​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 30 July 2022

சித்தன் அருள் - 1166 - அன்புடன் அகத்தியர் - ரகுநாத்ஜி மந்திர். ஜம்மு காஷ்மீர்!






29/7/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம் : ரகுநாத்ஜி மந்திர். ஜம்மு காஷ்மீர். 

குன்றினில் அழகாக அமர்ந்திருக்கும்!! குன்றா!!!!! போற்றி..... போற்றியே உந்தனை பணிந்து வாக்குகள் பரப்புகின்றேன் அகத்தியன்!!!!!

இதையென்று அறியாத அளவிற்கும் கூட நிச்சயம் இனி மேலும் எதை என்று அறியாமலே நிச்சயம் நல் பிறப்புக்கள் பிறந்து கொண்டே இருக்கும்!!!

நிச்சயம் எதனால் என்பதைக்கூட ஓர் அழிவுகள் இருந்தால்  நிச்சயம் பின் எதை என்று அறியாமலே மீண்டும் பின் உருவாகும் நல்லதே.... என்பதைக் கூட யான் நிச்சயம் என் பக்தர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்!!!!...

இதனையென்று மறுப்பதற்கு ஒன்றுமில்லை!!!

ஆனாலும் ராமன் எதை என்று அறியாமலே ஆனாலும் பின் லட்சுமணனும் எதை என்று ராமன் சொல்லியபடி அனைத்தும் செய்தான்!! ஆனாலும் ஒரு ஆசை லட்சுமணனுக்கு!!!!

எதை என்று அறியாது பின் பின் ராமனிடம் சென்று பின் அண்ணனே!!!! இதையென்று அறிய!! எவற்றிலிருந்து உணர!! ஆனாலும் இதையென்று அறிய அனைத்தும் உந்தனுக்காக யான் செய்தேன்!!!

ஆனாலும் எந்தனுக்கு ஒரே ஒரு பின் அற்ப ஆசை தான்!!!

எதையென்று யான் கூறி விடுகின்றேன்!!!

எதையென்று கூறு!! என்று பின் ராமனும் லட்சுமணனிடம்! கூறினான்!!! 

ஆனால் லட்சுமணன் இதை என்று அறியாத பின் இவ் தேசத்தை யான் வலம் வர வேண்டும்!!! வலம் வந்து வலம் வந்து பல பல திருத்தலங்களை காண வேண்டும்!!!! அங்குள்ள தெய்வங்களையும் காண வேண்டும் தியானங்கள் செய்ய வேண்டும் என்று!!!!

அதனால் ராமனும் இது ஆசை இல்லை அதனால் இவைதன் புண்ணியத்தால் வந்தவைதான் அதனால் தாராளமாக நீ திரிந்து வா!!! என்று பின் ராமனும் கூறிவிட்டான்!!!

அதனால் லட்சுமணனுக்கு கூட மிக்க!! மிக்க!! சந்தோஷங்கள்!!!

இதனால் பின் முதலில் தாய் தந்தையரை எதையென்றும் நினைத்து நினைத்து இதனால் முன்னோர்களையும் நினைத்து நினைத்து இதனால் பல தெய்வங்களையும் நினைத்து!!! நினைத்து!!! ஓர் மாதம் வரை அனைத்து தெய்வங்களையும் பின் இல்லத்திலே நல் முறையாக எதை என்று உணராமலே தியானங்கள் செய்து அனைவரின் ஆசிகள் வேண்டும்!!! ஏனென்றால் நிச்சயம் எதை என்று அறியாமலே அனைத்து திருத்தலங்களுக்கும் செல்வதற்கும் நிச்சயம் உயர் பெரியவர்களின் ஆசிகள் தேவை என்பதை லட்சுமணன் நன்றாகவே உணர்ந்து இருந்தான்!!! பல ரிஷிமார்களின் நிச்சயம் ஓர் மாதம் காலம் வரை  நன்முறையாகவே விரதங்கள் கடைபிடித்து இரவும் பகலுமாக இறைவனையே துதித்து துதித்து பாடிட்டு வந்தான். இதனால் மிக்க சந்தோஷங்கள் லட்சுமணனும் ராமனை பார்த்து பின் வணங்கி தலைவணங்கி இதையன்றி கூற யான் அறியாமலே பிறந்து விட்டேன் ஆனாலும் பின் பின் ராமா!!!! உன்னுடன் யான் பிறந்ததற்கு யான் பெருமைப்படுகின்றேன்!!!!

அதனால் நிச்சயம் உந்தனக்காகவே அனைத்தும் செய்தேன் அதனால் நிச்சயம் யான் நிச்சயம் சென்று வருகின்றேன் என்று கூறி விடை பெற்றான்!!!!

ஆனாலும் ராமன் ஒரு வார்த்தை!!!!

உன்னால் முடியுமா?? லட்சுமணனே!!!! 

எதை அன்று அறியாது ஆனால் மக்கள் எதை என்று அறியாத அளவிற்கு ஆனாலும் நிச்சயம் நீ செய்த தவங்கள் ஓர் மாதம் இதை என்று அறியாமலே நீ செய்திருந்தாய்... நிச்சயம் இறைவன் உன்னை காக்கட்டும் என்று கூட!!!!

இதனால் பல திருத்தலங்களுக்கு சென்றான் லட்சுமணன் நன்றாகவே!!! நன்றாகவே!!!

அவந்தனும்  மனதில் புரிந்து கொண்டான்!!! மனித இனம் வீண்!!! பிறப்பெடுத்தாலும் கஷ்டங்கள் தான் என்று நன்றாகவே புரிந்து கொண்டு புரிந்து கொண்டு பல ஆலயங்களுக்கு சென்றான்!!

எதை என்று அறியாமலே இன்னும் பல ஆலயங்களுக்கு சென்று சென்று எதை என்றும் அறியாமலே ஆனாலும் பின் ராமனும் வருத்தப்பட்டான்!!!

இப்படி நம்தன் லட்சுமணன் சென்று விட்டானே!!! என்று ஏக்கத்தில்!!!

அவை மட்டும் அறியாமல் பின் பல பல புலவர்களையும் அழைத்து லட்சுமணன் எங்கு இருக்கின்றான் என்பதை உணர்ந்து உணர்ந்து  ஆனாலும் உணர்ந்து கொள்ள!!!ஆனால் ராமனால் அனைத்தும் முடியும் லட்சுமணன் எங்கே இருக்கின்றான் என்பதை கூட ஆனாலும் ராமன் மனித ரூபத்தில் வந்து பின் மனிதனாகவே வாழ்ந்து விடுவோம் என்பதை கூட பின் நேசித்து நேசித்து வாழ்ந்தவன் ராமன்!!!

இதனால் நேர்மைக்கு எதை என்றும் நீதிக்கும் ஆனாலும் இதை என்று அறியாமலே ஆனால் லட்சுமணனும் அனைவரையும் பல சித்தர்களையும் நினைத்தான் ராமனையும் நினைத்து பின் அழுதிட்டான் பின் இப்படி பந்த பாசங்களில் ஈடுபட்டு இப்படி வந்து விட்டோமே!!! ஆனாலும் நிச்சயம் பல திருத்தலங்களை காண வேண்டும் பின் எதை என்று அறியாமலே!!!

ஆனாலும் போகும்பொழுது ராமன் லட்சுமணனிடம் கூறினான் !!

பின் லட்சுமணனே!!! இதையென்று உந்தனுக்கு எவையென்று அறியாமலே செல்கின்றாய் நீ ஒருவனாகவே செல்கின்றேன் என்று கூட கூறிவிட்டாய் ஆனால் ஏதாவது புலவர்களை உடன் அனுப்பட்டுமா? இல்லை வீரர்களை அனுப்பட்டுமா?! என்று பின் முதலிலேயே கூறினான் ராமன்!!

ஆனால் லட்சுமணனோ!!!! நிச்சயம் இல்லை!!! யான் பல திருத்தலங்களுக்கு செல்கின்றேன்!!! ஆனால் நிச்சயம் ஆங்காங்கே சொந்த பந்தங்கள் ஏற்பட்டு விடும் என்று லட்சுமணன் கூறிவிட்டான்.

ஆனாலும் நிச்சயம் அவந்தன் கூற்றுப்படியே அங்கங்கே சொந்த பந்தங்கள் நிச்சயம் அவந்தனுக்கு பல உதவிகள் செய்தது!!! அதனால் லட்சுமணனும் மனம்மகிழ்ந்து அங்கங்கே திரிந்து ஏதாவது ஒரு அன்னத்தை எதை என்று அளவிடாமல் பின் எதை என்று எதை என்று கொடுக்கின்றார்களோ அவை எல்லாம் உட்கொண்டு அங்கங்கே திண்ணைகளில் படுத்து உறங்கினான். 

இதனால் நிச்சயம் பல ஜீவராசிகளும் இவந்தனுக்கு பல ரூபங்களில் நிச்சயம் இதை என்று அறியாமலே தரிசனமும் காட்டியது.!!!

காசியில் கூட பல ஆண்டுகள் அங்கேயே தவம் எதை என்று அறியாது அதனால் ஈசனும் காட்சி அளித்தான்!!! ஆனாலும் இதை என்று அறியாது இன்னும் பல தேசங்களுக்கு செல்ல வேண்டும் எதை என்று அறியாமலே அவந்தன் உள்ளத்தில் இருந்தது!!!

ஆனாலும் நிச்சயம் எங்கெங்கோ சென்றான் ஆனாலும் சென்று சென்று இவை என்று அறியாமல் பின் எவை என்றும் உணராமலே பின் கடைசியில் இங்கு வந்து விட்டான்(ஜம்மு காஷ்மீர்) 

ஆனாலும் எதை என்று அறியாத அளவிற்கு கூட ஆனால் இங்கு ஒரு இல்லமும் இருந்தது ஆனாலும் இங்கே படுத்து உறங்கினான்!!!

ஆனாலும் பல மனிதர்கள் அதாவது எவை என்று கூற தீய மனிதர்கள் பின் எதை என்று அறியாமலே இறைவன் இல்லை என்று சொல்பவர்களும் இவனை மடக்கி நீ யார்??? எதனை என்று இங்கே வந்தாய்??? என்பதை கூட பின் இவனை சிறையில் அடையுங்கள் என்று கூட லட்சுமணனை சிறையில் அடைத்து விட்டார்கள்!!!!

இங்கேதான் எவை என்று கூற அவ்வீட்டிலே சிறை!! ஆனாலும் பின் எப்படி எதை என்று கூற முதலிலே!! ராமன் சொன்னானே!!! என்று கூட இவந்தனக்கு யோசனைகள் வந்துவிட்டது!!!

ஆனாலும் இதை என்று அறியாமலே பின் எப்படி?? அவந்தனை இங்கிருந்து அழைப்போம்??? என்று கூட ஆனாலும் நிச்சயம் எதை என்று அறியாமலே பின் அழுதான்!!!!

எதையென்று கூட இப்படி சொந்த பந்தங்களாகவே வந்து வந்து எதை என்று அறியாமலே இங்கு யாரும் உதவிகள் புரியவில்லையே!!!!! என்று ஏக்கத்துடன் ஏக்கத்துடன் எதை என்று அறியாமலே!!!!

இதனால் நிச்சயம் இங்கே ஒரு வருடம் எதை என்று அறியாமலே தங்கினான். இருப்பதையெல்லாம் எதை என்று அறியாமலே இவந்தனுக்கு உண்ண உணவும் சரியாகவில்லை!!!  எதையென்று அறியாமலே அதனால்!!!!

ஆனால் பாருங்கள் இங்கு ஒரு சூட்சுமத்தை!! நல்லோர்கள் எதை என்று கூற !!! லட்சுமணன் மிக உயர்ந்த பண்புகளை உடையவன்.. எதையென்று கூற பின் எளிமை எதையென்று குணமுடையவன்.... அப்படியும் மீறி இறைவன் சோதிக்கின்றானென்றால் எதையென்று அனைத்தையும் தாங்கிக் கொண்டான்!!!

ஆனால் மனதில் பட்டது ராமனை பார்க்க வேண்டும் சீதையை பார்க்க வேண்டும் பின் வஷிட்டனை பார்க்க வேண்டும்!!! இன்னும் பல பல ஞானியர்களையும் ரிஷிகளையும் பார்க்க வேண்டும் சித்தர்களையும் காண வேண்டும் என்பதை கூட!!!!

ஆனாலும் பின் லட்சுமணன் எதை என்று அறியாமலே அறியாமலே உணர்ந்திருந்து உணர்ந்திருந்து பின் அழுதான். 

ஆனாலும் இவை என்று அறிய யானும் எதை என்று அறியாமலே பின் எந்தனுக்கும் நல்விதமாகவே இங்கு வலம் வரும்போது லட்சுமணன் நிச்சயம் இங்கு இருக்கின்றான் என்பதை கூட யான் அறிந்துவிட்டேன்!!!

அதனால் நிச்சயம் எதை என்று அறியாமலே இங்கு வந்தேன்!!! ஆனாலும் என்னை கூட இங்கே அனுமதிக்கவில்லை

நீ யார்????  எதையென்று அறிய என்பதைக் கூட ஆனால் சூட்சும தேகத்தில் சென்று பின் எதை என்று அறியாமல் எவற்றிலிருந்தும் வராமலே என் உதவி செய்ய என் லட்சுமணன் பின் உதவிகள் செய்தேன் லட்சுமணனுக்கு!!!!

இதனால் லட்சுமணனும் மனமகிழ்ந்தான்.  நிச்சயம் வந்திருப்பது அகத்திய முனியே!!  என்று உணர்ந்து கொண்டான்.. பின் சந்தோஷப்பட்டான்!!
அகத்தியனால் அனைத்தும் முடியும் என்று சரியாகவே பின் தீர்மானித்தான்!!!

இதனால் நிச்சயம் பல வழிகளிலும் கூட ஆனால்  யான் ஒன்றை உபதேசித்தேன் லட்சுமணனுக்கு!!! நீ எதை என்று அறியாமலே முதலில் சனீஸ்வரனை அழை போதுமானது!!!! என்று யான் குறிப்பிட்டேன் லட்சுமணனுக்கு ஏனென்றால் இவையெல்லாம் எவற்றிலிருந்து எங்கு வாழ்பவன்!!! இங்கெல்லாம் வந்திருக்கின்றானென்றால் நிச்சயம் இவற்றிற்கு காரணம் சனீஸ்வரனே!!!

ஆனாலும் நீதிமான் நியாயவான் !!!!ஆனாலும் லட்சுமணிடத்திலும் இவை இருந்தது எவையென்று அறியாமலே !!!! ஆனாலும் உண்மை நிலைகள் நிச்சயம் எதை என்று அதனால் முதலில் பின் லட்சுமணன் எதை என்றும் எவையென்றும் யான் கூறினேன் சனீஸ்வரனை அழை என்று கூட....

ஆனால் நிச்சயம் முதலில் பின் லட்சுமணன் சனீஸ்வரனை அழைக்கவில்லை இதை என்று அறிய எவை என்று கூற....

பின் அனுமனை அழைத்தான்!!!! அவை அன்றி கூட தன் ராமனை!!!

ஸ்ரீ ராமா!!!  ஸ்ரீ ராமா!!!  என்று கூட அழைத்தான் .

ஆனால் மிகுந்த கோபம் சனீஸ்வரனுக்கு!!! இவைதன் சனி தேவனுக்கும் தெரிந்து விட்டது அகத்தியன் சொல்லியும் இப்படி லட்சுமணன் கேட்கவில்லையே!!! என்று பின் மிக்க மிக்க கோபங்கள் வந்துவிட்டது சனீஸ்வரனுக்கும்!!! 

நிச்சயமாய் எதையென்று கூற சனீஸ்வரனும் இங்கே வந்து விட்டான்...எதையென்று அறியாத ஆனாலும் நிச்சயம் சனீஸ்வரனை எதை என்று கூற நேராக உள்ளே நுழைந்தான்....எதையென்று அறியாமலே சூட்சும தேகத்தோடு!!!!!! 

லட்சுமணனே!!!!! எதையென்று அறியாது ஆனாலும் உன் கர்மா இப்படி செய்து விட்டது அதனால் தான் சிறு தண்டனைகள் கொடுத்தேன் என்று கூற!!!! 

ஆனால் லட்சுமணன் அழுது விட்டான் !!!! எதையென்று அறியாமலே பின் பாசம் பொங்கி வழிந்து விட்டது!!!!

சனிஸ்வரனே!!!  அனைத்திற்கும் காரணம் நீ என்பதை யான் உணர்ந்து விட்டேன்..... ஆனாலும் நிச்சயம் தண்டனை என் ராமனையும் பின் ஆஞ்சநேயனையும் அழைத்தால் நிச்சயம் நீ வந்து விடுவாய் என்பதை கூட எந்த எனக்கு நன்றாகவே தெரியும்!!!!

இச் சூட்சுமத்தை நிச்சயம் அகத்தியனும் என்னிடம் செவியிலே சொல்லிவிட்டான்!!!!

அதனால்தான் உந்தனுக்கு எவை என்று கூறாமலே பின் சனீஸ்வரனும் பின் இப்படியா???? அகத்தியன் எவ்வளவு பாசம் எவ்வளவு எதை என்று கூட மனிதனை காப்பதற்கு!!!! இப்படி எல்லாம் கூறுகின்றானா?!! என்பதை கூட!!!!  ஆச்சரியத்தில்!!!!

ஆனால் அகத்தியன் பின் வரவில்லை இதையென்று அறியாமலே மீண்டும் நிச்சயம் எவை என்று கூட எதை என்றும் அறியாமலே!!!

அகத்தியன் என்பதை கூட இனி வரும் காலங்களில் யான் யார் என்பதை யானே காண்பிப்பேன்!!!!

மனிதர்களுக்கு நிச்சயம் அப்பொழுது புரிந்து கொள்வார்கள்!!!

ஏனென்றால் மனிதர்கள் ஏமாற்றி ஏமாற்றி அகத்தியனே இல்லை என்ற நிலைமைக்கு எதை என்று சொல்லி இனிமேலும் எதை எதை என்று கூட யான் விவரமாகவே என் பக்தர்களுக்கு எதை என்று அறியாமலே!!!!

அதனால் நிச்சயம் எவை எவை என்று அறிய பின் சனீஸ்வரனும் இதையன்றி அறிய பின் இப்படிப்பட்ட ஞானியா!!?? என்று கூட...

அதன் உள்ளே எந்தனுக்கு காதுகள் சரியான செவிகளில் எவை என்று அறியாத அளவிற்கு  கூட....

ஆனாலும் யானும் சூட்சுமரூபத்தில் வந்து விட்டேன்!!! பின் இவையென்று கூற.... சனீஸ்வரனிடம் கேட்டேன்!!!

ஈஸ்வரா!!!! சனீஸ்வரா!!! இவ்வளவு பட்டம் பெற்றிருக்கின்றாயே ஆனால் இவனுடைய வேதனைகள் லட்சுமணனுடைய வேதனைகள்...எதையென்று கூட!!! எவை என்றும் அறியாமல் வகைக்கும் கூட!!!

எங்கெங்கு இவன் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவன்!!?? எங்கெல்லாம் எதை என்று கூற தர்மத்தை நிலை நாட்டுபவனாக இருந்தானே!!!! ஆனாலும் இவை அன்றி அறியாமலே இவந்தனை இப்படி ஆக்கிவிட்டாயே என்று கூட!!!!

ஆனால் மன்னித்து விடுங்கள் அகத்திய முனிவரே!!!!!! எதை என்று அறியாத அனைத்தும் கற்றவர்கள் நீங்கள்!!!

இவையெல்லாம் இப்படி எல்லாம் சொல்லலாமா!!!! என்று உணர்ந்து!!!!

ஆனால் நிச்சயம் எவையன்றி கூற தான் தான் முதலிலே கூட நீதி நேர்மை தவறாமை எதை என்று அறியாமலே எந்தனுக்கு பட்டம்!!!! அதனால்தான் சனீஸ்வரன் என்ற பட்டமும் கூட!!!

அதனால்தான் எவை என்று அறியாமலே இவந்தனுக்கு சிறிது கஷ்டம் ஆனாலும் இப்படி ஆகும் என்று கூட யான் நினைக்கவில்லையே என்று கூட பின் சனீஸ்வரனும்!!! 

நிச்சயம் என்று கூற....பின் அகத்திய மாமுனிவரே!!!  உன்னால் மட்டுமே நிச்சயம் லட்சுமணனை காக்க முடியும் என்பதைப் போல் இணைத்து சனி தேவனும் சென்று விட்டான். ஆசிகளோடு..... யான் விட்டுவிடுகின்றேன் ஆனால் நீ காப்பாற்றி விடு என்று கூட!!!!!

அப்பப்பா!!!!! எதையென்று சனி தேவனே!!! இப்படி செய்து விட்டாயே!!! அனைத்தையும் நீ செய்து விட்டு என் மீது பழி போட்டு விட்டாயே என்று யான் ஏங்கினேன்!!!

ஆனாலும் இதை அறிந்து நிச்சயம் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று எண்ணினேன். 

ஆனாலும் கூட்டங்கள் பல கோடி மக்கள் இவந்தனை(லட்சுமணனை) விடவில்லை!!!! ஆனால் இவனை திருடன் என்று சொல்லிவிட்டார்கள்.

ஆனாலும் இவந்தன் அறிய அறிய ஆனாலும் நிச்சயம் பின் ஓர் உபதேசத்தையும் இவந்தனுக்கு தெரிவித்தேன்!!!! அதை நிச்சயம் பயன்படுத்திக் கொண்டே வந்தான்!!!

எதை என்று அறியாமல் நிச்சயமாய் சொல்கின்றேன் மனிதர்களே!!! எதை என்று அறியாமலே நிச்சயமாய் என்னை பிடித்தவர்கள் நிச்சயம் என்னையே நம்புகின்றவர்களுக்கு யான் நிஜமாகவே மனித ரூபத்தில் வந்து எதை என்று அறியாமலே நிச்சயம் கொடுத்திட்டு செல்வேன் கலியுகத்தில்!!! செப்பி விட்டேன்!!!!!

இது சத்தியம்!!! சத்தியம்!!!

எவை என்று அகத்தியன் ஒரு வாக்கை விட்டு விட்டால் நிச்சயம் மாறாது கடைநாள் வரையிலும்!!! சொல்லிவிட்டேன் இதையென்று கூட!!! 

ஆனால் மனிதர்கள் தான் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள்!!! அகத்தியன் சொல்கின்றான் என்றெல்லாம்........ ஆனால் நிச்சயம் யான் மனிதனை நிச்சயம் ஏற்பதே இல்லை !!!!எதையென்று கூட எப்பொழுதும் கூட!!!

நிச்சயம் சில சில விஷயங்களை இவந்தனுக்கு நல்விதமாகவே அதாவது பின் காதில் ஈந்தேன்!!! இதனால் மீண்டும் பின் எப்படி எதை என்று அறிய இதனால் நிச்சயம் எவை எவை என்று கூட அவ்மந்திரத்தை பின் அவை மந்திரமல்ல இவையன்றி கூற ரகசியம் இதையென்று இதனால் நிச்சயம் முதலில் பின் ராமஜெயத்தை ராமஜெபம் ராமஜெபம் என்று ஜெபித்து ஜெபித்து ஆனாலும் உண்மை நிலை புரிந்து புரிந்து பின் அனுமானும் ஓடோடி வந்தான்!!!!!!

எவை என்று அறிய இப்படிப்பட்ட மக்கள் இவனை சூழ்ந்து கொண்டிட்டு..... எப்படி இவந்தன் எதையென்று கூட அதனால் நிச்சயம் பின் ஆஞ்சநேயனும் பல ரூபங்கள் எடுத்தான்!!!!

ஆனாலும் அது கூட இப்பொழுது ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளாகவே (குரங்குகள்) அதனால் ஐந்தறிவுள்ள ஜீவராசிகளாகவே பின் எதை என்று கூற பின் எவை என்று கூட பின் இன்னும் ஏற்பாடுகள் செய்ய பல வழிகளிலும் கூட இதை என்று அறியாத அளவிற்கு கூட!!!!!

நின்று உணர்ந்து நின்று உணர்ந்து பின் குரங்கின் வடிவில் எடுத்தான் அதனால்... பல லட்சங்கள்(குரங்கு ஜீவராசிகள் அனுதினமும் லட்சுமணன் சிறையிருக்கும் இடத்திற்கு வந்து வந்து பார்த்தது) எதையென்று அறியாத ஆனாலும் வந்து வந்து லட்சுமணனையே பார்த்தது பின் ஐந்தறிவுள்ள ஜீவராசிகளான குரங்கும்!!!

ஆனாலும் இதை இவை என்று சொல்ல முடியாது அனுமான் என்று தான் சொல்ல வேண்டும் !!!!!

ஆனாலும் எதை என்று அறியாமலே பல சூழ்ந்துள்ள மக்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டு விட்டது !!!!

ஏன் திடீரென்று இவைகள் வந்துள்ளது என்பதை கூட!!!

இதனால் ஓர் அரசன் பின் எதை என்று ஆனால் அவன் தரித்திர அரசனே!!

இவையெல்லாம்(அனுமான் ரூபங்கள்) பின் இங்கேயே அழிவுகள் பெற வேண்டும் என்பதைக் கூட கட்டளையிட்டான்.

அதனால் அனைத்தும் அழிந்துவிட்டது எதை என்று கூற கொன்று விட்டார்கள்!!

அதுதான் இப்பொழுது எவை என்று கூற ஒவ்வொரு சாலிகிராமத்திலும் அவை உயிர் அடங்கி உள்ளது என்பேன்!!!!

இதனால் நிச்சயம் இங்குள்ள எவை என்று கூற ஒவ்வொரு பின் பரிசுத்த ஆன்மாக்களும் வரும்பொழுது நிச்சயம் அவ் அனுமான் ஜீவராசிகளும் நிச்சயம் பின் மனிதர்களை ஆசிர்வதித்து ஆசீர்வதித்து மேற்சொன்ன சில கர்மாக்களை அழித்து அழித்து நிச்சயம் மேல் நோக்கி தாம் தம் என்னென்ன நடக்க வேண்டுமோ அவை செம்மையாகவே நடக்கும் எதை என்று அறியாமலே!!

இதனால் என்றும் என்றும் ஜீவித்திருக்கும் ஜீவராசிகள் இப்பொழுது கூட உயிருள்ளதாகவே இருக்கின்றன!!!![ ஆலயத்தில் உட்பிரகாரத்தில் 12 லட்சத்து 25000 சாலிகிராமம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. அனுமன் ரூபங்களின் அம்சமானது இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது]

ஆனாலும் எதையென்று கூற அப்பொழுதும் கூட லட்சுமணன் ஆனாலும் இதை அறிந்து நிச்சயமாய் இவை தன் உணர உணர!!!

ஆனால் ராமா!!! ராமா!!!!ராமா!!! ராமா!!!!!........ என்றெல்லாம் லட்சுமணன் கூறிக் கொண்டிருந்தான். எதை என்று ஆனாலும் பின் இவை நிச்சயம் ராமனுக்கு தெரிந்து விட்டது!!!! எவை என்று கூட!!!!

நம் தம்பி எங்கேயோ சிக்கிக் கொண்டிருக்கின்றான் என்பதைக் கூட!!!

அதனால் நிச்சயம் ராமனும் எவை என்று அறியாமலே மனம் வருத்தப்பட்டான்!! மனம் வருத்தப்பட்டு எதை என்றும் எப்படி இவ்வாறு தனியாகவே சென்று விட்டானே ஆனாலும் யானும் ஏதாவது உதவிகள் செய்யலாம் என்றால் கூட ஆனால் நிச்சயம் எதையென்று கூட!!!

அதனுள்ளே இவை என்று பின் அதன் பின் எவை என்று கூட என்பதற்கு இணங்க நிச்சயம் இவற்றின் தன்மைகளை பார்த்து அப்பொழுது சனீஸ்வரனும் எதை என்று அறியாமலே ராமனிடத்தில் சென்று....எவையென்று!!! 

ராமா!!!!!!!!! உன் தம்பியும் எதையென்று அறியாமலே சிறிது கவனக்குறைவால் கர்மா எஞ்சி உள்ளது என்பதற்கிணங்க நிச்சயம் தண்டனைகள் கொடுத்துவிட்டேன். 

ஆனாலும் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டான் என்பதற்கிணங்க ஆனாலும் நிச்சயமாய் ராமனும் அமைதியாகவே இருந்தான்!!!!

எதை என்று... சரி!!! சனீஸ்வரனே!!!! எதை என்று அறியாமல் நிச்சயம் உன் கடமையை நீ செய்தாக வேண்டும் இதுதான் உண்மை அதனால் நீ கடமையை பின் சரியாக செய்து வருவதே நல்லது!!!

அதனால் சனி பகவான் தலை குனிந்தான்!!

ஆனால் எதை என்று ராமன் யோசித்தான் இச்செயலுக்கு எப்படி? வழி வகுப்பது?? எப்படி எதை என்றும் எதை செய்தால் நிச்சயம் லட்சுமணன் வெளியே சென்றடைய ஆனால் நிச்சயம் பலமாக சிறிது தியானத்தில் அமர்ந்தான்!!

ஆனால் வந்தது பின் யான் தான்!!!!!!(அகத்தியர்) 

ஆனால் புரிந்து கொண்டான்!!!!!

இதை அகத்திய முனிவனால் மட்டுமே நிச்சயம் காக்க முடியும் என்று கூட!!!!!

இதனால் யானும் சில நேரங்களில் ஒளிந்து கொண்டேன்!!! ராமனுக்கு விளையாட்டாக!!!! எதை என்று அறியாமலே சிறிது தேடட்டும் என்று கூட!!! ஆனால் ராமன் அருகிலே தான் இருந்தேன்!!!

ஆனாலும் தேடிக் கொண்டிருந்தான் ராமனோ சிறு வினாடிகள் கூட தியானத்தில் அமர்ந்து விட்டால் அவந்தனுக்கு எங்கு எது இருக்கின்றது என்பதை சரியாகவே தேர்ந்தெடுத்து விடுவான் இதனால் எதை என்று அறியாமலே ஆனாலும் நிச்சயம் பின் எந்தனுக்கும் கூட ராமன் எதை என்று அறியாமலே ராமன் என்மீது அளவு கடந்த பக்திகள்!!! 

ஏன் ? என் பக்தனாகவே!!!  என் சீடனாகவே!!! என் மகனாகவே!!!!! இருந்தான் அதனால் பல பல வழிகளிலும் அவந்தனுக்கு யான் உண்மைகளை எடுத்துரைத்து பல வழிகளிலும் உதவிகளும் செய்துள்ளேன். 

அதனால் நிச்சயம் சிறிது தன் மகன் மீது பாசம் கொண்டுள்ளதால் சிறிது விளையாடி விட்டேன்!!! ஆனாலும் நிச்சயம் பின் யானே போய் நின்றேன்..

ஆனால் ராமனும்... அகத்திய முனிவரே!!!அகத்திய முனிவரே!!! வாருங்கள்!!! உம்மைத்தான் யான் எண்ணிக் கொண்டிருக்கின்றேன்...என்று கூற!!! 

பின் யானும் நிச்சயம் தெரியும் ராமனே எதை என்று ஆனாலும் இப்பொழுது கூறு என்று கூட!!!

நிச்சயம் தன் தம் அறியாமலே ஒன்றும் தெரியாத பின் லட்சுமணன் கூட ஓர் எதை என்று அறியாமலே ஓர் இடத்தில் சிக்கி கொண்டிருக்கின்றான் எப்படி என்று கூட!!!

அதனால் இவையென்று அறியாத யானும் நிச்சயம் இவையன்றி ஆனாலும் அதே வேகத்தில் ராமனே!!!! சென்றடைவோம் வா!!! என்று யான் ஆனாலும் நிச்சயம் வந்து விட்டோம் இங்கே!!!!

ஆனாலும் ராமனைக் கூட இங்கே உள்ளே விடவில்லை!!!! எதை என்று ஆனாலும் ராமன் மனம் வருத்தப்பட்டு.. பின் இப்படிப்பட்ட இவந்தன் பல புண்ணியங்கள் பல பலதான தர்மங்கள் மக்களை வாழவைப்பதற்காகவே நாம் பிறந்தோம் என்பதை கூட ஆனாலும் இப்படிப்பட்ட மனிதர்களை எப்படி என்பதை கூட......

ஆனால் நிச்சயம் பின் அகத்திய முனிவரே பின் எதை என்று அறியாமலே நிச்சயம் காப்பாற்றுங்கள் உங்களால் அனைத்தும் செய்ய முடியும்!!!!

ஒவ்வொரு யுகத்திலும் அதாவது எதையென்று அறிய பின்வரும் காலங்களில் அநியாயம் அக்கிரமங்கள் கலியுகத்தில் நடக்கப் போகின்றது என்பதை கூட யாம் அறிவோம்!!! அப்பொழுதெல்லாம் நிச்சயம் நல் மனிதர்களுக்கு நிச்சயம் உங்களால் விடிவெள்ளி கொடுக்க முடியும் நீங்கள் காப்பாற்ற முடியும் என்பதை எல்லாம் நிச்சயம் யோசித்து யோசித்து!!!!

இதை தன் உணர!! உணர!! நிச்சயம் பின் எதை என்று அறியாமலே கண்கள் ராமனின் கண்களில் பின் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது!!!! 

ஆனாலும் இவை என்று அறிய!!! யானும்,,.... எதை என்று அறியாத ராமா!!!!!ராமா!!! பின் இவையெல்லாம் இப்படி எல்லாம் எதை என்று எதற்காக??!!!!!

ஆனால் அகத்திய மாமுனிவரே!!!! பந்த பாசங்கள் எதை என்று அறியாமலே இப்படி ஆட்டுவிக்கின்றது!!!! இதனால் எவை?? என்று யான் சொல்ல!!!!!!

நிச்சயம் உணருங்கள்!!! உணருங்கள்!!! பின் அகத்திய மாமுனிவரும் நிச்சயம் எதை என்று!!!!!

ஆனாலும் ஒவ்வொரு பின் எதை என்று அறிய  ஒவ்வொரு சித்தனையும் யான் அழைக்கின்றேன் பின் அவை மட்டும் இல்லாமல் ஒவ்வொரு ரிஷியையும் யான் அழைக்கின்றேன், பல முனிவர்களை யான் அழைக்கின்றேன் மனித ரூபமாக அப்பொழுது நிச்சயம் இவர்களை எதை என்று அறியாமலே இவர்களையே சிறைபிடிப்போம் என்று கூட நிச்சயம், எதை என்று அகத்தியன் சரியாகவே யான்தான் எவை என்று கூற அகத்தியன் என்பதை கூட நிச்சயமாய் யான் சொல்லிக் கொண்டே வருகின்றேன்...

இவ்வுலகிற்கு அகத்தியன் யார்? என்று வரும் காலங்களில் தெரிவிப்பேன் நிச்சயம்!!!!!

உயர்ந்த நோக்கத்தோடே நிச்சயம் வந்திருக்கின்றேன் நிச்சயம் என் லட்சியம் நிறைவேறாமல் நிச்சயம் யான் எதை என்று கூறாமல் இவ்வுலகத்தை விட்டுப் போகவும் மாட்டேன்!!!!!

ஏனென்றால் ஈஸ்வரியும் எதை என்று கூற ஈஸ்வரனும் எவை எவை என்று கூட பின் இன்னும் ஏராளமான முனிவர்களும் தேவர்களும் எவை என்று கூற  அகத்திய முனியே வந்துவிடு !!!வந்துவிடு!!! என்றெல்லாம் பின் என்னை அழைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!!

ஆனால் நல்லோர்களை வாழ வைத்து தான் யானும் நிச்சயம் செல்வேன்!!!! எதையென்று அதனால் புவியுலகு தன்னில் எதையென்று அறியாமலே வந்து வந்து நிற்கின்றேன். நல்விதமாக!!!!

அதனால் இதையென்று அறிய அதனால் பின் எதை என்று கூற அதனால் நிச்சயம் இவர்கள் பல பேர் பன்மடங்காக இன்னும் உயர்ந்து விட்டனர் மனிதர்கள்!! 

எதை என்று அறியாமல் யான் விட்டு விடுவேனா!!!!!! என்ன??????

தேவர்களையும் மனிதர்களாக்கினேன்!!! எவையென்று ரிஷிகளையும் மனிதர்களாக்கினேன்!!! பின் எவை என்று முனிவர்களும் எவையென்று மனிதர்கள் ஆக்கி நிச்சயம் பின் எவை என்று அறியாமலே வாருங்கள் என்று கூட... பல கூட்டமாக யான் கூட்டிட்டேன்.

ஆனால் வந்தேன் யானும் முதலில் நின்றேன் மனித ரூபமாக!!!!! என்னையும் தடுத்துவிட்டார்கள் இங்கு. 

பின் உள்ளே வரக்கூடாது நீ யார்??? என்று......

ஆனாலும் யான் யாரும் இல்லை.... என் சகோதரன் லட்சுமணன் அவனை பார்க்க செல்கின்றேன் என்று கூட.....

ஆனாலும் நிச்சயம் விடவில்லை சண்டைகள் அங்கே கூட......

எதையென்று கூட யானும் பல சண்டைகள் பார்த்தவன் தான் அப்பனே!!!!!! 

இப்பொழுது கூட சண்டையிட்டீர்களே இவையெல்லாம் சண்டைகளே இல்லை!!!!!!

யான் வரும் பொழுது கூட சண்டை போட்டவன் தான் இங்கு!!!!!!

எதையென்று அறியாதவர்களே ஆனாலும் நிச்சயம் விடவில்லை நிச்சயம் விடமாட்டோம் விடமாட்டோம் என்பதைக் கூட......

ஆனால் சரியான கணிதத்தை ஒருவன் இங்கே கணித்திருந்தான் பின் இவனை விட்டு விட்டால் இவ் ராஜாங்கத்தை நிச்சயம் அடிமையாக்கிக் கொள்வான் என்பதை கூட ஒருவன் சரியாக தெரிந்து விட்டான் அதனால் தான்  பின் லட்சுமணனுக்கு இவ்வளவு........ எதை என்று உள் நுழைந்து உள்நுழைந்து எதை என்று அறியாமல் சிறை பிடித்து விட்டனர் இதனால் சரியாக கணிக்க தெரிந்தவன் ஒருவன் எதை என்று கூற எவை என்று அறியாமலே அவன் சொன்னதை கேட்டு இவந்தனை விட்டு விட்டால் இவ் ராஜ்ஜியம் நிச்சயமாய் போய்விடும் இங்கிருந்து கூட விட்டு விடாதீர்கள் என்று அதனால் தான் எதை என்று அறியாமலே அனைவரும் எவை என்று இவனை(லட்சுமணனை ) விட்டுவிடவில்லை.

ஆனாலும் யானும் விட்டு விடுவேனா!!!!!! என்ன????

எதையென்று அறியாமல் பின் யானும் கூட்டம் சேர்த்தேன் மனித ரூபத்திலே!!! யானும் மனித ரூபத்தில் வந்தேன்!!! பல நபர்களை எதை என்று கூற பல வழிகளிலும் கூட.....

ஆனால் இவர்கள் நல் மனதை பெற்றிருக்கவில்லை அதனால் அனைவரும் எதை என்று கூட அடிதடியாக பலமாக அடித்தும் எதை என்று கூற ஆனாலும் ஒருவர் கூட காயம் படாமலே!!!!! 

ஆனால் கடைசியில் யான் உயர்ந்து நின்றேன்(அகத்தியரின் விஸ்வரூபம்) உயர்ந்து நின்றேன்!!!!

யான் தான் அகத்தியன்!!!!!!!

எதையென்று அறியாமலே நிச்சயம் இத்தேசம்!!! என் தேசம்!!!!! இதையன்றி கூற அதனால் நிச்சயம் சென்று விடுவீர்கள் எதை என்று அறியாமலே இனி மேலும் நிச்சயம் இவை என்று அறியாமலே பின் நீங்கள் லட்சுமணனை இவ்வாறு செய்து கொண்டே இருந்தால் நிச்சயம் எவை என்று அறியாமலே விதியையும் மாற்றி உங்களுக்கு பல வகையான கஷ்டங்களை ஏற்படுத்திவிடுவேன் என்று கூற..... 

அதனால் அனைவரும் பல மக்களும் பல கோடி மக்களும் எதை என்று அறியாமலே பின் என் பக்தனாக வந்துவிட்டார்கள்!!!! 

அகத்திய மாமுனிவரே!!!! அகத்திய மாமுனிவரே!!!! 

இப்படியா இப்படிப்பட்ட நீங்கள் மனித ரூபத்தில் எவை என்று அறியாமலே ஒரு சாதாரண மனிதனுக்கு எவை என்று அறியாமலே இப்படி கை கொடுக்க!!.......

ஆனால் நிச்சயம் எங்களையும் காப்பாற்றுவீர்கள் என்று கூட அனைவரும் திருந்தி விட்டனர்......

இதையென்று அறியாமலே அதனால்தான் அப்பனே பின் ஒருவன் திருடனாக இருந்தாலும் அவனிடம் பாசம் காட்ட வேண்டும் பந்தம் பார்க்க வேண்டும் இதனால் அப்பனே எவை என்று கூட.... அதனால் அப்பனே நிச்சயம் அவன் தான் திருந்தி விடுவான் அப்பனே!!!!

இதனால் தான் அப்பனே யான் எவை என்று அறியாமலே வந்து கொண்டிருக்கின்றேன் அப்பனே!!! இனி எவையன்றும் அதனால் அப்பனே நிச்சயம் பின் ஏதாவது எவை என்று கூற ஒரு சாதாரண மனிதனுக்கும் நிச்சயம் பின் தன் பிள்ளையாக எண்ணி யான் உதவி செய்வேன் அப்பனே!!!!!!

இதுதான் என்னுடைய கருணை!!!!!

எப்பொழுதும் மாறாது இது என்பேன் அப்பனே!!!! 

எவையெவை இன்னும் உலகத்தில் என்னென்ன நடக்கப் போகின்றது என்பதை கூட மனிதன் அறிவதில்லை!!!! அதனால்தான் சித்தர்கள் முட்டாள்கள் முட்டாள்கள் என்றுதான் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். அதனால்தான் அப்பனே உண்மையான பக்தியை காட்டுங்கள் போதுமானது!!!!

யான் எதையுமே கேட்கவில்லை அப்பனே!!! எதற்காக? எந்தனுக்கு அனைத்தும் செய்கின்றீர்கள் அப்பனே!!!
நிச்சயம் நல்லோர்களை வாழ விடுங்கள் அப்பனே எதை என்று அறியாமல் உன்னிடத்தில் இருந்தால் மற்றவர்களுக்கு கொடு!!!!

அப்பனே எதை என்று அறிய இனி மேலும் அப்பனே எவை என்று கூற யான் எச்சரித்து எவை என்று அறியாமலே கருணையோடு சொல்கின்றேன்!!!!

ஆனால் மற்ற சித்தர்கள் அப்படி இல்லை அப்பனே!!!!

நிச்சயம் எவையென்று கூட அடி பலமாகவே எதை என்று கொடுத்து விடுவார்கள் அப்பனே சொல்லிவிட்டேன்!!!

அதனால்தான் அப்பனே நிச்சயம் ஏமாற்றாதீர்கள் எவை என்று கூற அப்பனே என் பெயரை சொல்லி ஏமாற்றாதீர்கள் அப்பனே!!!!

எவ்வளவு கருணைமிக்கவன் யானே சொல்கின்றேன்!!!! இறங்கி வந்து அப்பனே!!!!

எதையெதை என்று கூற அதனால் உன் வாக்கினை நீயே கூறு!!!! யான் செப்புகின்றேன் என்று கூட அப்பனே அதனால் நிச்சயம் என் எதை என்று அறியாமலே.......

என் நாமத்தை பயன்படுத்தாதே!!!! என் நாமத்தை பயன்படுத்தாதே!!!

சொல்லி விட்டேன் எச்சரிக்கின்றேன்!!!!

நிச்சயம் எதையென்று கூற அப்படி பயன்படுத்தினால் யானே தண்டனைகள் கொடுத்து விடுவேன் சொல்லிவிட்டேன்!!! சொல்லிவிட்டேன்!!!

வேண்டாம் அப்பனே!!!!!

இவையன்றி கூற இப்படியே செய்து கொண்டிருந்தால் இறைவன் இல்லை என்று சொல்லிவிடுவார்கள் எவையென்று சித்தர்களும் இல்லை என்று சொல்லிவிடுவார்கள் அப்பனே...

ஏராளம் அப்பனே எல்லாம் எவற்றினின்றும் நடப்பது எவை என்று அறியாமல் அதனால் பல  வகையிலும் பல பல வழிகளிலும் யான் வந்து பல நபர்களுக்கு உதவிகள் செய்து கொண்டிருந்தேன் அப்பனே!!! இப்பொழுது கூட உதவிகள் செய்வேன் அப்பனே..... 

இதனால் நிச்சயம் ஏமாற்றாதீர்கள் அப்பனே!!!எதையன்றி கூற...... 

யான் எதுவுமே கேட்கவில்லை அப்பனே!!!! எதையன்றி கூற அதனால் நல் உள்ளம் தான் கேட்கின்றேன் அப்பனே!!! சொல்லிவிடுகின்றேன் அப்பனே!!!!!!

என் பக்தர்களே போட்டி பொறாமைகள் அநியாயங்கள் அப்பனே எவையன்றி கூற என்னை நம்பியதைப் போல் நடித்து பல வகையிலும் மாந்திரீகத்தில் நுழைந்து எதையெதையோ செய்கின்றார்கள் அப்பனே நிச்சயம் தண்டனைகள் உண்டு அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!!! 

திரும்பவும் சொல்கின்றேன் தண்டனைகள் உண்டு!!! உண்டு !!!உண்டு!!! 

அப்பனே அதனால் திருந்துங்கள் அப்பனே!!! 

அதனால் எவையென்று கூட அதனால் இதையென்று கூட அப்பனே யான் சாதாரண எவை என்று அறியாமலே ஆனால் நிச்சயம் உயர்ந்து நின்றேன்!!!!!

இங்குள்ள அனைவரும் நிச்சயம் என்னை குருவாக ஏற்றுக் கொண்டார்கள்!!!!!!

இதை யான் எவையென்று அறியாமலே அதனால் பின் முருகனும் வந்து விட்டான் ஓடோடி!!!!!! இங்கு!!!!! 

பின் ஈசனும் வந்து விட்டான்!!!

பார்வதிதேவியும் வந்துவிட்டாள்.... எதையென்று அறியாமலே இன்னும் எவையென்று பின் பிள்ளையோனும் வந்து விட்டான்!!!  எவையென்று கூட  அனைத்து தெய்வங்களும் வந்து விட்டது!!!! அப்பனே 

அப்பனே பார்த்து கொண்டீர்களா அப்பனே எதையென்று அறியாமலே சாதாரண பிறவியில் பிறந்து பின் லட்சுமணன் பின் எதையென்று அறியாமலே உயர்ந்த பக்தியை காண்பித்தான்!!!!

அனைத்து தெய்வங்களையும் அவந்தனுக்கு காண்பித்தேன் அப்பனே!!!!!!

அதனால் தான் சொல்கின்றேன் அப்பனே உங்களுக்கும் கூட!!!!!!

அநியாயங்கள் செய்யாதீர்கள் அக்கிரமங்கள் செய்யாதீர்கள் அப்பனே பொய் சொல்லாதீர்கள்!!!

 நிச்சயம்... அனைத்து தெய்வங்களையும் யான் காட்டுவேன் அப்பனே!!!! 
உங்களுக்கும் கூட...... 

அதனால்  உண்மையான பக்தியாக இருங்கள் அதனால் அப்பனே எவை என்று கூற...... அனைவரும் இங்கு வந்தார்களப்பா!!!!

அதனால் தான் அப்பனே இன்னும் சக்திகள் இங்கே குடி புகுந்துள்ளது என்பேன் அப்பனே!!!!!

அதனால் இங்கு வருபவர்கள் நல்விதமாக அனைத்தையும் பெறுவார்கள் அனைத்து சௌபாக்கியங்களையும் பெறுவார்கள் என்பேன் அப்பனே!!!!

ஆனால் சில சில எவை என்று கூற ஆனால் பல இவ்வாறு பல சக்திகள் ஏற்படுத்தினேன்! யான் எவை என்று அறியாமலே அதனால் பல பல வடிவங்களில் கூட... சில தீவிரமான மனிதர்கள்(தீவிரவாதிகள்) இதனை அழிக்க ,அழிக்க, முற்பட்டார்கள்!!

ஆனால்.... அப்பனே யான் விடுவேனா!!!!!! என்ன???

ஏன்!! எந்தனுக்கு அப்பொழுதே தெரியும் இவையெல்லாம் இப்பொழுது நடக்க போகின்றது என்பது!!! அதனால்தான் அனைத்து தேவர்களையும் அனைத்து ரிஷிமார்களையும் முனிவர்களையும் இறைவன்களையும் இங்கே அழைத்து வந்து விட்டேன்!!!

ஏனென்றால் அவர்கள் இங்கு வந்து விட்டால்  இங்கு சக்திகள் கூடிவிடும் அதனால் ஒன்றும் செய்ய இயலாது என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் இன்னும் கூட இத்திருத்தலத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை அப்பனே நன்றாகவே கவனித்துக் கொண்டீர்களா!!!! அப்பனே நலமாகவே உண்டு !!உண்டு!!

 என்னுடைய ஆசீர்வாதங்கள்!!!!

இன்னும் அப்பனே எவை என்று அறியாமலே இன்னும் எதை என்று தெரியாமலே இன்னும் வாக்குகளாக பரப்புகின்றேன் அப்பனே!!!! என்னுடைய ஆசிகள்!!!! ஆசிகள்!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

ஸ்ரீ ரகுநாத்ஜி மந்திர். 
ரகுநாத் மந்திர் சேக். 
ஜம்மு நகரம். 
ஜம்மு காஷ்மீர். 180001.

காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை ஆலயம் திறந்திருக்கும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

Saturday, 23 July 2022

சித்தன் அருள் - 1165 - அகத்தியர் விஜயம் - குருவுடன் இரு நாட்கள்!


மறுநாள் காலையில் பாலராமபுரத்தில் அபிஷேக ஆராதனைகளுக்குப் பின் நாடி வாசிக்க, நம் குருவின் தலைவர், சுப்பிரமணியர் வந்து அழகாக வாக்குரைத்தார். அதன் பின் வந்து வாக்குரைத்த அகத்தியப் பெருமான், நீண்ட அறிவுரையினூடே, ஒவ்வொரு ராசிக்காரர்களும் என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று கூறினார். பின்னர் காலை 9.30 மணிக்கு மேல், பக்கத்தில் மலைமேல் குடி கொண்டுள்ள எரித்தாவூர் பாலா சுப்பிரமணிய ஸ்வாமியை தரிசனம் செய்ய நாடியுடன் கிளம்பி சென்றனர். அடியேன் அவர்களிடமிருந்து விடை பெற்றேன்.

மாலை திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்தபின் மறுபடியும் அனைவரும் அடியேன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த எண்ணி, நாடியில் ஒரு சில கேள்விகளை கேட்டேன்.

"ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். நலமாக, எவை, எதை என்று அப்பொழுது கூற வேண்டும் என்பதை கூற யான் அறிவேன், அப்பனே. அதைத்தான், நல்லவிதமாக உரைத்தால் தான் நன்று என்பேன். அங்கிருந்து, யான் பல வேலைகளை செய்துதான் வந்து கொண்டு இருக்கின்றேன் அப்பனே. எதை என்று அறிவதற்கு, பலப்பல ரிஷிகளும், முனிவர்களும் வந்தார்கள். இங்கிருந்தும் யான் பத்மநாபரை, முருகரை  சென்று தரிசனம் செய்து, உரையாடித்தான் வருகிறேன். வரும் காலங்களில், பலப்பல சூட்ச்சுமங்களை உரைப்போம். ஆகவே பொறுத்திரு மகனே!

அடியேன்: "அகத்தியப்பெருமானுக்கு நமஸ்காரம்! பாலராமபுரம் கோவிலில் மாலை தீபாராதனை நேரத்தில், உங்களுக்கும், தாயாருக்கும் பின்னாடி, எப்பொழுதுமே, வெங்கிடாசலபதி வந்து நிற்கிறார். அவர் வந்து நின்றவுடனேயே, பூஜாரி ஆனவர், தீபாராதனையை, தன் கையை உயர்த்தி அவருக்கும், காண்பிக்கிறார். உடனேயே அடியேன் மனதுள் "ச்ரியஸ்காந்தாயா கல்யாண நிதயே!" என்கிற ஸ்லோகம் உரைக்கிறேன். சரியா, தவறான்னு தெரியலை. ஆனால், எப்ப பார்த்தாலும், பெருமாள் உங்களுக்குப் பின் நின்று கொண்டிருக்கிறார். அது ஒரு மிகப்பெரிய ஒரு பாக்கியம் என நினைக்கிறேன்!"

அவர்: "அப்பனே, எவை என்று கூற. இதற்கு பதில் இப்பொழுதுதான் உரைத்தேன். யோசிப்பாயா நீ? (இங்கிருந்து யாம் அங்கு செல்வதும், அவர் அங்கிருந்து இங்கு வருவதும்,  நாங்கள் இருவரும் சென்று முருகரை தரிசனம் செய்வோம், எனவும் உரைத்திருந்தார்")

அடியேன்: "சரி!!" என்றேன்.

அடியேன்: அடியேனின் ஆரோக்கியமானது, ரொம்பவே கீழ்நோக்கி செல்கின்றது. எனக்கே தெரிகின்றது. உங்களுடைய ஆசிர்வாதமும், பலமும் கொடுக்க வேண்டும். உங்கள் சன்னதிக்கு வந்து இறைவன் கோவில்களுக்கு சென்று நிறைய நல்லது செய்ய வேண்டும்!

அவர்: "அப்பனே! எவை என்று கூற? எப்பொழுதுமே, வயது 16 இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் நான் பார்த்துக் கொள்கிறேன், விடு கவலையை, அப்பனே. நிச்சயம் யான் தருவேன்! அருகிலேயே இருக்கின்றேன் யான். முருகனும் அருகில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்.

அடியேன்: இன்னொரு சிறு கேள்வி. பாலராமபுரம் கோவிலில் உங்கள் சன்னதி மேலே உள்ளது. உங்களுக்கு இடது கை பக்கத்தில், கீழே பூமியில் சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு அமைப்பு, ஏன்?

அவர்:இதற்கான விளக்கங்கள் தேவை இல்லை. ஆனாலும், நேரம் வரும்பொழுது தெரிந்து கொள்வாய் நீயே!

நண்பர்: பாலராமபுரம் கோவிலில், பல அன்பர்களும், தொலைவிலிருந்து கூப்பிட்டு, தங்களால் இயன்றதை, பூஜை அபிஷேகத்துக்காக அனுப்புகின்றனர். இயன்றவரையில் நல்ல முறையாக பூஜை செய்து பிரசாதம் அனுப்பி கொடுக்கிறோம். இது சரிதானே? எனில் மேலும் நல்லபடியாக நடை பெற வேண்டும்!

அவர்: அப்பனே, எதை என்று கூற? யாம்/இறைவன் எதையும் கேட்பதில்லை அப்பனே. கண்ணப்பனின் கதை தெரியுமென்றால் கூறு!

நண்பர்: ஆம்! கண்ணப்ப நாயனார் மிக சிறந்த சிவ பக்தர். தன் ஒரு கண்ணை இறைவனுக்கு கொடுத்துவிட்டு, மறு கண்ணையும் கொடுக்க போனவர்!

அவர்: ஆனாலும் அப்பனே, இருப்பதை கொடு!, இதுவே அவன் உணர்ந்தது. புரிந்து கொண்டாயா?

நண்பர்: பலரும், பலவிதமாக பூசைகளை செய்யச் சொல்கிறார்கள். இதனால், அவர்கள் கர்மா என்னைச் சேருமா?

அவர்: அப்பனே! விளக்கமாக கூறுகின்றேன். ஓர் திருடன், அப்பனே, எங்கேயோ, அதாவது, ஒருவன் தன்  மகளுக்காக சேர்த்து வைத்ததை திருடிக்கொண்டு ஓடி வந்துவிடுகிறான். அதை உன் கையில் கொடுத்துவிட்டு, இறைவனுக்கு செய்! என்று கொடுத்துவிட்டு செல்கின்றான். நீயும் இறைவனுக்கு செய்கின்றாய். ஆனாலும், அவன்தன் என்ன செய்தான், நீ என்ன செய்தாய்? கூறு.

நண்பர்: குருவே! அவர்கள் கொண்டு தருவது, அவர்கள் உழைத்து சம்பாதித்தது தான் என்கிற நினைப்பில் வாங்கி, பூசை செய்து விடுகிறோம். ஆனால், அது சரியா, தவறா என்று எங்களுக்கு தெரியவில்லை!

அவர்: ஆனாலும் கவலைகள் இல்லை. ஒன்றை மட்டும் நீ சொல்லிவிடு. அனைத்தும், நீ தான் என்னை இயக்குகின்றாய் என்று கூறிவிடு, மற்றவை யான் பார்த்துக்கொள்கிறேன். உந்தனுக்கே உணர்த்துவேன் அதை.

​நண்பர்: இன்னும் ஒரு வருடத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். நல்லபடியாக நடத்தி தர வேண்டும்!

அவர்: அப்பனே, எதை அன்றி கூற? அப்பனே, இதனை யான் தான் தீர்மானிக்க வேண்டும் அப்பனே!

பூஜாரி: ஒரு நிரந்தரமான கொடிமரம் கோவிலில் ஸ்தாபிக்க வேண்டும்!

அவர்: அப்பனே, உன் விருப்பப்படியே, அது நிகழும் என்பேன். ​

அடியேன்: பெரியவர், எப்பொழுதும் எல்லார் கூடவும் இருந்து கொண்டு, எல்லோருக்கும் நல்லது செய்ய வழிகாட்டியாக இருந்து, எல்லோர் சார்பாகவும் வேண்டிக் கொள்கிறேன்.

அவர்: அப்பனே, சொந்த பந்தங்கள் கூட எப்படி ஒன்று சேர்கிறது என்று கூட மனிதனுக்கு தெரிவதில்லை. ஆனாலும் முன் காலத்தில், அப்பனே, வாழ்ந்தவர்கள் தான், நீங்கள் கூட்டமாக. கடை பிறப்பு அனைவருக்கும். அதனால் தான் ஒன்றிணைந்து எனது வாக்குகளை கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். யானே, உங்களை ஒன்றிணைத்தது. அதனால் கவலைகள் இல்லை. நன்றாகவே நடக்கும், அனைத்தும், சொல்லிவிட்டேன், அப்பனே.

அடியேன்: சமீபத்திய காலத்தில் நடந்த விஷயங்களை பார்க்கிற போது, மிலேச்சர்களினுடைய பிரச்சினை மிகவும் கூடி வருகிறது. இந்துக்களுக்கு, இந்து மதத்துக்கு, இந்து தெய்வங்களுக்கு எதிராக நடக்கிற விஷயங்களை, தர்மத்துக்கும் எதிராக நடக்கிற விஷயங்களை பார்க்கிற பொழுது, மிகப் பெரிய பிரச்சினை வந்துவிடுமோ என்கிற அச்சம் எல்லோர் மனதிலும் உள்ளது. உங்கள்............

அவர்: எதை என்று கூற. உலகம் எதை நோக்கி செல்கிறது என்றால், அழிவை நோக்கித்தான் செல்கின்றது. நீயும் அறிவாய் இதனை. அப்பனே! கலியின் காலம், பல ஞானிகளும் உரைத்து விட்டார்கள். அப்பனே! சித்தர்கள் நாங்கள் இருக்கின்றோம் அப்பனே, நிச்சயம் எதுவும் செய்ய முடியாது அப்பனே.

அடியேன்: இவ்வுலகிற்கு, அடுத்த தலை முறைக்கு என உங்கள் அருளினால் ஏதேனும் ஒரு நல்லதை செய்ய வேண்டும், உரைக்க வேண்டும் என்ற அவா!

அவர்: அப்பனே, நீயே நேற்று கேட்டாய்! நான் என்ன சொன்னேன், கற்பித்துக்கொண்டே இருப்பேன், அதை செய் முதலில், கவலையை விடு!

அடியேன்: நன்றி! அடுத்ததாக எப்பொழுது, இந்த பக்கமாக வருவீர்கள்?

அவர்: நிச்சயம், விரைவில் உண்டு, கவலையை விடு.

எல்லோருடைய நமஸ்காரங்கள், ஆசி கூறுங்கள்!

ஆசிகள், ஆசிகள், ஆசிகள்! அனைத்தும் நலம்!

அகத்தியர் விஜயம், குருவுடன் இரு நாட்கள் இத்துடன் நிறைவு பெற்றது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

Friday, 22 July 2022

சித்தன் அருள் - 1164 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்!







2/6/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்: ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் ஆலயம். வன்னி வேடு கிராமம். வாலஜா பேட்டை . ராணிப்பேட்டை மாவட்டம்.

புவனத்தை ஆளுகின்ற புவனேஸ்வரியையும் புவன நாதனையும் பணிந்து வாக்குகளாக செப்புகின்றேன் அகத்தியன்.

இன்னும் இவ்வுலகத்தில் மாற்றங்கள் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும் எதனை எதனை என்று எதிர்பார்த்தீர்களோ அவையெல்லாம் எதிர்பாராமல் நடக்கும் என்பது மெய்யப்பா!!!!!! 

அப்பனே இன்னும் பல ஆண்டுகள் எதை என்று கூறுவதற்கு ஒன்றுமில்லை.
அழிவுகள் வந்த வண்ணமே இருக்கின்றன அப்பனே!!!!

இதனால் உண்மையான பக்தியை கடைப்பிடித்தாலே நன்று என்பேன்.அப்பனே!!!

அப்பனே இவையன்றி கூற ஆனாலும் அப்பனே ஓர் முறை அப்பனே எதை??  எதையெதையென்றும் அற்ப சுகத்திற்காகவே அலைந்து திரிந்து அப்பனே பின் வந்தார்கள் பல அரசர்கள்....

யான் பார்த்தேன் அப்பனே!!! 
இதையும் கூட....... 

ஆனாலும் அவர்களும் வந்தார்கள்!!!! ஆனாலும் புகழ் இல்லாமலே சென்று விட்டனர்... ஆனாலும் இறைவனை மதிக்காமலே பின் ஆட்சியையும் நடத்தினர் ஆனாலும் அவர்களுடைய பெயர்கள் அப்பனே  எதையென்று கூற அடியோடு அழிந்து விட்டது....

ஆனாலும் இன்னும் சில அரசர்கள் அப்பனே இறைவன் வழியை சித்தன் வழியே போய் கடைப்பிடித்து நல்விதமாகவே ஆட்சி செய்தார்கள் அதனால் அப்பனே அவர்கள் பெயரும் நிச்சயம் நின்று கொண்டு தான் இருக்கின்றது அப்பனே இதுதான் உண்மை.

அதனால்தான் அப்பனே சித்தர்கள் எதை எதை என்று நோக்க........

அனைத்தும் யாம் அறிவோம் அப்பனே!!!!!! 

ஆனாலும் மனிதனை  , நம்பி, நம்பி எதை என்று கூற!!......... உண்மையான பக்தி பின்  எதையென்று பொய்யான பக்திகளை காட்டி காட்டி அதை செய்கின்றேன் இதை செய்கின்றேன் என்றெல்லாம் கடைசியில் பார்த்தால்!!!!! பணங்களை எடுத்துக்கொண்டு ஏமாற்றியது தான் மிச்சம்...

அதனால் தான் யாங்களே வந்து... நிச்சயமாய் திருத்தலங்களை அமைப்போம்!!!.

உயர் பெரியோரின் நல் விதமாகவே மனதில் நுழைந்து நுழைந்து அனைத்தையும் செய்வோம்.

ஆனால் இவற்றின் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆனாலும் அழிவு காலம் வந்துவிட்டது!!!! அழிவு காலம் வந்துவிட்டது!!!

மகேந்திரவர்மனுக்கும்(பல்லவ அரசன்) இதை சரியாக முதலாம் மகேந்திரவர்மனுக்கும் தெரிந்து விட்டது....

ஆனாலும் எப்படி இதை தடுப்பது?? என்பதை கூட....

ஆனாலும் மகேந்திர வர்மனும் என்னுடைய பக்தனே என்று யான்!!!...கூறுவேன் 

எதையென்று கூறுவது!!!! ஆனாலும் அவந்தனும் பின் பல ஆலயங்களுக்கு சென்றான்!! ஆனால் ஈசனுடைய ஆலங்களுக்கு சென்று சென்று பின் காஞ்சியில் உள்ள காமாட்சியிடம், பல வருடங்கள் பின் அவளின் பக்தனாக இருந்து(பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர்) பக்தியாக இருந்து ஏகாம்பர நாதனையும் வணங்கி, வணங்கி, பல திருத்தலங்களுக்கு சென்றான்.

ஏனென்றால் அழிவு நிச்சயம் என்பதை கூட அவந்தனுக்கு தெரிந்து விட்டது.....

ஆனாலும் என்னை நாடி வந்தான்!!!!!

அகத்திய முனிவரே!!!!!

இவை யான் சிவ பக்தனாக இருந்தும் ஆனாலும் பின் யாருக்கும் அதிக அளவு தெரியவில்லை!! தெரியாதது போல இருந்தேன் ஆனாலும் பின் என் கண்களில் யான் உறங்கிக் கொண்டிருந்த பொழுதே கனவாக பின் இதையென்று இப்படி எல்லாம் அழிவுகள் வரும் என்பதை கூட எந்தனுக்கு காட்டி விட்டான் ஈசன்....

அதனால் அகத்திய முனிவரே!!! 
எவ்வாறு இது உண்மைதானா??

ஆனாலும் யான் சொன்னேன்... நிச்சயமாய் அழிவுகள் எதனிலிருந்து வருகிறது என்று பார்த்தால் மனிதரிடமிருந்தே வருகின்றது...... அதனால் எப்படி தடுக்க முடியும்???

எப்படி தடுக்க முடியும் என்பதை கூட யான் எதிர்மறையாகவே சொன்னேன் ஆனாலும் பின் மகேந்திரவர்மன் இல்லை!!! இல்லை!!!

 யான் இவ்வளவு பக்தனாக இருந்து.... நிச்சயம் சில மனிதர்களையாவது யான் காக்க வேண்டும் !!
காக்க வேண்டும் நிச்சயமாய் இதையென்று கூற..... ஆனாலும் இறைவன்கள் எதை என்று கூற இன்னும் உண்மையான பக்திகளும் நல்விதமாகவே மனிதர்கள் செலுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அதனால் நிச்சயம் பின் காக்க வேண்டும் நிச்சயம் மனிதர்களை!!!!!

அகத்திய முனிவரே!!!!!

ஏதாவது ஒரு வழியைச் சொல்லும்!!!!!!!

என்று கூட பின் மகேந்திரவர்மனோ என்னிடம்.!!! 

ஆனாலும் மகேந்திர வர்மனே!!!!!! இவையெல்லாம் தடுக்க முடியாது!!!!!

காலத்தின் கட்டாயம் இது!!!!!

எப்பொழுது?? எதை?? அழிக்க வேண்டும்??...

எதனை பின் உயர்த்த வேண்டும்!!! என்பதையெல்லாம் ஈசன் தான் அறிவான்!!!!!!

ஆனாலும் இதையென்று கூற.....அவ் அரசனும்!!! 

அகத்திய முனிவரே!!!!

அனைத்தும் உணர்ந்தவன் நீ!!!!!

இவை!!! இப்படி நீ சொல்லி விட்டாய்!!!!! ஆனாலும் அகத்திய முனிவரே யானும் ஈசனிடம் சென்று இருந்தேன் ஒருமுறை!!!
எவை எதை என்று கூட..... 

ஆனாலும் ஈசனோ!!!!  இதையென்று அறியாத அளவிற்கு கூட பின் காலங்கள் கடந்து கொண்டே போகின்றது.

அதனால் யான் பல வேலைகளை பார்க்க வேண்டும்!!!!!

அதனால் ஏதாவது நடந்தால் உன் சொப்பனத்திலே யான் செப்பி விடுவேன் என்று... ஈசன் மகேந்திரவர்மனை அனுப்பி விட்டான்.

ஆனாலும் யானும்(மகேந்திர வர்மன்) நினைத்துப் பார்க்கும் அளவிற்கு கூட....

நமச்சிவாயா!!! நமச்சிவாயா!!.... என்று மந்திரத்தைச் செப்பிக் கொண்டே இருந்தேன்.

ஆனாலும் ஈசன் கனவில் வந்து அகத்தியனை நாடு!! என்று  சொல்லிட்டான்!!!!

ஆனாலும் இதையென்று ஆனால்.... அப்பொழுதே யான் தெரிந்து கொண்டேன் சாதாரணமாக ஈசனோ எதை?? எப்படி?? குறிப்பிடுவது??
யாரை?? யார் பெயரை வைத்து குறிப்பிடுவது?? என்பதைக் கூட ....

ஆனாலும் நிச்சயமாய் உண்மையை அறிந்து அதனால்தான் அகத்திய முனிவரே உன்னிடம் வந்தேன்...என்று அவ்வரசனும்!!! 

ஆனாலும் யான் மௌனத்தை காத்தேன்!!!!

ஏனென்றால் உலகம் அழிந்து அழிந்து தான் வந்து கொண்டிருக்கின்றது!!!

ஆனாலும் பக்திகள் பெருமிதம்!!!!

ஆனாலும் இதை என்று அறிவதற்கு உண்மைகள் உண்மைகள் பலப்படும் பலப்படும்!!!

அவ் முதலாம் மகேந்திர வர்மனும் எதை என்றும் கூட... 

ஆனாலும் என்னிடத்தில் வந்தான் மீண்டும் மீண்டும்!!!

அகத்திய முனிவரே!!! நீ தான் காக்க வேண்டும்!!!

ஏனென்றால் அழியக்கூடிய உலகத்தில்  கூட நீ எதையென்று கூட நிச்சயம் அழிவுகள் வராமல் தடுக்கலாம்!!!

உன்னால் முடியும்!!!

எதையென்று கூற அனைத்தும் பல வழிகளிலே யான் சிவனை வழிபட்டும் ஆங்காங்கே திரிந்தும் சென்று!!!!  ஆனால் உண்மைதனை யான் புரிந்து கொண்டேன்!!

அகத்தியனே உன்னிடத்திலே அனைத்தும் இருக்கின்றது!!!!

அதனால் எதை என்று ஆனால் அழிவு காலம் வருகின்ற பொழுதே நீதான் காக்க முடியும் என்று கூட!!!

ஆனாலும் யான் சொன்னேன்!!!!(அகத்தியர்) 

அரசனே யான் இப்பொழுது காப்பாற்றி விடுவேன்!!! ஆனாலும் இன்னும் பல பல ஆண்டுகளில் கூட அழிவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும்!!

ஆனாலும் எதை என்று அப்பொழுது யார் காப்பாற்றுவார்கள்??

அகத்திய முனிவனே!!!! எதை? இப்பொழுது கூட.... ஆனால் சரிதான்!!....நீயும் சொல்வது!!!! 

யான் எதை என்று ஆனாலும் இப்பொழுது நீ இருக்கின்றாய்... யான் காப்பாற்றி விடுகின்றேன் ஆனாலும்....எதை??  எவற்றை?? என்று தெரியாமலே இன்னும் பல பல வழிகளில் கலியுகத்தில் மனிதர்கள் தெரியாமலே நுழைந்து நுழைந்து பின் அழிவைத் தேடிக் கொள்வார்களே தேடிக் கொள்வார்களே என்று கூட......

ஆனாலும் யான் எதனை சொல்லியதற்கு வினா விடைகள் உண்டா??? உண்டா எதை என்று கூற!!!

அரசனே!!!! இதனால் உன் நிலைமையை ஆராய்ந்து உன் வேலையை பார்!!! என்று யான் சொன்னேன்.

ஆனாலும் விடவில்லை அவ் அரசன்!!!

அகத்திய முனிவரே!! அகத்திய முனிவரே!! என்று கூட பின் கண்ணீர் மல்க காலை பிடித்துக் கொண்டான் அவ்வரசன்.

சரி என்று கூற ஆனாலும் திரும்பவும்  ஒரு வார்த்தை செப்பி விட்டேன் அரசனே இப்பொழுது யான் காப்பாற்றி விடுகின்றேன்.... ஆனால் இன்னும் பல ஆண்டுகள் வந்து கொண்டே இருந்தால் இவ்வளவு ஆண்டுகள் தான் பின் அழிவுகள் வருமே அப்பொழுது யார் காப்பார்கள்???

இதை யான் எதை என்று ஈசனிடமே முறையிடுகின்றேன் என்று அவ்வரசனும்!!!!.......

ஆனாலும் பின்  ஈசனிடம் முறையிட்டு மீண்டும்...வா!!! 
 என்று யான் சொன்னேன்.

சொன்னதற்கு பதிலாகவே மீண்டும் தவங்களை மேற்கொண்டான் மகேந்திரவர்மன்.

மேற்கொண்டு மேற்கொண்டு ஆனாலும் இதையென்று கூட..... ஆனாலும் ஈசனும் வந்து நின்றான் அழகாக!!!!

அரசனே என்ன வேண்டும்?? என்று கூறு!!!!!
கூறு!!!! எதையென்று கூட....

மக்கள் பின் எதை இப்பொழுது கூட அழிந்து போகின்றார்கள் ஆனாலும் அதனையும் யான் நிறுத்தி விட்டேன்!!! ஆனாலும் கலியுகத்தில் அழிய போகின்றார்களே!! அது எப்படி?? இன்னும் அழியப் போகின்றார்களே அதை எப்படி ??தடுத்து நிறுத்துவது?? என்று கூற.......

ஆனாலும் ஈசனோ!!!!

அப்பனே அது முடியாதப்பா!!!!!!

நிச்சயம் முடியாதப்பா!!!! ஏனென்றால் கர்மா பூமி!!!
அவனவன் செய்த கர்மாக்களுக்கு நிச்சயம் தண்டனைகள் அனுபவிக்க வேண்டும் என்று!!!!

ஆனால் இவ் அரசனோ ஈசனிடம் போராடினான்!! போராடினான்!!

இல்லை!! இல்லை!! ஈசனே!!!....... எப்படியாவது காக்க வேண்டும் என்று கூட......

அதனால் நிச்சயம் ஈசா!!!!! எதை எப்படியோ நீ தான் காப்பாற்ற வேண்டும் மக்களை என்று கூட....

ஆனாலும் ஈசன் சொன்னான்!!!!

சரி பார்ப்போம் !!!என்று கூட....

ஆனாலும் ஈசன்...... அனைத்தும் தெரியும்!!!! காப்பதற்கும் தெரியும்!!! அழிப்பதற்கும் தெரியும்!!!
எதை என்று உருவாக்குவதற்கும் தெரியும்!!!!!.....இதை அனைவரும் அறிந்ததே!!!!

அறிந்து!! அறிந்து!!! ஆனாலும்.....சரி என்று கூட........ 

ஆனாலும் மகேந்திரவர்மனோ!!! குறுக்கு புத்திகளால் பிரம்மாவை பார்ப்போம்!!

ஏனென்றால் பிரம்மா தான் அழகாக விதியை எழுதி அனுப்புகின்றான் மனிதர்களை ...பின் அவந்தனை பார்த்து பின் மனிதர்களுக்கு பின் விதியை மாற்றி அமைத்து விட்டால்? என்ன!!!!! ......என்று கூட.. 

ஆனால் மிகச் சிறந்த பக்திமான்!!!!! ஒருவன் என்றால் இதிலும் இவ்வரசனே நிச்சயம்!!!!!!

ஆனால் இவ்வரசன் எவ்வாறு வாழ்ந்தான் என்பதை கூட...யாமே!! அறிவோம்!!!!!! ....எதையென்று கூட.... 

இதனால் அவனும் பின் தவங்கள் மேற்கொண்டு மேற்கொண்டு....... எதனையும் பின் கூறாமலே பிரம்மனும் வந்து நின்றான்!!!!

இதையென்று கூட..... வந்து விட்டாயே!!!!! பிரம்மனே!!! 

ஆனால் கலியுகம் வந்து கொண்டே இருக்கும். ஆனால் இதில் மனிதர்கள் அழிந்து கொண்டே போவார்கள்!!! பிரம்மனே!! உன்னால் முடியும் மாற்றி எழுதியமைக்க!!!!  என்று கூற....

ஆனாலும் பிரம்மனோ!!! இல்லை! இல்லை! என்னிடத்தில் ஏதும் இல்லை!!!
நீ ஈசனை போய் பார் என்று கூற......

ஆனாலும் எவை!!  அவ்வரசனும் தலை குனிந்தான்!!!

இப்படியா!!!!!!
 மனிதர்களை எப்படி காப்பாற்றுவது? என்பதை கூட.....

ஆனால் பின் பிரம்மனோ இல்லை!! கர்மங்களுக்காகவே மனிதன் பிறக்கின்றான் அவையெல்லாம் அனுபவிக்க வேண்டுமே தவிர நிச்சயம் காப்பாற்ற முடியாது!!!

ஆனாலும்.... கருணை உள்ளவனாகவே இருக்கின்றான் அகத்தியன்!! அவனைப் போய் பார் என்று கூற!!!!

ஆனாலும் சரி என்று கூட ஓடோடி வந்தான் திரும்பவும் என்னிடத்திலே மகேந்திரவர்மன்!!!

அகத்தியா!!!!!!!  இதை முனிவரே!! முனிவரே!!!!
அனைத்திற்கும் நீயே காரணம்!!!! நிச்சயம் உன்னால் முடியும் என்று கூற...... 

இதனால் எதை? எப்படி என்று கூட அதனால்....பின் யான் சொன்னேன்.!!.....ஒரு வார்த்தை!!!!! 

அனைத்து ரிஷிமார்களையும் குருமார்களையும் இந்திரனையும் சந்திரனையும் சூரியனையும் அழைத்து வா!!!!!!

யான் பேசிக் கொள்கிறேன்!!!!!.....என்று கூட..... 

இதனால் பின் தவத்தை மேற்கொண்டு மேற்கொண்டு!!!!!! பின் அனைவரும் இங்கு வந்தனர்!!!! அனைவருமே இங்கு வந்து விட்டனர்.

யானும் இங்கு அமர்ந்து பேசினேன் அனைவரிடத்திலும்!!!

ஆனால் மேலோகத்தில் நீங்கள் எவை இன்னும் அழிவுகள் பின் நகர்ந்து செல்கின்றது!!! ஆனாலும்
இதனையும் விட என்று கூட... இவ்வரசனும் பக்திகள்!!! மிகுந்த பக்திகள் செலுத்தி விட்டான்!!!!

ஆனாலும் இவற்றின் தன்மையை யார் அறிவது???

அதனால் இவ் அரசனுக்கு யான் உதவி செய்யப் போகின்றேன் என்று கூற!!...

ஆனாலும் தேவர்கள் ரிஷிமார்கள்....எப்படி?? உதவி செய்வது??

எப்படி ?அகத்தியனே நீ மட்டும் உதவி செய்ய முடியும்???

இதை பிரம்மன் ஏற்பானா??

விஷ்ணு ஏற்பானா??

ஏன் ஈசனும் ஏற்பானா?? 

யாங்கள் ஏற்போமா??  என்று கூற...... 

ஆனால் இவை என்று கூற ஆனாலும் நிச்சயமாய் என்னை நம்பி வந்து விட்டவருக்கு நிச்சயமாய் யான் உதவிகள் செய்யத்தான் போகின்றேன்!!!

ஆனாலும் இவ்வரசனும் என் மேல் மிகுந்த பக்தியை செலுத்தி விட்டான்!!!

செலுத்தி! செலுத்தி! ஆனால் பல ஆலயங்களுக்கும் நல்விதமாகவே உருவாக்கி பல நல் மனிதர்களை உருவாக்கி விட்டான்..

 அதனால் யான் நல்லதைச் செய்யப் போகின்றேன்!!! யார் தடுத்தாலும் என்று கூட......

இதனால்......
அகத்திய முனிவரே!!! இந்திரனும் சந்திரனும் சூரியனும் இதை என்று கூற அகத்திய முனிவரே!!!!!

உன்னால் எவை என்று கூற இவ்வுலகத்தைக் காக்க முடியுமா?? என்ன!!! என்று கூட.... 

ஆனாலும் யானோ!!! பின் அமைதியை கடைப்பிடித்தேன்..இதையென்று. 

ஆனாலும் இவ்வுலகத்தைக் காக்க எவை என்று கூற அனைவருக்குமே தெரியும்!!!

சரி!!!! அனைவரும் சேர்ந்து அகத்தியா!!!! நிச்சயம் காக்க முடியாது!!!
அகத்தியா நீயோ!! காக்க முடியும் என்று கூறுகின்றாய்!!
உன்னால் முடிந்ததை நீ பார் என்று கூட.....

அதனால் எந்தனுக்கு சந்தோஷங்கள் மிகுந்தது!! இதனால் இவ் மன்னனிடம் சரி பார்த்துக் கொள்வோம் என்று கூற..... இதனால் எப்படி?? எப்படியெல்லாம் ஈசனை வடிவமைத்தால்!!
எப்படி எல்லாம் மனிதர்களுக்கு நன்மைகள் ஏற்படும் என்று கூட யான் சொன்னேன்!!!!

இதனால் எதை எவற்றை என்று கூட.... யானே பின் ஈசனை பின் உயிரோட்டமுடனே.... பார்த்து பார்த்து இங்கு அமைத்தேன்!!!!!

அமைத்து!!! அமைத்து!!!..... ஆனாலும்.... கஷ்டங்கள் எதன் மூலம் வருகின்றதென்பதால்... கஷ்டங்கள் என்று கூட....... யான் ஆராய்ந்தேன்!!!

மனிதன் பைத்தியமாக வேண்டும்!! பைத்தியமாக திரிந்து இறக்க வேண்டும் என்பதுதான் அப்பொழுது நியதி!!!

அதனால் எதை ஆனாலும் இதற்கும் ஓர் உபயம் உண்டு!!!!

அனைத்தும் அடங்கியவன் சரபேஸ்வரன்!!!!!

எதையென்று கூற.... இதனால் அவனை அழைத்து பின் அனைவரின் நிலைமையை ஆராய்ந்து அனைத்து அனைத்து தெய்வங்களும் கலந்தால் தான்.....எதையென்று கூட சரபேஸ்வரன் என்று அழைக்கின்றனர் ஆனாலும் ஓர் எதை இப்படி கூட பின் அமைத்து விட்டால்  நிச்சயம் பைத்தியக்காரனாக இருப்பவன் கூட நல்லவனாகி   எதையென்று கூற புத்தி உள்ளவனாக ஆகி விடுவான் என்று எண்ணி அனைத்து தெய்வங்களையும் சிறிது சிறிதாக வடிவமைத்தேன்!!!

இதனால் நிச்சயம் எதை என்று இதனால் பைத்தியமாகி திரிந்து கொண்டிருக்கையில் நிச்சயம்.... இவ்வாலயத்தில் எதை அவ்வரசனுக்கும் யான் சொன்னேன்..... மக்கள் எப்படி அலையப் போகின்றார்கள் என்றால்....  பைத்தியக்காரனாகவே திரிந்து ஒன்றும் தெரியாமலே இருந்து அழிவை நோக்கி!!!!

இதனால் இங்கு வந்து வழிபடச்சொல்!!!!..... அரசனே!!!!!

என்று சொல்லிவிட்டேன்!!!!!

இதனால் பல பல மனிதர்களும் இங்கு வந்து வழிபட்டு பைத்தியமாக இருந்த நிலைமையும் இங்கு மாறிவிட்டது!!!

இதனால்தான் இவ்வாலயத்திற்கும் ஒரு சிறப்பு!!!

பின் மனக்குழப்பம்!!! மன சஞ்சலம்!! பின் ஏதுமே நடக்கவில்லையே என்றெல்லாம் நினைத்து தவித்து தவித்து வருபவர்களுக்கு.... இங்கு வாரத்திற்கு ஒருமுறை வந்து அழகாக சரபேஸ்வரனை வணங்கி வணங்கி தியானம் செய்து வந்தால் நிச்சயம் அவந்தன் பைத்தியத்திலிருந்து விடுபடுவான்!!! மனக்குழப்பம் தீரும்!! பின் வாழ்ந்திடலாம் என்ற எண்ணம் வந்துவிடும்!!!!

ஏனென்றால் கலியுகத்தில் அதுதான் நடக்கப் போகின்றது.
நம்மால் முடியவில்லையே முடியவில்லையே என்று கூட....

எதை என்று கூற ஆனாலும் இன்னும் கூட  இவ் புவனேஸ்வரி தாய் இங்கே வந்து கொண்டு சென்று கொண்டிருக்கின்றாள் என்பது மெய்யப்பனே!!!! 

ஆனால் இதை யார் அறிவார்!!!!???

இவை மட்டுமில்லாமல் எதை எதை என்று நோக்க இன்னும் சப்தரிஷிகளும் வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள்.... இவ்வாலயத்திற்கு!!!!

யானும் வந்து கொண்டே தான் இருக்கின்றேன்!!!!

ஆனால் தகுந்த புண்ணியவான்கள்!!!!!! எதையன்றி கூற....

 இதனால் அவ் சப்தரிஷிகளும் வருவதற்கு !!!!!!

பின் அவர்களும்(பக்தர்கள்) புண்ணியம் செய்திருந்தால் சப்தரிஷிகளையும் நிச்சயம் தரிசிப்பார்கள்!!!
சப்தரிஷிகளும் அவர்களை பார்ப்பார்கள்!!!

இதனால் தீயவை அகன்று புண்ணியம் பெருகும்!!!! இது ஒரு புண்ணிய ஸ்தலம்!!!!! எதையன்றி கூட 

இவற்றினிருந்து கூட யானே!!! மக்களுக்காக இதை வடிவமைத்தேன்!!!!

ஆனால் காலப்போக்கில் மாறிவிட்டது திரும்பவும் திரும்பவும் அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது!!!

 ஆனாலும் இவை ஆனாலும் அரசன் சொன்னான் என்னவென்று கூட.......

அகத்தியனே இப்பொழுது கூட நீங்கள் காப்பாற்றி விடுகின்றீர்களே !!!ஆனால்
இன்னும் சில ஆண்டுகள் போனால் இன்னும் கூட மக்கள் பின் அவதிப்படுவார்கள் இன்னும் கஷ்டத்தில் ஆழ்ந்து துயரப்பட்டு பின் இறந்து விடுவார்கள் என்று கூற.......

ஆனால் அகத்திய முனிவரே!!!! உன்னையே நம்பிக் கொண்டிருக்கின்றேன் யான்!!!

நீயே பல பல வழிகளிலும் எந்தனுக்கு எதையெதையோ சொல்லிக் கொடுத்து நாட்டையும் ஆள வைத்தாய்!!! அதனால் நீங்கள் தான் கஷ்டத்தை போக்க வேண்டும்!!!!

இல்லை!!!!  அரசனே..... இப்பொழுது காப்பாற்றி விடுவோம் பின் பின்னர் இருப்பதை ஈசன் அறியட்டும்!!!! ஈசனே காப்பாற்றட்டும் என்று கூட!!!

அகத்திய முனிவரே!!! ஒரு சத்தியம் செய்து கொடுங்கள்!!!!

ஆனால் யான் பிறந்ததிலிருந்து இப்பொழுது வரையும் உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன்!!!!

தோல்விகளானாலும் வெற்றிகளானாலும் ஆனாலும் அதை சமமாக பாவிக்கும் மனநிலையை நீயே ஏற்படுத்தி விட்டாய் !!!!!

ஆனால் நிச்சயம் அழிவு காலம் கலியுகத்தில் வரப்போகின்றது யான் அறிவேன்!!!

அதனால் சத்தியம் செய்து கொடு!!! அப்பொழுது கூட நீ மக்களைக் காப்பாய் என்று கூற.....

சரி என்று கூட யானும் ஒத்துக்கொண்டேன்!!!! 

ஆனால் அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது!!!

யான் இப்பொழுது கூட பின் நிச்சயம் எதை என்று இதனால் யான் மக்களை காப்பேன் இங்கு வருபவர்களையும் கூட சொல்லி விட்டேன்!!!!

இதையென்று கூட அதனால் என் பக்தனுக்கு செய்யும் ஓர் அருமருந்து என்பேன் இது!!!!!!(இவ் ஆலயம்) 

இதனால்தான் சரியாகப் பயன்படுத்தினால் என்னை நிச்சயமாய் பின் ஈசனும் பிரம்மாவும் விஷ்ணுவும் ஏன் தேவாதி தேவர்களும் எதை ஒன்றும் செய்யாமல் யான் பக்தனை நிச்சயம் காப்பேன்!!!!!
என் பக்தனின் ஒன்று சொன்னால் எதை என்று கூட அதனை இப்பொழுதும் காக்குகின்றேன்!!!!

இங்கிருந்து அழிவுகள் ஏற்படும் என்பேன் எதை என்று கூற... கிழக்கை நோக்கி நிச்சயம் அழிவுகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது!!!

ஆனாலும் இனிமேலும் பொய்யான பக்திகள் தான் இங்கிருந்து கிழக்கை நோக்கியவாறு அமையும் என்பேன்.

இதனால் ஆனால் நல்லோர்கள் பிழைப்பதற்காகவே நிச்சயம் யான் அமைப்பேன்.

இதனால் ஆனாலும் இவை என்று கூற ஆனாலும் இதை இதை என்று கூற யானும் இக்கலி யுகத்தில் ஒரு சில ஆண்டுகளிலே பின் ஈசனையும் பார்த்தேன்!!!

ஈசனே!!!!!  இன்னும் எதையன்றி கூற யானே  பல மக்களை பின் காப்பேன்!!!

ஆனாலும் அதனையும் நீ கொடுத்த பிச்சை!!!

ஆனாலும் அவை அவ்வரசனுக்கு தெரியாமல் போய்விட்டது!!!!

ஆனாலும் இன்னும் வந்து கொண்டே இருக்கின்றதே!! கலியுகத்தில் எவ்வாறு காக்கபோகின்றாய்?? என்பதைகூட.... 

ஆனால் ஈசனோ!!!!

அகத்தியா!!!!! எதையன்றி கூற நிச்சயம் யான் மனிதனை காக்க போவதில்லை!!!

ஏனென்றால் தரித்திர மனிதன் நம்புவதில்லை!!
எந்தனுக்கே பல பூசைகள் செய்து நமச்சிவாயா என்று அழைத்து ஏமாற்றியே பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றான்.

அதனால் எதை என்று கூற என் வாயால் சொல்லக்கூடாது என்று கூட......

ஆனால் பார்வதி தேவியோ ஈசனே நிறுத்து!!!!

இப்படித்தான் செய்து கொண்டிருக்கின்றாய் நீ!!!!
என்று!!!! 

ஆனாலும் பார்வதி தேவி நிச்சயம் அகத்தியா!!!! யான் உன்னுடன் வருகின்றேன் என்று கூட!!! 

யானே!!!  அவ் அம்மையை(பார்வதி தேவியை) அழைத்து வந்தேன்!!!!!

அதனால் அம்மையே நீ வந்தால் போதும்!!!! ஈசனும் இங்கே அழகாக வந்துவிடுவான்!!!

உன் எதை என்று கூட ஓர் பிள்ளைக்கு இப்படி இறங்கி வருகின்றாயே என்று கூட....யானும்!!!!!......... 

ஆனாலும் பார்வதி தேவியோ!!!!
நிச்சயம் நீ என் பிள்ளை தான்!!!!! என்று கூற!!!!! 

என் கண்களில் கண்ணீர் மல்கியது!!!!

யானும் இப்படி எதை என்று கூற அதனால் கருணை மிகுந்து பக்திகள் கொண்டாலே அனைத்தும் செய்வாள்!!!!! எதையென்று கூற.....

பார்வதி தேவி வந்து விட்டாள் ஈசனும் என்று கூட இதனால் இங்கு நடமாடி கொண்டு தான் இருக்கின்றாள் பார்வதி தேவி!!!!அடிக்கடி வந்து!!!!

அண்ணாமலைக்கு எதை என்று கூறாமலே அங்கு தங்கி!!!...... ஆனாலும் திடீரென்று என்னை பார்க்கவே ஓடோடி வந்து விடுவாள் இங்கு!!!

ஆனாலும் யான் இங்கே தான் தங்கி இருக்கின்றேன் அதனால் பின் அடிக்கடி வந்து எதை என்று கூறாமல் அளவிற்கு கூட பார்வதி தேவி இங்கு வந்து நலமாகவே என்னையும் ஆட்கொண்டு!!!!

இதனால் கருணை பொங்கும்!!!!  உள்ளமே!!!! பரமேஸ்வரியை பரமேஸ்வரனை பணிந்து பணிந்து வணங்குகின்றேன்!!! வணங்குகின்றேன்!!!

மேன்மைகள் கொடு!!! மனிதர்களுக்கு!!! என்று கூட யான் பிரார்த்தித்து கொண்டே தான் இருக்கின்றேன்!!!!

ரிஷிமார்களும் வந்து வந்து எதை என்று கூற தெரியாமலே இன்னும் ஹோமத்தை சரியான முறையில் நடத்திக் கொண்டு தான் இருக்கின்றார்கள்!!!!!

அதனால் உண்மையில் பல சக்திகளும் அடங்கியும் உள்ளது!!! அவை மட்டும் இல்லாமல் பல பல வழிகளிலும் பல பல மரங்கள்!! அவ் மரங்கள் உண்மையானவை!!!!

எதையன்றி கூற மனதிற்குள் இருக்கும் அனைத்து மாய வினைகளையும் நீக்கும்!!!
அவ் மரங்களை யானே அமைத்தேன்!!!!

ஆனாலும் இதனை தெரிந்து கொண்ட பல தீயவர்கள் அவ் மரங்களை எல்லாம் அழித்தும் விட்டனர்!!

ஆனால் இதை அன்றி கூற விநாயகப் பெருமானுக்கு அவ் மரம்(வன்னி மரம்) சிறப்பாகவே பிடிக்கும் என்பேன்!!!

அதனால் அவ் மரத்தடியில் இருக்கும் விநாயகப் பெருமானை வணங்கினால் நிச்சயம் விடிவெள்ளி உண்டு என்பேன்!!!!!

அதனால்தான் பின் வன்னியும் (வன்னி வேடு ஊர் பெயர்)என்று கூட.....

வன்னியும் என்ற... பேருக்கு அதற்கும் அர்த்தங்கள் உண்டு அதனையும் கூட புரிந்து கொள்வீர்கள் நீங்கள்!!!!

அதனால் பின் மரத்தடியில் இவ் வன்னி மரத்தடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையோனை(விநாயகர்)  பின் வணங்கினால் என்னும் மாற்றங்கள் மாற்றங்கள் உண்டு உண்டு ஏராளம் ஏராளம்!!!!

பல தேவர்களும் இங்கு வந்து வணங்கித்தான் சென்றிருக்கிறார்கள் என்பது மெய்!!!!

இதனால் எதை என்றும் கூற இன்னும் மாயப்பிறப்பில் பிறந்திருக்கும் மனிதர்களும் இவைதனை(ஆலயத்தை) பார்த்துக் கொண்டு தான் சென்று கொண்டிருக்கின்றார்கள் ஆனால் உணர முடியவில்லையே!!!!!!!!!!!!! 

நிச்சயமாக உண்மையான பக்தர்களை இங்கு யான் அழைப்பேன்!!!! எதை என்று கூட இன்னும் இன்னும் இன்னும் எதையென்று கூட கூற கூற இன்னும் வழிகள் உண்டு!!!!

ஆனாலும் இதையன்றி கூற ஒரே நேரத்தில் பின் பக்கத்தில் உள்ள அனைத்து திருத்தலங்களையும் ஓர் நாள் அதாவது பௌர்ணமி தினத்திலும் கூட!!!! சிவராத்திரி தினத்திலும் கூட !!!பின் அமாவாசை தினத்தில் கூட!!! அனைத்தும் தரிசித்தால் சப்த திருத்தலங்களையும் தரிசித்தால் அவந்தனுக்கு இன்னும் மேன்மைகள் உண்டு உண்டு!!!!

[ குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த சப்த திருத்தலங்கள் 

அத்திரி, பரத்வாஜர், கௌதமர்,  காஸ்யப முனி, வால்மீகி, வசிஷ்டர், அகஸ்தியர் ஆகிய சப்தரிஷிகள் தமிழ்நாட்டில் வேலூர்,  ஆற்காடு, ராணிப்பேட்டை ஊர்களை சுற்றி சிவலிங்கத்தை நிறுவி சிவபெருமானை வழிபட்ட சப்தரிஷிகள், இந்த 7 கோயில்களும் சேர்ந்து ஷடாரண்ய ஸேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

வேப்பூர் - ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் - பாலகுஜாம்பாள் - ஸ்ரீ வசிஷ்ட மகரிஷி

மேல்விஷாரம் - ஸ்ரீ வால்மீகேஸ்வரர் - வடிவுடையம்மை - ஸ்ரீ வால்மீகி மகரிஷி

காரை - ஸ்ரீ கௌதமேஸ்வர் - கிருபாம்பிகை - ஸ்ரீ கௌதம மகரிஷி.

அவரா கரை - ஸ்ரீ காஷ்யப மகரிஷி.

வன்னிவேடு – ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் – புவனேஸ்வரி – ஸ்ரீ அகஸ்திய மகரிஷி

குடிமல்லூர் - ஸ்ரீ அத்திரீஸ்வரர் - திரிபுரசுந்தரி - ஸ்ரீ அத்திரி மகரிஷி ;  கோவில் - பூமிநாதேஸ்வரர்.

புதுப்பாடி – ஸ்ரீ பரத்வாஜேஸ்வரர் – தர்மசம்வர்த்தினி – ஸ்ரீ பரத்வாஜ மகரிஷி

இந்த கோவில்கள் மிகவும் பழமையான கோவில்கள்.

இந்த ஏழு கோவில்களிலும் சிவபெருமான் இங்கு வழிபட்ட ரிஷியின் பெயரால் அறியப்படுகிறார்.

மஹா சிவராத்திரியில் இந்த கோயில்கள் அனைத்தையும் பார்வையிடுவது கைலாயம் தரிசனம் செய்து வணங்குவதற்கு சமம் என்று ஸ்தலபுராணம் கூறுகிறது.]

 தடைபட்ட திருமணமும் நடக்கும் நிச்சயமாக உண்மை!!!!!

நிச்சயமாக உண்மை எதை என்று இன்னும் பல தரித்திரங்கள் நீங்கும்!!!

ஆனாலும் ஒரு முறை சுற்றி வந்து எந்தனுக்கு ஏதும் நடக்கவில்லையே?? என்று சொல்லக்கூடாது!!!!!!!

இதற்கு ஒரு வழியை சொல்கின்றேன்!!! சொல்கின்றேன்!!!

ஒரு துறவி இருந்தான் சரியான ஒரு கிராமத்தில் ஆனாலும் அத்துறவிற்கு பின் ஈசன் மேல் நாட்டம்!!!

ஈசனையே பிடித்துக் கொண்டு பிடித்துக் கொண்டு !!!!
""'திடீர்!!!! "" திடீர் !!! என்று எனக்கு அனைத்தும் வேண்டுமென்றான்!!! 

ஆனாலும் ""திடீர்!! "" திடீர்!! என்று கூட ஈசன் அனைத்தையும் கொடுத்தான்.

கடைசியில் பார்த்தால் """திடீரென்றே!!!!!!! மரணம் ஏற்பட்டு விட்டது!!!!

அதனால் தான் பின் படிப்படியாக கொடுக்க வேண்டும் இறைவன்!!!!

அதுதான் நிச்சயம்!!!!

அப்படி திடீர் திடீரென்று கொடுத்து விட்டாலும் அதற்கு மதிப்பு இல்லை!!!!!
பின் அந்தஸ்தும் இல்லை!!!!

இதனால்தான் சொல்கின்றேன் இதனால் தான் நிச்சயம் தான் தன் செய்த கர்ம வினைகள் நிச்சயம் திருத்தலங்களுக்கு அழைத்துச் செல்லாது என்பேன்!!!!

இதனால் சில சில வகையிலும் யான் சொல்லிக்கொண்டே இருப்பேன்!!!!

இதனையும் சரியாக ஆராய்ந்து ஆராய்ந்து சென்று கொண்டே இருந்தால் நன்மைகள் தான் ஏற்படும் என்பேன்!!!!

பல அரசர்களும் கர்ம வினையை இங்கே கழித்தார்கள் என்பது மெய்!!!!

இதனால் பல காலங்கள் இங்கே தவம் செய்தான் இவ் அரசன் முதலாம் மகேந்திர வர்மன்!!!!

அதனால் இன்னும் மாற்றங்கள் உண்டு !!!!

எதையன்றி கூற.... அதனால் யான் பல திருத்தலங்களையும் அமைத்தேன்!!!!

மனிதர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
மனிதர்கள் நல்வழி பட வேண்டும்!! ஒழுக்கம் உள்ளவர்களாக வாழ வேண்டும்!!
பின் பண்பை பின்பற்றி அனைவரிடம் அன்பை காட்ட வேண்டும் என்று எண்ணி!!!!!!பல திருத்தலங்களை அமைத்தேன் யான்!!!

ஆனாலும் மனிதர்கள் மாயையில் சிக்கிக் கொண்டு... மாயையை தான் கேட்கின்றார்கள்..!!

ஆனால் ஈசனோ!!! 

அகத்திய முனிவரே!! பார்!!!!!!!! 

இவ்வுலகத்தில் உள்ள மனிதர்களைப் பார்!!!!

எதை? எதை? என்று கூற!!!

ஒருவனாவது உருப்படியானவற்றை கேட்கின்றானா????? என்று பார்த்தால் இல்லை!!!!

அனைத்தும் அழிவுகள் அழிவுகள் பின் எதை என்று குறிப்பிடாததை கூட கேட்கின்றனர்!!!!

இவ்வாறு பின் அழிவுகள் உள்ளதை கேட்கின்றார்கள் மனிதர்கள்!!!

அதையும் யான் கொடுத்தனுப்புகின்றேன்!!!!

ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் சொல்கின்றேன்!!!!

பின் அனைத்தும் அழிவு உள்ளதைத் தான் இறைவனிடம் மனிதன் கேட்கின்றான்!!!!

ஆனால் இறைவனோ!!! நகைத்துக் கொண்டுதான் இருக்கின்றான்!!!!

இவ்வாறு கேட்கின்றானே இவன்!!!

ஆனால் !! உண்மையான ஞானி ....,
பின் இறைவனே தேடுவான் என்பேன்!!!

நீயே என் அருகில் இரு!!! நீயே பார்த்துக்கொள்!!! நீயே வழி விடு!!! என்று யார் ஒருவன் வணங்குகின்றானோ நிச்சயமாய் இறைவன் சில சோதனைகள் கொடுத்தும் ஆட்கொண்டு அனைத்தும் செய்வான்!!!!

இதனால் என்னவென்று கூறுவது???

இத்திருத்தலத்தின் சிறப்பு!!! திருத்தலத்தின் சிறப்பு!!!! அனுதினமும் அன்னை புவனேஸ்வரி தாய் வந்து சென்று கொண்டு தான் இருக்கின்றாள்!!!!!!

இதனால் அவ் தாய் நிச்சயம் அதிவிரைவில் இதை உண்மையாகவே பின் ஏற்படுத்துவாள்!!!!

பார் புகழும் என்பேன் இத்திருத்தலத்தை.. என்றென்றும்!!!!!

யானும் இங்கே எதை என்று கூறாமலே வந்து வந்து செல்கின்றேன்!!!

அதி விரைவிலே நிச்சயம் மேலோங்கும் என்பேன்!!

கர்மத்தை!! கர்மத்தை!! உருவாக்குகின்ற தலங்களும் எதையென்பதற்கிணங்க உருவாக்குவது எதையென்று அழிப்பதற்கு சமமானது உண்டா??
(விளக்கம் !!!மனிதர்கள் உருவாக்கும் ஆலயங்களுக்கு கர்மத்தை அழிக்கும் ஆற்றல் உண்டா?? சித்தர்கள் அமைத்த திருத்தலங்கள் மனிதர்கள் அமைக்கும் திருத்தலங்கள் இடையே வித்தியாசம் உண்டு) 

அதனால் இத்திருத்தலத்தில் வந்து நிச்சயம் பின் வழிபட்டு அவை மட்டும் இல்லாமல் இன்னும் ஏனைய திருத்தலங்களுக்கும் வழிபட்டு வந்தால் நிச்சயம் கர்ம வினைகள் நீக்கி சுகத்தை கொடுக்கும்!!!!

ஏனென்றால் அப்படித்தான் யானும் பல வழிகளிலும் ஈசன் சொன்ன முறையிலே அமைத்தும் விட்டேன் ஈசன் அடிமையாகவே!!!!

எதையென்று கூற இன்னும் பல பல உண்மைகள் தெரிய வரும்!!!

ஈசனை வணங்கிட்டு!! வணங்கிட்டு!! இன்னும் பல பல வழிகளிலும் ஞானங்கள்!!!!

சப்த ரிஷிகளும் இங்கே ஒர் நாள் உறங்குவார்கள்!!! உறங்குவார்கள் எதை என்றும் கூட!!!

இதனால் இத்திருத்தலத்தை அவர்களே நிச்சயமாய் எதை என்று கூற பின் ஏற்படுத்தி விடுவார்கள்!!!!

அதனால்தான் யானும் சொன்னேன்!!! பல தேவர்களுக்கும் எதை என்று!!!!!

இதனால் அனைத்து தேவர்களும் வந்து இவ் ஈசனை வணங்கித்தான் சென்று கொண்டிருக்கின்றார்கள்!!!

இவையன்றி கூற இன்னும் பல பல வரிசையிலும் தங்கி தங்கி எதை என்று கூட!!!!

ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன்!!!!

ஒருவன் தன் கர்மா பின் பலத்த பலத்த பின் காப்பாக இருக்குமானால் பின் நிச்சயம் இதுபோன்ற திருத்தலங்களை அடைய முடியாது என்பேன்!!!

இதனால் முழு முயற்சியோடு வந்து அகத்தியா!!! என்று கூட.... பின் பணிந்து!! பணிந்து!!!
அன்போடு வணங்கினாலே யானே!! அழைத்து வருவேன்!!! சொல்லிவிட்டேன்!!!
இது உண்மை!!! 

எதையென்று கூட இன்னும் மக்கள் பொய்யானதையே பற்றிக் கொண்டு திரிகின்றனர்!!!!
ஆனால் ஏதும் நடக்கப் போவதில்லை சொல்லிவிட்டேன்!!!!

அவ் பொய்யானதை நாடி சென்றால் நிச்சயம் நீயும் பொய்யானவனாவான்!!! பொய்யானவன் ஆவான் என்பது உண்மை!!!!

ஆனால் பின் யான் அதைக் கடைப்பிடித்தேனே!!!!
அவ் மந்திரத்தைச் சொன்னேனே!!!!
அகத்தியனை வணங்கினேனே!!!!! 
ஈசனை வணங்கினேனே!!!! 
ஒன்றும் புரியவில்லையே!!!!!
இறைவன் இருக்கின்றானா என்று கூட!!!!

ஆனால் நீயே பொய்யான இடத்தில் போய் சிக்கி தவித்து வருகின்றாய் இது நியாயமா???? மனிதா!!!!!

அப்படி எதை என்று கூற ஆனால் உண்மையான மனிதன் அனைத்தும் உணர்ந்தவன் பின் இறைவனே!!!! நீயே!!!!கதி!!! என்று!!!! 

ஆனாலும் இதையன்றி கூட மக்கள் வரும் காலங்களில் எந்தனுக்கு  அதுதேவை!!
இது தேவை என்றெல்லாம் வருவார்கள்!!.....

ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு நிச்சயம் இறைவன் என்னதான் கொடுக்கின்றான் என்பதை நீங்களே......................

ஆனாலும் இன்னும் பல மனிதர்களை பின் எதை என்று கூட சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள் மனிதர்கள் மனிதர்களை!!!

எவை?  பின் அனைத்தும் யான் செய்து தருகின்றேன் பல தோஷங்களை போக்குகின்றேன்!!
பல பல வடிவங்களை யான் செய்து கொடுக்கின்றேன்... என்பதெல்லாம் என்றெல்லாம் பொய் சொல்லி பணத்தைப் பறித்து!!!!!!.............

 ஆனால் ஒன்றும் நடக்கப் போவதில்லை!!!!!

கர்மாவை சேர்த்துக்கொண்டு இன்னும் பிறவா நிலையை பின் நிச்சயம் நீ அடைய மாட்டாய் என்று சொல்லிவிட்டேன்!!!! 

நம்பி விடாதீர்கள்!!!!

மக்களே!!! மக்களே!!!! இறைவன் பெயரைச் சொல்லி இன்னும் வருவார்களப்பா!! திருடர்கள்!!!! எண்ணற்ற கோடிகளப்பா!!!

இதனால்தான் உண்மையை யான் சொல்லிக் கொண்டே வருகின்றேன்!!!!

ஆனால் அதையும் மீறி மீறி இன்னும் மனிதர்கள் சென்று கொண்டு தான் இருக்கின்றார்கள்!!

அப்படிப்பட்ட மனிதர்களை கடைசியாக """"ஒரு முறை எச்சரித்து விடுகின்றேன்!!!!!

மனிதனால் ஒன்றும் நடைபெறுவது இல்லை மனிதனால் ஏதும் செய்ய முடிய மாட்டாது!!!!

இதனால் கர்மத்தை கர்மத்தால் தான் அழிக்க வேண்டும் என்பது நியதி!!!

இதனால் பிரம்மா இட்ட கட்டளையை( எழுதிய தலைவிதியை) ... யாரும் எங்கும் மாற்ற இயலாது!!!!!

ஆனால் எங்களைப் போன்ற சித்தர்களால் தான் நிச்சயம் மாற்ற முடியும்!!!!

ஆனாலும் அதுவும் கூட அதிலும் கூட மனிதன் இறங்கி விட்டான்!!!

யான் அகத்தியர் அருளைப் பெற்றவன்!!
யான் புசுண்ட முனியின் அருளை பெற்றவன்!!
யான் பார்வதி தேவியின் அருளைப் பெற்றவன்!!
யான் முருகனின் அருளைப் பெற்றவன்!!!

ஆனால் முருகனோ!!! நமச்சிவாயனோ!! யானோ!!
பின் நிச்சயமாய் பின் எதை என்று கூற என் அருளைப் பெற்றவன் என்பது எப்பொழுதும் யான் சொன்னதில்லை!! யாரும் சொல்வதற்கில்லை!!!

அதனால்  எதையென்று கூற.... இதனால் எவை எவை என்று கூட பின் மனிதன் எப்படி பக்திக்கு வருகின்றான் என்று பார்த்து கொள்ளுங்கள்!!!

பின் அனைத்தும் எதை என்று கூட பின் அனைத்தையும் அனுபவித்து விட்டு கடைசியில் பக்திக்காவது சென்றால்... அனைத்தும் வந்துவிடும் என்று கூட!!!!

பல பக்தர்களை இப்படித்தான் பார்த்தேன்!!!
பொய்யான பக்தர்களை அப்பொய்யான பக்தர்களை எதை என்று கூட ஏற்கனவே அவன் கர்மத்தை சேர்த்துக் கொண்டிருக்கின்றான்!! அவனிடத்தில் சென்றால் பாதி கர்மா உந்தனுக்கு வந்தடையும்!!!

இது போலத்தான் நிச்சயம் மனிதர்கள் எவை என்று கூட தெரியாமலே கர்மத்தை ஏந்தி கொண்டு தான் இருக்கின்றார்கள்.

அதனால் உண்மையானவற்றை கடைப்பிடியுங்கள்!!!

இவ்வாலயம் பின் யானே எதை என்று கூட மக்களுக்கு நல்வழிப்படுத்த ஈசன் அருளால் பின் உருவாக்கியவன்!!!!

எதையென்று கூட ஆனாலும் இதற்கு முழுமுதற் பின் மன்னனே (முதலாம் மகேந்திர வர்மன்)  பின் வணங்கி வணங்கி எதையன்றி கூட பின் அமைத்து தருவதற்காக இதனால்தான் சொன்னேன்!! வரும் காலங்களில் பக்தர்களே உண்மையான பக்தர்களே எதையென்று கூற ....யானே எவை என்று கூட எந்தனுக்கு பின் உண்மையானவை வேண்டும் என்று கூட பின் ஆழ்ந்த தியானத்தில் இருந்தால் நிச்சயமாய்  யானே வந்து அனைத்தும் என் மக்களுக்கு அமைத்தும் தருவேன்!!!!

இதுதான் உண்மை!!!!

யாரிடமும் .......எதை என்று கூற......உண்மையை சொல்கின்றேன்!!!!!!!!

யான்!!! யாரிடமும் பிச்சை எடுப்பதில்லை....!!!!!

நிச்சயம், யான்தான் பிச்சை இட்டுக் கொண்டிருக்கின்றேன்!!!!!!!

ஆனால் மனித ஜென்மங்களே!!!!!

அகத்தியன் கேட்கின்றான்!! கேட்கின்றான்!! என்று கூட.......

அப்பனே இவையெல்லாம் நியாயமா???????????

மனித முட்டாள்களே!!!!!!!
அறிவுள்ள முட்டாள்களே!!!
எதையென்று கூட..... 

இறைவன் தான் உங்களுக்கு பிச்சை அளிக்க வேண்டுமே தவிர
நீங்கள் இல்லை!!!!!

எதையென்று கூற இதனால் எவை எவை என்று கூட ஆனாலும் எதையென்றுமே தெரியாத மனிதர்களே மனித முட்டாள்களே இனியும் எவ்வாறு வாழ்வீர்கள் என்பதை கூட....... 

அதனால் இவ்வாலயம் எதை என்று கூற பின் அறிவுகள் மேம்படும்!!!
பின் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் நடைபெறும் அவை மட்டும் இல்லாமல் அதிவிரைவிலே அனைத்து சுகங்களும் கிடைக்கும் என்பது மெய்!!!!

ஆனாலும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!!! அதை சரியாக பயன்படுத்த கொள்ளாவிட்டால் யானே வந்து அனைத்தையும் பிடுங்கி விடுவேன்!!!!!
இதுதான் இனிமேலும் நடக்கப் போகின்றது!!!!

உண்மையை உணருங்கள் மக்களே!!!!

பொய்யான பக்திகளை செலுத்த வேண்டாம்!!!!
செலுத்த வேண்டாம்!!!!

பின் செலுத்தினாலும் அப்படிப்பட்ட பக்தியை நிச்சயம் இறைவன் ஏற்க மாட்டான் சொல்லிவிட்டேன்!!

அதனால் வீணான பக்திகள் தான் எவையென்று கூற ஆனாலும்.......

ஓர் துறவி இறைவன் இருக்கின்றான் இறைவன் இருக்கின்றான் என்று சொல்லிக் கொண்டே போவான்.

ஆனாலும் மனிதர்கள் இவன் இப்படியே சொல்லிக் கொண்டிருக்கின்றான் இறைவன் இருக்கின்றான் இறைவன் இருக்கின்றான் என்று கூட பைத்தியக்காரன்!!!!
ஆனால் இவந்தனுக்கே ஒன்றும் செய்யவில்லையே இறைவன் என்று கூட!!!

ஆனாலும் அவ் துறவியோ இறைவன் இருக்கின்றான்!!! இறைவன் இருக்கின்றான்!!! என்று தான் சொல்லிக் கொண்டே போவான் ....

ஆனால் கடைசியில் அவந்தனுக்கு பார்த்தால் ஒன்றுமே கிட்டவில்லை!! உணவும் கிட்டவில்லை!! உடுக்க ஆடையும் கிட்டவில்லை!!! ஆனால் அப்பொழுது கூட இறைவன் இருக்கின்றான் இறைவன் இருக்கின்றான் என்ற ஒரு வார்த்தையை மட்டும் சொல்லிக் கொண்டே போவான்!!!

ஆனாலும் மனிதர்களோ முட்டாளே இவன்தான்!!!
இறைவன் இருக்கின்றான் என்று கூட சொல்லி திரிகின்றான்....

ஆனால் இவந்தனுக்கு உணவு கூட இறைவன் கொடுக்கவில்லை உடுக்க ஆடையும் கொடுக்கவில்லை ஆனால் இதையன்றி கூற....இவ் மனிதனோ பின் இறைவன் இருக்கின்றான் என்று கூட சொல்லிக் கொண்டே இருக்கின்றான் என்று கூட!!!!

ஆனால் இதையன்றி முட்டாள் மனிதர்கள் எதையன்றி கூட ஆனாலும் இப்படித்தான்  ஆனாலும் பின் இதையே செப்பிக்கொண்டு இருந்தவனுக்கு.... ஒருவராலும் இவந்தனுக்கு ஏதாவது நாம் கொடுப்போம் என்று கூட ஒருத்தர்க்காவது அவ் அறிவு செயல்படவில்லை!!!!

இதனால்தான் யான் மனிதனை முட்டாள் என்று சொல்வேன்!!!

ஆனாலும் இறைவன் இருக்கின்றான் இறைவன் இருக்கின்றான் என்று கூறி கூறி..... ஆனாலும் இதை இதை என்று அறியாத அளவிற்கு கூட அவன் தான் இப்பொழுது கூட அனைவரின் நெஞ்சில் பல பல பாடல்களை பாடி இயற்றியுள்ளான்..... அவந்தனை"" பட்டினத்தார்.. என்பார்!!! (பட்டினத்தார் சுவாமிகள்) 

அவந்தனும் இங்கு வந்து பல பல உண்மைகளை நிகழ்த்தியுள்ளான்!!!!!

ஆனால் கடைசியில் இங்கிருந்தும் மக்கள் அவந்தனை விரட்டியும் அடித்தனர்....

ஆனால் அவந்தன்!!! வாழ்க்கையில் என்ன என்பது கூட.... பித்து பிடித்த மனிதனுக்கு உணர்வதே இல்லை!!!

இதனால் இங்கிருந்தே அப்படியே சென்று கொண்டிருந்தான் பல பாடல்களை இயற்றினான். கிழக்கு பக்கமாக சென்று!!!!

இதனால் இதை என்று அறிவதற்கு இன்னும் பல மட்டங்கள் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றது!!!

அதனால் இங்கு வந்து நலமாகவே நலமாகவே பட்டினத்தான்!!! பின் அவந்தனின் பாடல்களையும் பாட இன்னும் பல ஞானங்கள் ஏற்படும் என்பேன்!!!!!

அவைமட்டுமில்லாமல் முருகனைக் காண ஓடோடி வந்தான் அருணகிரி இங்கே!!!! (அருணகிரிநாதர்) 
பல தவங்களையும் மேற்கொண்டு பல பல வழிகளிலும் இதை என்று கூட!!!!!

இதனால் பூசலானும்(பூசலார் நாயனார்) இங்கே வந்து பின் ஈசனை வணங்கி வணங்கி பின் சென்று விட்டான் இதனால் பல உண்மைகள் கிடைத்துக் கொண்டே வரும்!!!!!

ஆனால் இன்னும் எதை என்று கூட நாக கன்னிகளும் இங்கே தான் இருக்கின்றார்கள்!!!

அதனால் முன் ஜென்மத்தில் ஏற்பட்ட நாக கன்னிகளுடைய!! பெண்களுடைய சாபத்தை!!!.... நிச்சயம் இங்கு வர அவையெல்லாம் அழிந்து போகும்!!!!! என்பேன்.

இதனால் நீங்கள் எதை என்று கூட.... இப்பொழுது யான் சொல்லிக்கொண்டே இருக்கும்...... இவையெல்லாம் ஈசனும் கேட்டுக் கொண்டிருக்கின்றான்!! பார்வதி தேவியும் கேட்டுக் கொண்டிருக்கின்றாள்!!
ஏன் நாக கன்னிகளும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!!

இவ் நாக கன்னிகள் எதை என்று கூற மனிதனுக்கு நிச்சயம் சிறப்பான பின் எவை என்று கூட துணையையும்(திருமணவரம்) அமைத்து தருவார்கள்!!!! இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு!!!

இது உண்மை என்பேன்!!!!

ஆனாலும் பொய்யானவர்களுக்கு நிச்சயம் எதையன்றி கூற எவை என்றும் கூறாமல் இருக்கும் அளவிற்கு கூட ஆனாலும் இதன் அடியிலும் பல மர்மங்கள் ஒளிந்துள்ளது என்பேன்!!!

அதனையும் யான் சொல்லிவிட்டால் இப்பொழுது மனிதர்கள் தவறாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்பேன்.

முன்பெல்லாம் இங்கு பல பல ஞானியர்களும் வந்து தங்கி தங்கி எதை என்று கூற ஆனாலும் ரிஷிமார்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் இவ்வாலயத்தை சீரமைக்க!!!

அதிவிரைவிலே இவ்வாலயம் சீர்பெறும்!!

அனைத்தும் செப்பி விட்டேன்!!!

 மனிதர்களே புரிந்து நடந்து கொள்ளுங்கள்!!! நன்மையாக முடியும்!!! நன்மையாக முடியும்!!!

எதையென்று கூற சித்தர்களை வணங்குபவர்களுக்கு மறுபிறப்பு இல்லாத வாழ்வை யாங்கள் நிச்சயம் கொடுத்தருள்வோம்!!!!

இனியும் இன்னும் பல சிறப்பான திருத்தலங்களை எடுத்துரைப்போம்!!!

அங்கெல்லாம் சென்று கர்மம் தீர்த்து, சிறப்பாக வாழ்க்கையை வெற்றி கொண்டு மற்றவர்களுக்கும் உதவிட நன்று என்பேன்....

மற்றொரு வாக்கும் அதிவிரைவிலே செப்புவேன்!!!! 

முற்றே!!!!!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் ஆலயம். 
வன்னி வேடு கிராமம் 
வாலஜாபேட்டை. வாலஜா. 
ராணிப்பேட்டை மாவட்டம். 

போன் 9894635363
காலை 8 மணி முதல் 11மணிவரை.
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 

திருவிழா:
பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி

சித்தன் அருள்......... தொடரும்!

Tuesday, 19 July 2022

சித்தன் அருள் - 1163 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை வாக்கு!




வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!
 
ஜீவநாடி வாசிக்கும் மைந்தன் திரு ஜானகிராமன் அவர்களை கடந்த வாரம் குருநாதர் அகத்தியர் பெருமான் விரைவில் சபரிமலை செல்க !!சபரிநாதனின் தரிசனம் காண வேண்டும் உனக்காக அவந்தன் காத்துக் கொண்டிருக்கின்றான் என்று ஜீவனாடியில் உத்தரவு பிறப்பித்தார்... அதன்படியே திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் முறைப்படி மாலை அணிந்து இருமுடி கட்டி.... சபரிமலை பயணம் சென்றார்.

சபரிமலையில் மண்டல கால பூஜை மகர விளக்கு பூஜை தவிர எல்லா தமிழ் மலையாள மாதங்கள் முதல் தேதியில் இருந்து ஐந்து நாட்கள் வரை நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனமும் செய்ய முடியும்.

18/7/2022 அன்று தமிழ் மாதம் ஆடி 1 மலையாள மாதம் கற்கடகம் 1 நாளில் சபரிமலை வாசன் ஐயப்பனின் தரிசனம் மற்றும் அகத்தியர் அருளால் ஜீவநாடி சுவடி பெட்டகம் ஸ்ரீ ஐயப்பன் கருவறைக்குள்ளே அவரது மடியில் வைத்து பூஜிக்கப்பட்டது.

பூஜையும் தரிசனமும் நல் விதமாக செய்து முடித்த பின் குருநாதர் அகத்தியர் ஜீவநாடியில் வாக்குகள் மலர்ந்தருளினார்!!!!

ஆதி பரமேஸ்வரனையும் பரமேஸ்வரியையும் பணிந்து வாக்குகளாக செப்புகின்றேன் அகத்தியன்!!!

எதையென்று கூற அப்பனே இதையென்று அறியாத அளவிற்கு கூட இன்னும் இவனுடைய லீலைகள் தொடரும் என்பேன் கலியுகத்தில்!!!!!

அப்பனே!! நிச்சயம் தர்மத்தை நிலை நாட்டுவான் வரும் வரும் காலங்களில் அப்பனே!!!!

பலமுறையிலும் இவந்தனை எதை என்று அறிய பல பல வழிகளிலும் இவந்தனுக்கு யான் பல வழிகளிலும் ஞானம் பெற  உதவிகள் செய்துள்ளேன் அப்பனே!!!

இதனால் நிச்சயம் இவந்தனை பின் உருவாக்க உருவாக்க இன்னும் பல மனிதர்களுக்கும் எதை என்று அறியாமலே நிச்சயம் எவற்றின் மூலம் அறியாத அளவிற்கும் கூட உண்மைகள் இல்லையோ அதனால் அழிவுகள் நிச்சயம் என்பதே... யான் நிச்சயம் சொல்லிவிட்டேன்.

இவையென்று அறியாது பலபல மனிதர்களுக்கும் நிச்சயமாய் ஒழுங்காக இல்லாத மனிதனுக்கும் பல வழிகளில் கஷ்டத்தை கொடுத்துக் கொண்டே தான் வருவான்.... இதை என்று அறியாமலே இன்னும் சிறப்புகள் உண்டா என்பதற்கு இணங்க எவை என்று இவனுடைய இன்னும் கருணை!!!!

 யான் எப்படிப்பட்டது என்பதை கூட தெரிவித்து விடுகின்றேன் அப்பனே!!!!

எதனையென்றும் அறியாத இவ்வுலகத்தில் வந்தான் வந்தான் என்பதையும் கூட ஆனால் அப்பனே இவந்தன் எதை என்றும் அறியும் அளவிற்கு கூட சித்தர்களை பக்குவ நிலைக்கு இங்கே அமர்த்தி அமர்த்தி பல பல வழிகளிலும் கூட பின் சித்தர்கள் கூட இவந்தனுக்கு ஞானத்தை பல வழிகளிலும் செப்பினார்கள் அப்பனே!!!

அதில் என்னை இவந்தனுக்கு...பின் அகத்தியா என்றாலே இவந்தனுக்கு.... பாசங்கள்!!! பாசங்கள்!!!

ஏனென்றால் அப்பனே இவந்தன் நிலைமையை சரியாக சொன்னால் அப்பனே....... எதனைமென்று அறியாத அதனால் பல வருடங்களாக என்னிடத்திலே பல போதனைகளை கற்றுக் கொண்டான் அப்பனே!!!!

இப்படித்தான் வாழ வேண்டும்!!!
இப்படித்தான் இருக்க வேண்டும்!!!
இப்படி வாழ்ந்தால் தான் எதை என்று அறியாமலே இவ்வுலகத்தை கடத்திட முடியும் மோட்ச கதியும் அடைய முடியும் என்பதை கூட யான் எடுத்துரைத்தேன் இவனிடம்...!!! 

அதனால் அப்பனே இவந்தனும் ஒரு.."""சித்தன் "" என்று யான் குறிப்பிடுவேன்!!!! அப்பனே!! 

எதனால் என்பதையும் கூட அப்பனே இவனுடைய நிதானத்தையும் எதை என்று அறியாத பொறுமையையும் அப்பனே காத்திருந்தால் நிச்சயம் கடைசியில் வெற்றி உண்டாகும் என்பேன் அப்பனே.

இவந்தன் அப்படி கருணை பொங்குபவன்!!!!

ஆனாலும் அப்பனே சில சில வினைகள் அப்பனே எப்படி மதிக்க வேண்டும் என்று நிச்சயமாய் அப்பனே பெரியோர்களை மதிக்க வேண்டும்!!
பொறாமை பல பல சூதுவாது இல்லாமை!!
இன்னும் ஏராளம் ஏராளம்!! அப்பனே!!

சரியாக அப்பனே குருவை மதித்தல்!!!
அப்பனே  சரியாக உணவை மேற்கொள்ளுதல்!!!
அப்பனே சில சில விஷயங்களில் சரியாக இருத்தல்!!!

அப்பனே இவையெல்லாம் இவந்தனுக்கு சரியாக பிடிக்கும். அவை மட்டும் இல்லாமல் இப்படி நிச்சயம் வாழ்ந்திட்டால் அப்பனே எக்குறைகளும் வராது என்பேன் அப்பனே.

ஆனாலும் இவனை நம்பி எதனையும் என்று கூற அப்பனே வருபவர்களும் சரியான விதியை பயன்படுத்தி மீண்டும் பழைய நிலைக்கு ஆளாகின்றனர் அப்பனே!!

(மண்டலகாலம் முழுவிரதம் இருந்து ஒழுங்காக வாழ்ந்து மலைக்கு சென்று தரிசனம் செய்து வந்தபின் மீண்டும் பழையபடி வாழ்க்கையை தொடர்வது) 

ஆனாலும் அப்பொழுது சில தொல்லைகள் நிச்சயம் இவந்தனே... கொடுப்பான் என்பேன்.. அதனால் அப்பனே மனிதனும் கூட எதை என்றும் அறியாத பின் இவ் சபரிநாதனை வணங்கினேனே!!!!!!! ஆனால் இப்படி எல்லாம் ஆகிவிட்டதே என்று புலம்புவர்களும் இருக்கின்றனர்.

யான் பல பல வழிகளிலும் பார்த்திருக்கின்றேன் அப்பனே!!!!

இதனால் அப்பனே எவை என்று கூட..... அதனால் தன்வினை தன்னையே வாட்டும் என்பதை கூட அப்பனே அனைவரும் அறிந்ததே!!!! என்பேன் அப்பனே...

அதனால்தான் அப்பனே சொல்கின்றேன் உண்மை நிலையை அப்பனே சொல்கின்றேன்!!! எதையன்றி கூற அனைத்திற்கும் நீயே காரணம் அப்பனே!!!

நன்றாக எதை என்று அறியாத நீ எவ்வாறு நிலைமையில் இருக்கின்றாயோ அதற்கு நீயே காரணம் என்பதை கூட அப்பனே உங்களுக்கும் எதை என்று கூட பல பல வழிகளிலும் பெரியோர்கள் நிச்சயம் அப்பனே உரைத்த வண்ணம் அப்பனே இன்னும் ஞானங்கள்!!!!

ஆனால் அப்பனே இவனைப் பற்றி ஓர் கருணை வடிவமாகவே திகழ்கின்றான் அதனால் இவனைப் பற்றி ஒரு விளக்கம் எடுத்துரைக்கின்றேன்!!!!

அப்பனே எதை என்று கூட அப்பனே இன்னும் இவ்வாறு என்பதை கூட ஒரு பெண்ணவள்( பெண்மணி) எதையன்றி கூட இறைவனிடத்திலே பின் அப் பெண்மணியானவள் பின்... அவன் அவள் எதை என்று அறியாமலே... தாய் தந்தை இழந்தவள்!!

அதனால் எதை என்று அறிய பின்பு இப் பம்பை நதியோரத்தில் அறியாமலே பல பல உதவிகளை பல பல மனிதர்களுக்கு செய்து கொண்டு இருந்தாள்!!!!
செய்து கொண்டிருந்தாள் அப்பனே!!!!

எதை என்று அறியாமல் ஆனாலும் பல மனிதர்களுக்கு...

புஷ்பங்களை இலவசமாக தருதல்!!!

ஐயப்பனை பற்றி எதை என்று அறியாத அளவிற்கு எடுத்துரைத்தல்!!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே எதை என்று கூற பின் ஏதும் இல்லாதவர்களுக்கும் கூட தன்னால் இயன்ற அளவு உணவை பரிமாறிக் கொள்ளுதல்.

மற்றவர்களைக் கூட தன் குடும்பம் போல் எண்ணுதல்!!

அதனால் எதை என்றும் அறியாமலே இவள் பக்தி மேன்மை பெற்றது.

ஆனால் இதனை நோக்கினான் சபரிநாதனும் கூட!!!!!!!

இவ்வாறு ஒரு பெண்மணியா!!!!!

இவ்வாறெல்லாம் செய்து கொண்டிருக்கின்றாளே!!! என்று கூறி ஆனாலும் இவந்தனுக்கு யோசனைகள் பலமாக பட்டது!!!

ஆனாலும் மகிழ்ந்தான் மகிழ்ந்தான்!!! இவ்வுலகத்திலும் இப்படிப்பட்ட பெண்ணா!!!

இவள் அன்பானவளே!!! இதை என்றும் அறிய இப்படி எல்லாம் எதை என்று கூற இவ்வயதில் எதை என்றும் அறியாமலே யாருக்குத்தான் இவ்வளவு யாருக்குத்தான் இவ்வளவு எதையென்று அறியாமல் நல்லெண்ணங்கள் தோன்றி!!!!!

ஆனாலும் இவையன்றி கூற எவ்வளவு மழை வெள்ளம் வந்தாலும் பின் எதை என்று கூற... 

பின் ஐயப்பனே!!!!!! சபரிநாதனே!!!!! என்றெல்லாம் அழைத்து அழைத்து கூவிக்கொண்டிருந்தாள்!!! 

ஆனாலும் இதனை அறிந்தான் சபரிநாதனே!!!

இவையன்றி கூற அதனால் நிச்சயம் பின் இங்கிருந்து இவ் மலையில் இருந்து கீழ் நோக்கி பம்பைக்கு புறப்பட்டான் மனித ரூபத்திலே!!!!!

பின்பு அவள் அருகில் அமர்ந்தான்!!!!

அம்மையே!!!! எதை என்று அறிய பின் பல மனிதர்களுக்கும் நீ இப்படி நீ உதவி செய்து கொண்டிருக்கின்றாயே உன் தாய் தந்தை யார்?? என்று......

ஆனால் அனைத்தும் உணர்ந்தான் சபரிநாதனே!!!!

ஆனாலும் அப்பெண்மணியோ எந்தனுக்கு யாரும் இல்லையே!!!! யாரும் இல்லை ஆனாலும் இங்கு வந்து செல்பவர்கள் தான் எந்தனுக்கு சொந்தம்!!

அவை மட்டும் இல்லாமல் இங்கு மேல் இருக்கின்றானே!!!!

இவ் ஐயப்பன் இவந்தனும் எந்தனுக்கு சொந்தக்காரன்..என்று..!!! 

இதனால்  கருணை பட்ட ஐயப்பனும் கண்கள் கலங்கினான்!!!!

இவ்வாறா!! என்பதை கூட....

நம்தனை மட்டும்தான் சொந்தம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றாளே!!!! இவள்தனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி!!!! ஆனாலும் எதையென்று அறியாமலே..

அம்மையே இவையன்றி கூற இவ்வாறு அனைத்தும் விற்று!! விற்று!! பிழைத்துக் கொண்டிருக்கின்றாயே!!

பிழைப்பில் கிடைத்த பணத்தையும் மற்றவருக்காக சேவை செய்கின்றாயே!!!! அம்மையே எதனை அறியாமல் அறிந்து அறிந்து உணராமல் இதனையும் அன்றி !!அன்றி!!

 இதனால் நீயும் எதனையும் என்று கூட... அதனால்...

அம்மையே உன் கைகளால் ஓர் தேநீர் கொடு என்று கூட...

அவ் அம்மையும் சரி!!!! இதையென்று அழகாக தேநீரை கொடுத்தாள். பின் உட்கொண்டான் சபரிநாதன்.

இதையென்று அறிய.... அம்மையே யான் உந்தனுக்கு ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும்!! 

யானும் ஏழை தான் என்னிடத்திலும் பணங்கள் இல்லை!! அதனால் நீயும் அழகாக தேநீரை கொடுத்தாய்!!! அதற்கு பதிலாக யான் ஏதாவது செய்ய வேண்டும்..என்று!!! 

இதனால் எவை என்று அறிய நிச்சயம் பின் அவ் பெண்மணியும்!!!!.....

நீ ஏழைதானே!!!! அதனால் எவை என்று அறியாமலே காசுகள் வேண்டாம் அதனால் நீ சென்றிடு போதுமானது!!!!

இவ் அன்பை மட்டும் எப்பொழுதாவது நீ வந்தால் என்னிடத்தில் காட்டு!!! நிச்சயமாய் நாம் இரண்டு பேரும் சொந்தங்களாகவே இருக்கின்றோம் என்று கூற!!!!

ஆனாலும் ஐயப்பனும் கூட எதை என்றும் அறியாமல் மனம் கலங்கி நிச்சயம்!!!...

தாயே!!!!!! ஏதாவது ஒன்றைக் கேள்!!!!! நிச்சயம்!!!

நீயும் தேநீர் கொடுத்து விட்டாய் அதற்காகவாவது யான் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று கூறினான்.

ஆனால் அவ் பெண்மணியோ அழுது புலம்பினாள் அழுது புலம்பினாள் ஆனால் என்னவென்று அழுது புலம்பினாள் என்றால்...

ஐயனே இதையென்று அறிய.... நீ யார்?? என்று எந்தனுக்கு தெரியாது!!!

ஆனால் என் நிலைகள் எந்தனுக்கு மட்டுமே புரியும் ஆனால் யான் என் வாழ்க்கை தான் ஓட்டிக் கொண்டிருக்கின்றேன். ஆனால் பட்ட கஷ்டங்கள் எதை என்று கூட... அவ் சபரிநாதனுக்குத் தான் தெரியும்!!!

ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன் சபரிநாதன் அனைத்தும் உணர்ந்தவன் மனிதன் போல் இங்கு வந்திருக்கிறான் என்பதை கூட அப் பெண்மணி அறியவில்லையே!!!இதனையென்று கூட..

அப் பெண்மணி சொன்னாள் பின் எதை என்று கூட...... இன்னும் எதை எதை என்று கூட ஆனால் யாரும் இல்லை பின் நீ என் சகோதரனாக இருந்து கொண்டு ஆனால் எப்படியாவது ஒருமுறை பின் மேலே இருக்கும் அவ் சபரி நாதனை நிச்சயம் பார்த்திட உதவி செய்ய வேண்டும் என்று கூட!!!

ஆனாலும் அவ் சபரிநாதனே சிரித்து விட்டான்!!!!! பலமாக சிரித்து விட்டான்!!!!!!

ஆனாலும் பின் அப்பெண்மணியோ!!!!ஏன்?? இவ்வளவு பலமாக சிரிக்கின்றாய்????.... என்பதைக் கூட

அதனால் இதை அன்று அறியாது.. ஆனாலும் .....

அம்மையே!!!!! இவற்றின் உண்மையை புரியாத அளவிற்கு கூட எதனை என்று நிமித்தம் காட்டி இவ்வாறு நித்தம் நித்தம் காட்டி ஆனாலும் ஒன்றை உணர்ந்து ஆனால்........

பின் நின்றான் சபரிநாதனாகவே!!!!!!!!!!!!!!!! 

இதனால் அப் பெண் மணிக்கு மிக்க சந்தோசங்கள்!!!! பின் வந்து விட்டானா சபரிநாதன் நீதான் நீ தானா!!!! என்றெல்லாம் கண்கள் பொங்கி வழிந்தது!!! 

பின் அவ் சபரிநாதனும் கண்களில் கண்ணீர் விட்டான்!!!!

இதையென்று கூற இவ்வளவு பாசம் வைத்துக் கொண்டு ஏனம்மா இப்படி எல்லாம் எதை என்று அறிய அதனால்!!!!

உன்னை யான் மலை மேல் இருந்தே பார்த்துக் கொண்டிருந்தேன்!!!! ஆனாலும் இவ்வளவு பாசங்கள்!!!!!

இவ்வுலகத்தில் எதையெதையோ நேசித்து எதை எதையோ பின்பற்றுகின்றனர்!!!

ஆனாலும் அதையெல்லாம் தள்ளிட்டு பின் பல மனிதர்களுக்கும் நல்வழி காட்டுதல் காட்டிட்டு எதை என்று கூற பல வழிகளிலும் நீ சேமித்த பணத்தையும் மற்றவர்களுக்காக கொடுத்து மற்றவர்களுக்காகவே கொடுத்து அனைத்தும் செய்து கொண்டிருக்கின்ற தாயே!!!!!

அதனால் உன்னை பார்க்க வந்தேன்!!!!!

ஆனால் அப்பெண்மணியோ கண்ணீர் விட்டு அழுது அய்யனே உலகை காக்கும் ஐயனே நீதான் எதையென்று கூற கருணை கொண்டவனே.... இவை என்றும் அறியாமலே என்று கூட பின் ஆனாலும் கண்ணீர் மல்க!!!!!!

அம்மையே எதையென்று கூற ஆனால் இதனை என்று கூற உந்தனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கூட!!!!!! 

ஆனாலும் நிச்சயம் எதையென்று அப் பெண்மணியும் எதை என்று அறியாமலே நிச்சயம்!!!!

யான் எப்பிறப்பு எடுத்தாலும் உந்தனை நிச்சயம் நாடி நாடி வரவேண்டும்!!!!

உன்னை யான் மறக்க கூடாது!!!! சபரிநாதனே!!!  

என்று கூட கூச்சலிட்டு!!!!!!!

ஆனாலும் சபரிநாதனுக்கு தெரியும் இவள்தனுக்கு எஞ்சி உள்ளது ஒரு பிறவி என்று கூட!!!! ஆனால் நிச்சயம் அம்மையே இவை என்று அறிய ஓர் பிறவி உள்ளது கடைசி பிறப்பாக உள்ளது!!!

எவையன்றி கூற அப் பிறப்பில் எதை என்று அறிய என்னிடத்தில் நீ வருவாய் யானும் கடைசியில் ஆசிர்வதிக்கின்றேன் என்று கூற!!!!!!!!! 

அதனால் இப்பொழுது கூட அந்தப் பெண்மணி இக்கலியுகத்தில் பிறந்திருக்கின்றாள்!!!!

அவள்தன் பின் எதை என்று அறியாமலே ஐயனிடம் சரண் அடைந்து!!! சரணடைந்து!!! ஆனாலும் என், என்னையும் (அகத்தியர்) எதை என்று அறிந்த என் பக்தையாகவும் இருக்கின்றாள்.

ஆனால் இதைப் பார்த்துட்டு நிச்சயம் இச்செய்தி அவள்தனுக்கும் சென்றடையும் என்பேன்!!!!!!

சென்றடையும் என்பேன்!!!!!!

அவள்தனும் புரிந்து கொள்வாள்!!!!! இதுதான் நிச்சயம் இப்பிறப்பே கடைப்பிறப்பு என்பேன் !!

அப் பெண்மணிக்கு நிச்சயம் என்னுடைய வாக்குகள் போய் சேரும் சொல்லி விட்டேன்!!!! 

எதையென்று அறிய இதனால் மிக்க மகிழ்ச்சியோடு நிச்சயம் எதையென்று கூற மீண்டும் வந்து அமர்ந்தான்!!!!

இதனால் அப்பனே இதை என்று கூற அனைவருக்கும் நல்லது செய்ய நினையுங்கள்!!!! 

பொறாமைகள் வேண்டாம்!!!
போட்டிகள் வேண்டாம்!!!!

எது இருக்கின்றதோ அதை வைத்து சந்தோஷமாக சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள்!!!

அதை மீறி எதை எதையோ நினைத்து போய்க் கொண்டிருந்தால் நிச்சயம் இறைவன்.......

சத்தியமாகவே சொல்கின்றேன்!!! அப்பனே வரவும் மாட்டான்!!  எதுவும் தரவும் மாட்டான் அப்பனே!!!

அன்பாக இறைவா நீயே எந்தனுக்கு!!! என்று இரு!!! போதுமானது!!!

இதை பல வாக்குகளிலும் யான் செப்பி  விட்டேன் அப்பனே!!!!

எதையென்று அறிய ஏனென்றால் வரும் வரும் காலங்களில் அப்பனே அழியும் காலங்கள் என்பேன் அப்பனே.

அதனால் பொய்யான பக்திகளை செலுத்தி செலுத்தி ஏமாற்றி பிழைப்பு நடத்தி அப்பனே அப்படி பிழைப்பு தேவையில்லை என்பேன் அப்பனே!!!

இதுபோல் அப்பனே நலமாக அனைவருக்கும் உதவிடுங்கள் அப்பனே!!!

தன்னால் இயன்ற அளவு அப்பனே தானங்கள் செய்யுங்கள் அப்பனே!!!!

அதுமட்டுமில்லாமல் அப்பனே இவந்தனுக்கு(சபரிமலை ஐயப்பன் தரிசன விதிமுறைகளை) என்னென்ன விதிகள் பயன்படுத்த வேண்டுமோ!? அதை நிச்சயமாக சரியாகப் பயன்படுத்தினால் அவன் நிச்சயம் உயர்வான் என்பேன் அப்பனே!! தடங்கல் இல்லை அப்பனே!!!

எண்ணிக்கொள்ளுங்கள் அப்பனே சபரிநாதன் பக்தி என்பதை கூட எப்படி இருக்கின்றது??? என்பது!!!

ஆனாலும் ஒருவராவது அதை சரியாக கடைப்பிடிக்கின்றீர்களா என்றால் அப்பனே சத்தியமாக இல்லை!!!!

ஏனென்றால் நீ சரியாக அதைப்போல் கடைப்பிடித்தால்....

உன் இல்லத்திற்கு யானே வருவேன்!!!
ஐயனையும் அழைத்து வருவேன்!!!
ஈசனையும் அழைத்து வருவேன்!!!
முருகனையும் அழைத்து வருவேன்!!!
அதனால் நீங்கள் இப்படி நடந்து கொண்டாலே போதுமானது!!!

மற்றவை எல்லாம் அனைத்தையும் யான் பார்த்துக் கொள்கின்றேன் அப்பனே!!!!

அவை விட்டுவிட்டு எதையன்றி  கூற தன் பிள்ளைகளுக்காகவே தன் சுயநலத்திற்காகவே கேட்டுக் கொண்டிருந்தால் அப்பனே நிச்சயம் ஏதும் நடக்காது செப்பி விட்டேன்.

அப்பனே சித்தர்களைப் பற்றி புறம் கூறி பொய் பேசி அப்பனே இவ்வாறு செய்தால் அவ்வாறு நடக்கும் அவ்வாறு செய்தால் இவ்வாறு நடக்கும் என்பதை எல்லாம் பொய்யாகிப் போய்விட்டது அப்பனே!!

அதனால் நிச்சயம் யாங்கள் திரிந்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே அப்பனே இவை மட்டுமில்லாமல் இன்னொரு இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே!!!

நலமாக எதை என்று அறிய ஆனாலும் அப்பனே ஓர் பிறவியில் அப்பனே ஒருவன் எதை என்று அறிய அவந்தனுக்கும் தாய் தந்தை இல்லை ஆனாலும் பல வழிகளிலும் சுற்றி திரிந்தான்!!!

ஏன் இந்த நிலைமை???? 

எதனையும் என்று அறிய அறிய ஆனாலும் அவந்தனுக்கு உதவிகள் செய்ய யாரும் முன் வரவில்லை!! முன்வரவில்லை!!!

சிறு குழந்தையாக இருக்கின்ற பொழுதே அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது எதனை என்று கூட யான் பின் இதையன்றி கூற ஆனாலும்!!!

இவந்தன் அக் குழந்தைகளிடத்துச் செல்லும் பொழுது இவந்தன்.... அனாதை என்று கூட... பல மக்கள் ஏளனம் செய்தார்கள்!!!

ஆனாலும் இவன் மனம் பொங்கி வழிந்தது!!! ஆனாலும் பின் திரிந்தான் இக்காடுகளில்(சபரிவனம்) எல்லாம் திரிந்தான்!!!!திரிந்தான்!!!! 

ஐயனே!!!!  ஐயனே!!!! சரணம் ஐயனே!!!! சபரிநாதனே!!
சரணம் ஐயனே!!!! என்றெல்லாம் திரிந்து திரிந்து !!!!

ஆனாலும் பின்  கருணை உள்ள இவ் சபரிநாதனும் ..... இப்படி ஒரு குழந்தையா!!!!!

நிச்சயம் இவந்தனுக்கு யாரும் இல்லை என்று கூட!!!

அதனால் யாம் சிறு வேடத்தில் கூட சென்று இவனை தாலாட்டுவோம் என்று கூட எண்ணி விட்டு!!!!! நலமாகவே நலமாகவே பின் சென்றான்.

இதனை என்று அறிய சிறுவனே இதை என்று அறிய நீ யாரப்பா?? என்று கேட்க!!!

எந்தனுக்கும் யாரும் இல்லை என்று அச்சிறுவன் கூற!!!! இவ் சபரிநாதனும் எந்தனுக்கும் யாருமில்லை நாம் நண்பர்களாகவே இருக்கின்றோம் என்று எண்ணி!!!!!

இதனால் பல வகையிலும் பல பல வழிகளிலும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்!!!

ஆனால் வந்தது சபரிநாதன் என்று தான் என்று எதை என்று புரிந்து கொள்ளவில்லை அவந்தன்.

இதனால் எதை என்று அறியாமலே பல முன்னேற்றங்கள் பட்டு பட்டு எதை என்று அறிய.... 

இதனால் அவந்தனுக்கு எதை என்று அறியாமலே பல அருள்கள் கொடுத்து!! கொடுத்து!! எவை என்று கூற....

அதனால் அவந்தனும் இப்பிறப்பில் இங்கே தான் பிறந்துள்ளான் கலியுகத்தில்!!!

அவந்தனுக்கும் மோட்சப் பிறப்பு!!!!

அவந்தன் எதையன்றி கூற நிச்சயம் இவ் வாக்குகளும் அவந்தன் நிச்சயம் அவனை போய் சேரும்!!!!!!

எதையென்று அறிய அவந்தனும் புரிந்து கொள்வான்!!!!

அப்பனே என்னுடைய ஆசிகளும்!!!!!! 

அதனால் அவந்தனும் எதை என்று அறிய முற்காலத்திலும் அவந்தனையும் யானே பல வழிகளிலும் இவனுக்கு யாருமில்லை என்று கூட பல பல வழிகளிலும் பல பல இறைத் திருத்தலங்களுக்கு அழைத்துச் சென்று கொண்டே போயிருகின்றேன்.

அவந்தனும் கடைபிறப்பாக இப்புவிதனில் பிறந்திருக்கின்றான் அவந்தன் எதை என்று அறியாமலே நிச்சயம் அவந்தனுக்கும் இவ்வாக்குகள் போய்ச் சேரும் என்பேன்!!!!

அவந்தனும் படிப்பான்!!!
அவனே புரிந்து கொள்வான்!!!!

அப்பனே அவை மட்டும் இல்லாமல் இப்புவிதன்னில் அவந்தன்  எந்தனுக்கும் என் அன்பு பிரியமான லோபா முத்திரைக்கும் திருத்தலத்தையும் கட்டி இயற்றியுள்ளான் என்பேன் அப்பனே!!!!

இதனால் இன்னும் மறைமுகமான விஷயங்கள் சொல்லப் போகின்றேன் இவ்வுலகத்திற்கு!!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே ஒவ்வொன்றையும் நிச்சயம் எடுத்துக்காட்டாக நிச்சயம் என் பக்தர்கள் இன்னும் உலா வந்து கொண்டிருக்கின்றனர் அப்பனே.....எவையென்று கூற அதனால் நிச்சயம் சொல்கின்றேன் அப்பனே!!!

எதையென்று கூற கருணையோடு இறைவனை வணங்குங்கள் அப்பனே!!!

கருணை இல்லாமல் வணங்கினால் அப்பனே ஏதும் கிட்டாது என்பேன் அப்பனே....

இன்னும் நலன்கள் இவந்தனைப் பற்றி என்னென்ன செப்புவேன்?? அப்பனே!!!!!

இப்பொழுது கூட இவன் மேல்(ஐயப்பன்) நம்பிக்கை வைத்து விட்டால் !!!!!
இவந்தன் இல்லத்திற்கு வந்து அனைத்தும் செய்திடுவான்!!!!

அதை தகாத முறையில் பயன்படுத்திக்கொண்டால் தான் அப்படியே அழிவை ஏற்படுத்தி விடுவான் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

இதனால் நலன்கள் மேன்மை பெறும் மேன்மை பெற்று இன்னும் நலன்கள் நலன்கள் உண்டு உண்டு என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே குருவை எப்படி மதிக்க வேண்டும்???
எப்படி எல்லாம் உண்ண வேண்டும்?
எப்படி இறைவனை அதிகாலையிலும் மாலையிலும் வணங்க வேண்டும்??
எப்படியெல்லாம் துதி பாட வேண்டும்??......என்பதையெல்லாம் சரியாக நல்விதமாகவே நடந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!

போட்டி பொறாமைகள் நீக்க வேண்டும்!!!
பிறர் நலனை விரும்புதல்!!
பிற உயிரைக் கொல்லாமை இன்னும் நாணயம் இவை எல்லாம் இருந்தால்  நிச்சயமாக மனிதன் பிழைத்துக் கொள்வான் பிழைத்துக் கொள்வான் பிழைத்துக் கொள்வான்..அப்பனே!!!! 

அவையின்றி அப்பனே பின் மனிதன் எதையென்று நோக்கி செல்கின்றான் என்பதையும் கூட யான் அறிந்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!!

அவை மட்டும் இல்லாமல் என் பக்தராக இருந்தும் பொய் சொல்லி ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!

அதனால் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக எவை என்று கூற என் எதையன்றி கூற என் கருணை உள்ள பின் இவ் சபரிநாதனையே எடுத்துக்காட்டாக கூறலாம் என்பேன்!!!!

அதனால் அப்பனே சுத்தமாக எதை என்றும் அறியாத வண்ணம் அப்பனே நீ கடைப்பிடித்தால் நிச்சயம் வெற்றி உண்டாகும் அப்பனே!!!!

மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

எதையன்றி கூற ஆனால் அப்பனே நிச்சயம் உணர்ந்து விட்டால் சரி!!!
உணராவிட்டால் தண்டனைகள் அதிகம் கலியுகத்தில்!!! செப்பிவிட்டேன் அப்பனே!!

அப்பனே அதனால் அகத்தியன் பக்தனாக யான் இருந்தேனே!!!! இவ்வளவு கஷ்டங்கள் எந்தனுக்கு என்று சொல்லக்கூடாது சொல்லக்கூடாது சொல்லக்கூடாது சொல்லிவிட்டேன் .... இதனை மீண்டும் மீண்டும் யான் வாக்குகளாக சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

சரியான முறையில் பயன்படுத்துங்கள் அப்பனே கலியுகத்தில் அப்பனே ஏதேதோ நடக்கப் போகின்றது என்பதை கூட யான் எதை என்று அறிய...

அதனால் வரும் வரும் காலங்களில் செப்பிக்கொண்டே வருவேன் அப்பனே!!!

இன்னும் ஏராளமான சித்தர்களும் செப்புவார்கள் என்பேன் அப்பனே....

இதையென்று அறிய அதனால் அப்பனே  சரியாக வாழுங்கள்!!! வாழ்ந்து காட்டுங்கள்!!! எதை என்று அறியாமலே ஒழுக்கமாக வாழுங்கள் அப்பனே உயர் பதவியை அடையுங்கள் அப்பனே!!!!

இங்கு உயர் பதவி என்றால் மோட்ச கதி தான் என்று யான் சொல்வேன் அப்பனே!!!

இன்னும் மாற்றங்கள் அப்பனே எவை எவை என்று உணராத அளவிற்கும் கூட வரும் வரும் நாட்களில் அப்பனே உரைத்துக் கொண்டு வருவேன் அப்பனே!!!!!

நலம்!! நலம்!!! அப்பனே!!!
இன்னொரு வாக்கில் விரிவாகவே சொல்கின்றேன் அப்பனே ஒரு சூட்சமத்தை!!!!!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே நம் குருநாதர் அகத்தியபெருமான் இயற்றிய ஐயப்பன் பஞ்சரத்ன கீர்த்தனை நமது சித்தன் அருள் வலைத்தளத்தில் அன்புடன் அகத்தியர் 1062 ல் இசைக்காணொலியாக வெளிவந்துள்ளது நினைவில் இருக்கலாம்....அந்த கீர்த்தனை 

அகத்தியர் அருளிய ஐயப்ப பஞ்சரத்னமாலா - ஐயப்ப மந்திரம் அகத்தியர் அருளிய ஐயப்ப பஞ்சரதனமாலா தினமும் படித்து கருணைக் கடவுள்ஐயப்பனின் நல்லருள் பெற்றிடுவோம்.

ஐயப்பன் பஞ்சரத்ன மாலை!

அத்வைத வஸ்துவாய் ஆதி பரமாத்மனாய்
அசலனாய் அகுண குணணாய்
அமரருக்கதிபனாய் அடியவர்க்கெளியனாய்
சுத்த ஸத்துவ பரப்ரஹ்ம சாட்சாத்கார

ஜோதியாய் தோன்றும் உந்தன் துரிய
லீலா வைபவங்கள் பல என்று மறை
சொல்லுகின்றதேதுமறியேன்
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா

பித்தனாய் நினது புகழ் பேசித் திரிந்து நின்
பெருமையை நினைத்து பாடிப் பிதற்றுகின்றேன்

பிழை பொறுத்தாள வருவாய்
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
தத்துவமனைத்தும் ஒரு முத்திரை உரைத்திட
தந்த சற்குருநாதனே

சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா (1)

அந்தகாரத்திலே அருள் விளக்கேந்துவாய்
அடவியிலே வழி காட்டுவாய்

ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
அரவு பலி மிருகங்கள் அலகை பேய் குறள்
கள்வர் அணுகாது காத்து வருவாய்
வந்தனை புரிந்து மனமலரிட்டு வாழ்த்துவோர்

மரபெல்லாம் ஓங்க வைப்பாய்
மாறாத நோய்க்கொரு மருந்தாகி மாற்றுவாய்
மரணபயமும் போக்குவாய்
இவ்விதம் நீ புரியும் எண்ணிலா விளையாடல்

எண்ணித் துதிக்க வசமோ ஏறாத மலையேறி
எய்தும் மெய்யடியவரை ஏற்பதுன் பாரமல்லவோ
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
சந்தன சுகந்த சுந்தர சுதந்திர சித்த சங்க சற்குருநாதனே

சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா (2)

ஏந்து புகழ்சூழ்ந்த கனகாந்தகிரி ஓங்கி எழும்
ஏகாந்த ஜோதிமணியே

எண்ணுவோர் எண்ணியதெல்லாம்
பேரின்ப மழை பொழியும் முகிலே
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
நீந்தரிய பிறவிப் பெருங்கடல் கடத்தி

அருள்நிலை சேர்க்க வந்த துணையே
நெடும் பாலைவன வாழ்வில் நின்ற கற்பகமே
நிராலம்பமான மெய்ப்பொருளே
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா

மாந்தளிர் மடந்தையர் மருங்குற மகிழ்ந்தெம்மை

வாழ்விக்கும் கருணை வடிவே
வர நீல சேல சிங்கார சுகுமார
மதிவதனனே மணிகண்டனே
சாந்த சமரச சச்சிதானந்த சன்னதியில்
சரணமே சரணம் அருள்வாய்
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா (3)

நீயலாதென் குறைகள் கேட்பவருமில்லை ஒரு
நிழலில்லை என்று மனமோ நிலையில்லை
நினை அடையும் நியமங்களில்லை
நின் நினைப்பன்றி ஒன்றுமில்லை
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
ஆயிரம் பிழைகள் தனதடியவர் புரிந்தாலும்
ஆதரித்தருளும் அரசே அவதார மூர்த்தயே
அன்பான தெய்வமே ஆதி அய்யப்ப குருவே
தூயனே பம்பைத் துறைவனே சிவஞான ஜோதியே
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
ஈன்றவர் உன்னைத் தொட்டனைத்துய்ய நீ
யார் போன்றுளாயென சொல்லாது
தாயவள் மடித்தலம் இருந்து முத்திரை ஒன்று
தந்தை போல் வைத்த மகனே
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா (4)

அரியமறை புகழ்கின்ற அன்னதானம் செய்யும்
அருளாளர் வாழ்க வாழ்க
அனுதினமும் நின் கோவில் இலகு திசை
தொழுகின்ற அனைவரும் மகிழ்ந்து வாழ்க
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
விரத நியமங்களால் மெய் மறந்துனது பெயர்
விண்ணதிரவே முழங்கி வெற்பேறி வளர்படிகள்
மேலேறி வருகின்ற மெய்த் தொண்டர் வாழ்க
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா

தெரிய விளையாடி அற்புத சித்து காட்டும் உன்
திருநாம மகிமை வாழ்க
தேடும் இக்கவிமாலை பாடுவோர் இன்பச்
சிறப்பெல்லாம் ஓங்கி வாழ்க
சரியை கிரியா யோக ஞான சன்னதி
சரணம் சரணமே சரணம் ஐயா
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா (5)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........ தொடரும்!