​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 11 July 2022

சித்தன் அருள் - 1159 - அகத்தியர் விஜயம் - குருவுடன் இரு நாட்கள்!



அவர்: ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் நல்ல கிரகங்கள் அமர்ந்தால் என்ன பலன் என்று கூறு?

நண்பர்: ஆறில் நல்ல கிரகங்கள் அமர்வது நல்லதல்ல. அவர்களால்/அவர்கள் தசையில் கெடுதல் நடக்கும்.

அவர்: ஆறில் நல்ல கிரகங்கள் இருந்தால் விபரீத ராஜ யோகமாயிற்றே! நல்லதும் நடக்க வேண்டுமே! உன் பதில் மனிதர்கள் கற்று தந்த ஜோதிட முறையாயிற்றே! அப்படித்தான் இருக்கும்!

அவர்: கேதுவானவன் ஐந்தில் இருந்தால் என்ன பலன். அதை கூறு!

நண்பர்: நிகழ்காலத்தில் நடப்பவை எல்லாம்  பூர்வ புண்ணிய பலத்தால் நடக்கும். ஐந்தாமிடம் என்பது, பூர்வ புண்ணியம், சந்தான பாக்கியம்!

அவர்: அப்பனே எவை அன்றி கூற? எப்பொழுதும் சொல்லுகின்றேன் அப்பனே! ஐந்தில், ஒன்றில் அப்பனே, பின் நவத்தில், பின் பன்னிரெண்டில் கேது இருந்தால் இவர்களுக்கு ஜாதகமே பலிக்காது என்று சொல்லிவிட்டேன். அப்படி என்றால் இது நீ எப்படி கூறினாய்?

சற்று நேர அமைதிக்குப்பின் அவரே தொடர்ந்தார்.

அப்பனே, இவர்கள் எல்லாம், கர்மத்தின் பாதையை அனுபவிப்பார்கள். இதற்கு நீ யாரிடமாவது (போயும்) கணிக்க முடியாது அப்பனே! அப்படி கணித்தாலும், (கணிப்பவருக்கு) பாபங்கள் வந்தடையும் என்பேன்.

இதற்கிடையில், நண்பர் தனது ஜாதகத்தை செல்லில் தேடினார்.

நண்பர்: "அய்யா! என் ஜாதகத்தில், கேது 12இல் இருக்கிறது அய்யா!"

அவர்: "ஹா! அப்பனே, உன்னுடைய ஜாதகமே பலிக்காது! அப்படியாயின், நீ எப்படி இன்னொருவருடைய ஜாதகத்தை பார்த்து சொல்வாய்?"

இதைக்கேட்ட நண்பர் சற்று பின் வாங்கினார்.

நண்பர்: "அய்யா! நான் இப்பொழுது தான் படிக்க தொடங்கி இருக்கிறேன்! இந்த அறிவெல்லாம் எங்களுக்கு இப்பொழுதுதான் கிடைக்கிறது. நல்லபடியாக படிக்க, என்ன செய்ய வேண்டும்?"

அவர்: "அப்பனே, நீ இப்படி படித்தால் கூட, மனிதர்கள் செப்புவித்த முறையில் தான் படிக்க கூடும். அதனால், ஒவ்வொன்றாக, ஒவ்வொரு விதத்திற்கும் யானே சொல்லித்தருகின்றேன்! அது தான் சரி, ஆனால் மனிதன் எவை என்று கூட கற்று கொடுப்பது தவறுதான் என்று யான் சொல்வேன். பெருத்த யோகம், நான்காம் திசையில்தான் நடக்கும். அவ் திசை என்ன?

அவசர பதிலாக நண்பர், "சந்திர தசை" என்றார்!

அவர்: அப்பனே! நான்காவது தசையாக ராகு தசை வந்தால், பெருத்த யோகம் நடக்கும். அவனை அடித்துக் கொள்ள யாரும் கிடையாது. அப்பனே, இவற்றையும் புரிந்து கொள்ள வேண்டும். நான்காவது தசையாக ராகுவோ, கேதுவோ, சனி அவனே வந்தால் அவந்தனுக்கு அனைத்து விடயங்களும் தெரியும் அப்பனே, என்பேன். ஆனாலும் அத்தசையில், அவன் நினைத்ததெல்லாம் நடக்காது சொல்லிவிட்டேன். இறைவன் நினைப்பது தான் நடக்கும். அப்பனே! மோட்சத்திற்கான வழிகள், இன்னும் பல வழிகள் சொல்கின்றேன் அப்பனே. ஒவ்வொரு சூட்சுமத்தை, ரகசியத்தை, எவை என்று உணர்க.

அப்பனே! சந்திரன், சுக்கிரன் ஒன்றாக இருந்தால் என்ன பலன், கூறு?

நண்பர்: "சந்திரனும் சுக்கிரனும் ஒன்றாக இருந்தாலா? என கேள்வி கேட்டுவிட்டு பதிலுக்கு தடுமாறினார்.

அவர்: "அப்பனே! இப்பொழுது கூறிவிட்டாய், தெரியாது என்பது! அது தெரியாமலே இருக்கட்டும் அப்பனே! இதுதான் ஜாதகம், தெரிந்துவிட்டதா, இப்பொழுது. அப்பனே! இதை பற்றி, நீயும் என்னை கேள்வி கேட்க வேண்டும், அதை கேள்! என்றார்.

நண்பர் இதை கேட்டதும் திகைத்துப் போனார்! எங்கேனும், தவறாக, தேவை இல்லாத கேள்வி கேட்டு விடப்போகிறார் என்று, இடையில் அடியேன் வழிமறித்தேன்! நண்பரிடம், "இருய்யா! சொல்லித்தருகிறேன்! அப்படி கேள் என்றேன்"

நண்பர் : "என் முன்னாடி எந்த ஜாதகம் வந்தாலும், என் மானசீக குருவாக, மனதுக்குள் நீங்கள் வாக்கில் நின்று கூற வேண்டும்!" என்றார்.

அவர்: "சரி! அப்பனே! அவ்வாறு நடந்தால்தான் கர்மா உன்னை அண்டாது. மற்றபடி எல்லாம் கர்மா சேர்ந்துவிடும். அப்பனே! இதில் எதை கூறுவது? இதற்கு கூட முதலிலேயே சொல்லியிருந்தால் இதற்கான பதிலை கூறியிருப்பேன். அனுபவித்து, அனுபவித்து வந்தால் தான் அனுபவங்கள் பிறக்கும் அப்பனே.

சிகப்பானவன் (செவ்வாய்) உச்சம் பெற்றால் என்ன பலன் என்று கூறு?

இத்தனை கேள்விகள் நண்பரிடம், அவர் ஜோதிஷ குரு கூட கேட்டிருக்க மாட்டார் போலும். சற்றே அசந்து போயிருந்தார். எங்கேனும் தவறுதலாக பதில் கூறிவிடப் போகிறார் என்று, உதவலாம் என்று மெதுவவக நண்பர் கேட்கும்படி கூறினேன். அதை கேட்ட அவர் "சுப்பிரமணிய யோகம்" என்றார்.

அவர்: அப்பனே! ஆனாலும், இதற்கு கூட நீ பதிலளிக்கவில்லை! சொல்லிக் கொடுத்துதான் சொல்லுகின்றாய், அதுதான் உண்மை. சிகப்பன் அவன் உச்சம் பெற்று விட்டால், முருகன் அனைத்தும் செய்வான் என்று விட்டு விட வேண்டும். இன்னும் விரிவாக கூறுகின்றேன். காத்திரு. மறு வாக்கில் இன்னும் விரிவாக அப்பனே!

நண்பர்: நாங்க படிக்கிறது எல்.கே.ஜீல. எங்ககிட்ட Ph D லெவெல்ல கேட்டா பதில் எப்படி சொல்வோம் என நொந்து கொண்டார்!

சுருக்கமாக கூறுவதென்றால், அகத்திய பெருமான் அவரின் வாக்கில்/மனதுள் நின்று ஜோதிட முறைகளை கற்றுத்தருகிறேன் என ஆசிர்வதித்தார்.

அடுத்ததாக இன்னொரு நண்பரும் அவர் மனைவியும் நாடி வாக்கு கேட்க அமர்ந்தனர்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.......... தொடரும்!

5 comments:

  1. ஐயா....நாடி படிக்கும் போது நானும் அகத்தியர் அய்யனுடன் இருக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா!

      "அகத்தியர் விஜயம் - குருவுடன் இரு நாட்கள்" என்பதுஅவர் உத்தரவின் பேரில், கங்கை, ராமேஸ்வரம், திரிவேணி சங்கமம் தீர்த்தங்கள் அபிஷேகத்துக்காக பாலராமபுரம் கோவிலுக்கு கொண்டு வந்த பொழுது, அதனுடன் ஜீவ நாடியையும் திரு.ஜானகிராமன் கொண்டுவந்தார். அப்பொழுது பொதுவாக்கில் கேட்கப்பட்ட கேள்வி பதில்கள்தான் இங்கு தரப்படுகிறது. உங்களுக்கு ஜீவ நாடியுடன் இருக்கும், கேள்வி கேட்கும் பாக்கியத்தை அகத்தியப் பெருமான் அருளட்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

      அக்னிலிங்கம்!

      Delete
    2. நன்றிங்க ஐயா. அகத்தியர் அய்யன் பெங்களூர் வருவது அறிந்தால் அங்கு சென்று வரலாம். தாங்கள் கூறுவது போல எல்லாம் அவர் அழைப்பு... கிடைத்தால் பாக்கியம்.... ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏

      Delete
  2. எம்பெருமான் அகத்தியம்பெருமான் திருத்தாள் போற்றி போற்றி... அடியவன் சுந்தரமூர்த்தி பேசுகிறேன். தாங்கள் கூறிய ஜோதிடமுறையில் சந்திரன் சுக்கிரன் சேர்க்கையின் பலன் - மற்றும் செவ்வாய் உச்சம் பெற்றால் என்ன பலன் - நீங்கள் கூறுவதாய் கூறின நிமித்தம் பலன்கள் - மற்றும் - ஒன்பது திசா பலன்களையும் உங்கள் வழியில் வரும் நிலையில் இருக்கும் எங்களை போன்ற ஜோதிடர்களுக்கு அருள்வாக்கில் (சித்தன் அருள்)கற்றுக்கொடுத்தால் நாங்களும் உன்மையான ஜோதிடம் கூற வழிசெய்யலாமே எம்பெருமானே. வழிசெய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் அடியவன்

    ReplyDelete