​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 23 July 2022

சித்தன் அருள் - 1165 - அகத்தியர் விஜயம் - குருவுடன் இரு நாட்கள்!


மறுநாள் காலையில் பாலராமபுரத்தில் அபிஷேக ஆராதனைகளுக்குப் பின் நாடி வாசிக்க, நம் குருவின் தலைவர், சுப்பிரமணியர் வந்து அழகாக வாக்குரைத்தார். அதன் பின் வந்து வாக்குரைத்த அகத்தியப் பெருமான், நீண்ட அறிவுரையினூடே, ஒவ்வொரு ராசிக்காரர்களும் என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று கூறினார். பின்னர் காலை 9.30 மணிக்கு மேல், பக்கத்தில் மலைமேல் குடி கொண்டுள்ள எரித்தாவூர் பாலா சுப்பிரமணிய ஸ்வாமியை தரிசனம் செய்ய நாடியுடன் கிளம்பி சென்றனர். அடியேன் அவர்களிடமிருந்து விடை பெற்றேன்.

மாலை திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்தபின் மறுபடியும் அனைவரும் அடியேன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த எண்ணி, நாடியில் ஒரு சில கேள்விகளை கேட்டேன்.

"ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். நலமாக, எவை, எதை என்று அப்பொழுது கூற வேண்டும் என்பதை கூற யான் அறிவேன், அப்பனே. அதைத்தான், நல்லவிதமாக உரைத்தால் தான் நன்று என்பேன். அங்கிருந்து, யான் பல வேலைகளை செய்துதான் வந்து கொண்டு இருக்கின்றேன் அப்பனே. எதை என்று அறிவதற்கு, பலப்பல ரிஷிகளும், முனிவர்களும் வந்தார்கள். இங்கிருந்தும் யான் பத்மநாபரை, முருகரை  சென்று தரிசனம் செய்து, உரையாடித்தான் வருகிறேன். வரும் காலங்களில், பலப்பல சூட்ச்சுமங்களை உரைப்போம். ஆகவே பொறுத்திரு மகனே!

அடியேன்: "அகத்தியப்பெருமானுக்கு நமஸ்காரம்! பாலராமபுரம் கோவிலில் மாலை தீபாராதனை நேரத்தில், உங்களுக்கும், தாயாருக்கும் பின்னாடி, எப்பொழுதுமே, வெங்கிடாசலபதி வந்து நிற்கிறார். அவர் வந்து நின்றவுடனேயே, பூஜாரி ஆனவர், தீபாராதனையை, தன் கையை உயர்த்தி அவருக்கும், காண்பிக்கிறார். உடனேயே அடியேன் மனதுள் "ச்ரியஸ்காந்தாயா கல்யாண நிதயே!" என்கிற ஸ்லோகம் உரைக்கிறேன். சரியா, தவறான்னு தெரியலை. ஆனால், எப்ப பார்த்தாலும், பெருமாள் உங்களுக்குப் பின் நின்று கொண்டிருக்கிறார். அது ஒரு மிகப்பெரிய ஒரு பாக்கியம் என நினைக்கிறேன்!"

அவர்: "அப்பனே, எவை என்று கூற. இதற்கு பதில் இப்பொழுதுதான் உரைத்தேன். யோசிப்பாயா நீ? (இங்கிருந்து யாம் அங்கு செல்வதும், அவர் அங்கிருந்து இங்கு வருவதும்,  நாங்கள் இருவரும் சென்று முருகரை தரிசனம் செய்வோம், எனவும் உரைத்திருந்தார்")

அடியேன்: "சரி!!" என்றேன்.

அடியேன்: அடியேனின் ஆரோக்கியமானது, ரொம்பவே கீழ்நோக்கி செல்கின்றது. எனக்கே தெரிகின்றது. உங்களுடைய ஆசிர்வாதமும், பலமும் கொடுக்க வேண்டும். உங்கள் சன்னதிக்கு வந்து இறைவன் கோவில்களுக்கு சென்று நிறைய நல்லது செய்ய வேண்டும்!

அவர்: "அப்பனே! எவை என்று கூற? எப்பொழுதுமே, வயது 16 இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் நான் பார்த்துக் கொள்கிறேன், விடு கவலையை, அப்பனே. நிச்சயம் யான் தருவேன்! அருகிலேயே இருக்கின்றேன் யான். முருகனும் அருகில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்.

அடியேன்: இன்னொரு சிறு கேள்வி. பாலராமபுரம் கோவிலில் உங்கள் சன்னதி மேலே உள்ளது. உங்களுக்கு இடது கை பக்கத்தில், கீழே பூமியில் சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு அமைப்பு, ஏன்?

அவர்:இதற்கான விளக்கங்கள் தேவை இல்லை. ஆனாலும், நேரம் வரும்பொழுது தெரிந்து கொள்வாய் நீயே!

நண்பர்: பாலராமபுரம் கோவிலில், பல அன்பர்களும், தொலைவிலிருந்து கூப்பிட்டு, தங்களால் இயன்றதை, பூஜை அபிஷேகத்துக்காக அனுப்புகின்றனர். இயன்றவரையில் நல்ல முறையாக பூஜை செய்து பிரசாதம் அனுப்பி கொடுக்கிறோம். இது சரிதானே? எனில் மேலும் நல்லபடியாக நடை பெற வேண்டும்!

அவர்: அப்பனே, எதை என்று கூற? யாம்/இறைவன் எதையும் கேட்பதில்லை அப்பனே. கண்ணப்பனின் கதை தெரியுமென்றால் கூறு!

நண்பர்: ஆம்! கண்ணப்ப நாயனார் மிக சிறந்த சிவ பக்தர். தன் ஒரு கண்ணை இறைவனுக்கு கொடுத்துவிட்டு, மறு கண்ணையும் கொடுக்க போனவர்!

அவர்: ஆனாலும் அப்பனே, இருப்பதை கொடு!, இதுவே அவன் உணர்ந்தது. புரிந்து கொண்டாயா?

நண்பர்: பலரும், பலவிதமாக பூசைகளை செய்யச் சொல்கிறார்கள். இதனால், அவர்கள் கர்மா என்னைச் சேருமா?

அவர்: அப்பனே! விளக்கமாக கூறுகின்றேன். ஓர் திருடன், அப்பனே, எங்கேயோ, அதாவது, ஒருவன் தன்  மகளுக்காக சேர்த்து வைத்ததை திருடிக்கொண்டு ஓடி வந்துவிடுகிறான். அதை உன் கையில் கொடுத்துவிட்டு, இறைவனுக்கு செய்! என்று கொடுத்துவிட்டு செல்கின்றான். நீயும் இறைவனுக்கு செய்கின்றாய். ஆனாலும், அவன்தன் என்ன செய்தான், நீ என்ன செய்தாய்? கூறு.

நண்பர்: குருவே! அவர்கள் கொண்டு தருவது, அவர்கள் உழைத்து சம்பாதித்தது தான் என்கிற நினைப்பில் வாங்கி, பூசை செய்து விடுகிறோம். ஆனால், அது சரியா, தவறா என்று எங்களுக்கு தெரியவில்லை!

அவர்: ஆனாலும் கவலைகள் இல்லை. ஒன்றை மட்டும் நீ சொல்லிவிடு. அனைத்தும், நீ தான் என்னை இயக்குகின்றாய் என்று கூறிவிடு, மற்றவை யான் பார்த்துக்கொள்கிறேன். உந்தனுக்கே உணர்த்துவேன் அதை.

​நண்பர்: இன்னும் ஒரு வருடத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். நல்லபடியாக நடத்தி தர வேண்டும்!

அவர்: அப்பனே, எதை அன்றி கூற? அப்பனே, இதனை யான் தான் தீர்மானிக்க வேண்டும் அப்பனே!

பூஜாரி: ஒரு நிரந்தரமான கொடிமரம் கோவிலில் ஸ்தாபிக்க வேண்டும்!

அவர்: அப்பனே, உன் விருப்பப்படியே, அது நிகழும் என்பேன். ​

அடியேன்: பெரியவர், எப்பொழுதும் எல்லார் கூடவும் இருந்து கொண்டு, எல்லோருக்கும் நல்லது செய்ய வழிகாட்டியாக இருந்து, எல்லோர் சார்பாகவும் வேண்டிக் கொள்கிறேன்.

அவர்: அப்பனே, சொந்த பந்தங்கள் கூட எப்படி ஒன்று சேர்கிறது என்று கூட மனிதனுக்கு தெரிவதில்லை. ஆனாலும் முன் காலத்தில், அப்பனே, வாழ்ந்தவர்கள் தான், நீங்கள் கூட்டமாக. கடை பிறப்பு அனைவருக்கும். அதனால் தான் ஒன்றிணைந்து எனது வாக்குகளை கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். யானே, உங்களை ஒன்றிணைத்தது. அதனால் கவலைகள் இல்லை. நன்றாகவே நடக்கும், அனைத்தும், சொல்லிவிட்டேன், அப்பனே.

அடியேன்: சமீபத்திய காலத்தில் நடந்த விஷயங்களை பார்க்கிற போது, மிலேச்சர்களினுடைய பிரச்சினை மிகவும் கூடி வருகிறது. இந்துக்களுக்கு, இந்து மதத்துக்கு, இந்து தெய்வங்களுக்கு எதிராக நடக்கிற விஷயங்களை, தர்மத்துக்கும் எதிராக நடக்கிற விஷயங்களை பார்க்கிற பொழுது, மிகப் பெரிய பிரச்சினை வந்துவிடுமோ என்கிற அச்சம் எல்லோர் மனதிலும் உள்ளது. உங்கள்............

அவர்: எதை என்று கூற. உலகம் எதை நோக்கி செல்கிறது என்றால், அழிவை நோக்கித்தான் செல்கின்றது. நீயும் அறிவாய் இதனை. அப்பனே! கலியின் காலம், பல ஞானிகளும் உரைத்து விட்டார்கள். அப்பனே! சித்தர்கள் நாங்கள் இருக்கின்றோம் அப்பனே, நிச்சயம் எதுவும் செய்ய முடியாது அப்பனே.

அடியேன்: இவ்வுலகிற்கு, அடுத்த தலை முறைக்கு என உங்கள் அருளினால் ஏதேனும் ஒரு நல்லதை செய்ய வேண்டும், உரைக்க வேண்டும் என்ற அவா!

அவர்: அப்பனே, நீயே நேற்று கேட்டாய்! நான் என்ன சொன்னேன், கற்பித்துக்கொண்டே இருப்பேன், அதை செய் முதலில், கவலையை விடு!

அடியேன்: நன்றி! அடுத்ததாக எப்பொழுது, இந்த பக்கமாக வருவீர்கள்?

அவர்: நிச்சயம், விரைவில் உண்டு, கவலையை விடு.

எல்லோருடைய நமஸ்காரங்கள், ஆசி கூறுங்கள்!

ஆசிகள், ஆசிகள், ஆசிகள்! அனைத்தும் நலம்!

அகத்தியர் விஜயம், குருவுடன் இரு நாட்கள் இத்துடன் நிறைவு பெற்றது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

10 comments:

  1. எல்லாம் வல்ல குருவை வணங்கி
    அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம். அகத்தியப் பெருமான், நீண்ட அறிவுரையினூடே, ஒவ்வொரு ராசிக்காரர்களும் என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று கூறினார்.

    குரு சொன்ன பரிகாரம் பற்றி விரிவாக சொன்னால் அனைத்து ராசிக்காரர்களும் பயன் உள்ளதாக இருக்கும்

    ReplyDelete
  2. Om அகத்தியர் ஐயா போற்றி

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமஹ கோயில் களுக்கு செல்லும் பக்தர்கள் விளக்கு ஏற்றும் போது எண்னை பிசுக்கு களை எல்லாம் சுத்தமாக கழுவி விட்டு பின் வழக்கு ஏற்றினால் மிக மிக நன்று

    ReplyDelete
  4. எம்பெருமானே அகத்தீசா... நின்திருத்தாளே சரணம் சரணம்... அனைத்து இராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரமுறைகளை அடியவர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தினால் (கர்மா- எனும்)பிறவிப் பெருங்கடலை கடப்போமே அய்யா... ( திரு.ஜானகிராமன் அய்யா)அனைவருக்கும் அருள் செய்வீர் ஞானக்கடலே...

    ReplyDelete
  5. அகத்திய பெருமானே பஞ்சட்டி ஸ்தலத்தின் மகிமை களை பற்றி கூறவும் ஐயா ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  6. Take care of your health. We pray for your long life

    ReplyDelete
  7. அகத்தீசாய நம

    ReplyDelete
  8. Ayya take care of your health.... After hearing that i felt crying but as agasthiyar ayyan told i convinced.

    ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. Namaskaram. Am taking care. As guru said, he takes care of my health.

      Delete