​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 2 July 2025

சித்தன் அருள் - 1890 - அன்புடன் அகத்தியர் காசி வாக்கு - 2




10/5/2025 காசியில் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு பாகம் 2 தொடர்கின்றது 

அதுமட்டுமில்லாமல் பின் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே கர்மத்தோடே பின்... வாழ்வான் அப்பா நிச்சயம் தன்னில்  கூட!!அப்பனே
ஏன்? எதற்கு ?என்று தெரியாமலும் கூட !! அப்பனே!!

பின் புரிந்து கொண்டு வாழ வேண்டும்... இன்னும் அப்பனே.. அறிந்து கொண்டு அப்பனே அதாவது பூஜ்ஜியத்தை சமமாக்கி அப்பனே பின் சமம் எவை என்று அறிய அப்பனே ஒன்றை.. அப்பனே நிச்சயம் அப்பனே...பின் ஒன்று நிச்சயம் தன்னில் கூட அப்பனே... இவை எடுத்து அப்பனே இன்னும் கூட அவற்றுடன் அப்பனே பின் நட்சத்திரங்களை கூட கூட்டி அப்பனே கிரகங்களையும் கூட்டி  அப்பனே அதாவது கூட்டி... அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. பின் அனைத்தும் பின் அதாவது பின் எவை என்று கூட எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்களையும் கூட்டி அப்பனே கடைசியில். பின். வருவது என்ன ?? அப்பனே!!


( நட்சத்திரங்கள் 27+கிரகங்கள் 9+தமிழ் எழுத்துக்கள் 247.)



 இதற்கு சரியாகவே இன்னும் இன்னும் அப்பனே பின் இவ்வாறெல்லாம் யோசிக்க கூடியது என்ன?? எதை என்று புரிய.. சரியாகவே அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட...

அதிகாலையிலே அப்பனே பின்... அதாவது எவை என்று கூற சூரியன்.. வெளிச்சம் அப்பனே அனைத்து நோய்களும் அப்பனே எவை என்று புரிய... நிச்சயம் தூரே விரட்டுமப்பா....

இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் சூரியன் வருவதற்கு முன்பே... சில அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. அறிந்தும் எதை என்று புரிய... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. சில ஆலயங்களுக்கு கூட சென்று நிச்சயம் தரிசித்து.. அப்பனே பின் வந்தால்...அவ் ஒளியானது கூட அப்பனே... அப்படியே அப்பனே சூரிய ஒளி கற்றைகள் நிச்சயம் அப்பனே மனிதர்கள் மீது படுகின்ற பொழுது அப்பனே... அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமப்பா!!!

அதுமட்டுமில்லாமல் பல நோய்கள்.. அப்பனே நிச்சயம் பின் தீருமப்பா!!

அப்பனே பின் நிச்சயம் சந்திரனாலும்.... சூரியனாலும் அப்பனே.. பல நோய்கள் அப்பனே பின் நீங்குமப்பா!!!

ஆனாலும் அதைக் கூட மனிதன் செய்வதில்லையே...!?????.... அப்பனே!!!

பின்பு அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே... அதனால் தான் அப்பனே இறைவன் கஷ்டத்தை ஒன்றை வைத்தால் தான்... இறைவனை பின் தேடி வருவான் என்று... கஷ்டத்தை வைத்து விடுகின்றான் என்பேன் அப்பனே. 


ஆனாலும் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே தேடி தேடி வந்து... அதுவும் சரியாகவில்லையே என்று.... இறைவனை பொய் என்று கூறி விடுகின்றான் அப்பனே. 

சாதாரணமானவன் இல்லை!!
சாதாரணமானவன் இல்லை என்பேன் அப்பனே இறைவன்!!!

நிச்சயம் தன்னில் கூட பின் தேடி தேடி வந்தாலும் சில.. அனுபவங்களை பக்குவங்களை ஏற்படுத்தி தான்.. கொடுப்பான் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

பின் அதாவது இறைவனை... உணராதவர் நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது... அப்பனே பின் எவை என்று புரிய... பைத்தியம் போல் திரிந்து கொண்டுதான் இருப்பான் என்பேன் அப்பனே.

ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பேன் அப்பனே. 

நிச்சயம் தன்னில் கூட அப்பனே... இறைவனை அப்பனே பின் உணர்ந்து கொண்டவர் எவர்?????????

நிச்சயம் இவ்வுலகத்தில் இல்லையப்பா!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!

இறைவனை அப்பனே உணர்ந்து கொண்டவர்... அப்பனே நிச்சயம் அனைத்திற்கும் இறைவன் தான் காரணம் என்று சொல்வான்.. அப்பனே!!

இவ்வுலகத்தில் இப்பேர்பட்ட மனிதன் இருக்கின்றானா?????? என்ன!???....

அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே இருக்கின்றார்கள்.. சிலரே!!!

அவர்கள் மறைந்து வாழ்கின்றார்கள்.. அப்பனே...

வருங்காலத்தில் அவர்களைப் பற்றி யான் செப்புவேன்  அப்பனே நிச்சயம் தன்னில் கூட. !!! அங்கு சென்றாலே அப்பனே நிச்சயம் அப்பனே பின் எவை என்று அறிய அவர்கள் ஒன்றுமே செப்ப மாட்டார்கள்.. என்பேன் அப்பனே.... அவர்களைப் பாருங்கள்!!! அப்பனே எவை என்று கூற இன்னும்... அதுபோல் மனிதர்களை அதாவது.. பக்தர்களை பார்த்ததே இல்லை அப்பனே மனிதர்கள்!!!

இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அதை செய்கின்றேன் இதை செய்கின்றேன் என்றெல்லாம் அப்பனே பின் அவை செப்பி!!!....இவை செப்பி!!! இவ்வாறு நடக்கும்!! அவ்வாறு நடக்கும்!!... என்பதெல்லாம் அப்பனே அனைத்தும்.. பொய்களப்பா!!

அப்பனே நிச்சயம்.. சொல்லிவிட்டேன் அப்பனே எவை என்று புரிய எதை என்று அறிய அறிய.... இதனால் அப்பனே.. அனைத்திற்கும் காரணம் பின் இறைவன். 

அப்பனே பின் அனைத்திற்கும் காரணம்.. இறைவன்!! அனைத்தையும் அப்பனே இறைவனே சரி செய்வான்... நிச்சயம் தன்னில் கூட எவை வந்தாலும் பின்.. இறைவனுடைய செயலே என்று  அப்பனே நிச்சயம் பின் யார் ஒருவன் கூறுகின்றானோ....!? அவன்தானப்பா!!!

அவை விட்டுவிட்டு... அவை இவை... அது இது என்று பொய்... நிச்சயம் தன்னில் கூட யான் சொல்வது தான் சரி!!... என்றெல்லாம் அப்பனே பின்... திரிந்து கொண்டிருக்கின்றார்களப்பா... மனிதர்கள்..

ஏன்?  எதற்கு?... இவ் உடம்பு!!!.... ஆனாலும்... அனைத்தும் அழிய கூடியதுதான் என்பேன் அப்பனே.....இவ் அழியக்கூடிய உடம்பை வைத்துக்கொண்டு... புண்ணியங்கள் செய்யுங்கள் என்றால் அப்பனே நிச்சயம்... பின் அழிவை தேடிக் கொண்டிருக்கின்றான் மனிதன் அப்பனே. 

எவ்வாறு எதை என்று புரியவைப்பது???

மனிதனுக்கு அப்பனே பின் மனிதனுக்கு.. என்ன சொன்னாலும் அப்பனே நிச்சயம் பின்...அவ் பாவம் இருக்கும் வரையில் அப்பனே... மனிதன் பின் நிச்சயம் எதையும் கேட்க மாட்டானப்பா!!!

நிச்சயம் இன்னும் அறிந்தும் அறிந்தும் பாவங்களை சேர்த்துக்கொண்டு...இவ் உடம்பில் பின் நோய்கள் வந்து அப்பனே... மீண்டும் மீண்டும் எதை என்று அறிய அறிய அப்பனே... உண்மையை கடைப்பிடிப்பானப்பா!!

அதனால் அப்பனே உண்மை பொருளை.. யோசிக்க வேண்டும் என்பேன் அப்பனே. 

அதற்காகத்தான் இறைவன் அறிவை கொடுத்திருக்கின்றான் என்பேன் அப்பனே. 

நிச்சயம் பின் உண்மை பொருளை யோசிப்பதில்லை என்பேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... உண்மை பொருளை யார் எப்படி? ஏது? எவை என்று புரிய பின்... எவை என்று அறிய பின் அப்பனே தெரியாமலே பின் அனைத்தும்... அப்பனே பின்... அறிந்தும் எதை என்று புரியாமலும்.. செய்து கொண்டிருப்பது அப்பனே!!

தெரிந்து செய்ய வேண்டும்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால்.. என்ன பயன்??.. எவை என்று அறிய அறிய இது சரியா ?? தவறா???... என்றெல்லாம் அப்பனே யோசிக்க வேண்டும் அப்பனே!!

ஒவ்வொரு எவை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... ஒவ்வொரு விஷயத்தையும் சரியா? தவறா? என்று கூட!! இதனால் என்ன ஏற்படும் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அமர்ந்து விட்டாலே... ஈசனை நோக்கி அமர்ந்து விட்டாலே... நிச்சயம் ஈசனே சொல்வானப்பா!!!

பின் மனிதன் அதாவது.. அப்பனே பின் ஈசன்.. கட்டுப்பாட்டில்!!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இறைவன்.. அதாவது இறைவன் அருகிலே இருக்கலாம்... இறைவனுக்கு பூஜைகள் செய்யலாம்.. மந்திரங்கள் ஜெபிக்கலாம் அப்பனே... பின் இறைவனே பின் எனது உயிர் என்று சொல்லலாம்!!!....
ஆனாலும் அப்பனே இறைவனை புரிந்து கொள்ள மாட்டானப்பா மனிதன் அப்பனே. 

நிச்சயம் இறைவனை அதாவது மீண்டும் மீண்டும்.. சொல்வேன்!!! இக் காசி தன்னில் இருந்து!!!!

அதாவது அப்பனே இறைவனை.. புரிந்து கொள்வோர் அப்பனே இவ்வுலகத்தில் நிச்சயம் இல்லையப்பா இல்லையப்பா!!

அவந்தன் (இறைவன்) பல வழிகளிலும் கூட... அப்பனே பின் எவ்வாறு ரூபம் எடுப்பான்?? என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் பின் தெரிவதே இல்லை என்பேன் அப்பனே! 

அவ்வாறு அப்பனே பின் தெரியாமல் வணங்குவதால் தான் அப்பனே பிரச்சனைகளே என்பேன் அப்பனே...

நிச்சயம் அப்பனே தெளிவுகள் பெற்று.. அப்பனே வாழுங்கள் வாழுங்கள் என்றெல்லாம் அப்பனே பின் செப்பிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட. 

இதனால் அப்பனே பின் எதை என்று புரிய அப்பனே இன்னும் இன்னும்.. எதை என்று அறிய அறிய அப்பனே பின் மக்கள் தெரியாமல்.. அப்பனே எவை என்று புரிய பின்.. கடைப்பிடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே பல திருத்தலங்களுக்கு அப்பனே ஓடி ஓடி!!!... எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட! 

இதனால் அப்பனே சரியான பின் அதாவது இவ் உடம்பிற்கும் அப்பனே திருத்தலத்திற்கும்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே அறிந்தும் எதை என்று புரிய.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. சம்பந்தம் உண்டு என்பேன் அப்பனே. 

அதாவது உன்னுடைய உடம்பிற்கு கூட அப்பனே பின்... எவ்வாறு எங்கு சென்றால் ? அப்பனே அங்கு ஒளி விழுமப்பா!!!

இதனால் அப்பனே ஒளி உங்கள் மேல் விழுவது ஏற்பட்டு... நிச்சயம் தன்னில் கூட அதாவது அப்பனே அங்கு நிச்சயம் தன்னில் கூட... உடம்பில் உள்ள பின் அனைத்தும்... அதாவது விலகிப் போகும் என்பேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட. 

சில சில பாகங்களில் உள்ள அழுக்குகளும் கூட அப்பனே... அவை தன் அப்பனே உடம்பில் எங்கு ஏது என்பதையெல்லாம் அப்பனே எங்களால் சொல்ல முடியுமப்பா!!!

இதனால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட தெரியாமல் இறைவனை வணங்கினாலும்... ஏதும் கொடுக்க மாட்டான்!!!

செப்பிவிட்டேன் !!! செப்பிவிட்டேன்!!! அப்பனே!!!

தெரிந்துகொண்டு வாழ வேண்டும் என்பேன் அப்பனே. 

பின் நிச்சயம் தன்னில்  கூட அப்பனே... அதாவது அப்பனே பின் அனைத்தும் பின் பொய்களைத் தான் வருங்காலத்தில் பரப்புவார்கள் என்பேன் அப்பனே. 

நிச்சயம் இறை பலத்தை எவ்வாறு என்பதை எல்லாம்... நிச்சயம் காட்ட மாட்டார்கள் என்பேன் அப்பனே. 

இறைவனே காட்டிக்கொள்வான் என்பேன் அப்பனே... இறைவனே!!!

இறைவனே அப்பனே பின் நிச்சயம்... தன்னைத்தானே தெரிய வைப்பான் என்பேன் அப்பனே. 

நிச்சயம் மனிதனால் தெளிவுபடுத்த முடியாதப்பா!!!

இதனால் அப்பனே நிச்சயம்... இவ்வாறாக.. நன்மை செய்பவர்களும் ஏன் கஷ்டத்தில் இருக்கின்றார்கள்?? என்பதை சிறிதளவாவது யோசித்தீர்களா??? அப்பனே!!

நிச்சயம் அப்பனே அவை... யோசிப்பதற்கு நேரம் இல்லையா??? என்ன!!!!

அப்பனே அறிந்தும் இதனால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அதாவது கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றீர்கள்... நன்மை செய்பவர்கள் ஏன் பின் எதை என்று அறிய அறிய.... நிச்சயம் தன்னில் கூட!!

 தீயவர்கள் ஏன்? பிழைத்து (தீயவர்கள் ஏன் நன்றாக வாழ்கின்றார்கள்)... இதற்கெல்லாம் காரணங்கள் என்ன என்பதை... எப்பொழுது ஆவது பின் யாராவது யோசித்தார்களா??? என்ன அப்பனே... நிச்சயம் இல்லை என்பேன் அப்பனே!!

நிச்சயம் தன்னில் கூட அப்பனே... இறைவனுக்கு அனைவரும் ஒருவரே!!


பின் இதனால் அப்பனே என்ன ஏது எவை என்று அறிய அறிய... புண்ணிய பலன்கள் எங்கிருந்து... அதாவது பாவ அணு புண்ணிய அணு... அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட இக்கலி யுகத்தில்... பாவம் அணுக்கள் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே. 

புண்ணிய அணுக்களை செயல்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே. 

இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!

""""எங்களுக்கு என்ன வேலையா??? என்ன!??
அப்பனே பின் மனிதனுக்கு..

(இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதற்கு)

 எதை என்று புரிய!!!

ஆனாலும் அப்பனே... இவ்வாறு சொல்ல ஆனாலும் அப்பனே பின்........ ஐயோ!!!!.... பாவம் மனிதன் பின் தவறான வழிகளில் எல்லாம் சென்று அப்பனே... ஏதும் தெரியாமலே அப்பனே பின் மந்திரத்தையும் இன்னும்... இறை பலத்தையும் கூட வணங்கி நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் எவை என்று கூற ஒன்றும் கிட்டாமல்....
இறைவனை பொய் என்று சொல்லிவிடுவானே... இக்கலி யுகத்தில் தான் அப்பனே 

அதனால்தான் அப்பனே சித்தர்கள் யாங்கள்  வந்து நிச்சயம் அப்பனை இறைவன் மெய்!!!... எதை என்று கூற மனிதன் தான் பொய்!!!... எதை என்று கூற இன்னும் வாக்குகள் செப்புவேன் அப்பனே!!

 இன்னும் அப்பனே... பல மக்களை திரட்டி... அப்பனே உண்மை பொருளை ஏற்படுத்தி அப்பனே.... ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே..

ஒருவனாய் எதை என்று கூற... உன்னை நம்பி அப்பனே மனைவியும் வந்திருக்கின்றாள் உன் பிள்ளைகளும் வந்திருக்கின்றார்கள் அப்பனே...

ஆனாலும்... அனைவரையும் கெடுத்துக்கொண்டு பக்தி பக்தி... என்று எவை என்று புரிய அப்பனே... நிச்சயம் புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் பின் மனிதனே!!!
அறிந்தும் கூட!!

பின் அவை நிச்சயம் தன்னில் கூட... அதாவது உன்னை நம்பி வந்தவர்களையும் நீ காப்பாற்ற வேண்டும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அவ்வாறு காப்பாற்றாவிடில் அதுவும் ஒரு பாவமப்பா!!

இக்கலியுகத்தில் அவ்வாறுதான்.. செய்வான் அப்பனே மனிதன்.

அதனால்தான் அப்பனே பின்... இவன் மட்டும் பாவத்தில் விழமாட்டான் பின் அனைத்தையும் அப்பனே அனைவரையும் குடும்பத்தில் உள்ளவர்களையும் கூட பாவத்தில் விழ வைப்பான். 

இதனால் அனைவரும் அப்பனே கஷ்டங்கள் பட்டு மீண்டும் மீண்டும் பரம்பரை பரம்பரையாக கஷ்டங்களோடு வாழ்ந்து திரிந்து... பின் நிச்சயம் தன்னில் கூட!!!

பின் என்ன லாபம்????

அப்பனே இதனால் அப்பனே பின்...அவ் ஆன்மாவிற்கு எப்பொழுதுமே மோட்ச கதி... கிடைக்காது என்பேன் அப்பனே...
இப்படித்தான் இவ்வுலகத்தில்.... நடந்து கொண்டிருக்கின்றது அப்பனே. 

அவை மட்டும் இல்லாமல்... தாய் தந்தையையும் மதிப்பதில்லை என்பேன் அப்பனே... எதை என்று அறிய அறிய அதாவது... நிச்சயம் அப்பனே பக்தர்களே என்பேன் அப்பனே... எவை என்று புரிய அனைத்திலும்..யான்!! எங்களுக்கு தெரியும் என்று!!!.. நிச்சயம் தன்னில் கூட!!!

எவ்வாறப்பா??? நியாயம்?? அப்பனே!!

இறைவன் எதை என்று கூட.... உழைத்து பின் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் பிச்சை எடுத்தும் கூட... அப்பனே நிச்சயம் கூட எவை என்று.. அறிய அறிய வாழ்!!!! எதை என்று அறிய அறிய கஷ்டப்பட்டு கூட... இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... இன்னும் பல வழிகளிலும் கூட பக்தர்களுக்கு செப்ப போகின்றேன் அப்பனே இதனால்... அப்பனே நிச்சயம் அப்பனே... அறிந்தும் கூட..

. யான் சொல்லியதை ... சொல்லுவதை ஏற்று நடந்து வந்தாலே... நிச்சயம் அப்பனே ஒரு குறையும் வராதப்பா!!

இப்பொழுது இங்கிருந்தே கேட்கின்றேன்... அப்பனே பின் நிச்சயம் யான் சொல்லியதை ஏற்று  பின் நடந்தால் பின் ஒரு குறையும் வராதப்பா நிச்சயம் அப்பனே. 

அப்படி பின் குறை இருந்தால் நிச்சயம் யான் சொல்லியதை நீங்கள் செய்திருக்க மாட்டீர்கள்... அப்பனே..

"""""""""""நிச்சயம்!!!!!..... செய்திருக்க மாட்டான் மனிதன்!!!

எதை என்று அறிய அறிய ஏனென்றால் பின் நிச்சயம் அனைத்தும் இவ் அகத்தியன் நிச்சயம் தன்னில் கூட பின் பாவத்தை நீக்கவே சொல்லி இருக்கின்றேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே அதைக் கூட.. அப்பனே செய்ய முடியவில்லை என்றால்???

அப்பனே அப்பொழுது எவ்வளவு???????????? பாவங்களை சுமந்து கொண்டிருப்பான்...!?!?! என்பதை பாருங்கள்!!!

இன்னும் அவந்தனக்கு எவ்வளவு ? தான் கஷ்டங்கள் வருகின்றது என்பதை கூட எதிர்பார்த்து க் கொள்ளுங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட..

அப்பனே என்னை கேள்வி கேட்கலாம்... யான் அனைத்தையும் செய்து விட்டேன்... அகத்தியன் நீ சொன்னதை எல்லாம் என்று!!!

அப்பனே யான்... அது பொய்யா? உண்மையா? என்று யான் தெரிவிக்கின்றேன் அப்பனே!!!

செய்வதே இல்லை என்பேன் அப்பனே!!

ஏனென்றால் பின் பாவம் விடாதப்பா பாவம் விடாது!!!! ஒவ்வொரு பாவமும் விடாது என்பேன் அப்பனே. 

என் அருகில் வந்தால் அப்பனே அனைத்தையும் தூக்கி விடுவேன் என்பேன் அப்பனே... இவ்வாறு தூக்கி விட்டாலும் கூட அப்பனே பின் மீண்டும் அவன் பின் எதை என்று அறிய அறிய... மீண்டும் பாவத்தில் வீழ்ந்து விடுகின்றான் என்பேன் அப்பனே.

யான் என்ன செய்வது???? அப்பனே!!

இவ்வாறு தான்... மனிதனைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்... யுகம் யுகங்களாக!!! என்பேன் அப்பனே!!

நிச்சயம் அப்பனே!!!... போதுமப்பா!!!

அதாவது ஒருவனாவது எங்களுக்கு கிடைத்தால்... நிச்சயம் தன்னில் கூட அவன் மூலம்... அப்பனே இவ்வுலகத்தையே மாற்றுவோம்... நிச்சயம் தன்னில் கூட அப்பனே. 

எவ்வாறு அழிவுகள் வரும்?? என்பதையெல்லாம் அப்பனே!!!... பிறருக்காக வேண்டிக் கொள்ளுங்கள்!!!.. என்று தீபத்தை ஏற்ற சொன்னேன்.!!!

அதைக் கூட ஏற்ற முடியவில்லையே!!!... என்பேன் அப்பனே...


 நிச்சயம் தன்னில் கூட சிலருக்கே.. அப்பனே. வாய்ப்பு கிடைத்தது என்பேன் அப்பனே!!!... அவ் புண்ணியங்கள் உங்கள் பரம்பரையை காக்கும் என்பேன் அப்பனே!!!

இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய... அப்பனே நிச்சயம் தன்னில் கூட இன்னும் இன்னும் வாக்குகள் பரப்புகின்ற பொழுது பின்... நிச்சயம் அப்பனே பின் வருங்கால சந்ததியினருக்கு இது நிச்சயம் பொருந்துமப்பா!!!

ஏனென்றால் ஒரு பெரிய அழிவு காத்துக்கொண்டிருக்கின்றது... என்பேன் அப்பனே!!

அவ் அழிவு... வந்தால் நிச்சயம் அனைவருமே... பின் இறைவன் இருக்கின்றான் என்று உணர்ந்து விடுவார்கள் என்பேன் அப்பனே. 

அதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் சித்தர்கள் சொல்லியதை ஏற்று நடத்தி விடுவார்கள் என்பேன் அப்பனே..

நிச்சயம் அப்பனே இறைவன் சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே. 

நிச்சயம் பின் எங்கு அடிக்க வேண்டுமோ??? அங்கு அடிப்பான் என்பேன் அப்பனே!! நிச்சயம் தன்னில் கூட!!

இதனால் அப்பனே... மீண்டும் சொல்கின்றேன் அப்பனே... இவ்வுலகத்தில் நிச்சயம் தன்னில் கூட... இறைவனை பின் உணர்ந்தவர் பின் எவரும் இல்லையப்பா!!!

சொல்லிவிட்டேன்!!

அவ்வாறு யான் இறைவனை உணர்ந்தேன் உணர்ந்தேன் என்று... சொல்பவர்கள் எல்லாம் திருடர்கள் தானப்பா. 

நிச்சயம் தன்னில் கூட அப்பனே... இன்னும் சொல்கின்றேன் அப்பனே வாக்குகளை அப்பனே. 

நிச்சயம் பின் அப்பனே 
.. எதை என்று புரிய அப்பனே பின்.. புரிந்துகொண்டு வாழுங்கள் அப்பனே நிச்சயம்.. சந்தோஷம் அடையுங்கள் அப்பனே.. எம்முடைய ஆசிகளப்பா அனைவருக்குமே!!! இக் காசி தன்னிலிருந்தே ஆசிகளப்பா!! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. நட்சத்திரங்கள் + கிரகங்கள் + தமிழ் எழுத்துக்கள் = 283 இதன் விளக்கம் ஐயா?

    ReplyDelete