாவாசை தன்னில் கூட... அப்பனே பின் வந்தாலும்... நிச்சயம் 12 பின் மாதங்கள் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட கழித்தால்
அப்பனே வெற்றிகள் உண்டு!!
(வருடத்திற்கு 12 அமாவாசை. இவ் 12 அமாவாசைகளிலும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்திற்கு வந்து தேவியை தரிசனம் செய்து இருந்து விட்டு சென்றால் வெற்றிகள்)
ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ் ஆடி தன்னில் வருவோருக்கெல்லாம்.. அப்பனே பின் அழகாகவே இங்கே அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் அனைத்து.. சீடர்களும் இங்கு வந்து இவளுடைய... சீடர்களும் இங்கு வந்து அப்பனே தங்கி பின் பரிசுத்தமாக...அவள் தனக்கு என்ன தேவை என்றெல்லாம் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட... என்னென்ன அப்பனே பின்... உணர்ந்து உணர்ந்து அப்பனே... அனைத்து சீடர்களும் இவ் தேவிக்கு அப்பனே பின் அனைத்தும் செய்து அறிந்து அப்பனே... பரிசுத்தமான சந்தோஷம் அடைந்து....
அப்பனே கேட்டதையெல்லாம் அப்பனே வாரி வழங்குவாளப்பா!!!.. ஆடி தன்னில் கூட...
இவ்வாறாகவே பல பல வழிகளிலும் கூட.. அப்பனே பின் வெற்றிகள் அனைவருக்குமே உண்டு என்பேன் அப்பனே.
குறைகள் வேண்டாம் அப்பனே... அறிந்தும் புரிந்தும் கூட எதனால்.. என்பதை எல்லாம் அப்பனே போக போக.. அப்பனே எடுத்துரைக்கின்றேன் அப்பனே...
இன்றைய தினத்தில் அப்பனே அழகாகவே அப்பனே பின் இவ் அம்மை.. ஆசிர்வதித்தாளப்பா!! அனைவருக்குமே!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட நாளைய பொழுதிலும் (ஆடி வெள்ளி) கூட என்னென்ன பின் வரங்கள் எதை என்று புரிய... அனைவரும் பின் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட...
(வணக்கம் அகத்தியர் அடியவர்களே ஆடி முதல் நாள் அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி தரிசனம் செய்தார் அப்பொழுது தேவிக்கு முன்பாக மூலஸ்தானத்தில் இருந்து குருநாதர் வாக்குகள் உரைத்தார் அப்பொழுது தேவிக்கு சேவை செய்யும் ஒரு பெண் பத்திரிக்கை குருநாதர் உரைத்த வாக்கு
இருந்தாலும் தாயே!!! நிச்சயம் தன்னில் கூட பின் முதல்.. அப்பனே அறிந்தும் புரிந்தும் கூட
தாயே நிச்சயம் தன்னில் கூட ஆடி தன்னில் கூட... ஒரு நாள் நிச்சயம் தன்னில் கூட.. உன் இல்லத்திலே உறங்கி விட்டு செல்வாள் நிச்சயம் தன்னில் கூட... தாயே
இதனால் முதல் நாளிலே உன் இல்லத்தில் பின் தங்கி பின் நிச்சயம் தன்னில் கூட... அனைவருக்கும் பின் ஆசிகள் தருவாள்.
ஆசிகள்!! ஆசிகள்!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் அகஸ்தியாய நமஹ. அகத்திய பெருமான் அருளாசி பெற்று 32 வகை பொருட்களை கொண்டு லேகியம் தயாரித்து அளித்து வந்த திரு.தனகுமாரிடம் இருந்து தற்போது திரு.மணிவேல் தயாரித்து தருகிறார்.ஆனாலும் தனகுமார் அவர்களிடமே தொடர்பு கொள்ளவும். ஓம் சத்குரு சேஷாத்திரி சுவாமிகளே திருவடிகளே சரணம்.
ReplyDelete