​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 18 July 2025

சித்தன் அருள் - 1903 - அன்புடன் அகத்தியர் - மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 1


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய  மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 1

வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே நிச்சயம் உங்கள் அனைவரையுமே நிச்சயம் தன்னில் கூட பின் பல திருத்தலங்களில் யான் கண்டிருக்கின்றேன் அப்பனே. அனைவருக்குமே எம்முடைய ஆசிகளும் தந்திருக்கின்றேன் அப்பனே. 

அப்பனே நலமாகவே இதனால் அப்பனே சொல்லிக்கொண்டே இருக்கின்றேன்.  அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் புரியாமல் மனிதன் தவித்துக்கொண்டே இருக்கின்றான் அப்பனே. இறை என்ன செய்யும்? எப்பொழுது செய்யும்? என்பதையெல்லாம் உணராமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சுற்றித் திரிகின்றானப்பா. ஒவ்வொருவருக்கும் அப்பனே ஒவ்வொரு வேலை (இறைவன் கொடுத்து அனுப்புகின்றானப்பா). அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவை பல வாக்குகளிலும் கூட யான் உரைத்திட்டேன் அப்பனே. 

அப்பனே நலன்களாகவே, ஒவ்வொரு வேலையையும் கூட அப்பனே அதை நிச்சயம் உணர்வதற்காகவே துன்பங்கள் என்பேன் அப்பனே. நிச்சயம் அவை உணர்ந்திட்டால் அவ்வேலை சரியாகச் செய்து,  அப்பனே பின் வந்தது எதற்கு என்று அவ் ஆன்மா சரியாகவே அவ்ஆன்மா மீண்டும் சென்றுவிடும் அப்பா.

அப்பனே அவ்வேலையைச் சரியாகப் பயன்படுத்தாமல் எங்கெங்கு சென்றாலும் நிச்சயம் தன்னில் கூட விடிவெள்ளி இல்லையப்பா. எத்தனை தெய்வங்கள்? , எத்தனை  பக்தர்கள்? எதை எதையோ நம்பிச் சென்றாலும், அனைத்தும் வீணே!!! 

அப்பனே நிச்சயம் உன்னை நீ உணராமல் எங்கு சென்றாலும் ஒன்றும் லாபம் இல்லையப்பா. அப்பனே அனைவருக்குமே நிச்சயம் தன்னில் கூட தெய்வ அருள் மிஞ்சிக் காணப்படுகின்றது அப்பனே. ஆனால் அதைச் சரியாகவே பயன்படுத்தவில்லை. அப்பனே நிச்சயம் இதுதான் கலியுகமப்பா.

அப்பனே மனது தூய்மை அப்பனே நிச்சயம் நிரந்தரமாக பின் இறைவன் குடிகொள்வானப்பா. இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு நிச்சயம் பின் குடிகொண்டுவிட்டால் அப்பனே  நீங்கள் கேட்டதெல்லாம் தானாகவே நடக்கும் என்பேன் அப்பனே. அதனால் முதலில் நிச்சயம் பின் மனங்கள் வேண்டும் அப்பா. மனங்கள். 

அப்பனே மனதில் அழுக்குகளை வைத்துக்கொண்டு பல பல திருத்தலங்களை நாடுகின்றனர் என்பேன் அப்பனே. ஆனாலும் அப்பனே நிச்சயம் இன்னும் பாவம் சேரும். 

அப்பனே நிச்சயம் இதனால் அப்பனே நிச்சயம் மனிதன் இறையருளைப் பெறுவதும் , எதை என்று பொருத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவன் அப்பனே அனைவரையுமே குழந்தையாகத்தான் என்னுகின்றான் அப்பனே. அதை மட்டும் இல்லாமல் அனைத்து புத்திகளையும் கூட கொடுத்துத்தான் இருக்கின்றான் என்பேன் அப்பனே.  ஆனாலும் அதை சரியாகவே நிச்சயம் தன்னில் கூட மாயைகளில் காட்டி. ஆனாலும் அப்பனே நீங்களும் கேட்கலாம் 
, மாயையை உருவாக்கியது இறைவன்தான் என்று. கேளுங்கள் அப்பனே. 

அடியவர்கள் :- ( இறைவன்தான் ) 

குருநாதர் :- அப்பனே இதைச் சொல்லிச் சொல்லியே நம்பவைத்து விட்டார்கள். அவ்வளவுதான் என்பேன் அப்பனே. 

அப்பனே அறிந்தும், ஏன் எதற்கு எவை என்றும் புரியாமல் அப்பனே இவ்ஆன்மா பின் எதனை நோக்கி அப்பனே வந்த வேலை என்ன ? அவ்வேலையை நிச்சயம் முடித்துவிட்டால் அப்பனே அவ்வேலையை நீங்கள் தேடிச் செல்வதற்காகத்தான் துன்பங்கள் கொடுத்துக் கொண்டே, கொடுத்துக்கொண்டே. 

அப்பனே அதைத் தெரிந்து கொள்வதற்கும் சில புண்ணியங்கள் தேவையப்பா. அப்பனே நிச்சயம் எங்களால் ஏதும்  செய்ய முடியவில்லையே நிச்சயம் என்று சொல்பவனும் அப்பனே நிச்சயம் அமைதியாக நிச்சயம் தன்னில் கூட பின் காலத்தை எதை என்றும் புரிய அப்பனே. நிச்சயம் அப்பனே அனைவருமே காலத்தை வென்றுவிடலாம் சுலபமாக. 

சுவடி ஓதும் மைந்தன் :- காலத்தை வெல்லலாம் என்றால் , சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி , குரு பெயர்ச்சி இதல்லாம் ஒன்றும் பாதிப்பு இல்லை. அதுதான் காலத்தை வெல்லலாம் (என்ற அர்த்தம்). அதையும் கேட்கலாம் இப்போ.

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட தாயே, தந்தையே நிச்சயம் இதனால் காலத்தை வென்றவர்கள் பலர் பலர். எப்படி வென்றார்கள் என்பவை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட பல பல சுவடிகளில் அழகாக எழுதி வைத்தோம். ஆனாலும் அதை நிச்சயம் தன்னில் கூட பின் காசுகளுக்காகவே பயன்படுத்திக் கொண்டு. நிச்சயம் (சுவடி) ஓதி ஓதி கெடுத்திட்டு. இதனால் நிச்சயம் நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ அதைத் தருவதற்காக்க் கிரகங்கள் தயாராக இருக்கின்றது. 

அப்பனே பின் கெடுவான் என்றால், அப்பனே கெடுத்து விடும்.

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க மற்றவர்களைக் கெட்டுப் போகட்டும் என்று நினைத்தால் , உங்களையே கெடுத்திடும் என்று சொல்கின்றார். 

குருநாதர் :- அப்பனே அறிந்தும் புரிந்தும் கூட அப்பனே இதில் அப்பனே சனீஸ்வரன் நிச்சயம் முன்னுக்கு வருகின்றானப்பா. 
அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொல்லிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே. நிச்சயம் அதாவது அனைத்தும் ஈசனுடைய குழந்தைகளே என்பேன் அப்பனே. நிச்சயம் சிறு உயிராயினும் அப்பனே. ஆனாலும் அப்பனே அதை ஏற்பதே இல்லை என்பேன் அப்பனே. 

இதனால் நல் விதமாகவே அப்பனே பின் வேங்கடவனின் பின் அறிந்தும் கூட ராசிகள்.

சுவடி ஓதும் மைந்தன் :- மிதுனம் , கன்னி ராசி யாராவது இருக்கீங்களா இங்க? எழுங்கள் ஐயா. 

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அலைந்தும் திரிந்தும் ஒன்றும் ஆகவில்லை. நிச்சயம் தன்னில் கூட  அவ்வாறாக எதை என்று அறியாமலும்,  எதை என்று புரியாமலும் எதை என்று அறியாமலும் தான் தான் தவறுகள் செய்து எதை என்று புரிய  நிச்சயம் தன்னில் கூட அழகாகவே நிச்சயம் சில பக்குவங்களைக்கூட ஏற்படுத்தி ஏற்படுத்தி.

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா அழகாக சில கஷ்டங்களை கொடுத்து பக்குவங்களை ஏற்ப்படுத்திட்டார் முதல்ல. ஐயா பக்குவம்னா என்னன்னு தெரியுங்களா? 

அடியவர் :- கஷ்டம்

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா கஷ்டத்தை கொடுத்திட்டு அதன் மூலமா நன்மை ஏற்படுத்திட்டாரு. 

குருநாதர் :- அப்பனே அழகாகவே நன்று. அப்பனே பின் புரிகின்றதா? நிச்சயம் அப்பனே அதாவது  அனுபவம்தான் பாடம் என்று நன்றாகக் கற்றுணர்ந்தீர்கள். கேளுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க examல pass. அப்போ நீங்க கேள்வி கேட்கலாம்னு சொல்லிட்டார். கேளுங்க அய்யா. 

அடியவர் :- எதை நோக்கி நம்ம பயணத்தை கூட்டிக்கொண்டு போகின்றார்? 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதனை நோக்கி நீங்கள் செல்கின்றீர்கள் அனைவருமே?

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா , அதை உங்களையே கேட்கின்றார். எதை நோக்கி நீங்கள் செல்கின்றீர்கள்? யாருக்காவது தெரியுமா? தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லுங்கள். அகத்தியப் பெருமானையே கேட்டுவிடலாம். 

அடியவர்கள் :- தெரியாது ஐயா. 

குருநாதர் :- அப்பனே தெரியாது என்று சொல்லக்கூடாது என்பேன் அப்பனே. நிச்சயம் மற்றவர்களிடம் அப்பனே கேட்டு அறிதல் வேண்டும். ஆனாலும் ஒரு உண்மையைச் சொல்கின்றேன் அப்பனே.  அனைவருமே சாவு நோக்கித்தான் செல்கின்றீர்கள் என்பேன் அப்பனே. 

அடியவர்கள் :- …………

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் மனித உடம்பு எதனால் ஆனவை? 

அடியவர்கள் :- பஞ்ச பூதங்கள். 

குருநாதர் :- அப்பனே அப்பஞ்ச பூதங்களால் என்னென்ன விளையும் என்பதையெல்லாம் அப்பனே தெரியுமா அப்பா? அப்பனே வருங்காலத்தில் அதுதான் நடக்கப் போகின்றது. அப்பனே, அம்மையே இதனால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இதனால்தான் அன்பு மட்டும் எங்களுக்குப் போதும் என்று. அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ்அன்பை நிச்சயம் செலுத்திவிட்டால் அப்பனே அவ்அன்பிற்கு யாங்கள் கட்டுப்பட்டவர்கள் என்பேன் அப்பனே. அனைத்தும் செய்வோம். அப்பனே இங்கு அன்பு வந்துவிட்டால், அப்பனே குற்றம் செய்ய மனமில்லை. 

அப்பனே அவ்அன்பு வருவதற்கும் புண்ணியங்கள் தேவையப்பா. அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்புண்ணியங்கள் எப்படிப் பெறுவது என்பது யாருக்காவது தெரியுமா அப்பா? 

அடியவர் :- பிறருக்கு உதவனும். தர்மம் செய்யனும். 

குருநாதர் :- தாயே இப்போது இதற்கு இப்போது இடமில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் ஒரு விதத்தில் சரிதான். இந்த நேரத்தில்  அதுக்கு இடமில்லை. அடுத்து சொல்லுங்கள். 

அடியவர் :- துன்பம் வந்தாலும் துன்பத்தைக் கண்டு எப்போதும் நாம் துவண்டுவிடக்கூடாது. நம்முடைய குறிக்கோளை நோக்கிப் போய்க்கொண்டே இருக்கவேண்டும். 

குருநாதர் :- அறிந்தும் புரிந்தும் தாயே இதற்கும் இடமில்லை. 

அடியவர் :- ஜீவகாருண்யம்.

குருநாதர் :- தாயே இதற்கும் இடமில்லை. 

அடியவர் :- மற்றவர்கள் கஷ்டத்திலிருந்து மேலே வர உதவனும். 

குருநாதர் :- இதற்கும் இல்லை. அப்பனே இதுவும் இல்லை. 

அடியவர் :- எல்லாம் இறைவன்தான் என்று ..

குருநாதர் :- அப்பனே இவையெல்லாம் யான் சொல்லிவிட்டேன். 

அடியவர் :- சரணாகதி

குருநாதர் :- அப்பனே இறந்தும் , பிறந்தும். யான் என்ன கேட்டேன்? 

அடியவர்கள் :- புண்ணியம் எப்படி செய்வது. 

சுவடி ஓதும் மைந்தன் :- இறந்தும் பிறந்தும் இதற்கு என்ன இடையில் என்று கேட்கின்றார். 

அடியவர் :- வாழ்க்கை. 

குருநாதர் :- அப்பனே மீண்டும் கேட்கின்றேன் அப்பனே. எப்படி புண்ணியங்கள் செய்வீர்கள்? 

அடியவர் :- ஐயாதான் சொல்லிக் கொடுக்க வேண்டும். 

குருநாதர் :- அம்மையே அறிந்தும் நிச்சயம் நரகத்தில் அனைவருமே பாவம் செய்தவர்கள்தான். நிச்சயம் அவை தொலைக்க இறைவன் எப்படி வழி விடுவான்? 


அடியவர் :- அப்பா நீங்கதானே சொல்லிக் கொடுத்தீர்கள். இன்பம் எப்படி ஒரு மாயையோ அதுபோல் துன்பமும் ஒரு மாயைதான். அப்போ இன்பம் துன்பம் இரண்டையும் இறைவன்தானே கொடுக்கின்றார். 

குருநாதர் :- தாயே பின் இப்பொழுது யான் என்ன சொன்னேன்? 

அடியவர் :- புண்ணியம்

குருநாதர் :- தாயே மீண்டும் சொல்கின்றேன். அறிந்தும் இதைத் தன் புரிய அனைவருமே நரகத்தில் இருக்கின்றீர்கள். இங்கு புண்ணியம் எப்படி வேலை செய்யும் ? இன்பம் எப்படி வேலை செய்யும்? 

இவ்நரகத்தை விட்டு வெளியே வர ஆங்காங்கு திருத்தலங்கள் யாங்களே அமைத்தோம். 

நிச்சயம் தன்னில் கூட இதனால் அனைவராலும் பின் துன்பம் இல்லாமல்  பின் வாழ முடியுமென்றால் நரகத்தில் - நிச்சயம் இல்லை தாயே. அனைவராலும் நிச்சயம் தன்னில் கூட அதாவது புண்ணியங்கள் செய்து வாழ வேண்டுமென்றால் நிச்சயம் இல்லை. 

இதனால்தான் தாயே கலியுகத்தில் துன்பம் என்ற ஆயுதத்தை இறைவனே எடுத்து நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட கொடுத்து நிச்சயம் மற்றவர்களுக்காக உழைக்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- அதனால் நம்மள பக்குவப்படுத்த என்ன தேவை? துன்பம் தேவை. துன்பம் இருந்தால்தான் நம்மை பக்குவப்படுத்தி அந்த பாவத்தை நீக்க முடியும். 

குருநாதர் :- தாயே சொல்லிவிட்டேன். இறைவன் ஒன்றுமே கொடுப்பதில்லை. இதற்கு என்ன நீங்கள் கூறுகின்றீர்கள். 

அடியவர்கள் :- ( அமைதி ) 

குருநாதர் :- ஆனாலும் கொடுப்பான். நிச்சயம் தன்னில் கூட ஏன் எதற்கு அனைத்தும் பின் அனைவரும் துன்பத்தில் ஒளிந்துள்ளீர்கள்? 

அடியவர் :- பக்குவங்கள் அதிகரிப்பதற்காக…

குருநாதர் :- தாயே இவையன்றி உணர நிச்சயம் இறைவன் எங்கு இருக்கின்றான். 


*******
“பக்தி என்ற கத்தி”
*******


அடியவர் :- இங்கதான் இருக்கின்றார். 

குருநாதர் :- அப்பா இது மட்டும் தெளிவாகச் சொல்கின்றாய் அப்பா. 

அடியவர்கள் :- ( சிரிப்புக்கள் ) 

குருநாதர் :- அப்பப்பா !! அப்பொழுது பின் இறைவன் இங்குதான் இருக்கின்றான். ஆனாலும் அப்பனே நீ செல்லும் வழியில் கூட இறைவன் இருக்கின்றான் அல்லவா? 

அடியவர் :- நிச்சயமாக

குருநாதர் :- அப்பொழுது இறைவனே வந்து உன் கையை உடைத்திருக்கலாம் அல்லவா?

அடியவர்கள் :- ( சிரிப்புக்கள் ) 

அடியவர் :- நிச்சயமாங்க ஐயா

குருநாதர் :- அப்பனே நிச்சயம் இறைவன்தானப்பா!!!

அப்பனே அடப்பாவி இறைவா!! நான் உனக்கு அனைத்தும் செய்தேனே என்ன புரயோஐனம் என்று. அப்பனே ஏன் கேட்கவில்லை? 

அடியவர் :- என்னுடைய நல்லதற்காகத்தான் செய்திருப்பார். 

குருநாதர் :- அப்பனே அந்தக் கை பின் நிச்சயம் இறைவனை எப்படி பின் தொழுதிற்று. அதனால் அப்பனே சில பல பூசைகள் இறைவனைத் தொட்டு. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( தனி விளக்கங்கள் ) 

குருநாதர் :- அப்பனே இதன் ரகசியத்தை யான் செப்புவேன். இதனால் அப்பனே அவர் இவர் எதை என்று புரிய நல் சொப்பனத்திலேயே நல் முறையாகவே யான் உரைப்பேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( ஆழ் ரகசிய விளக்கங்கள்)

*************
( காகபுஜண்டர் மகரிஷி வாக்கு :- “பக்தி என்பது கத்தி என்று தெரியாமல்  போனது!!!!” - சித்தன் அருள் 1362)

(அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு : “அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே இன்னும் சித்தர்களும் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள் பக்தி என்பது அப்பனே பின் கத்தி போன்று என்பேன் அப்பனே”. - சித்தன் அருள் 1724) 

*************

குருநாதர் :- அப்பனே மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? நிச்சயம் தன்னில் கூட அதாவது இறைவனுக்குப் பூசைகள் செய்து கொண்டிருந்தான். இறைவன் இறைவன் என்று ஓடிக்கொண்டிருந்தான் என்று. ஆனாலும் அப்பனே நீ என்ன செய்தது என்று தெரியாமல் அப்பனே போகுமப்பா. இது போல் கலியுகத்தில் இறைவன் தண்டனைகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, அப்போ உங்க கை உடைந்துவிட்டால் என்ன சொல்லுவாங்க? 

அடியவர் :- நான் ஏதோ தவறு செய்து விட்டேன் என்று. 

அடியவர்கள் , சுவடி ஓதும் மைந்தன் :- சாமி சாமி என்று கும்பிட்டுக் கொண்டிருந்தியே என்ன நடந்தது , ஏது என்று. 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் இது போலத்தான் மனிதன் கலியுகத்தில் இறைவனுக்கே அவப்பெயரை ஏற்படுத்துவான் மனிதன். 

(அதாவது மனிதர்கள் தவறு செய்துவிட்டு,  இறைவனை குறை சொல்வது. இறைவனே இல்லை என்றும் சொல்வது) 

சுவடி ஓதும் மைந்தன் :- எப்படி ஏற்படுத்துவாங்க? எப்படி வணங்குவாங்க? இறைவனை நான் வணங்கினேனே, வணங்கினேனே.. ஒன்னுமே செய்யலையே என்று  சொல்லிவிட்டு…அப்போ இறைவன் எங்க இருக்கின்றார்? . அப்போ மத்தவங்க என்ன பன்னுவாங்க? 

குருநாதர் :- அறிந்தும் இதனால்தான் நிச்சயம் பக்குவங்கள் தேவையப்பா. 


###################
நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர், தூங்கா மதுரை மாநகரில் அருளும் மகத்தான இவ்ஆலயத்தின் முகவரி உங்கள் பார்வைக்கு :- 

Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7

திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் மன்னர் திருமலை நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில்.
மதுரை To திருமங்கலம் ரோட்டில் மூலக்கரை பஸ்டாப் இறங்கி பார்த்தாலே எதிர்புறம் கோவில் தெரியும். திருப்பரங்குன்றத்திற்கு Thiagarajar Engineering Collegeக்கு முந்தின ஸ்டாப்.
###################

( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  22,23 June 2025 ஆம் ஆண்டு ,  மதுரை மாநகரில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…... ) 


(-------------------------------------------------

வணக்கம் அகத்திய மாமுனிவர் அடியவர்களே!!!

உலகம் அழிவு நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றது. இதனைத் தடுக்க குருநாதர் மதுரை சத்சங்கத்தில் அனைவரும் செய்து வரவேண்டிய வழிபாட்டு முறைகளை குருநாதர் அவசர உத்தரவாக வந்திருக்கின்றார் அதை நினைவூட்டல் பதிவு.
 

சித்தன் அருள் - 1884 - அன்புடன் அகத்திய மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் 22.06.2025 :-

https://siththanarul.blogspot.com/2025/06/1884.html?m=0

ராகு கிரகம் மற்றும் கேது கிரகம் புவியை நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. இதனால் நிச்சயம் அழிவுகள்.  வரும் ஆறு ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள். இந்த அழிவுகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அழிவை தடுத்து நிறுத்த வேண்டும்.

(1) அனைவரும் சேர்ந்து நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சிவபுராணத்தை பாடுதல் வேண்டும். மக்கள் அனைவரும் 50 /100 / 200 / 500 /1000 அளவில் ஒன்று கூடி, கூட்டுப் பிரார்த்தனை இறைவனிடம் சிவபுராணம் ஓதி பிரார்த்தனை செய்ய வேண்டும். பூமியைத் தாக்க வந்து கொண்டிருக்கும் ராகுவானவனை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி  இவ் சிவபுராணம் பாடல் இதை ஓதுதல் வேண்டும். கோளறு பதிகம், தேவாரம், திருவாசகம் விநாயகர் அகவல் படிக்க வேண்டும். 

(2) அனுதினமும் உங்கள் இல்லங்களில்  நவகிரக தீபம் ஏற்றி ,  நவகிரக காயத்ரி மந்திரம் ஓதி , மற்றவர்களுக்காக இந்த உலகம் நன்மை பெற வேண்டும் என்று  வழிபாடு செய்ய வேண்டும். 

(3) பாவத்தை நசுக்கும் பாபநாசத்தில், மற்றும் திருவண்ணாமலையில் இவ்வாறு அனைவரும் ஒன்று கூடி, கூட்டுப் பிரார்த்தனை சிவபுராணம் பாடினால், தியானங்கள் செய்தால், மக்களுக்கு நடக்கும் அழிவுகள் குறைக்கப்படும்.

(4) புண்ணிய நதிகள் இருக்கும் கரையோரங்களில் மக்கள் அனைவரும் ஒன்று கூடிச் சென்று சிவபுராணம் பாராயணம் செய்ய வேண்டும். நீரால் ஏற்படும் அழிவை இப்படி தடுக்க வேண்டும்!. நதிக்கரையோரம் இருப்பவர்கள், கடலோரம் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி, கூட்டுப் பிரார்த்தனை செய்து, சிவபுராணம் படித்து வரவேண்டும். 

(5)அனைவரும் ஆடி மாதம் பூர்த்தியாகும் வரை அம்பாள் ஆலயத்திற்குச் சென்று அபிராமி அந்தாதி அம்பாளின் பாடல்களைப் பாடி வந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பு பெறும். 

இவ் வழிபாட்டினை அனைவரும் ஒன்று கூடி ஆலயங்களில் கூட்டுப் பிரார்த்தனை செய்து,  மற்றும் இல்லங்களில்  நவகிரக தீபம் ஏற்றி ,  அனைவரும் முடிந்த வரை ஒன்றாக இணைந்து சேர்ந்து அனைவரும் இந்த உலகம் அழிவிலிருந்து விடுபட  பாடுபடுவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…

    ReplyDelete