6/6/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: நைல் நதிக்கரை.கெய்ரோ எகிப்து.
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!
சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் 1855 அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்!! எட்டாம் பாகத்தில் !!
எகிப்து நாட்டில் உள்ள பிரமிடு குறித்த கேள்விக்கு!!!
அப்பனே அங்கேயே சென்று வாக்குகள் செப்புவேன் பொறுத்திருக!!!
என்று குருநாதர் பதில் வாக்கு அளித்திருந்தார்.
அதன்படியே ஜீவநாடி சுவடி ஓதும் அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயாவை எகிப்து செல்ல வேண்டும் பிரமிட் மற்றும் நைல் நதிக்கு செல்ல வேண்டும் என குருநாதர் உத்தரவு கொடுத்திருந்தார். அதன்படி திரு ஜானகிராமன் ஐயா அங்கு சென்றார்.
அங்கு குருநாதர் அகத்திய பெருமான் நைல் நதி மற்றும் பிரமிடுகளில் குருநாதர் ரகசியங்களைப் பற்றி எல்லாம் வாக்குகளில் உரைத்திருக்கின்றார். அவ்வாக்குகளுக்கு முன்னோட்டமாக நைல் நதிக்கரையில் வைத்து குருநாதர் உரைத்த வாக்கு.
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!
அப்பனே எம்முடைய ஆசிகள்!!!
அப்பனே நல்விதமாகவே அப்பனே முன்னே அப்பனே சித்தர்கள் யாங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட உலகத்தை அப்பனே பின் அழகாக அப்பனே வழி நடத்தினோம் அப்பனே!!!
ஆனாலும் அப்பனே பின் நிச்சயமாய் அப்பனே கலியுகத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே எவ்வாறு என்பதையெல்லாம் பார்த்தால்... மனிதன் அப்பனே அறிந்தும் கூட அறியாமல் கூட அப்பனே தர்மத்தை அப்பனே தலைகீழாகவே அப்பனே எடுத்துச் செல்கின்றான் அப்பனே!!
இதனால் அப்பனே மீண்டும் எதை என்று புரியாமலும் எவை என்று அறியாமலும் இப்படியே அப்பனே விட்டு வைத்து விட்டால் அதாவது அப்பனே விட்டு விட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதன் நிச்சயம் தன்னில் கூட.... யான் தான் இங்கு இறைவன்.. யான் தான் இங்கு சித்தன்!!!! என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பானப்பா!!!
இதனால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மீண்டும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. தர்மத்தை நிலை நாட்ட வேண்டும் !!
நிச்சயம் தன்னில் கூட!! அப்பனே மனிதனை காக்க வேண்டும் என்பதற்கிணங்கவே... சித்தர்கள் அப்பனே மீண்டும் அறிந்தும் புரிந்தும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் வந்து அப்பனே... ஆங்காங்கு அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே உலகம் தன்னில் கூட!!!
நிச்சயம் தன்னில் கூட அப்பனே இருந்து வழிகாட்டி அப்பனே நிச்சயம்... இவ்வாறு வழிகாட்ட அப்பனே பின் முடிந்தாலும் நிச்சயம்.. அவன் அப்பனே புத்தியை மாற்றிக்கொள்ள முடியாமல் இருந்த போதிலும்....அவந்தனை அப்பனே பக்குவப்படுத்தி அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அவ்வாறாக மீண்டும் மீண்டும் சொல்லி பக்குவப்படாமல் இருந்தாலும் அவனை அடித்து அப்பனே பின் துன்பத்தில் வைத்து அப்பனே நல்வழி காட்டுவோம் யாங்கள்!! அப்பனே!!
மோட்சத்திற்கான வழிகளிலும் கூட அனுப்புவோம் அப்பனே!! நலன்களாகவே!!
அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே எதை என்று புரிய.....இவ் நதியானது அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே பாவத்தை போக்கக்கூடியது என்பேன் அப்பனே!!!
அவை மட்டுமில்லாமல் அப்பனே அறிந்தும் புரிந்தும் கூட அப்பனே அப்படியே எதை என்று புரிய... அப்பனே பல பல அரசர்களும் கூட அப்பனே இங்கு வந்து எதை என்று புரிய...இவ் நதியில் நீராடி அப்பனே பல வெற்றிகளையும் கூட குவித்தனர் என்பேன் அப்பனே. நல்விதமாக அப்பனே.
அதாவது விசுவாமித்திரனும் கூட அப்பனே பின்... அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் தவங்கள் மேற்கொண்டு இருக்கும் பொழுது பின் நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் நிச்சயம் பின் அதாவது...இவ் உலகம் நிச்சயம் பின் யாம் சொல்லியதை நிச்சயம் பின் கேட்க வேண்டும்!!! என்பதையெல்லாம் நினைத்து நிச்சயம் இவ்வாறாக கேட்க வேண்டும் நல்வழிப்படுத்த வேண்டும் மக்களை!! என்பதற்கிணங்க நிச்சயம் தவத்தை மேற்கொண்டான்.
ஈசன் வந்து!! நிச்சயம் தன்னில் கூட!!
பின் வந்து விட்டாயா!! ஈசனே!!!... எதை என்று நிச்சயம் பின் புரிந்து அதாவது இவ்வுலகத்தை மாற்ற வேண்டும்... இவ்வுலகத்தை நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் எதை என்று புரிய இதற்கு ஒரு.. பின் நிச்சயம் ஒரு விடிவு.. அதாவது நீதான் கொடுக்க வேண்டும் எம்பெருமானே!!! என்று விசுவாமித்திரனும்.. ஈசனிடம் கேட்க!!!
ஈசனும்!!!
நிச்சயம் அறிந்தும் பின் அதாவது விசுவாமித்திரனே!!!..
நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஒரு நதி நீண்டு ஓடுகின்றதல்லவா!!... அங்கு நிச்சயம் கடல்கரையில் தவம் செய்!!!
நீ நினைத்ததெல்லாம் நினைத்த காரியங்கள் எல்லாம் நிச்சயம் நடந்தேறும்.. நிச்சயம் அனைத்து திறமைகளும் கூட வரும் பின்.. நீ சொல்வது நடக்கும் நிச்சயம் தன்னில் கூட
பல மக்களை நிச்சயம் தன்னில் கூட காப்பாற்றலாம் என்றெல்லாம் அப்பனே.
இதனால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட இவைதன் விசுவாமித்திரன் ஏற்று நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் கீழிருந்து (குமரிக்கண்டம் )எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் ஏற்கனவே யான் முன்னுரைத்தேனே அப்பனே!!!
(ஜனவரி 2025 சித்தன் அருள் 1778 அன்புடன் அகத்தியர் சாவித்திரி காட் புஷ்கர் அஜ்மீர் ராஜஸ்தான் வாக்கில் விஸ்வாமித்திரர் தவம் செய்த இடம்
தமிழ்நாடு திருநெல்வேலி கூடங்குளம் விஜயாபதி என்னும் ஊரில் அருள் புரியவும் மகாலிங்க சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் விசுவாமித்திரர் தவம் செய்யும் இடம்)
மீண்டும் இவ்வாக்கினை படிக்கும் பொழுது மேலும் உணர்ந்து கொள்ள முடியும்)
நிச்சயம் தன்னில் கூட அங்கிருந்து புறப்பட்டு அப்பனே நிச்சயம் பின் அமர்ந்தான்..இவ் நதிக்கரையில் அப்பனே!!! பல பல வழிகளிலும் கூட தவங்கள் மேற்கொண்டான் என்பேன்!
(தவம் வெற்றி)
சித்தி பெற்றது என்பேன் அப்பனே..
பின் நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் வென்று வென்று அப்பனே.. பின் காட்டினான் என்பேன் அப்பனே விசுவாமித்திரன்.
பின் மீண்டும் அறிந்தும் கூட பல வருடங்கள் நிச்சயம் தன்னில் கூட அப்பனே மக்களை காப்பாற்றி மீண்டும்... கலியுகம் அப்பனே துவங்கிய போதே அப்பனே நிச்சயம் எதை என்று புரிய அப்பனே மக்கள் அப்பனே எவ்வாறெல்லாம் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட... தான் போன போக்கில் போயிட்டு!!!...........
எதை என்று தெரியாமலும் எதை என்று அறியாமலும் வலம் (சுற்றிக்கொண்டு இருந்தனர்) வந்தனர் என்பேன் அப்பனே!! நிச்சயம் தன்னில் கூட!
ஆனாலும் பின் மீண்டும் பின் இங்கிருந்து நிச்சயம் தன்னில் கூட அப்பனே புறப்பட்டான் விசுவாமித்திரன் எதை என்று அறிய அப்பனே அப்படியே நிச்சயம் தன்னில் கூட.. கீழ்நோக்கி அதாவது எதை என்று... அறிய அறிய.
விசுவாமித்திரன் இடம் யான்... முன்னே உரைத்திட்டேனே அங்கு
(விஜயாபதி) கன்னியாகுமரியில் தன்னில் கூட நிச்சயம் வந்து மீண்டும் அமர்ந்து தவம் செய்தான் நிச்சயம் தன்னில் கூட பின்!
(கன்னியாகுமரி விஜயாபதி குமரிக்கண்டம்! குமரிக்கண்டம் விசுவாமித்திரர் சாபத்தால் அழிந்தது இதை சாவித்திரி காட் புஷ்கர் மேற்கூறிய வாக்கில் படித்து அறிந்து கொள்ளலாம்)
மீண்டும் ஈசன் வந்து அறிந்தும் கூட!!!
அதாவது விசுவாமித்திரன் ஈசனாரே!!! அறிந்தும் கூட!! வந்து விட்டாயா!!
பின் இவ்வாறு நிச்சயம் மக்களை காப்பாற்றினேன்...
ஆனாலும் மக்கள் நிச்சயம் தன்னில் கூட பின் சில காலம் நன்றாக இருக்கின்றார்கள்... ஆனாலும் அனைத்தும் கொடுத்து பின் நன்றாக எவை என்று கூற பின் இவ்வாறாக கொடுத்து பின் அனைத்தும் நன்றாக வாழ அனைத்தும் கற்றுக் கொடுத்ததால் நிச்சயம் மீண்டும்... அழிந்து சீர் கெட்டு.. எவை என்று சீரழிந்து... நிச்சயம் மற்றவர்களையும் சீரழிக்கின்றானே!!
நிச்சயம் மனிதனை எவ்வாறு என்றெல்லாம்!!
ஆனாலும் ஈசனாரே!!! பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட!!
பின் மீண்டும் ஈசன்!!! விசுவாமித்திரனே!!! கலியுகத்தில் இப்படித்தான் நடக்க போகின்றது நிச்சயம் தன்னில் கூட!!
மீண்டும் நீ தவங்கள் செய்தால் அங்கேயே நிச்சயம் சித்தி பெறும் என்பதையெல்லாம்.
விஸ்வாமித்திரன் இதனால் நிச்சயம் மீண்டும் யான் அங்கே செல்கின்றேன் என்று நிச்சயம்.!!!
. இதுவரை அப்பனே மீண்டும் அப்பனே விசுவாமித்திரன் இங்கு தவம் செய்து கொண்டே இருக்கின்றானப்பா!!
அறிந்தும் புரிந்தும் கூட அப்பனே..
நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் மக்களை காப்பாற்ற வேண்டும்?? என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல ஞானிகளும் கூட சித்தர்களும் கூட அப்பனே ரிஷிகளும் கூட.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட குருமார்களும் கூட... இவ்வுலகத்தைச் சுற்றி அப்பனே எப்படியெல்லாம்? எங்கெல்லாம் சக்திகள் அதிகம் இருக்கின்றதோ!?? அங்கெல்லாம் வலம் வந்து அப்பனே.. வெற்றிகளை!!!!
அவை மட்டும் இல்லாமல் இவ்வாறெல்லாம் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட ரிஷிகளும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் அரசர்களை அங்கங்கே போகச் சொல்லி... அவ்வாறு போகச் சொன்னால் நிச்சயம் சக்திகள் பிறக்கும் பெறலாம் என்பதை எல்லாம் ஏற்படுத்தி நிச்சயம் அங்கே சென்று... பல வெற்றிகளை நிச்சயம் தன்னில் கூட குவித்தனர் அரசர்கள் என்பேன். அப்பனே.
ஆனாலும் போகப் போக அவை தன்... அப்பனே எப்படி எப்படியோ சில வழிகளிலும் கூட தவறாகவே எதை என்று புரிய பயன்படுத்தியதால்.. மீண்டும் அழிவு பின் ஏற்பட்டுக்கொண்டே ஏற்பட்டுக் கொண்டே அப்பனே!!!
அதனால் அப்பனே மீண்டும் அப்பனே எதை என்று புரிய அப்பனே சில முக்கியமான இடங்களில் எல்லாம் அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே!!!
இதை தன் காக்க வேண்டும் என்பதற்கிணங்கவே..
அப்பனே மீண்டும் அப்பனே பின் அங்கங்கு அப்பனே விசுவாமித்திரனும் பின் நிச்சயம் அத்திரியும் (அத்ரி மகரிஷி) அப்பனே இன்னும் எதை என்று கூற சுகனும் (சுகர் பிரம்ம ரிஷி) அப்பனே இன்னும் இன்னும் வசிஷ்டனும் அப்பனே இன்னும் ரிஷிமார்களும் கூட தவத்தை மேற்கொண்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட... எவ்வாறெல்லாம் அப்பனே பின் மக்களை மீட்க.. போராடிக் கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.
ஏனென்றால் அப்பனே மனிதனுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதப்பா!!!
அப்பனே பின் பொய் என்று தான் சொல்வான் அப்பனே!!
ஏனென்றால் அப்பனே இக்கலியுகத்தில் அப்பனே பின் உண்மைக்கு மதிப்பில்லையப்பா!!
அப்பனே உண்மையை பொய் ஆக்குவான்!!! அப்பனே பொய்யை உண்மையாகுவான்!! என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே மீண்டும் சொல்கின்றேன் அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட... துன்பம் கொடுக்காமல் எவரையும் காப்பாற்ற இயலாதப்பா!! இவ்வுலகத்தில் என்பேன் அப்பனே.
அதனால் என் பக்தர்களாயினும் நிச்சயம் தன்னில் கூட துன்பத்தைக் கொடுத்தால் தான் அப்பனே நிச்சயம் பக்குவங்கள் பெற்று நலமுடன் வாழ்வான் என்பேன் அப்பனே.
இன்பத்தையே கொடுத்துக் கொண்டிருந்தால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் இறைவனை மறந்து அப்பனே நிச்சயம் தவறுகள் செய்து அப்பனே தவறுகள் செய்ய ஆரம்பித்து அப்பனே மக்களையும் நிச்சயம் தன்னில் கூட தவறில் குதிக்க வைத்து அப்பனே.. தானும் அழிவான் தன் சுற்றி உள்ளவர்களும் கூட அழிப்பான் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே ஓரிடத்தில் இறைவனை அதாவது ஓரிடத்தில் இறைவனை நிச்சயம் தன்னில் கூட பின் சென்று சென்று வணங்கி வந்தாலும்... ஏன்? கஷ்டங்கள்? வருகின்றது என்பதை எல்லாம் அப்பனே.. தெளிவுபடுத்துகின்றேன் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!
அப்பனே இறைவனை பின் தேடு தேடு!!!
எவ்வளவுக்கு எவ்வளவு தேடுகின்றாயோ இறைவனை அப்பனே அவ்வளவுக்கு அவ்வளவு உயர்வுகள் பெறுவாய் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே அவ்வாறு இறைவனை அப்பனே முதலில் தேடு தேடு என்பதுதான் அப்பனே முதல் வாக்கு என்பேன் அப்பனே.
இறைவன் எதை தேடு?? அப்பனே கல்வியை முதலில் தேடுகின்றான் என்பேன் அப்பனே !! அதை தேடிக் கொண்டே அங்கும் இங்கும் அலைந்து அப்பனே... நிச்சயம் தன்னில் இருந்தாலே வெற்றிகள்!!
அவை மட்டுமில்லாமல் மீண்டும் அப்பனே வேலையை தேடுகின்றான் என்பேன் அப்பனே... தேடு தேடு என்று நிச்சயம் அப்பனே அங்கும் இங்கும் அலைந்து திரிந்தால் அப்பனே நிச்சயம் வேலையும்!
! எதை என்று அறிய அறிய வேண்டும் பெண்ணை தேடுகின்றான் என்பேன் அப்பனே!! அங்கும் இங்கும் எங்கும்.. தேடி தேடி பின் அப்பனே எவை என்று அறிய அறிய மீண்டும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய அங்கும் இங்கும் சென்று அப்பனே!!!
குழந்தை பாக்கியம்!
இன்னும் அப்பனே எதை என்று அறிய அறிய தேடு தேடு என்று வாழ்க்கையை அப்பனே தேடிக் கொண்டே இருக்கின்றான் எங்கிருக்கின்றது? எங்கு இருக்கின்றது? என்று!!
ஆனாலும் இதற்குள்ளேயே அப்பனே பின் அதாவது கல்வி அப்பனே தொழில் நிச்சயம் எதை என்று கூட மனைவி அப்பனே பின் பிள்ளைகள் அப்பனே இவை தேடுவதற்குள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... வாழ்க்கையே முடிந்து விடுகின்றது என்பேன் அப்பனே.
இவ்வாறு அப்பொழுது எப்பொழுது?? தான் இறைவனை அப்பனே காண வேண்டும்? என்பேன் அப்பனே!
அதனால்தான் அப்பனே சொல்லி வைத்தனர் அப்படி நிச்சயம் தன்னில் கூட... இளமையில் கல் என்று அப்பனே... நிச்சயம் தன்னில் கூட இளமையிலேயே அப்பனே இறைவனை தேடிவிட்டால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... அதாவது நீங்கள் தேடுகின்றீர்களே... அவையெல்லாம் அப்பனே வரும் காலத்தில் சுலபமாக உங்களை தேடி வரவழைத்து விடுவான் இறைவன் என்பேன் அப்பனே.
இதனால்தான் அப்பனே எதை என்று புரிய அப்பனே முதலில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இறைவனை... அப்பனே
அப்பொழுதெல்லாம் அப்பனே இங்கு எதை வணங்கினார்கள் என்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ் நதியை தான் வணங்கினார்கள் என்பேன் அப்பனே.
நிச்சயம் தன்னில் கூட இவ் நதி தான் நிச்சயம் இறைவனாகவே!!!!! எதை என்று அறிய அறிய பாவித்தனர்.
ஏன் எதற்கு? என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே முதலிலே அப்பனே பின் எதை என்று அறிய அறிய இன்னும் இன்னும் குறிப்பிடுவேன் அப்பனே..
சில சில குருமார்களும் கூட அப்பனே.. இங்கு குளித்திட்டு.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல வழிகளிலும் கூட தியானங்களை மேற்கொண்டனர் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஓரிடத்தில்...அவ் இடத்தைப் பற்றியும் கூட ரகசியமாக சொல்கின்ற பொழுது அப்பனே உங்களுக்கு தேவையானதை எல்லாம் அப்பனே பெற்றுக் கொள்ளலாம் என்பேன் அப்பனே.
அப்பனே இறைவன் சராசரியாகவே அப்பனே பின் மனிதனுக்குள் அனைத்து திறமைகளையும் கூட அனைத்து சக்திகளையும் கூட வைத்துத்தான் அனுப்புகின்றான் என்பேன் அப்பனே.
மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே!!
ஆனாலும் சரியாகவே அதை பயன்படுத்துவதே இல்லை என்பேன் அப்பனே.
எங்களை நாடிட்டு வந்தாலே அப்பனே சில துன்பங்களை ஏற்படுத்தி அப்பனே...அவ் சக்திகளை அப்பனே உங்களுக்கு கொடுக்கின்ற பொழுது அப்பனே நீங்களும் அப்பனே வெல்லலாம்.. அப்பனே பின் மக்களையும் கூட வெல்லலாம்.. அனைத்தும் எவை என்று கூற.
ஆனாலும் இப்பொழுது கூட அப்பனே ஏதோ எவை என்று அறிய அறிய வேலைக்காக எதை என்று புரிய திருமணத்திற்காக அப்பனே எவை எவையோ?? எதற் எதற்கோ??? வாக்குகள் கேட்கின்ற பொழுது... அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட!!
அதனால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே முதலில் எதை கொடுக்க வேண்டும்?? என்பதையெல்லாம் யாங்கள் அறிவோம் அப்பனே.
இதனால் அப்பனே இவ் நதியே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது பின் இறைவனாக வழிபட்டு வழிபட்டு அப்பனே இவ் நதியானது அப்பனே.. பல மக்களையும் கூட பின் காப்பாற்றி... இப்பொழுது கூட அப்பனே காப்பாற்றிக் கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே.
சக்திகள் எவ்வாறு?? பின் உள் நுழைந்து.. எங்கிருந்து? சக்திகள் வருகின்றது என்பதை எல்லாம் அப்பனே வரும் காலத்தில் அப்பனே யான் சொல்வேன் அப்பனே!
இன்னும் அப்பனே வாக்குகள் பின் நீண்டு நீண்டு சொல்ல சொல்ல அப்பனே பின் எவ்வாறு எதை என்று புரிய அங்கும் இங்கும் நிச்சயம் தன்னில் கூட நிச்சயம் சொல்கின்ற பொழுது... அப்பனே உங்கள் வாழ்க்கை புரியும் அப்பா.
அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன்... நீங்கள் அப்பனே உங்களை எப்படி வெல்லலாம்??? என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... குறிப்பிட்டால் அப்பனே நிச்சயம்... நீங்கள் அனைத்தும் பெற்றுக் கொள்ளலாம் என்பேன். அப்பனே!! நிச்சயம்.
இதனால்தான் அப்பனே... பின் உண்மையை நம்புங்கள் அப்பனே...
இக்கலி யுகத்தில் அப்பனே மனிதன் நம்ப மாட்டானப்பா!!!
பொய்யானதை தான் பின்பற்றி அப்பனே பொய்யான வழியில் சென்று... அப்பனே பின் அதாவது உண்மையான தேகத்தை அப்பனே அதாவது இறைவன் கொடுத்த தேகத்தை அழிப்பானப்பா!!
அவை மட்டும் இல்லாமல்.. தன்னை சுற்றியுள்ள சொந்த பந்தங்களையும் கூட அழிப்பானப்பா. நிச்சயம் தன்னில் கூட அவை இவை என்றெல்லாம் அப்பனே.
இதனால் அப்பனே உண்மையை நம்புங்கள்!!!
எது உண்மை?? எதை என்று புரிய அப்பனே பரம்பொருள்!!... அப்பனே எவை பரம்பொருள்??...அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவ் சக்திகள்?? எவ் பிரபஞ்ச சக்தி?? எங்கிருந்து இயங்குகின்றது??? அப்பனே
அதாவது உனக்குள் எங்கு சக்தி இருக்கின்றது?? என்பதை எல்லாம்... வருங்காலத்தில் அப்பனே சொல்கின்ற பொழுது... அப்பனே நீ வெல்வாய் என்பேன் அப்பனே.
அப்பனே பின் நிச்சயம் உங்களை வெல்லவும் வைப்போம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
எங்களை அழைத்திட்டாலே வந்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே
ஆனாலும் அப்பனே புத்திகள் சரியில்லையே???!!!!
அப்பனே எண்ணங்கள் சரியில்லையே!?!?!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனது எங்கெங்கோ செல்கின்றது!!!
எப்பொழுதெல்லாம்!!! திருடி விடலாம்... நிச்சயம் மற்றவனை பின் கெட்டு எவை என்று அறிய அறிய கெடுத்து விடலாம் அப்பனே பின் எவ்வாறு என்பதை எல்லாம்... நாம் மட்டும் பின் நன்றாக வாழலாம்.. என்பதெல்லாம் தான் மனிதனுடைய புத்தி என்பேன் அப்பனே.
மனிதனின் புத்தி
மட்ட புத்தியாக இருக்கின்றது என்பேன் அப்பனே!!
அவர்களெல்லாம் அப்பனே எங்களை பின் வணங்குகின்ற பொழுதும் கூட அப்பனே வெட்கமாகவே!!!!!!..... எதை என்று... அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே!!
நிச்சயம் தன்னில் கூட!!
ஆனாலும் அவர்களுக்கு சிறிது நேரத்திற்கு கொடுத்து மீண்டும்.. அவர்களை எவை என்று கூட அடிப்பேன்.. என்பதெல்லாம் தெரியாதப்பா.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இன்னும் சக்திகள் அப்பனே எவை என்று புரிய எவை என்று அறிய... இன்னும் இன்னும் அப்பனே நீண்டு வாக்குகள் சொல்கின்ற பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே விசுவாமித்திரனை பற்றியும் கூட அப்பனே சுகனை பற்றியும் கூட எவை என்று அறிய அறிய.... சுகன் (சுகப்பிரம்மரிஷி) அப்பனே இங்கெல்லாம் அப்பனே அலைந்தானப்பா... எதை என்று புரிய அப்பனே மக்களுக்கு பின் எவ் வடிவில் சேவைகள் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் அப்பனே... அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட சேவைகள் செய்து செய்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட நன்றாக பின் வழிவகை பின் செய்தானப்பா!!!
இன்னும் செய்து கொண்டே இருக்கின்றானப்பா!!!
நிச்சயம் தன்னில் கூட மறுவாக்கும் எவை என்று கூற அப்பனே நிச்சயம்.. அப்பனே எவை என்று கூற ஒரு இடத்தில் இங்கே குறிப்பிடுவேன் என்பேன் அப்பனே விசுவாமித்திரனையும் கூட அப்பனே நல் விதமாகவே!!
இப்பொழுது பின் ஆசிகள் !!ஆசிகளப்பா!!
நைல் நதி பற்றிய விவரங்கள்.
உலகில் இருக்கும் மிகப் பெரிய நதிகளில் ஒன்று ஆப்ரிக்காவில் இருக்கும் நைல் நதி.
பைபிள் முதலான வரலாற்று புத்தகங்களிலும் ஆப்ரிக்க நாட்டுப்புற கதைகளிலும் நைல் நதி குறிப்பிடப்படுகிறது.
ஆப்ரிக்க மக்களுக்கும் பரந்த காடுகளில் வசிக்கும் விலங்கினங்களுக்கும் நைல் தான் உயிர் காக்கும் நதி.
பூமியிலேயே மிக நீளமான நதி
ஆப்ரிக்கா முழுவதும் 6,650 கிலோ மீட்டர் நீண்டிருக்கிறது நைல் நதி.
ஆப்ரிக்க ஏரிகளையும் சகாரா பாலைவனத்தையும் கடந்து மத்திய தரைக்கடலில் சென்று சேருகிறது நைல் நதி.
இது ஆப்ரிக்க கண்டத்தின் பரப்பளவில் 10 விழுக்காடைக் கொண்டுள்ளது.
நைல் நதி கடந்து செல்லும் 11 நாடுகள் :
தான்சானியா
உகாண்டா
ரவாண்டா
புருண்டடி
காங்கோ ஜனநாயக குடியரசு
கென்யா
எத்தியோப்பியா
எரித்ரியா
தெற்கு சூடான்
சூடான்
எகிப்து
நைல் நதி வெள்ளை நைல், நீல நைல், அத்பரா என மூன்று முக்கிய துணைநதிகளைக் கொண்டுள்ளது.
வெள்ளை நைல் உலகின் மிகப் பெரிய வெப்பமண்டல ஏரியான விக்டோரியா ஏரியில் (தான்சானியா) இருந்து தொடங்குகிறது. இது தான் மிகப் பெரிய நதியும் கூட.
அத்பரா மற்றும் நீல நைல் எத்தியோப்பியாவில் தொடங்குகிறது.
நைல் இல்லை என்றால் எகிப்து இல்லை
உலகிலேயே வெப்பமான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் எகிப்து நைல் நதியில் துணை நதிகள் கலந்து முழுமையாக செல்லும் பாதையாக இருக்கிறது.
அந்த காலத்தில் ரயில், கார் எல்லாம் கண்டு பிடிப்பதற்கு முன்னர் எகிப்துக்கு பயணிக்க மிக விரைவான வழியாக இருந்தது நைல் நதி.
வறண்டு கிடக்கும் எகிப்துக்கு நன்னீர் கொடுத்து வருகிறது.
விவசாயம் செய்யவே முடியாத எகிப்திய நிலம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் நைலில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் விவசாயத்துக்கு ஏற்றதாகிறது. இதன் மூலம் எகிப்தியர்கள் தங்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்துகொள்கின்றனர்.
இப்படி பசுமையை அழைத்துவரும் வெள்ளத்தை வஃபா எல்-நில் என்ற விழா கொண்டாடி வரவேற்கின்றனர்.
எகிப்து மக்கள் தொகையில் 95% பேர் நைல் நதியை நம்பியே வாழ்கின்றனர்.மனித வரலாற்றில் நைல்
நாடோடியாக அழைந்து திரிந்த ஆதி மனிதக் கூட்டம் முதன் முதலாக ஓரிடத்தில் தங்கி வாழத் தொடங்கியது நைல் நதியில் தான் என்கின்றனர்.
இதற்கான காரணத்தை இப்போது செயற்கைக் கோள் அனுப்பும் படங்களில் கூட காண முடிகிறது. இந்த படத்தில் நைல் நதியை ஒட்டி மட்டும் பசுமைக் கட்டிப்பிடித்திருப்பது தெரியும்.
நைல் நதிக்கரையில் மட்டுமே அக்கால மனிதர்களுக்கு உணவும், தண்ணீரும் பிரச்னையின்றிக் கிடைத்தது.மரணத்துக்கு பிறகான வாழ்வு
வாழ்வுக்கு மரணத்துக்கும் இடையிலான பாதை தான் நைல் நதி என்று எகிப்தியர்கள் நம்பினார்கள்.
சூரியன் உதிக்கும் கிழக்கு பிறப்பு என்றும் மறையும் மேற்கு மரணம் என்றும் அவர்கள் கருதியதால் கல்லறைகளை (பிரமிடுகள்) எகிப்துக்கு மேற்கே அமைத்தனர். அப்படியானால் அவர்களால் மரணத்துக்கு அடுத்த கீழ் உலகத்துக்கு செல்ல முடியும் எனக் கருதினர்.
எகிப்தை ‘நைல் நதியின் பரிசு’ என்று அழைக்கின்றனர்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete