​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 9 July 2025

சித்தன் அருள் - 1892 - அன்புடன் அகத்தியர் - கபில வனம். மொனராகலை.ஸ்ரீ லங்கா




12/5/2025. சித்ரா பௌர்ணமி அன்று போகர் மகரிஷி முருகப்பெருமானை தொழுது பாடிய பாடல் வாக்கு!!!

வாக்குரைத்த ஸ்தலம்: கபில வனம். மொனராகலை.ஸ்ரீ லங்கா.

அழகாக மனதில் புகுந்து 

அனைவரையும் ஆட்டி வைக்கும் வல்லமை படைத்த என் குழந்தாய்!!!

உனையே பணிந்து பல ஜென்மம் ஜென்மமாக வந்திருக்கின்றேனே இங்கு!!!

ஞானங்கள் எனக்கு கொடுத்திட்டாயே!!!
அன்பு மகனே!!!.. குகனே!!!
வேலவனே!!
பின் அறிந்தும் பின் மக்களுக்கு பரப்புகின்றேனே போகனவன்!!!

அன்பும் கருணையும் நிறைந்த முருகா!!!


அன்பினால் அனைவரையும் அணைத்திடும் முருகா!!

கருணை படைத்திடும் முருகா!!
அனைத்தையும் கொடுத்திடும் முருகா!!

அவரவர் வேண்டியதை கொடுக்கும் முருகா!!
பின் உன்னை நம்பி வந்திருப்பவரை அணைத்துக் கொள் முருகா!!!

அனைத்தும் நீக்குபவனே முருகா!!
பாவத்தை அடியோடு நீக்குபவனே முருகா!!

உன்னை நம்பி நம்பி வந்த குழந்தைகளுக்கு அவரவருக்கு என்ன தேவை? என்பதை நீயும் பின் உணர்ந்து உணர்ந்து கொடுப்பாயே முருகா!!


முருகா முருகா வேலா வா!!!
வேலவனே முருகா!!
அன்பு நிறைந்த முருகா!!

அழகான வள்ளி தெய்வானையோடு அமர்ந்திட்ட முருகா!! வரும் வரும் காலங்கள்
நோய்களின் காலங்களாக சென்று கொண்டு சென்று கொண்டு!!


அதை நீக்கி அனைத்தும் அருள்வாய் முருகா!!!

செல்லக் குழந்தையே முருகா!!
அன்பு குழந்தையே முருகா!!
கருணை வடிவே முருகா!!


பார்வதி அன்னையின் குழந்தாய்!!
அழகாக அனைவரும் கேட்டிடும் வரங்களை கொடுத்திடும் முருகா!!
அழகாக வரங்கள் அனைத்தும் மனிதனுக்கு பின் கேட்ட போதெல்லாம் கொடுத்திடும் முருகா!!


அன்போடு அணைப்பவனே முருகா!!
கருணையோடு அணைப்பவனே முருகா!!!
அனைவரையும் அனைத்து ஜீவராசிகளையும் அணைத்திடும் முருகா!!

முருகா முருகா கார்த்திகேயா 
அருள் புரிந்து எமக்கு  அனைத்தும் பின் அருள் கூர்ந்து.. இன்றைய நாளில் சித்தர்கள் அனைவரும் உனை தேடி இங்கு வந்துள்ளோம்!!
எம் தனக்கும் அருளாசிகள் கொடுக்க பின் வா வா முருகா!!!


குழந்தை வடிவே வா!! வா! 
இளைஞனே வா வா!!
வந்து வந்து பின் அனைவருக்கும் தரிசனங்கள் கொடுத்து பின் அனைவரையும் மகிழ்விக்க ஓடோடி வா 
ஓடோடி வா முருகா!!


 
பாச குழந்தையே வா வா!!
 எத்தனை நாட்கள் இங்கே தியானத்தில் இருப்பாய்?? குகனே! 
எத்தனை நாட்கள் இங்கே தியானத்தில் இருந்து வழி நடத்துகின்றாயே அனைவரையும். 
ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு வழி நடத்தும் குகனே!!
உன்னிடத்தில் பின் தேடி தேடி வந்தாலும் 
அனைத்தையும் நீக்கும் குகனே!!
அனைத்தும் நீக்கும் குகனே!!


வருகின்றதப்பா!!
மழைகளாலும்!!...(அழிவுகள்)

 அறிந்தும் பின் சித்தர்கள் செப்புகின்றார்.. நோய் நொடிகளோடு வாழும் காலம்.. கலியுகமே!!
நோய் நொடியோடு மனிதன் வாழ்கின்ற கலியுகமே!!

தியானத்திலிருந்தும் ஓடோடி வா!!
தியானத்தில் இருந்தும் ஓடோடி வா!!
இன்னும் மக்கள் மடியத்தான் போகின்றார்!!
இன்னும் மக்கள் நிச்சயம் தன்னில் ஒருவருக்கொருவர் அடித்து இன்னும் பின் பூகம்பங்களாலும் மழைகளாலும் அழிவு வருகின்றதே முருகா!!

அதை நீயும் அறிந்துள்ளாயே முருகா!!
அதை நீயும் அறிந்துள்ளாயே முருகா!!!


இப்படியே அமர்ந்து தியானங்கள் 
இப்படியே அமர்ந்து தியானங்கள் 
இன்னும் எக்காலம் வரை??
பின் முடியும் முருகா!!

ஓடோடி வா முருகா 
அனைத்து குறைகளும் போக்குவாய் முருகா 
அனைத்து பின் மனிதரிடத்தில் உள் புகுந்து பக்திகளை நிச்சயம் தன்னில் நேர்மை நீதியோடு அனைவருக்கும் பின் வரத்தினை கொடுக்க வா வா முருகா!!

ஈசனின் குழந்தையே வா வா வா!!
பார்வதி தேவியின் குழந்தாய் 
வா வா வா!!
சித்தர்களின் குழந்தையே 
வா வா வா வா!!

செல்ல குழந்தையே வா வா வா 
அற்புதங்கள் பல நிகழ்த்தும் இளைஞனே வா வா வா 
உன்னருகில் பின் அனைவரும் வந்திருக்கின்றனரே
அவரவர் விருப்பம் பின் நிறைவேற்ற வா வா முருகா!!

கதிர்வேலா முருகா!!
கதிர்காமத்து முருகா!!
வள்ளி தெய்வானையோடு முருகா!!
வா வா முருகா குழந்தை வடிவே வா வா 

அனைத்து உலகமும் காப்பாய் வா வா 
எண்ணிலடங்கா மனிதர்களின் பேரழிவு வந்து கொண்டே இருக்கும் சமயத்தில் வா வா வா குழந்தாய். 

வேலோடு வா வா குழந்தாய்!!
அன்போடு ஆதரவோடு உந்தனுக்கு பக்கத்தில் சித்தர்கள் நிற்கின்றோமே வா வா முருகா!!!


வேலோடு வா வா முருகா 
மயில் மீது பறந்து வா வா!!
சேவலோடு வா வா முருகா!!
ஆனையனோடு வா வா முருகா 
காகத்தின் மேலே வா வா முருகா 
அனைத்து ஜீவராசிகளுடன் விளையாடும் முருகா. 

அனைத்தும் உனக்கே சொந்தம் என்ற!! அனைத்தும் உந்தனுக்கே சொந்தம் என்ற பொழுது... மனிதன் வாயில்லா ஜீவராசிகளை கொன்று குவித்து அதை உட்கொண்டு இன்னும் கர்மத்தை அதாவது பாவத்தை சேர்த்துக் கொண்டிருக்கையில் அதையும் நீக்கிட வா வா குழந்தாய்.
அதையும் நீக்கிட வா வா குழந்தாய். 

உன் ஜீவராசிகள் அழகாக!! உன் ஜீவராசிகள் அழகாக!! ஊர்ந்து தவழ்ந்து பறந்து திரிகின்றதே!!

அதையும் கூட மனிதன் இன்னும் சாகடித்து போகின்ற நிலைமையில் தன் கூட 
ஈசனும் கூட கோபங்கள் பட்டு.. மனிதனுக்கு அழிவுகள் நிச்சயம் தன் மேல்....

வாயில்லா ஜீவராசிகள் இன்னும் அழிகின்றது!!


அதேபோல நிச்சயம் தன்னில் மனிதன் அழிவுகள் தேடிக் கொண்டிருக்கின்றானே!!!
மனிதனுக்கு புத்திகள் கொடுத்திட அறிவுகள் பெருக்கிட வா வா குழந்தாய்!!
வா வா குழந்தாய் வடிவேலனே 

கருணை படைத்தவனே முருகா 
பின் அன்பானவர்களை சோதிக்கும் முருகா!!
இனிமேலும் நீ சோதிக்ககூடிய நிலையில் அவர்கள் சூழ்நிலை இல்லை முருகா!!
அவர்களுக்கெல்லாம் ஒரு விடிவெள்ளி கொடுத்திட வா வா முருகா!!

வேலவனே வா வா வா வா
இளைஞனே வா வா வா வா 
குகனே வா வா வா வா 
அன்பு நிறைந்த தோழனே 
வா வா வா வா 
காக்கும் கரங்களே வா வா 
பதினைந்து முகங்களுடன் வா வா 
அனைத்து கைகளுடன் வா வா 
உன் பிள்ளைகளை நீயும் காப்பாற்றுவாய் 
என்றுதானே அவர்களும் உன்னை தேடி தேடி வருகின்றனரே முருகா 


நீ மட்டும் இப்படி தியானத்தில்!!
நீ மட்டும் இப்படி தியானத்தில் அமர்ந்து அமர்ந்து இருக்கின்றாயே முருகா!!!

மனிதனுக்கு பல பல வழிகளில் தொந்தரவுகள் நோய்கள் நொடிகளோடு வாழப்போகின்றான். 
அதிலிருந்து காக்க உன்னால் மட்டுமே முடியும் முருகா!!
அனைத்தும் சொல்லிக் கொடுத்தாயே முருகா!!


இன்னும் ஈசன்!!...
போகனே .....நில்!!

நிச்சயம் தன்னில் மனிதனிடத்தில் பாவங்கள் பெருகிப் போயிற்று!!!
இதனால் அருள் ஆசிகள் கொடுக்காதே!!!

என்று ஈசன் என்னிடம் சொன்னானே!!!!

நீயும் கூட மீண்டும் தந்தையிடத்தில் பேசியும்..!!
 சமாதானத்துடனே யானே என் பிள்ளைகளை பார்த்துக் கொள்கின்றேன் என்று கூறு வடிவேலா!!!

நிச்சயம் நீ தான் கூற வேண்டுமே முருகா!!


உன் தாயும் தந்தையும் கோபத்தில் இருக்க.. அதையும் கூட சமாதானப்படுத்தி அனைத்தையும் யானே
பார்த்துக் கொள்கின்றேன் என்று கூறு !! முருகா!!


முருகா முருகா முத்துக்குமரா 
அழகா குமரா 
அன்பு குமரா 
பாசக்குமரா
கருணை குமரா 
வா வா முருகா முருகா முருகா!!


மடிமேல் அமர்ந்து அனைத்தையும் காப்பாய் பார்வதி தேவியின் மடிமேல் அமர்ந்து அனைத்தும் காப்பாய் அனைவரின் உள்ளத்திலும் என்ன உள்ளது என்பதை புரிந்திட்டு அருளை தா தா..தா தா!! முருகா!! தா தா முருகா!!!

ஏழேழு பிறவிகளிலும் ஜென்மம் ஜென்மமாக வந்த சொந்தங்களை நீயும் கைவிடாதே முருகா!!!


மனிதன் மனிதன் மிருகங்களாகி!!!!.....


சீக்கிரமே வா வா முருகா!!!

மனிதனே மனிதன் மிருகம் ஆக போகின்றான் கலியுகத்தில் நிச்சயம் தன்னில்!!!
அதை தன் தடுத்திட வா வா முருகா!!!

முத்துக்குமரனே வா வா வா 
சிக்கல் வேலவனே வா வா வா 
அறுபடை வீட்டோனே வா வா முருகா!!

கதிர்காமத்தில் அறிந்தும் பல பின் அக்கிரமங்கள் அநியாயங்கள் நடக்க போகின்றது..

அதை காத்திட வா வா முருகா 
படையெடுத்து பின் அதை அழிப்பதற்காக பின் காத்துக்கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்!!

அதை காத்திட வா வா முருகா!!

இன்னும் தலங்களை அழித்திட மனிதன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்

அதை அழித்திட வா வா முருகா!!!

அழகாக இங்கே நீ விளையாடியது போதும் 
மக்களை காப்பாற்ற வா வா முருகா!!!
அனைத்தும் நீயே முருகா!!
அனைத்தையும் அறிந்தவன் நீயே முருகா!!
சித்தர்கள் யாங்கள் உந்தனுக்கு துணை இருப்போமே!!



உந்தனை பார்க்கும் நிச்சயம் தன்னில் இவ் நாட்களில் அனைவருக்குமே நிச்சயம் தன்னில் பல பின் அறிந்தும் கூட.. பாவங்கள் கழிப்பாயே!!
இன்றைய நாளில் உன்னை இங்கு காண யாங்கள் ஓடோடி வந்தோமே!!!

இந்நாளில் சித்திரை தன்னில் பௌர்ணமி தன்னில் எங்களை அழைத்து அழைத்து நீ மட்டும் விளையாடி கொண்டிருக்கும் நேரத்தில் யாங்கள் சென்று அனைவருக்கும் தன் பெயரைச் சொல்லிச் சொல்லி இருப்பவர்களுக்கும் ஆசிகள் கொடுத்திட்டோமே முருகா!!!

அனைத்தும் காப்பாய் முருகா!!
ஈசனின் மைந்தா முருகா!!
பார்வதி தேவியின் முருகா!!
அனைத்தும் ஒருவனே முருகா முருகா!!

எத்தனை எத்தனை அவதாரங்கள்??
அனைத்தும் காரணங்கள்!!!

மனிதன் புரிந்து கொள்ளவில்லையே முருகா!!!!....
மனிதன் அறிந்து கொள்ளப் போவதில்லையே இனிமேலும்!!!


உன் பிள்ளைகளுக்கு அவ் அவதாரங்களை பற்றி எடுத்துரை!! நீயே முருகா!!!

நிச்சயம் தன்னில் அனைத்தும் தெளிவு படுத்தி!!  (தெளிவு பெற்று) 
 தன் குடும்பத்தை காப்பாற்றுவானே மனிதன்!!!

நிச்சயம் தன்னில் அனைவருமே நிச்சயம் மனிதன் தன்னில் சில சில ஆட்டங்கள் மனதில் பேயாட்டங்கள் பாடி ஆடி அனைவரையும் கெடுப்பானே!! குடும்பத்தை கெடுப்பானே!!
கலியுகத்தில் அதை தடுத்து விட வா வா முருகா!!
உண்மை தெளிவினை விளக்க ஓடோடி வா வா முருகா! 



கருணை படைத்த முருகா 
கருணை படைத்த முருகா 
அலைந்து அலைந்து உன் திருவடியை சேர்ந்திருக்கின்றார்களே இப் பிள்ளைகளுக்கு தேவையானதை கொடுத்திடு! முருகா!

முருகா முருகா முத்துக்குமரா வா வா கண்ணா!!
அனைத்தும் நீயே 
உலகத்தைக் காப்பாற்ற வா வா முருகா 
மயில் மீது ஏறி வா வா முருகா!!

நிச்சயம் தன்னில் இன்னும் பல பின் அழிவுகள் பலத்த பலத்த அழிவுகள் வருகின்றதே!!
நீரினாலும் நிச்சயம் தன்னில்.....

அதை காத்திட வா வா முருகா!!!


உன் பக்தர்கள் இங்கு பொய்கள் ஆகின்றார்களே அதையும் நிச்சயம் நீயும் ஞானத்தைக் கொண்டு உணர்வித்து அவந்தனையும் பக்குவப்படுத்தி...!!
இப்படித்தான் பக்தி என்று!!.... தெளிவு படுத்திட வா வா முருகா 
வா வா முருகா!!

அன்பு நெஞ்சங்களை அணைத்துக் கொள்ளும் முருகா!!

இங்கேயே இன்னும் எத்தனை நாட்கள் விளையாடப் போகின்றாய்??
அனைவரின் இல்லத்திலும் விளையாட்டாக சென்று போய் கொண்டு வா வா முருகா!!
அனைவரின் இல்லத்தில் உனக்கே.. சொந்தமாக்கி பின் அனைவரும் உன்னை இக்கலியுகத்தில் துதித்து கொண்டிருக்கின்றாரே!! அனைவரின் இல்லத்தில் பின் சென்று எப்படி இங்கு விளையாடுகின்றாயோ!! அப்படியே அங்கு விளையாட்டு கூடி அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திடு முருகா!!!


உனையே நம்பி குழந்தை பலம் (பாக்கியம்) இல்லாதவர் 
வருகின்றார்!!!...
அவர்களுக்கும் பின் குழந்தை பாக்கியத்தை கொடுத்திட வா வா முருகா!!!

இன்னும் உன் கையில் திருமணம் ஆகாமல் வருகின்றனரே!!
அவர்களுக்கும் அனைத்தும் பாக்கியத்தை ஏற்படுத்து முருகா !!
அனைத்து தோஷங்களையும் நீக்கிடும் முருகா!!
அனைத்து தோஷங்கள் நீக்கிடும் முருகா!!
அனைத்தும் தா தா!
ஓடோடி வா!!
அருள் கூர்ந்து அனைத்தும் தா தா 

குருவே நாதா நீயே அன்பு!!

அறிந்திலேன்!! (தெரியாமல்) யானும் எங்கே... சென்றேன்!!!!

நீயும் கூட பழனிக்கு வந்து.. இங்கே நீ என் அருகில் இருந்து கொண்டு பல மக்களுக்கு சேவையாற்று என்று சொன்ன முருகா!!!

அப்படியே யானும் செய்கின்றேன் என்று சொன்னேனே!!!

அதற்கு பதிலாக நீ தான் மனிதனை காத்திட ஓடோடி வா வா முருகா!!!

பின் காலடியில் சமர்ப்பிக்கின்றேன்..

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தொல்லையில் இருக்கின்றானே 
அதையும் தன்னை கூட யான் பார்த்து கொண்டிருக்கின்றேனே!!!

அதையும் தடுத்திட வா வா முருகா!!

அனைத்து சித்தர்களும் உன் பின்னாலே இருக்க ஓடோடி வா வா முருகா!!!

விளையாட்டு மைந்தா வா வா 
குதிரையின் மேலே ஏறி அமர்ந்து வா வா முருகா 
ராஜ வடிவத்தில் வந்து வந்து அனைவரின் இல்லத்தில் பின் மகிழ்ந்து மகிழ்ச்சியை கொடுப்பாய் முருகா. 

பாசம் மிகுந்த முருகா 
என் மடியில் நீ விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அனைத்தும் உன்னிடமே கேட்கின்றேனே முருகா 

வா வா முருகா கதிர்வேல் முருகா 
சூரியனே முருகா!!
சந்திரனே முருகா!!
அழகானவனே முருகா! 
அன்போடு அனைவரையும் அணைத்திட வா வா முருகா!!
கவலைகளை போக்கிட வா வா முருகா!!

அனைத்தும் அழிவு நிலைக்கு செல்கின்றதே!!
அதை தடுத்திட வா வா முருகா!!
அதை தடுத்திட வா வா முருகா!!

அன்பு நெஞ்சம் கொண்டோரை அவர்களுக்கு தேவையானதை அனைத்தும் அளித்திடு முருகா!!


இன்றிலிருந்து யான் உந்தனுக்கு பின்.. கருணை வடிவமாகவே கேட்கின்றேனே முருகா!!

அனைவரின் இல்லத்திற்கும் சென்று சந்தோஷத்தை தா தா முருகா!!
அனைவரின் இல்லத்திற்கும் சென்று சந்தோஷத்தை தா தா முருகா!!

குறைகளை அகற்று முருகா முருகா!!
ஆசை நாயகனே முருகா!!!
எதன் மீது ஆசை??
உலகத்தின் மீது!! ஆசையே!!
மக்களை நல்வழி படுத்த வேண்டும் என்ற ஆசையே! 

அதனால் தானே தாயுடன் தந்தையுடன் நிச்சயம் தன்னில் யான் மக்களை காப்பாற்றுவேன் என்று இங்கு அமர்ந்திட்டாயே!!
இப்பொழுது கூட அமைதியாக நிற்கின்றாயே!!!

இன்று முதல்!!.... செல்!! முருகா!!!... உந்தன் வழியிலே யாங்கள் பின்னாலே!! வருவோம்! 
அனைவரின் இல்லத்திலும் சென்று சந்தோஷத்தை தா தா முருகா!!!
அனைவரின் இல்லத்திற்கும் சென்று தரிசனங்கள் தா தா முருகா!!

என் முருகன் தருவான்!!
மனிதர்களே!!
என் முருகன் தருவான் மனிதர்களே!!

நீங்கள் ஆயத்தமாக இருங்கள் மனிதர்களே!!


ஆசிகள்!! ஆசிகள்!! ஆசிகள்!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. நன்றி போகர் பெருமானே, ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete