​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 12 July 2025

சித்தன் அருள் - 1897 - அன்புடன் அகத்தியர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 8


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 8

ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ்தொடர் சத்சங்க வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

1. சித்தன் அருள் - 1867 - பகுதி 1
2. சித்தன் அருள் - 1869 - பகுதி 2
3. சித்தன் அருள் - 1876 - பகுதி 3
4. சித்தன் அருள் - 1879 - பகுதி 4
5. சித்தன் அருள் - 1881  - பகுதி 5
6. சித்தன் அருள் - 1889 - பகுதி 6
7. சித்தன் அருள் - 1894 - பகுதி 7 )

குருநாதர: அப்பனே குரங்கு புத்தியைப் பார். ஆனால் குரங்கு என்று சொல்லக்கூடாது. அனுமான் என்றே சொல்ல வேண்டும். காகத்தின் அப்பனே காகம் என்று சொல்லக்கூடாது. புசண்டனே என்றே சொல்ல வேண்டும். அதன் வேலையைக் கூட சரியாகச் செய்கின்றது என்பேன் அப்பனே. ஆனால் மனிதன் செய்யவில்லையே!

அப்பனே அதற்கு யார் சொல்லிக் கொடுத்தது அப்பனே. அதற்கு எங்கப்பா (அறிவு உள்ளது)? 

ஆனாலும் அப்பனே மனிதனுக்கு யான் நன்றாகவே எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன் யானும் சித்தர்களும் கூட.  ஆனாலும் அதைக் கூட கேட்காததால் அப்பனே, யான் என்ன செய்ய வேண்டும்? தண்டனைதான் கொடுக்க வேண்டும். இதனால்தான் சொன்னேன் அப்பனே. அறிவில்லாமலும் அறிவிருந்தும். புரிகின்றதா? 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள். வாயில்லா ஜீவராசிகளுக்கு சித்தனை அறிவு இல்லை. ஆனால் அறிவோடு நடந்து கொள்ளும்.  எப்போதும் அறிவுள்ளவை போல் இறை வழியில் நடந்து கொண்டுள்ளது. இதனையே குருநாதர் அறிவில்லாமலும் அறிவிருந்தும் எது என்ற கேள்வியைக் கேட்டார்கள் முன்பு)

குருநாதர் :- அனைவருக்கும் புரிந்தது போல் யான் சொன்னேன் அப்பனே. புரிந்துகொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன் :- ( அருமையாக சில தகவல்களை இங்கு உரைத்தார்கள். திருடர்களுக்கு, உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்களுக்கு - அன்பு தந்தை அகத்திய மாமுனிவர் ஏன் வாக்குகள் உரைப்பதில்லை என்று பல உதாரணங்களுடன் அங்கிருந்த அடியவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.) 

குருநாதர் :- அப்பனே அதாவது மது மயக்கத்தில் விழுந்தவனைக்கூட திருத்திவிடலாம். அதுவும் ஒரு போதை.  அப்பனே காதலும் ஒரு போதை. ஆனால் காதல் போதையில் விழுந்தவனைத் திருத்தவும் முடியாதப்பா. 

அப்பனே இதற்கு என்ன பதில் கூறவும்?
(நம் கருணைக்கடல் அங்குள்ள ஒரு அடியவரை மிகக் குறிப்பாக அழைத்தார்கள். )

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா உங்களைத்தான் வாங்க ஐயா.

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- உள்ளதை உள்ளபடி சொல்லட்டுமா ஐயா?

சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லுங்க ஐயா. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-  என் மனதில் ஒரு வேண்டுதல் வைத்தேன். அதற்கான பதிலை ஐயன் கூறிவிட்டார். 

குருநாதர் :- அப்பனே, கூறும் அனைவருக்கும். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- இன்றைய காலத்தில் பெண் குழந்தைகள் , காதல் என்ற விசயத்தில் ஈசியாக விழுந்து விடுகின்றார்கள். அந்த பசங்க செய்யும் சின்ன சின்ன மோஜிக் பார்த்து விழுந்து விடுகின்றார்கள். அந்த போதையிலிருந்து அவங்களை நீங்க காப்பாற்றனும் என்று என் மனதில் வேண்டுதல் வைத்தால். ஏனென்றால் போனமாதம் ஐயன்தான் ஒரு குழந்தையை மீட்டுக் கொடுத்தார். ஒரு __ சமூகத்தில் சிக்க இருந்த ஒரு பெண் குழந்தையை கடைசி நிமிடத்தில் மீட்டுக் கொடுத்தார். 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் சொல்லித் தந்தால் கேட்க மாட்டார்கள் என்பேன் அப்பனே. அடியோடு கொடுத்தால்தான் திருத்துவார்கள் சொல்லிவிட்டேன். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- ஐயன் திருவடியை நான் தொந்தரவு செய்கின்றேன் என்று நினைக்க வேண்டாம். நான் கேட்பது. 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் எனை நம்பியவர்களை யான் காப்பாற்றிக் கொண்டே இருக்கின்றேன். எனை நம்பாதவர்களையும் கூட காப்பாற்றிக்கொண்டே இருக்கின்றேன். 

அப்பனே இங்கு பாவம் யாரால் ஏற்படுகின்றது கூறு? 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- மனிதன்தான். 

குருநாதர் :- அப்பனே ஊது. அதாவது காற்றை அப்பனே பெருகி. ஆனாலும் அப்பனே பெருகிவிட்டால் உடைந்துவிடும் அப்பனே. ஆனாலும் உடைந்து விடாது மனிதனின் உடம்பு. கஷ்டங்களுக்குப் போய்விடும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா பலூன் குறித்து சொல்கின்றார் இங்கு. 

குருநாதர் :- அப்பனே இங்கு சிறந்தது,  மிக உயர்ந்தது அப்பனே காதல் போதையே. 

அப்பனே இதில் விழுந்தவன் அப்பனே எழுந்திருக்க முடியாதப்பா. அப்பனே எழுந்திருக்கக் கூடியவனே நீ கூறு?

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- இல்லைங்க. எனக்குத் தெரிஞ்சு, அதில் போய் முட்டி, அவஸ்தைப்பட்டு , குடும்பம் சிதைஞ்சு வந்தவங்களைத்தான் நான் பார்த்திருக்கின்றேன். நான் பார்த்த வரைக்கும் அந்த மாதிரி (காதலிலிருந்து வெளியே வந்தவங்க) யாரும் இல்லை. 

குருநாதர் :- இதனால்தான் அப்பனே, யாங்கள் நல்லதை செய்யக் காத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே. ஆனால் யாருமே வருவதில்லை அப்பனே. அப்பொழுது என்ன செய்ய வேண்டும்? அடித்துத் துவைத்துத்தான் இடவேண்டும். சொல்லிவிட்டேன். 

இதனால் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. தவறு செய்தால் என்னிடமே தண்டனை உண்டு. அப்பனே அறிந்தும் ஏற்கனவே பாவக் கணக்கு முதுகிலே. அப்பனே அனைவருக்கும் சொல்லிவிட்டேன் அப்பனே என்ன தேவை என்று. இதிலே உள்ளது. 

சுவடி ஓதும் மைந்தன் :- வாக்கு உங்க யாருக்குமே தேவை இல்லை என்று சொல்கின்றார் அகத்தியர். (சத்சங்க வாக்கு) இதிலே உள்ளது என்று சொல்கின்றார். எல்லோருக்கும் ஆசி கொடுத்துவிட்டார் ஐயா. 

குருநாதர் :- அப்பனே எதற்காக (இங்கு) வந்தேன்? என் வேலையை முடித்துக்கொண்டேன். அப்பனே அறிந்து கொள்வாய் நீ. 

அப்பனே புரியாமலும் அப்பனே புரிந்தும்.  புரிந்தும் புரியாமலும். அப்பனே ஆனாலும் அப்பனே அவரவர் விருப்பப்படிதான் யான் செய்வேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- உங்க யார் யாருக்கு என்னென்ன விருப்பமோ அதைத்தான் செய்வேன் என்று சொல்கின்றார். 

குருநாதர் :- நிச்சயம் அறிந்தும் உண்மைதனைக்கூட அதில் கெடுதல் இருந்தால் நிச்சயம் யானே தடுத்து நிறுத்துவேன். 

அப்பனே இன்னும் கேள்விகள் உண்டா?

அடியவர்கள் :- (அமைதி) 

;ஒரு அடியவர் கேட்கத் தயார் ஆன பொழுது) 

குருநாதர் :- அப்பனே எதையும் கேட்டுவிடாதே அப்பனே. வாழ்க்கையே இல்லையப்பா.  வாழ்க்கை யான் கொடுத்துக் கொண்டே வருகின்றேன். 
(தனி வாக்குகள்) 
அப்பனே யான் இருப்பேன் அப்பனே கடைநாள் வரையிலும் துணை. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- (அன்னதானம் எங்கு கொடுப்பது என்ற ஒரு பொது கேள்வி) 

குருநாதர் :- அப்பனே இல்லாத இடத்தில் கொடு. 

அடியவர் :- மழை இல்லாமல் நிறைய உயிரினங்கள் இப்போ சிரமப்படுது…

குருநாதர் :- அம்மையே இப்பொழுது கூறினான். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். ஏமாற்றுகின்றார்கள் என்று. ஆனால் இவையெல்லாம் பின் செய்யவில்லை என்றால் மனிதன் இன்னும் ஏமாற்றுவான். இவை வேண்டுமா என்ன? 

( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024 ஆம் ஆண்டு ஈரோட்டில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…..) 

வணக்கம் அகத்திய மாமுனிவர் அடியவர்களே!!!

உலகம் அழிவு நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றது. இதனைத் தடுக்க குருநாதர் மதுரை சத்சங்கத்தில் அனைவரும் செய்து வரவேண்டிய வழிபாட்டு முறைகளை குருநாதர் அவசர உத்தரவாக வந்திருக்கின்றார் அதை நினைவூட்டல் பதிவு.
 

சித்தன் அருள் - 1884 - அன்புடன் அகத்திய மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் 22.06.2025 :-

https://siththanarul.blogspot.com/2025/06/1884.html?m=0

ராகு கிரகம் மற்றும் கேது கிரகம் புவியை நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. இதனால் நிச்சயம் அழிவுகள்.  வரும் ஆறு ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள். இந்த அழிவுகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அழிவை தடுத்து நிறுத்த வேண்டும்.

(1) அனைவரும் சேர்ந்து நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சிவபுராணத்தை பாடுதல் வேண்டும். மக்கள் அனைவரும் 50 /100 / 200 / 500 /1000 அளவில் ஒன்று கூடி, கூட்டுப் பிரார்த்தனை இறைவனிடம் சிவபுராணம் ஓதி பிரார்த்தனை செய்ய வேண்டும். பூமியைத் தாக்க வந்து கொண்டிருக்கும் ராகுவானவனை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி  இவ் சிவபுராணம் பாடல் இதை ஓதுதல் வேண்டும். கோளறு பதிகம், தேவாரம், திருவாசகம் விநாயகர் அகவல் படிக்க வேண்டும். 

(2) அனுதினமும் உங்கள் இல்லங்களில்  நவகிரக தீபம் ஏற்றி ,  நவகிரக காயத்ரி மந்திரம் ஓதி , மற்றவர்களுக்காக இந்த உலகம் நன்மை பெற வேண்டும் என்று  வழிபாடு செய்ய வேண்டும். 

(3) பாவத்தை நசுக்கும் பாபநாசத்தில், மற்றும் திருவண்ணாமலையில் இவ்வாறு அனைவரும் ஒன்று கூடி, கூட்டுப் பிரார்த்தனை சிவபுராணம் பாடினால், தியானங்கள் செய்தால், மக்களுக்கு நடக்கும் அழிவுகள் குறைக்கப்படும்.

(4) புண்ணிய நதிகள் இருக்கும் கரையோரங்களில் மக்கள் அனைவரும் ஒன்று கூடிச் சென்று சிவபுராணம் பாராயணம் செய்ய வேண்டும். நீரால் ஏற்படும் அழிவை இப்படி தடுக்க வேண்டும்!. நதிக்கரையோரம் இருப்பவர்கள், கடலோரம் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி, கூட்டுப் பிரார்த்தனை செய்து, சிவபுராணம் படித்து வரவேண்டும். 

(5)அனைவரும் ஆடி மாதம் பூர்த்தியாகும் வரை அம்பாள் ஆலயத்திற்குச் சென்று அபிராமி அந்தாதி அம்பாளின் பாடல்களைப் பாடி வந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பு பெறும். 

இவ் வழிபாட்டினை அனைவரும் ஒன்று கூடி ஆலயங்களில் கூட்டுப் பிரார்த்தனை செய்து,  மற்றும் இல்லங்களில்  நவகிரக தீபம் ஏற்றி ,  அனைவரும் முடிந்த வரை ஒன்றாக இணைந்து சேர்ந்து அனைவரும் இந்த உலகம் அழிவிலிருந்து விடுபட  பாடுபடுவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment