வணக்கம் அகத்தியர் அடியவர்களே
22/6/2025 மற்றும் 23/6/2025... இவ் இரு நாட்களில் நம்மை வாழ வைக்கும் தெய்வம் குருநாதர் அகத்திய பெருமான் திருவருளால்... மதுரை பசுமலை மாரியம்மன் கோயில் ஸ்ரீலோபாமுத்திரை தாயார் சமேத அகத்திய பெருமான் சன்னதியில் சத்சங்கம் நடந்தது. குருநாதர் கூறிய வாக்குகளில் மக்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை அவசர உத்தரவாக அனைவருக்கும் தெரியப்படுத்த சில முக்கிய விஷயங்களை கூறினார்.
உலகம் அப்பனே அழிவு நிலைக்குத் தான் சென்று கொண்டிருக்கின்றது அப்பனே
அவ் அழிவு நிலையில் இருந்து உங்களால் காப்பாற்ற முடியும் அப்பா
நவ கோள்களின் விசையும் புவியின் விசையும் சமமாக இருக்க வேண்டும். அப்படி சமமாக இல்லை என்றால் பலமாக வேகத்தில் வந்து கிரகங்களிலிருந்து ஒலிகள் வேகமாக வந்து பூமியின் மீது மோதும் போது அழிவுகள் திடீர் திடீரென்று வரும் பல மனிதர்களும் இறந்து விடுகின்றார்கள்.
ராகு கிரகம் புவியை நெருங்கிக் கொண்டே இருக்கின்றது
இதனால் நிச்சயம் அழிவுகள்.. அது மட்டும் இல்லாமல் சண்டைகள் அது மட்டும் இல்லாமல் மனது தீயவழியில் செல்லும்..
அதை எவ்வாறு நிறுத்த வேண்டும்???
அதிலிருந்து உங்களை நாங்கள் காக்க வேண்டும்.
இன்னும் அழிவுகள் தான் அதிகம் என்பேன் அப்பனே இதனால் அனைவரும் சேர்ந்து நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் சிவபுராணத்தை பாடுதல் வேண்டும்.
நவகிரக தீபம் நவ கிரக காயத்ரி மந்திரம் ஓதி வழிபாடு மற்றவர்களுக்காக இந்த உலகம் நன்மை பெற வேண்டும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டி வணங்கி சுயநலமாக இல்லாமல் பிரார்த்தனை செய்தல் வேண்டும்.
கோளாறு பதிகம் தேவாரம் திருவாசகம் படிக்க வேண்டும்.
மக்கள் அனைவரும் 50 100 200 500 1000 அளவில் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை இறைவனிடம் சிவபுராணம் ஓதி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இதனால்தான் நவ கிரக தீபத்தை மற்றவர்களுக்காக ஏற்ற சொன்னேன் அப்பனே அதை ஏற்றி வர வேண்டும் அப்பனே இதனால் அழிவுகளில் இருந்து மற்றவர்களை காக்க முடியும்.
வரும் ஆறு ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள்.. இந்த அழிவுகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அழிவை தடுத்து நிறுத்த வேண்டும்.
பூமியை தாக்க வந்து கொண்டிருக்கும் ராகுவானவனை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி
இவ் சிவபுராணம் பாடல் என்பேன் அப்பனே.
இப் பாடலை அனைவரும் ஒன்று சேர்ந்து இறைவனை வேண்டி பாடும் பொழுது உங்கள் உடம்பில் பல துகள்கள் நுண்ணிய துகள்கள் பதிக்கப்பட்டிருக்கும். இவ்வாறாக மக்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்யும் பொழுது சிவபுராணம் பாடும் பொழுது உங்கள் வாய் வழியாக மேல் நோக்கி சென்று.. உங்கள் எண்ணங்கள் இந்த நேர்மையாக இருந்து இந்த பாடலை பாடும் பொழுது இந்த பாடலின் அலைவரிசை மேல் நோக்கி சென்று கிரகங்களில் விசையோடு மோதி சில கிரகங்களின் தாக்கும் சக்தியை கட்டுப்படுத்தும்.
அனைவரும் ஒன்றாக நிச்சயமாக இப்படி தியானங்கள் செய்ய வேண்டும் நிச்சயம் அனைவரும் உடம்பில் இருக்கும் ஒளி மேல் நோக்கி சென்று கிரகங்களின் காந்த அலைகள் கீழ்நோக்கி வருகின்ற பொழுது உங்கள் தியானத்தின் ஒளி அவை கீழே வரவிடாமல் அப்படியே தடுத்து நிறுத்தி விடும்.
ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விசை உண்டு...
பாவத்தை நசுக்கும் பாபநாசத்தில் இவ்வாறு அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை சிவபுராணம் பாடினால் தியானங்கள் செய்தால் மக்களுக்கு நடக்கும் அழிவுகள் குறைக்கப்படும்.
அடுத்து திருவண்ணாமலையில் செய்ய வேண்டும்.
கடல் அலைகள் நிச்சயம் ராகுவானவன் பூமியை நெருங்குகின்ற பொழுது நிச்சயம்.. ராகுவானவன் எவ்வளவு வேகத்தில் பூமியை நெருங்குகின்றானோ அவ்வளவு வேகத்தில் கடல் நீரும் ஊருக்குள் நுழைந்து விடும்.இதை தடுக்க உண்மையான நதிகள் இருக்கும் கரையோரங்களில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி சென்று சிவபுராணம் பாடிக்கொண்டே இருங்கள். நீரால் ஏற்படும் அழிவை இப்படி தடுக்க வேண்டும்!!... நதிக்கரையோரம் இருப்பவர்கள் கடலோரம் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்து சிவபுராணம் படித்து வரவேண்டும்.
உங்களுக்காக நான் போராடுகின்றேன் மற்றவர்களுக்காக நீங்கள் போராடுங்கள் என்பேன் அவ்வளவுதான் அப்பனே.
என்று குருநாதர் தரவு தந்துள்ளார்.
உத்தரவின் முழு விவரமும் சித்தன் அருள் - 1884 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமானின் அவசர உத்தரவு!...ல் உள்ளது.
இதற்கு முன்பாக எகிப்து பிரமிடு ரகசியங்கள் குறித்தான வாக்குகளிலும் கூட்டுப் பிரார்த்தனை முக்கியதுவம் குறித்து குருநாதர் வாக்குகளில் கூறியிருக்கின்றார்.
உலகம் இப்படி சாதாரண சூழ்நிலையில் அனுதினமும் ஏதாவது ஒரு விபத்துக்கள் நடந்து கொண்டே இருக்கின்றது மக்கள் படும் துயரத்தை அறிந்து கொண்டு குருநாதர் ஒரு அதிலிருந்து தப்பிக்க வழிமுறையை கூறியுள்ளார்.
அதனைப் பின்பற்றி நம்மை வாழ வைக்கும் தெய்வம் குருநாதர் அகத்தியர் அடியவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளார்கள்.
இதில் அனைத்து அடியவர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
குருநாதருடைய வாக்குகளுக்காக.... தனிப்பட்ட முறையிலும் சத் சங்கங்கள் எங்கு நடக்கிறது? என்றும்
சுவடி ஓதும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயாவை எங்கு சந்திக்கலாம் ? என்றும் பக்தர்களும் பொதுமக்களும் குருநாதர் உடைய ஜீவநாடி வாக்குகளுக்காக எந்த அளவுக்கு ஆர்வத்துடன் எண்ணிக் கொண்டிருக்கின்றார்களோ
அதே போல் குருநாதர் உடைய உத்தரவை மேற்கொள்வதற்கும் அதே அளவு ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.
குருநாதர் பல வாக்குகளிலும் தெரிவித்துவிட்டார் யான் கூறியதை சரியாக செய்பவர்களுக்கு மட்டுமே என்னுடைய வாக்குகள் கிட்டும் என்று!!!
ஏற்கனவே குருநாதர் நவகிரக தீபம் குறித்தான உத்தரவை சரியாக மேற்கொள்ளாமல் திருவண்ணாமலை வாக்கில் குருநாதர் கூறியது என்னவென்பது அனைவருக்கும் தெரியும்.
குருநாதர் நமக்காக இந்த ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார்.
குருநாதர் அகத்திய பெருமான் பக்தர்கள் அனைவரும்... இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமக்காக இல்லாமல் இந்த உலகம் நன்மை பெற வேண்டும் கிரகங்களின் தாக்குதல் நடைபெறாமல் இருக்க மேலிருந்து வரும் குள்ளர்கள் இந்த புவிதனை காக்க.... மக்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஒரு ஆயிரம் பேர் ஒன்றாக கூடி சிவபுராணம் ஓதும்... அந்த அணு சக்தி வாய் வழியாக வெளிப்பட்டு மேல் நோக்கி சென்று கிரகங்களின் தாக்குதலில் இருந்து இந்த புவி காப்பாற்றப்படும் என்று குருநாதர் சொல்லியிருக்கின்றார்.
அதனால் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
முதலில் பாபநாசம் அடுத்து திருவண்ணாமலை என திட்டமிட்டு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியாக அடியவர்கள் தலைமை ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து ஒருங்கிணைத்துக் கொண்டு வருகின்றார்கள் . அவர்களை தொடர்பு கொண்டு இணைந்து கொள்ளலாம் மேலும் விபரங்கள் அறிந்து கொள்ளலாம்.
நிகழ்ச்சி நிரல்.
உலக நன்மைக்காக கூட்டுப் பிரார்த்தனை
நாள் - 27. 07.2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம் - காலை 8மணி முதல் மாலை 6மணி வரை
இடம் - பாபநாசம் கோவில் அருகே உள்ள மருதுபாண்டியர் திருமண மண்டபம் மற்றும் வாணியர் திருமண மண்டபம்
நோக்கம்..
உலக நன்மைக்காக அகத்தியர் அடியார்கள், சிவனடியார்கள்
மற்றும் பொதுமக்கள் இணைந்து நவகிரக வழிபாடு மற்றும் கோளறு பதிகம் சிவபுராணம் பாடுதல்
நிகழ்ச்சி நிரல்
காலை 8 மணிக்கு குருநாதர் ஜீவநாடியில் அருளிய உறுதிமொழி பின் கூட்டுப் பிரார்த்தனையின் நோக்கம் மற்றும் பலன்கள் பற்றிய ஜீவநாடி வாக்கு சிறு விளக்கம் .
காலை 8 15 முதல் கூட்டு பிரார்த்தனை தொடக்கம்
1)அனைத்து உயர் தெய்வங்கள் பற்றிய துதி
2)விநாயகர் அகவல் உரைத்தல்
3) திருநாவுக்கரசு பெருமான் அருளிய போற்றித் திருத்தாண்டகம் உரைத்தல்
4) நவகிரக காயத்ரி மந்திரம் ஒவ்வொன்றையும் 108 முறை உரைத்தல்
5) கோளறு பதிகம் உரைத்தல்
6) சிவபுராணம் உரைத்தல் (காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக உரைத்தல்)
7) மாலை 6 மணிக்கு கூட்டு பிரார்த்தனை முடிவு..
குறிப்பு.
தேனீர் காலை 10 மணி முதல் 12 மணி வரை
மாலை 3 மணி முதல் 5 மணி வரை.
உணவு இடைவேளை மதியம் 12.30 முதல் 2.30மணி வரை
போக்குவரத்து அடியார்கள் பொறுப்பு. அனைவரும் முதல் நாள் மாலை பாபநாசத்திற்கு வந்து சேர வேண்டும்.
திருநெல்வேலி தென்காசி பாபநாசம்.
பாபநாசம் ஆலயத்திற்கு அருகே இருக்கும் இரண்டு திருமண மண்டபங்கள் பேசப்பட்டுள்ளது. அங்கு அடியவர்கள் தங்கிக் கொள்ளலாம் காலையில் தாமிரபரணி தாயார் நதியில் நீராடி பொதுமக்கள் அனைவரும் மண்டபத்தில் இருக்கும் விசாலமான இடத்தில் கூட்டு பிரார்த்தனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 8மணிக்கு பிரார்த்தனை ஆரம்பிப்பதால் அடியார்கள் சனிக்கிழமை மாலை வருவது மிகவும் நன்று..
சனிக்கிழமை இரவு உணவு மற்றும் ஞாயிறு காலை உணவு மற்றும் தங்குமிடம்
மருது பாண்டியர் மண்டபம் மற்றும்
வாணியர் மண்டபம்
என இரண்டு மண்டபத்திலும் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வரவிரும்பும் அடியார்கள் பக்தர்கள் கூகுள் பார்ம் பூர்த்தி செய்து அனுப்பவும்..
google ஃபார்ம் லிங்க் மேலே இணைக்கப்பட்டுள்ளது
பார்ம் பூர்த்தி செய்ய கடைசி தேதி பின்னர் அறிவிக்கப்படும்..
பிரார்த்தனை கூட்டத்திற்கு தன்னார்வலத் தொண்டர்கள் வேண்டும் என்பதால் தன்னார்வல தொண்டு விருப்பம் உள்ளவர்களுக்கு அவர்கள் குழுவில் தன்னார்வலர்கள் சேர்க்கை பற்றி தெரிவிக்கப்படும் விருப்பம் உள்ளவர்கள் சேரலாம்..
இது ஒரு பெரும் நிகழ்வு குருநாதர் நமக்கு வைக்கும் ஒரு பரிட்சையாக எண்ணிக் கொள்ள வேண்டும். ஏற்கனவே குருநாதர் வைத்த நவகிரக தீப பரிட்சையில் சரிவர அனைவரும் செய்யவில்லை குருநாதர் மீண்டும் நமக்கு தந்த வாய்ப்பு இது.
அதனால் அனைவரும் இதில் கலந்துகொண்டு கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
விதிமுறைகள்
கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ளும் அனைவரும் ஒரே மனதோடு ஒற்றுமையாக இருந்து குழு தலைமை பொறுப்பாளர்கள் சொல்வதை அனுசரித்து செயல்பட வேண்டும்.
சிலர் அங்கு செல்லலாம் இந்த செல்லலாம் என்று தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கும்... அதெல்லாம் தங்களுடைய தனிப்பட்ட பயணத்தில் வைத்துக் கொள்ளலாம்.
நமது நோக்கம் கூட்டு பிராத்தனை அதை சரிவர செய்துவிட்டு அனைவரும் தங்களுடைய சொந்த இடத்திற்கு பாதுகாப்பாக அவரவர்கள் திரும்ப வேண்டும்.
அசைவ உணவை தவிர்த்தவர்கள் கலந்து கொள்வது நலம்.
உலகமும் உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விடக்கூடாது அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்ற குருநாதருடைய எண்ணத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற உள்ளது.
கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ளும் அடியவர்கள் ஜீவகாருண்ய முறையை கடைப்பிடித்து கலந்து கொள்வது நலம்.
ஒவ்வொரு பகுதியாக வாட்ஸ் அப் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளது அந்த குழுவிலும் இணைந்து கொண்டு நிகழ்ச்சிகளை பற்றிய முன் தகவல்களை அறியலாம்.
இது குருநாதருடைய பக்தர்கள் சிவனடியார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர் இழுக்கும் முயற்சி... ஆக இந்த கூட்டு பிரார்த்தனை... இந்த கூட்டுப் பிரார்த்தனையை அனைவரும் ஒருமித்த குரலில் ஒன்றாக இணைந்து செய்து உலக நன்மைக்காக வேண்டிக்கொண்டு உலக அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு குருநாதர் நம்மிடம் சொன்னதை நாம் சரிவர செய்வோம்.
நம் அனைவரின் மனதிலும் குருநாதர் அகத்தியர் பெருமான் இருக்கின்றார்.
அவருடைய மனதில் இடம் பிடிப்பதற்கு அவர் சொன்னதை செய்வோம்
குருநாதருடைய மனதில் இடம் பிடிப்போம்..
13/7/2025 அன்று ஒரு சிறு முயற்சியாக ஈரோடு நட்டாற்றீஸ்வரர் ஆலயத்தில் அகத்தியர் பக்தர்கள் சிறிய அளவிலான ஒன்று சேர்ந்து பதிகங்கள் பாடி கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர். குருநாதரே அந்த நிகழ்ச்சியை பக்திப்பூர்வமாக வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தார்.
இந்த நிகழ்வு அடியவர்களை பக்தர்களை ஒருங்கிணைக்கும் ஒரு ஒத்திகை நிகழ்ச்சியாகவும் பக்தி பூர்வமாகவும் மனம் வேண்டி கூட்டுப் பிரார்த்தனையாகவும் நடந்தது குருநாதருடைய பேரருளால் அடியவர்களின் முயற்சியால் நட்டாற்றீஸ்வரர் ஆலய கூட்டு பிரார்த்தனை நல் முறையில் நடந்ததால் பாபநாசத்தில் பெரிய அளவில் நடத்துவதற்கு ஒரு புதிய சக்தியை குருநாதர் கொடுத்திருக்கின்றார்.
இப்படி ஆங்காங்கு சிறிய அளவிலும் நதிக்கரையோரங்களில் கடல் ஓரங்களில் நடத்திக் கொள்ளலாம்.
ஆனால் குருநாதர் அதிகம் பேர் திரண்டு பாபநாசம் திருவண்ணாமலையில் கூட்டுப் பிரார்த்தனை செய்ய சொல்லி இருக்கின்றார்
கூட்டு பிரார்த்தனை குறித்து தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்.
சென்னை TUT ராகேஷ் ஐயா 7904612352
மதுரை பரமசிவம் ஐயா
9842170513
தூத்துக்குடி பிரபு ஐயா
9965044034
கலந்து கொள்ள நினைக்கும் அகத்தியர் அடியவர்கள் சிவனடியார்கள் தொண்டர்கள் இவர்களை தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
கூகுள் ஃபார்ம் லிங்க் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.ll
ஏற்கனவே whatsapp குழுவில் google பார்ம் கிடைக்கப் பெற்றவர்கள் இதில் பதிவு செய்ய வேண்டாம் ஏனென்றால் இரண்டு முறை செய்வது போல ஆகிவிடும்.
இந்த நிகழ்ச்சியை அடியவர்கள் அனைவரும் தங்களுடைய பங்களிப்பில் இணைந்து கொள்ளலாம்.
நம்மை வாழ வைக்கும் தெய்வம் குருநாதர் அகத்தியர் பக்தர்கள் அனைத்து சிவனடியார்கள் அனைத்து அகத்தியர் பக்தர்கள் ஈசன் தொண்டர்கள் உழவாரப்பணி செய்யும் குழுக்கள் திருவாசகம் முற்றோதல் செய்யும் குழுக்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கூட்டு பிரார்த்தனையை ஒற்றுமையாக செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஐயா, நான் ஈரோட்டில் வசிக்கிறேன். நான் எந்த ஒரு வாட்ஸ்அப் குழுவிலும் இல்லாததால் ஈரோடு நட்டாற்றீஸ்வரர் ஆலய கூட்டு பிரார்த்தனை பற்றிய எந்தத் தகவலும் தெரியாமல் போன அபாக்கியசாலி ஆனேன். இது எனக்கு மிகுந்த மன வருத்தத்தையும் வேதனையையும் தருகிறது.
ReplyDeleteஎனது whatsapp எண்ணை (+916361085619) பதிவிட்டுள்ளேன். தயவு கூர்ந்து சரியான வாட்ஸ் அப் குழுவில் சேர்த்து விடுங்கள் அல்லது தொடர்பு கொள்ள வேண்டிய அன்பர் விவரத்தை தெரிவியுங்கள்.
இனியாவது இதுபோன்ற விவரங்களை தவறவிடாமல் இருக்க எனக்கு ஒரு வாய்ப்பாக அமையும்.