​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 15 July 2022

சித்தன் அருள் - 1162 - அகத்தியர் விஜயம் - குருவுடன் இரு நாட்கள்!


​அம்மையே! அனைவருக்கும் கட்டங்கள் வரும். இவ்வுலகத்தில் ஏதும் நிரந்திரமில்லை. அது வந்தாலும், வருவது வரட்டும், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கவலையை விடு. ​இவன் வந்திருக்கின்றானே, இங்கு நீதான் ஆண், இவனே பெண். இது போறாதா இறைவன் உந்தனுக்கு கொடுத்தது. நன் முறையாக கந்தன் இருக்க, அனைத்தும் மாறும் என்பேன். உன்னை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றான், உன் இல்லத்தில் இருந்து முருகன். சோதிக்கலாம் என்று முருகன் சோதித்துக் கொண்டுதான் இருக்கின்றான், அதில்கூட நீ தேர்ச்சி பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றாய். ஆனால் முருகன் அணைத்துக் கொள்வான், கவலையை விடு.

அப்பனே! யான் எதை என்று கூற. நீ நடத்துகின்றாயே, அங்கும் யான் வந்து கை நீட்டினேன் அப்பனே. ஆசீர்வாதங்கள் கொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றேன். இன்னமும் என்ன வேண்டும் என கேள் அப்பனே.

நண்பர் சிற்றுண்டி உணவு விடுதி நடத்துகிறார்.

சும்மா இருக்காமல், அடியேன் நண்பரிடம், அவர் (சாப்பிட்ட பின்) காசு குடுத்தாரான்னு கேளு! என்றேன்.

குருநாதர்: "அப்பனே எதை என்று கூற? அதையும் கொடுத்துக் கொண்டுதான் வந்திருக்கிறேன். அப்பனே! எதை, யாரிடமும் அப்பனே, யான் கடன் வைத்ததே இல்லை.

நலமாகவே, நலமாகவே கூறிவிட்டேன்! ஆசிகள்!

கந்தனை பிடித்துக் கொள், நிச்சயம் நல்லது செய்வான். யானும் பார்த்துக் கொள்கிறேன்!

அடுத்ததாக அடியேனுக்கு கேள்வி கேட்கிற பாக்கியம் கிடைத்தது.

"அகத்தியப்பெருமானுக்கு நமஸ்காரம்! ஒன்றிரண்டு கேள்விகள், பொதுவான கேள்விகள் தான். ஒருமுறை தஞ்சாவூரில் உங்களின் ஜீவநாடியில் கேள்வி கேட்ட அதே கேள்விகள்தான், இப்பவும் கேட்கிறேன்.

மதுரையில், சித்தர் கோயிலில் இருக்கிற தலை கீழ் லிங்கத்தை தியானத்துல பார்க்கின்ற பொழுது, அதன் நிலைமை என்னவென்று கேட்டேன். பின்னர் ஒருமுறை நாம் சந்திக்கிற பொழுது, பதில் சொல்கிறேன் என்று கூறினீர்கள். அதற்கு இப்பொழுது பதில் கிடைக்குமா?

"அப்பனே! எதை என்று கூற அப்பனே! முன்னே சொன்ன பதில், அதே பதில்தான், இப்பொழுதும் அப்பனே! வரும் காலங்களில், இதை விரிவாக கூறுகின்றேன், சூட்ச்சுமத்தை, பொறுத்து இருக்க!

அடியேன்:"சரி! சித்த மார்கத்தில் போன பொழுது, பல விஷயங்களும், நல்ல விஷயங்கள் கிடைக்கிறது. ஆனால், ஒருவர் சொன்ன விஷயம் என்ன வென்றால், "இலக்கணமே குறளாயிற்று" என்று சொன்னார். அது உண்மை தானா?"

குருநாதர்: அப்பனே! எதை என்று கூற? தெரிந்து கொண்டு கேட்பது சரியில்லை அப்பனே!"

அடியேன்: அப்படியாயின், அடியேன் கேட்டது உண்மை!"

குருநாதர்: "ஆம்"

அடியேன்: "அப்படியானால், இதை வெளி உலகுக்கு அடியேன் சொன்னால், திட்டமாட்டார்களா?

குருநாதர்: அப்பனே ஆனாலும், மனிதர்கள், புத்தி கெட்டவர்கள், என்பேன். புரிந்து கொள்! என் வழி வந்தவர்கள், நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள், அப்பனே! ஆனாலும், இவ்வுலகம், கலியுகத்தில் நின்று கொண்டிருக்கிறது. பேராசை நிறைந்திருக்கின்றது. அதனால், இதை நீயே யூகித்துக்கொள்வாய் அப்பனே, யானே உந்தனுக்கு உணர்த்துவேன் அப்பனே.

அடியேன்: இனிமேல் எந்த வழி? வேலை நிறைவு பெறுகிறது!

குருநாதர்: அப்பனே! இதன் முன்பே எதை பிடித்தாயோ, அதையே பிடித்துக் கொண்டு இரு. மற்றவை எல்லாம் யான் இருக்கின்றேன். யான் முன்னே செல்கின்றேன், நீ பின்னே வா! போதுமானது.

அடியேன்: நல்ல ஆரோக்கியத்தை அருள வேண்டும். அதற்க்கு ஏற்றார் போல்தான் எல்லா இடங்களுக்கும் போகவோ, நல்லது செய்யவோ முடியும்.

குருநாதர்: அப்பனே! நிச்சயம் ! எதை என்று கூற, யான் செய்ய வைக்கின்றேன் உந்தனை. அப்பனே! பொம்மையாக இரு!

அடியேன்: மிக்க நன்றி!வேறு கேள்விகள் இல்லை! என்று கூறியவுடன், அன்றைய பொதுவாக்கு நிறைவு பெற்றது.

அனைவரும் கிளம்பினார்கள், அடியேனும், திருஜானகி ராமனும் பாலராமபுரம் கோவிலுக்கு செல்ல தயாரானோம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............. தொடரும்!

4 comments:

  1. எம்பெருமானே அகத்தீசா நின் திருத்தாள் போற்றி போற்றி..
    தஞ்சாவூரில் சத்சங்கம் நடத்தியதுபோல் தங்களும் ஜானகிராமன் அய்யாவிடமும் நல் ஆத்மாவை வரவைத்து சத்சங்கம் நடத்தி அனைவரையும் மீன்டும் நல்வழிப்டுத்த ஒரு வாய்ப்புகளை தருவித்து அருளவேண்டும் எம் பெருமானே. அபொழுது அடியவர்கள் அனைவருமே உங்களுடன் உறையாடி - உறவாடி நல்வழியில் வாழ வழிசெய்லாமே எம்பெருமானே அகத்தீசா... அடியேனை பொருத்தருள்க.

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக

    ஐயா வணக்கம் "இலக்கணமே குறளாயிற்று" என்றால் சித்தர்களின் பாதத்தை இருக்க பிடித்து கொண்டாள் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷம் நீங்கும் என்று பொருள் கொள்ளலாம் அல்லவா...

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  4. எம்பெருமானே அகத்தீசா... நின் திருத்தாளே சரணம் சரணம்...

    ReplyDelete