​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 16 July 2025

சித்தன் அருள் - 1901 - அன்புடன் அகத்தியர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 9 (நிறைவுப் பகுதி)


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 9 (நிறைவுப் பகுதி) 

ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ்தொடர் சத்சங்க வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

1. சித்தன் அருள் - 1867 - பகுதி 1
2. சித்தன் அருள் - 1869 - பகுதி 2
3. சித்தன் அருள் - 1876 - பகுதி 3
4. சித்தன் அருள் - 1879 - பகுதி 4
5. சித்தன் அருள் - 1881  - பகுதி 5
6. சித்தன் அருள் - 1889 - பகுதி 6
7. சித்தன் அருள் - 1894 - பகுதி 7
8. சித்தன் அருள் - 1897 - பகுதி 8 )

குருநாதர் :- நிச்சயம் அம்மையே வாய்ப்பு வந்து கொண்டே இருக்கும். அம்மையே அனைத்தும் மனிதனிடத்திலே. மனிதன் மாறினால் இறைவனும் மாறுவான். 

அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் அப்பனே தந்து விட்டேன் அப்பனே. அவரவர் குறை என்னவென்று  யான் ஆராய்ந்துவிட்டேன் அப்பனே. மாற்றமடையச் செய்கின்றேன் அப்பனே. 

அப்பனே வந்துவிட்டேன் தெளிவு பெறு அப்பனே. அப்பனே நல் முறைகளாக ஆசிகள் உண்டு. அப்பனே இப்பொழுது புரிகின்றதா அப்பனே? யான் உந்தனுக்கு என்ன செய்ய வேண்டும்? அப்பனே புண்ணியப் பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டால், பின் அவ்புண்ணியமே உன்னைப் பாதுகாக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :- புண்ணியப்பாதையை மீறிச்சென்றால்தான் கஷ்டங்கள். 

குருநாதர் :- பின்பு அவ்பரிகாரம் அகத்தியன் சொன்னான் என்றால் எவை என்று அறிய அறிய செய்யும் வினை செய்வினையாக. துரோகம் என்றால் மற்றவன் அதை எவை என்று அறிய அறிய நீ செய்யும் துரோகத்திற்கு மற்றவன் செய்வினையாக ஏவுகின்றான். 

ஆனாலும் நல்லோர்களைச் சீண்டினால் யான் விடமாட்டேன். அனைத்தும் எம்மிடத்திலே. உலகம் எம்மிடத்திலே. 

அடியவர் 5 :- ஐயா ஒரு கேள்வி. அனைத்து குடும்பத்திலும் மன நிறைவும் நிம்மதியும் வேண்டும். 

குருநாதர் :- அப்பனே அது கிடைக்காதப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா அடுத்த கேள்வி. இப்படிச்
 சொல்லிவிட்டார். அது தொடர்பாக கேளுங்கள். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- நிம்மதி எல்லா குடும்பத்திலும், எல்லோரும் நிம்மதியாக இருக்க என்ன செய்யனும்? 

குருநாதர் :- அப்பனே அனைவரும் நிம்மதியாக இருந்தால் அப்பனே இறைவன் காணாமல் போய்விடுவான். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா இன்னும்  பேசுங்கள். ( கேள்வி கேளுங்கள் ஏன் இறைவன் காணாமல் என்று). இன்னும் கேளுங்கள் அம்மா. 

அடியவர் 5 :- அனைவரும் இறைவன் திருவடியை வணங்க அருளவேண்டும். 

குருநாதர் :- அப்பனே அப்பொழுது கஷ்டத்தைக் கொடுத்தால்தான் அப்பனே. 

அடியவர் :- எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நீங்க எங்கள் கூட இருந்து அருள் புரிய வேண்டும்.

குருநாதர்:- அப்பனே எவ்வளவுக்கெவ்வளவு கஷ்டங்கள் வருகின்றதோ அப்பொழுது யான் பக்கத்திலேயே இருப்பேன். வேடிக்கை பார்ப்பேன். அவ்வளவுதான். கர்மம் தீரட்டும். 

சுவடி ஓதும் மைந்தன்:- ஆனால் கைவிட மாட்டார். 

அடியவர் 5 :- சித்தர் பாடல்களில் உள்ள உண்மைப் பொருளை உணர்த்தி (வைக்க வேண்டுகின்றேன்)

குருநாதர் :- அப்பனே உண்மைப் பொருளை , புண்ணியங்கள் இருந்தால் மட்டுமே , யாங்கள் எழுதியதைக் கூட 
ஓத முடியும் அப்பா. இல்லையப்பா புண்ணியங்கள் கலியுகத்தில் மனிதனிடத்தில். அப்பனே வேண்டுமென்றால் புத்தகம் என்னிடத்தில் என்று கையை ஓங்கிக் காட்டலாம். 

அடியவர் 5 :- எனக்கான கர்ம வினை என்ன?

குருநாதர் :- அப்பனே இப்பொழுது கடமையைச் செய்து கொண்டே இரு. நன்முறைகளாகவே நிச்சயம் பாடலை உந்தனுக்கு அவ்……….

அப்பனே எதைக் கேட்க வேண்டும்? எதைக் கேட்கக்கூடாது? 

அடியவர் 5 :- தெளிவைக் கேட்க வேண்டும். 

குருநாதர் :- அப்பனே புண்ணியத்தைக் கேட்க வேண்டும். பாவத்தைக் கேட்கக் கூடாது. 

குருவின் பேச்சைக் கேட்காவிடில் என்ன செய்வது? (குருநாதர் பதில்) மிதிப்பது. 

அப்பனே இங்கு யார் குரு? 

அடியவர் 5 :- எம்பெருமான் அகஸ்தியப் பெருமான்தான் குரு. 

குருநாதர் :- இல்லையப்பா. நீ என்று யான் கூறுகின்றேன் இங்கு. அப்பனே மாதமாக, மாதமாக இங்கு குடியிருப்பவன்தான் குரு. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா நீங்கதான் குரு என்று சொல்கின்றார். 

குருநாதர் :- அப்பனே அனைவருக்கும் தந்தையாக இருக்கலாம். ஆனால் நீ குரு. மிதித்துவிடுவாயப்பா.

அடியவர் 4 :- கனவில் அடிக்கடி சாமி வருகின்றார். அதன் அர்த்தம் என்ன ஐயா?

குருநாதர் :- போதாது பக்தி. இன்னும் காட்டு என்று. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- ( சித்தர்கள் மனிதர்களின் கர்மாக்களை நீக்கும் வழியில் ஏதேனும் தொண்டு செய்ய இயலுமா என்று கேட்டதற்கு )

குருநாதர் :- நிச்சயம் செய்ய முடியாதப்பா. என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்?

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-  எனது அப்பாவுக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டும் என்று ஆசை.

குருநாதர் :- அப்பனே ஜீவராசிகளுக்குத் தொண்டு செய். தானாக….

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-  சரிங்க. நன்றி ஐயா. 

குருநாதர் :- ஆன்மா வேறு வேறு அப்பா. ஆன்மா ஒன்றாக இருந்தால் சந்தோசம் அடையும். ஆன்மா வேறு வேறாக இருப்பதால் அப்பனே  தொல்லைகள் அப்பா. 

அடியவர் 7 :- உறவுகள் அமைவதும் கர்மாவை கழிப்பதற்காகத்தானா?

குருநாதர் :- அம்மையே நிச்சயம். 

அடியவர் :- ( எப்படி இருந்தால் அன்பு அதாவது காதல் சரியானது? திருமணத்திற்குப் பின் கணவன் மனைவியாக) 

குருநாதர் :- முதலில் தாய் தந்தையிடம் காதல் (அன்பு) கொண்டாலே போதுமானது. தானாக நல்காதல் மலரும். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- super.
(சில தனி வாக்குகள்)

குருநாதர் :- அப்பனே எல்லை மீறினால் என்ன செய்ய வேண்டும்? அப்பனே (முன்பு) சொன்னேன் அப்பனே. உதைப்பேன். 

அடியவர் 7 :- ( ஜாதகப்படி சிலர் கடை பிறவி. சாமி பக்தி இல்லை. ஆனால் மாமிசம் உண்கின்றனர்.) 

குருநாதர் :- அம்மைய இதை பற்றி பல விளக்கங்கள் கூறிவிட்டேன். எப்போது அதை சாப்பிட்டு எதை என்று அறிய அறிய , (இறந்த வாயில்லா ஜீவராசிகளின்) அவ்ஆன்மாக்கள் விட்டு விடுமா என்ன? (அவர்களை) கடை பிறப்பு என்கின்றார்கள். ஆனாலும் அவ்ஆன்மாவை அடித்து நொறுக்கி அவ்ஆன்மாவெல்லாம் காத்துக் கொண்டிருக்கும். (அசைவம் உண்ட) இவ்ஆன்மா வரும்பொழுது நிச்சயம் பின் இறைவனிடத்தில் (ஆசி பெற/முக்தி பெற) விடாதே???

………….

இந்த போலத்தான் பின் அனைத்தும் உண்டுவிட்டு , அடித்து,  வாயில்லா ஜீவராசிகளெல்லாம் ஆனால் அவ்ஆன்மா இறைவனிடத்தில் போய் சேர்ந்திருக்கும். இறைவனிடத்தில் அதாவது திருத்தலத்தில் இருக்கும். ஆனாலும் (என்னை உண்ட) அவன் வருகின்றான் பார். அவன் என்னென்ன கொடுமைப்படுத்தினான். இறைவா அவனுக்கெல்லாம் நீ ஆசிகள் தரப்போகின்றாயா என்று இறைவனிடத்தில் கூறிக்கொண்டே இருக்கும். அப்பொழுது ஆசிகளும் இறைவன் கொடுக்கமாட்டான். 

அடியவர் :- ஐயா ஒரு சந்தேகம். முன்பு மாமிசம் சாப்பிட்டோம். இப்பதான் நிறுத்திவிட்டோம். இப்போ என்ன நடக்கும்?

குருநாதர் :- அதை உன் தந்தையிடம் தான் கேட்க வேண்டும். உணனடியாக  அனைத்தும் செய்ய வேண்டுமென்றால்,  அவ்பாவம் இருக்கின்றதல்லவா? எத்திருத்தலம் சென்றாலும் அவ்ஆன்மாக்கள் தடுத்து நிறுத்தின. ஆனாலும் என்னிடத்தில் வந்துவிட்டீர்கள். 

அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 
சிறுக சிறுக (தான தர்மங்கள்) செய்து கொண்டிருந்தாலே, இறைவன் பெருக பெருகச் செய்வான். இதை உணரலாம். 

அனைவராலும் உழைக்க முடியுமா? என்றால், இல்லை. 

அனைவராலும் சேவை செய்ய முடியுமா? என்றால் இல்லை. 

அனைவராலும் கல்வி கொடுக்க முடியுமா? என்றால் இல்லை. 

அனைவரும் நோய் உள்ளவர்களாக இருக்க முடியுமா? என்றால் இல்லை. 

நோய் அற்றவர்களாக இருக்க முடியுமா? என்றால் இல்லை. 

அனைத்தும் இறைவனின் தீர்ப்பே. இதைப் பற்றி விவரமாகக் குறிப்பிடுகின்றேன் சில காலத்திற்குப் பிறகே. 

அடியவர் 5 :- ஒவ்வொரு மனிதனுக்கும் இறை நல்லவற்றை உணர்த்துகின்றது. நல்லாதவற்றையும் உணர்த்துகின்றது. ஆனால் எது இறை உணர்த்துவது என்று எப்படி தெரிந்து கொள்வது?

குருநாதர் :- அப்பனே இறை பின் யார் யார் மூலம் எதை உணர்த்த வேண்டும் என்று உணர்த்திக்கொண்டேதான் இருக்கின்றது. ஆனால் அதை மனது அதாவது மனிதனுடைய மனது ஏற்கவில்லையே. 

சுவடி ஓதும் மைந்தன் :- மனிதனின் மனம் ஒரு பேய் என்று சொல்கின்றார். 

அடியவர் 5 :- அந்த பேயை ஐயாதான் அடக்கி அருளவேண்டும். 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் என்னால் மட்டுமே முடியும் அப்பா. யாராலும் முடியாதப்பா. சித்தரால் மட்டுமே முடியுமப்பா. 

அடியவர் :- இல்லத்தில் தங்களுடைய திருவுருவம் வைத்து வழிபாடுகள் செய்து கொண்டிருக்கின்றேன். 

குருநாதர் :- அம்மையே மனதில் முதலில் நிறுத்து,  (உன் மனதில் மாயை என்ற) பேயை விரட்டியே. 

அப்பொழுதுதான் ஆசிகள். எனை (இல்லத்தில்) வைத்துக்கொண்டாலும் ஒன்றும் புரயோஜனம் இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- மாயயை  நீக்கி , மனதில் கோயில் கட்டுங்கள். 

குருநாதர் :- பின்பு மனிதன் இப்படியும் சொல்வான். பொய் கூறுவான் கலியுகத்தில். அகத்தியனை வைத்து அனுதினமும் அகத்தியனுக்கு அனைத்தும் வைத்திருந்தேனே பூ, பழங்களோடு என்று. வேண்டாம். அவ்வேலையே நடக்காது என்னிடத்தில். 

அப்பனே ஏன் என்னை வைத்து வழிபடுகின்றான் கூறு?????

அடியவர்கள் :- ( அமைதி )

குருநாதர் :- அப்பனே அதாவது எவ்வாறு நடிக்கின்றான் மனிதன் என்றால், தன் தந்தைக்கோ தாய்க்கோ சிலை செய்து வழிபடுவதில்லை. என்மீது ஏனப்பா அவ்வளவு பாசம்?????

அப்பனே மனிதன் நடிப்பதில் மிகவும் வல்லவனப்பா. மிஞ்சமுடியாதப்பா. அதை யான் மட்டுமே உணர்ந்தேன். 

அப்பனே எனை (சிலைகள்/படங்கள்) செய்து காசுகள் சம்பாதிக்கின்றார்கள். அவ்வளவுதான். சம்பாதிக்கட்டும். 

அடியவர் :- ( போலி சாமியார்களிடம் ஏமாந்து விடுகின்றனர்.இதற்கு வழி காட்ட வேண்டும்) 

குருநாதர் :- அப்பனே யான் விடுவேனா என்ன? அறிவைக் கொடுத்திருக்கின்றேன் அப்பனே. இப்படிப்போ, அப்படிப்போ என்று. ஆனாலும் போகத் தெரியவில்லை அப்பனே. 


( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024 ஆம் ஆண்டு ஈரோட்டில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் நிறைவடைந்தது. ) 


(-------------------------------------------------

வணக்கம் அகத்திய மாமுனிவர் அடியவர்களே!!!

உலகம் அழிவு நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றது. இதனைத் தடுக்க குருநாதர் மதுரை சத்சங்கத்தில் அனைவரும் செய்து வரவேண்டிய வழிபாட்டு முறைகளை குருநாதர் அவசர உத்தரவாக வந்திருக்கின்றார் அதை நினைவூட்டல் பதிவு.
 

சித்தன் அருள் - 1884 - அன்புடன் அகத்திய மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் 22.06.2025 :-

https://siththanarul.blogspot.com/2025/06/1884.html?m=0

ராகு கிரகம் மற்றும் கேது கிரகம் புவியை நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. இதனால் நிச்சயம் அழிவுகள்.  வரும் ஆறு ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள். இந்த அழிவுகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அழிவை தடுத்து நிறுத்த வேண்டும்.

(1) அனைவரும் சேர்ந்து நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சிவபுராணத்தை பாடுதல் வேண்டும். மக்கள் அனைவரும் 50 /100 / 200 / 500 /1000 அளவில் ஒன்று கூடி, கூட்டுப் பிரார்த்தனை இறைவனிடம் சிவபுராணம் ஓதி பிரார்த்தனை செய்ய வேண்டும். பூமியைத் தாக்க வந்து கொண்டிருக்கும் ராகுவானவனை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி  இவ் சிவபுராணம் பாடல் இதை ஓதுதல் வேண்டும். கோளறு பதிகம், தேவாரம், திருவாசகம் விநாயகர் அகவல் படிக்க வேண்டும். 

(2) அனுதினமும் உங்கள் இல்லங்களில்  நவகிரக தீபம் ஏற்றி ,  நவகிரக காயத்ரி மந்திரம் ஓதி , மற்றவர்களுக்காக இந்த உலகம் நன்மை பெற வேண்டும் என்று  வழிபாடு செய்ய வேண்டும். 

(3) பாவத்தை நசுக்கும் பாபநாசத்தில், மற்றும் திருவண்ணாமலையில் இவ்வாறு அனைவரும் ஒன்று கூடி, கூட்டுப் பிரார்த்தனை சிவபுராணம் பாடினால், தியானங்கள் செய்தால், மக்களுக்கு நடக்கும் அழிவுகள் குறைக்கப்படும்.

(4) புண்ணிய நதிகள் இருக்கும் கரையோரங்களில் மக்கள் அனைவரும் ஒன்று கூடிச் சென்று சிவபுராணம் பாராயணம் செய்ய வேண்டும். நீரால் ஏற்படும் அழிவை இப்படி தடுக்க வேண்டும்!. நதிக்கரையோரம் இருப்பவர்கள், கடலோரம் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி, கூட்டுப் பிரார்த்தனை செய்து, சிவபுராணம் படித்து வரவேண்டும். 

(5)அனைவரும் ஆடி மாதம் பூர்த்தியாகும் வரை அம்பாள் ஆலயத்திற்குச் சென்று அபிராமி அந்தாதி அம்பாளின் பாடல்களைப் பாடி வந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பு பெறும். 

இவ் வழிபாட்டினை அனைவரும் ஒன்று கூடி ஆலயங்களில் கூட்டுப் பிரார்த்தனை செய்து,  மற்றும் இல்லங்களில்  நவகிரக தீபம் ஏற்றி ,  அனைவரும் முடிந்த வரை ஒன்றாக இணைந்து சேர்ந்து அனைவரும் இந்த உலகம் அழிவிலிருந்து விடுபட  பாடுபடுவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…

    ReplyDelete
  3. ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ அகத்தீசாய நம

    ReplyDelete
  4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete