​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 19 July 2022

சித்தன் அருள் - 1163 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை வாக்கு!




வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!
 
ஜீவநாடி வாசிக்கும் மைந்தன் திரு ஜானகிராமன் அவர்களை கடந்த வாரம் குருநாதர் அகத்தியர் பெருமான் விரைவில் சபரிமலை செல்க !!சபரிநாதனின் தரிசனம் காண வேண்டும் உனக்காக அவந்தன் காத்துக் கொண்டிருக்கின்றான் என்று ஜீவனாடியில் உத்தரவு பிறப்பித்தார்... அதன்படியே திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் முறைப்படி மாலை அணிந்து இருமுடி கட்டி.... சபரிமலை பயணம் சென்றார்.

சபரிமலையில் மண்டல கால பூஜை மகர விளக்கு பூஜை தவிர எல்லா தமிழ் மலையாள மாதங்கள் முதல் தேதியில் இருந்து ஐந்து நாட்கள் வரை நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனமும் செய்ய முடியும்.

18/7/2022 அன்று தமிழ் மாதம் ஆடி 1 மலையாள மாதம் கற்கடகம் 1 நாளில் சபரிமலை வாசன் ஐயப்பனின் தரிசனம் மற்றும் அகத்தியர் அருளால் ஜீவநாடி சுவடி பெட்டகம் ஸ்ரீ ஐயப்பன் கருவறைக்குள்ளே அவரது மடியில் வைத்து பூஜிக்கப்பட்டது.

பூஜையும் தரிசனமும் நல் விதமாக செய்து முடித்த பின் குருநாதர் அகத்தியர் ஜீவநாடியில் வாக்குகள் மலர்ந்தருளினார்!!!!

ஆதி பரமேஸ்வரனையும் பரமேஸ்வரியையும் பணிந்து வாக்குகளாக செப்புகின்றேன் அகத்தியன்!!!

எதையென்று கூற அப்பனே இதையென்று அறியாத அளவிற்கு கூட இன்னும் இவனுடைய லீலைகள் தொடரும் என்பேன் கலியுகத்தில்!!!!!

அப்பனே!! நிச்சயம் தர்மத்தை நிலை நாட்டுவான் வரும் வரும் காலங்களில் அப்பனே!!!!

பலமுறையிலும் இவந்தனை எதை என்று அறிய பல பல வழிகளிலும் இவந்தனுக்கு யான் பல வழிகளிலும் ஞானம் பெற  உதவிகள் செய்துள்ளேன் அப்பனே!!!

இதனால் நிச்சயம் இவந்தனை பின் உருவாக்க உருவாக்க இன்னும் பல மனிதர்களுக்கும் எதை என்று அறியாமலே நிச்சயம் எவற்றின் மூலம் அறியாத அளவிற்கும் கூட உண்மைகள் இல்லையோ அதனால் அழிவுகள் நிச்சயம் என்பதே... யான் நிச்சயம் சொல்லிவிட்டேன்.

இவையென்று அறியாது பலபல மனிதர்களுக்கும் நிச்சயமாய் ஒழுங்காக இல்லாத மனிதனுக்கும் பல வழிகளில் கஷ்டத்தை கொடுத்துக் கொண்டே தான் வருவான்.... இதை என்று அறியாமலே இன்னும் சிறப்புகள் உண்டா என்பதற்கு இணங்க எவை என்று இவனுடைய இன்னும் கருணை!!!!

 யான் எப்படிப்பட்டது என்பதை கூட தெரிவித்து விடுகின்றேன் அப்பனே!!!!

எதனையென்றும் அறியாத இவ்வுலகத்தில் வந்தான் வந்தான் என்பதையும் கூட ஆனால் அப்பனே இவந்தன் எதை என்றும் அறியும் அளவிற்கு கூட சித்தர்களை பக்குவ நிலைக்கு இங்கே அமர்த்தி அமர்த்தி பல பல வழிகளிலும் கூட பின் சித்தர்கள் கூட இவந்தனுக்கு ஞானத்தை பல வழிகளிலும் செப்பினார்கள் அப்பனே!!!

அதில் என்னை இவந்தனுக்கு...பின் அகத்தியா என்றாலே இவந்தனுக்கு.... பாசங்கள்!!! பாசங்கள்!!!

ஏனென்றால் அப்பனே இவந்தன் நிலைமையை சரியாக சொன்னால் அப்பனே....... எதனைமென்று அறியாத அதனால் பல வருடங்களாக என்னிடத்திலே பல போதனைகளை கற்றுக் கொண்டான் அப்பனே!!!!

இப்படித்தான் வாழ வேண்டும்!!!
இப்படித்தான் இருக்க வேண்டும்!!!
இப்படி வாழ்ந்தால் தான் எதை என்று அறியாமலே இவ்வுலகத்தை கடத்திட முடியும் மோட்ச கதியும் அடைய முடியும் என்பதை கூட யான் எடுத்துரைத்தேன் இவனிடம்...!!! 

அதனால் அப்பனே இவந்தனும் ஒரு.."""சித்தன் "" என்று யான் குறிப்பிடுவேன்!!!! அப்பனே!! 

எதனால் என்பதையும் கூட அப்பனே இவனுடைய நிதானத்தையும் எதை என்று அறியாத பொறுமையையும் அப்பனே காத்திருந்தால் நிச்சயம் கடைசியில் வெற்றி உண்டாகும் என்பேன் அப்பனே.

இவந்தன் அப்படி கருணை பொங்குபவன்!!!!

ஆனாலும் அப்பனே சில சில வினைகள் அப்பனே எப்படி மதிக்க வேண்டும் என்று நிச்சயமாய் அப்பனே பெரியோர்களை மதிக்க வேண்டும்!!
பொறாமை பல பல சூதுவாது இல்லாமை!!
இன்னும் ஏராளம் ஏராளம்!! அப்பனே!!

சரியாக அப்பனே குருவை மதித்தல்!!!
அப்பனே  சரியாக உணவை மேற்கொள்ளுதல்!!!
அப்பனே சில சில விஷயங்களில் சரியாக இருத்தல்!!!

அப்பனே இவையெல்லாம் இவந்தனுக்கு சரியாக பிடிக்கும். அவை மட்டும் இல்லாமல் இப்படி நிச்சயம் வாழ்ந்திட்டால் அப்பனே எக்குறைகளும் வராது என்பேன் அப்பனே.

ஆனாலும் இவனை நம்பி எதனையும் என்று கூற அப்பனே வருபவர்களும் சரியான விதியை பயன்படுத்தி மீண்டும் பழைய நிலைக்கு ஆளாகின்றனர் அப்பனே!!

(மண்டலகாலம் முழுவிரதம் இருந்து ஒழுங்காக வாழ்ந்து மலைக்கு சென்று தரிசனம் செய்து வந்தபின் மீண்டும் பழையபடி வாழ்க்கையை தொடர்வது) 

ஆனாலும் அப்பொழுது சில தொல்லைகள் நிச்சயம் இவந்தனே... கொடுப்பான் என்பேன்.. அதனால் அப்பனே மனிதனும் கூட எதை என்றும் அறியாத பின் இவ் சபரிநாதனை வணங்கினேனே!!!!!!! ஆனால் இப்படி எல்லாம் ஆகிவிட்டதே என்று புலம்புவர்களும் இருக்கின்றனர்.

யான் பல பல வழிகளிலும் பார்த்திருக்கின்றேன் அப்பனே!!!!

இதனால் அப்பனே எவை என்று கூட..... அதனால் தன்வினை தன்னையே வாட்டும் என்பதை கூட அப்பனே அனைவரும் அறிந்ததே!!!! என்பேன் அப்பனே...

அதனால்தான் அப்பனே சொல்கின்றேன் உண்மை நிலையை அப்பனே சொல்கின்றேன்!!! எதையன்றி கூற அனைத்திற்கும் நீயே காரணம் அப்பனே!!!

நன்றாக எதை என்று அறியாத நீ எவ்வாறு நிலைமையில் இருக்கின்றாயோ அதற்கு நீயே காரணம் என்பதை கூட அப்பனே உங்களுக்கும் எதை என்று கூட பல பல வழிகளிலும் பெரியோர்கள் நிச்சயம் அப்பனே உரைத்த வண்ணம் அப்பனே இன்னும் ஞானங்கள்!!!!

ஆனால் அப்பனே இவனைப் பற்றி ஓர் கருணை வடிவமாகவே திகழ்கின்றான் அதனால் இவனைப் பற்றி ஒரு விளக்கம் எடுத்துரைக்கின்றேன்!!!!

அப்பனே எதை என்று கூட அப்பனே இன்னும் இவ்வாறு என்பதை கூட ஒரு பெண்ணவள்( பெண்மணி) எதையன்றி கூட இறைவனிடத்திலே பின் அப் பெண்மணியானவள் பின்... அவன் அவள் எதை என்று அறியாமலே... தாய் தந்தை இழந்தவள்!!

அதனால் எதை என்று அறிய பின்பு இப் பம்பை நதியோரத்தில் அறியாமலே பல பல உதவிகளை பல பல மனிதர்களுக்கு செய்து கொண்டு இருந்தாள்!!!!
செய்து கொண்டிருந்தாள் அப்பனே!!!!

எதை என்று அறியாமல் ஆனாலும் பல மனிதர்களுக்கு...

புஷ்பங்களை இலவசமாக தருதல்!!!

ஐயப்பனை பற்றி எதை என்று அறியாத அளவிற்கு எடுத்துரைத்தல்!!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே எதை என்று கூற பின் ஏதும் இல்லாதவர்களுக்கும் கூட தன்னால் இயன்ற அளவு உணவை பரிமாறிக் கொள்ளுதல்.

மற்றவர்களைக் கூட தன் குடும்பம் போல் எண்ணுதல்!!

அதனால் எதை என்றும் அறியாமலே இவள் பக்தி மேன்மை பெற்றது.

ஆனால் இதனை நோக்கினான் சபரிநாதனும் கூட!!!!!!!

இவ்வாறு ஒரு பெண்மணியா!!!!!

இவ்வாறெல்லாம் செய்து கொண்டிருக்கின்றாளே!!! என்று கூறி ஆனாலும் இவந்தனுக்கு யோசனைகள் பலமாக பட்டது!!!

ஆனாலும் மகிழ்ந்தான் மகிழ்ந்தான்!!! இவ்வுலகத்திலும் இப்படிப்பட்ட பெண்ணா!!!

இவள் அன்பானவளே!!! இதை என்றும் அறிய இப்படி எல்லாம் எதை என்று கூற இவ்வயதில் எதை என்றும் அறியாமலே யாருக்குத்தான் இவ்வளவு யாருக்குத்தான் இவ்வளவு எதையென்று அறியாமல் நல்லெண்ணங்கள் தோன்றி!!!!!

ஆனாலும் இவையன்றி கூற எவ்வளவு மழை வெள்ளம் வந்தாலும் பின் எதை என்று கூற... 

பின் ஐயப்பனே!!!!!! சபரிநாதனே!!!!! என்றெல்லாம் அழைத்து அழைத்து கூவிக்கொண்டிருந்தாள்!!! 

ஆனாலும் இதனை அறிந்தான் சபரிநாதனே!!!

இவையன்றி கூற அதனால் நிச்சயம் பின் இங்கிருந்து இவ் மலையில் இருந்து கீழ் நோக்கி பம்பைக்கு புறப்பட்டான் மனித ரூபத்திலே!!!!!

பின்பு அவள் அருகில் அமர்ந்தான்!!!!

அம்மையே!!!! எதை என்று அறிய பின் பல மனிதர்களுக்கும் நீ இப்படி நீ உதவி செய்து கொண்டிருக்கின்றாயே உன் தாய் தந்தை யார்?? என்று......

ஆனால் அனைத்தும் உணர்ந்தான் சபரிநாதனே!!!!

ஆனாலும் அப்பெண்மணியோ எந்தனுக்கு யாரும் இல்லையே!!!! யாரும் இல்லை ஆனாலும் இங்கு வந்து செல்பவர்கள் தான் எந்தனுக்கு சொந்தம்!!

அவை மட்டும் இல்லாமல் இங்கு மேல் இருக்கின்றானே!!!!

இவ் ஐயப்பன் இவந்தனும் எந்தனுக்கு சொந்தக்காரன்..என்று..!!! 

இதனால்  கருணை பட்ட ஐயப்பனும் கண்கள் கலங்கினான்!!!!

இவ்வாறா!! என்பதை கூட....

நம்தனை மட்டும்தான் சொந்தம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றாளே!!!! இவள்தனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி!!!! ஆனாலும் எதையென்று அறியாமலே..

அம்மையே இவையன்றி கூற இவ்வாறு அனைத்தும் விற்று!! விற்று!! பிழைத்துக் கொண்டிருக்கின்றாயே!!

பிழைப்பில் கிடைத்த பணத்தையும் மற்றவருக்காக சேவை செய்கின்றாயே!!!! அம்மையே எதனை அறியாமல் அறிந்து அறிந்து உணராமல் இதனையும் அன்றி !!அன்றி!!

 இதனால் நீயும் எதனையும் என்று கூட... அதனால்...

அம்மையே உன் கைகளால் ஓர் தேநீர் கொடு என்று கூட...

அவ் அம்மையும் சரி!!!! இதையென்று அழகாக தேநீரை கொடுத்தாள். பின் உட்கொண்டான் சபரிநாதன்.

இதையென்று அறிய.... அம்மையே யான் உந்தனுக்கு ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும்!! 

யானும் ஏழை தான் என்னிடத்திலும் பணங்கள் இல்லை!! அதனால் நீயும் அழகாக தேநீரை கொடுத்தாய்!!! அதற்கு பதிலாக யான் ஏதாவது செய்ய வேண்டும்..என்று!!! 

இதனால் எவை என்று அறிய நிச்சயம் பின் அவ் பெண்மணியும்!!!!.....

நீ ஏழைதானே!!!! அதனால் எவை என்று அறியாமலே காசுகள் வேண்டாம் அதனால் நீ சென்றிடு போதுமானது!!!!

இவ் அன்பை மட்டும் எப்பொழுதாவது நீ வந்தால் என்னிடத்தில் காட்டு!!! நிச்சயமாய் நாம் இரண்டு பேரும் சொந்தங்களாகவே இருக்கின்றோம் என்று கூற!!!!

ஆனாலும் ஐயப்பனும் கூட எதை என்றும் அறியாமல் மனம் கலங்கி நிச்சயம்!!!...

தாயே!!!!!! ஏதாவது ஒன்றைக் கேள்!!!!! நிச்சயம்!!!

நீயும் தேநீர் கொடுத்து விட்டாய் அதற்காகவாவது யான் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று கூறினான்.

ஆனால் அவ் பெண்மணியோ அழுது புலம்பினாள் அழுது புலம்பினாள் ஆனால் என்னவென்று அழுது புலம்பினாள் என்றால்...

ஐயனே இதையென்று அறிய.... நீ யார்?? என்று எந்தனுக்கு தெரியாது!!!

ஆனால் என் நிலைகள் எந்தனுக்கு மட்டுமே புரியும் ஆனால் யான் என் வாழ்க்கை தான் ஓட்டிக் கொண்டிருக்கின்றேன். ஆனால் பட்ட கஷ்டங்கள் எதை என்று கூட... அவ் சபரிநாதனுக்குத் தான் தெரியும்!!!

ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன் சபரிநாதன் அனைத்தும் உணர்ந்தவன் மனிதன் போல் இங்கு வந்திருக்கிறான் என்பதை கூட அப் பெண்மணி அறியவில்லையே!!!இதனையென்று கூட..

அப் பெண்மணி சொன்னாள் பின் எதை என்று கூட...... இன்னும் எதை எதை என்று கூட ஆனால் யாரும் இல்லை பின் நீ என் சகோதரனாக இருந்து கொண்டு ஆனால் எப்படியாவது ஒருமுறை பின் மேலே இருக்கும் அவ் சபரி நாதனை நிச்சயம் பார்த்திட உதவி செய்ய வேண்டும் என்று கூட!!!

ஆனாலும் அவ் சபரிநாதனே சிரித்து விட்டான்!!!!! பலமாக சிரித்து விட்டான்!!!!!!

ஆனாலும் பின் அப்பெண்மணியோ!!!!ஏன்?? இவ்வளவு பலமாக சிரிக்கின்றாய்????.... என்பதைக் கூட

அதனால் இதை அன்று அறியாது.. ஆனாலும் .....

அம்மையே!!!!! இவற்றின் உண்மையை புரியாத அளவிற்கு கூட எதனை என்று நிமித்தம் காட்டி இவ்வாறு நித்தம் நித்தம் காட்டி ஆனாலும் ஒன்றை உணர்ந்து ஆனால்........

பின் நின்றான் சபரிநாதனாகவே!!!!!!!!!!!!!!!! 

இதனால் அப் பெண் மணிக்கு மிக்க சந்தோசங்கள்!!!! பின் வந்து விட்டானா சபரிநாதன் நீதான் நீ தானா!!!! என்றெல்லாம் கண்கள் பொங்கி வழிந்தது!!! 

பின் அவ் சபரிநாதனும் கண்களில் கண்ணீர் விட்டான்!!!!

இதையென்று கூற இவ்வளவு பாசம் வைத்துக் கொண்டு ஏனம்மா இப்படி எல்லாம் எதை என்று அறிய அதனால்!!!!

உன்னை யான் மலை மேல் இருந்தே பார்த்துக் கொண்டிருந்தேன்!!!! ஆனாலும் இவ்வளவு பாசங்கள்!!!!!

இவ்வுலகத்தில் எதையெதையோ நேசித்து எதை எதையோ பின்பற்றுகின்றனர்!!!

ஆனாலும் அதையெல்லாம் தள்ளிட்டு பின் பல மனிதர்களுக்கும் நல்வழி காட்டுதல் காட்டிட்டு எதை என்று கூற பல வழிகளிலும் நீ சேமித்த பணத்தையும் மற்றவர்களுக்காக கொடுத்து மற்றவர்களுக்காகவே கொடுத்து அனைத்தும் செய்து கொண்டிருக்கின்ற தாயே!!!!!

அதனால் உன்னை பார்க்க வந்தேன்!!!!!

ஆனால் அப்பெண்மணியோ கண்ணீர் விட்டு அழுது அய்யனே உலகை காக்கும் ஐயனே நீதான் எதையென்று கூற கருணை கொண்டவனே.... இவை என்றும் அறியாமலே என்று கூட பின் ஆனாலும் கண்ணீர் மல்க!!!!!!

அம்மையே எதையென்று கூற ஆனால் இதனை என்று கூற உந்தனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கூட!!!!!! 

ஆனாலும் நிச்சயம் எதையென்று அப் பெண்மணியும் எதை என்று அறியாமலே நிச்சயம்!!!!

யான் எப்பிறப்பு எடுத்தாலும் உந்தனை நிச்சயம் நாடி நாடி வரவேண்டும்!!!!

உன்னை யான் மறக்க கூடாது!!!! சபரிநாதனே!!!  

என்று கூட கூச்சலிட்டு!!!!!!!

ஆனாலும் சபரிநாதனுக்கு தெரியும் இவள்தனுக்கு எஞ்சி உள்ளது ஒரு பிறவி என்று கூட!!!! ஆனால் நிச்சயம் அம்மையே இவை என்று அறிய ஓர் பிறவி உள்ளது கடைசி பிறப்பாக உள்ளது!!!

எவையன்றி கூற அப் பிறப்பில் எதை என்று அறிய என்னிடத்தில் நீ வருவாய் யானும் கடைசியில் ஆசிர்வதிக்கின்றேன் என்று கூற!!!!!!!!! 

அதனால் இப்பொழுது கூட அந்தப் பெண்மணி இக்கலியுகத்தில் பிறந்திருக்கின்றாள்!!!!

அவள்தன் பின் எதை என்று அறியாமலே ஐயனிடம் சரண் அடைந்து!!! சரணடைந்து!!! ஆனாலும் என், என்னையும் (அகத்தியர்) எதை என்று அறிந்த என் பக்தையாகவும் இருக்கின்றாள்.

ஆனால் இதைப் பார்த்துட்டு நிச்சயம் இச்செய்தி அவள்தனுக்கும் சென்றடையும் என்பேன்!!!!!!

சென்றடையும் என்பேன்!!!!!!

அவள்தனும் புரிந்து கொள்வாள்!!!!! இதுதான் நிச்சயம் இப்பிறப்பே கடைப்பிறப்பு என்பேன் !!

அப் பெண்மணிக்கு நிச்சயம் என்னுடைய வாக்குகள் போய் சேரும் சொல்லி விட்டேன்!!!! 

எதையென்று அறிய இதனால் மிக்க மகிழ்ச்சியோடு நிச்சயம் எதையென்று கூற மீண்டும் வந்து அமர்ந்தான்!!!!

இதனால் அப்பனே இதை என்று கூற அனைவருக்கும் நல்லது செய்ய நினையுங்கள்!!!! 

பொறாமைகள் வேண்டாம்!!!
போட்டிகள் வேண்டாம்!!!!

எது இருக்கின்றதோ அதை வைத்து சந்தோஷமாக சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள்!!!

அதை மீறி எதை எதையோ நினைத்து போய்க் கொண்டிருந்தால் நிச்சயம் இறைவன்.......

சத்தியமாகவே சொல்கின்றேன்!!! அப்பனே வரவும் மாட்டான்!!  எதுவும் தரவும் மாட்டான் அப்பனே!!!

அன்பாக இறைவா நீயே எந்தனுக்கு!!! என்று இரு!!! போதுமானது!!!

இதை பல வாக்குகளிலும் யான் செப்பி  விட்டேன் அப்பனே!!!!

எதையென்று அறிய ஏனென்றால் வரும் வரும் காலங்களில் அப்பனே அழியும் காலங்கள் என்பேன் அப்பனே.

அதனால் பொய்யான பக்திகளை செலுத்தி செலுத்தி ஏமாற்றி பிழைப்பு நடத்தி அப்பனே அப்படி பிழைப்பு தேவையில்லை என்பேன் அப்பனே!!!

இதுபோல் அப்பனே நலமாக அனைவருக்கும் உதவிடுங்கள் அப்பனே!!!

தன்னால் இயன்ற அளவு அப்பனே தானங்கள் செய்யுங்கள் அப்பனே!!!!

அதுமட்டுமில்லாமல் அப்பனே இவந்தனுக்கு(சபரிமலை ஐயப்பன் தரிசன விதிமுறைகளை) என்னென்ன விதிகள் பயன்படுத்த வேண்டுமோ!? அதை நிச்சயமாக சரியாகப் பயன்படுத்தினால் அவன் நிச்சயம் உயர்வான் என்பேன் அப்பனே!! தடங்கல் இல்லை அப்பனே!!!

எண்ணிக்கொள்ளுங்கள் அப்பனே சபரிநாதன் பக்தி என்பதை கூட எப்படி இருக்கின்றது??? என்பது!!!

ஆனாலும் ஒருவராவது அதை சரியாக கடைப்பிடிக்கின்றீர்களா என்றால் அப்பனே சத்தியமாக இல்லை!!!!

ஏனென்றால் நீ சரியாக அதைப்போல் கடைப்பிடித்தால்....

உன் இல்லத்திற்கு யானே வருவேன்!!!
ஐயனையும் அழைத்து வருவேன்!!!
ஈசனையும் அழைத்து வருவேன்!!!
முருகனையும் அழைத்து வருவேன்!!!
அதனால் நீங்கள் இப்படி நடந்து கொண்டாலே போதுமானது!!!

மற்றவை எல்லாம் அனைத்தையும் யான் பார்த்துக் கொள்கின்றேன் அப்பனே!!!!

அவை விட்டுவிட்டு எதையன்றி  கூற தன் பிள்ளைகளுக்காகவே தன் சுயநலத்திற்காகவே கேட்டுக் கொண்டிருந்தால் அப்பனே நிச்சயம் ஏதும் நடக்காது செப்பி விட்டேன்.

அப்பனே சித்தர்களைப் பற்றி புறம் கூறி பொய் பேசி அப்பனே இவ்வாறு செய்தால் அவ்வாறு நடக்கும் அவ்வாறு செய்தால் இவ்வாறு நடக்கும் என்பதை எல்லாம் பொய்யாகிப் போய்விட்டது அப்பனே!!

அதனால் நிச்சயம் யாங்கள் திரிந்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே அப்பனே இவை மட்டுமில்லாமல் இன்னொரு இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே!!!

நலமாக எதை என்று அறிய ஆனாலும் அப்பனே ஓர் பிறவியில் அப்பனே ஒருவன் எதை என்று அறிய அவந்தனுக்கும் தாய் தந்தை இல்லை ஆனாலும் பல வழிகளிலும் சுற்றி திரிந்தான்!!!

ஏன் இந்த நிலைமை???? 

எதனையும் என்று அறிய அறிய ஆனாலும் அவந்தனுக்கு உதவிகள் செய்ய யாரும் முன் வரவில்லை!! முன்வரவில்லை!!!

சிறு குழந்தையாக இருக்கின்ற பொழுதே அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது எதனை என்று கூட யான் பின் இதையன்றி கூற ஆனாலும்!!!

இவந்தன் அக் குழந்தைகளிடத்துச் செல்லும் பொழுது இவந்தன்.... அனாதை என்று கூட... பல மக்கள் ஏளனம் செய்தார்கள்!!!

ஆனாலும் இவன் மனம் பொங்கி வழிந்தது!!! ஆனாலும் பின் திரிந்தான் இக்காடுகளில்(சபரிவனம்) எல்லாம் திரிந்தான்!!!!திரிந்தான்!!!! 

ஐயனே!!!!  ஐயனே!!!! சரணம் ஐயனே!!!! சபரிநாதனே!!
சரணம் ஐயனே!!!! என்றெல்லாம் திரிந்து திரிந்து !!!!

ஆனாலும் பின்  கருணை உள்ள இவ் சபரிநாதனும் ..... இப்படி ஒரு குழந்தையா!!!!!

நிச்சயம் இவந்தனுக்கு யாரும் இல்லை என்று கூட!!!

அதனால் யாம் சிறு வேடத்தில் கூட சென்று இவனை தாலாட்டுவோம் என்று கூட எண்ணி விட்டு!!!!! நலமாகவே நலமாகவே பின் சென்றான்.

இதனை என்று அறிய சிறுவனே இதை என்று அறிய நீ யாரப்பா?? என்று கேட்க!!!

எந்தனுக்கும் யாரும் இல்லை என்று அச்சிறுவன் கூற!!!! இவ் சபரிநாதனும் எந்தனுக்கும் யாருமில்லை நாம் நண்பர்களாகவே இருக்கின்றோம் என்று எண்ணி!!!!!

இதனால் பல வகையிலும் பல பல வழிகளிலும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்!!!

ஆனால் வந்தது சபரிநாதன் என்று தான் என்று எதை என்று புரிந்து கொள்ளவில்லை அவந்தன்.

இதனால் எதை என்று அறியாமலே பல முன்னேற்றங்கள் பட்டு பட்டு எதை என்று அறிய.... 

இதனால் அவந்தனுக்கு எதை என்று அறியாமலே பல அருள்கள் கொடுத்து!! கொடுத்து!! எவை என்று கூற....

அதனால் அவந்தனும் இப்பிறப்பில் இங்கே தான் பிறந்துள்ளான் கலியுகத்தில்!!!

அவந்தனுக்கும் மோட்சப் பிறப்பு!!!!

அவந்தன் எதையன்றி கூற நிச்சயம் இவ் வாக்குகளும் அவந்தன் நிச்சயம் அவனை போய் சேரும்!!!!!!

எதையென்று அறிய அவந்தனும் புரிந்து கொள்வான்!!!!

அப்பனே என்னுடைய ஆசிகளும்!!!!!! 

அதனால் அவந்தனும் எதை என்று அறிய முற்காலத்திலும் அவந்தனையும் யானே பல வழிகளிலும் இவனுக்கு யாருமில்லை என்று கூட பல பல வழிகளிலும் பல பல இறைத் திருத்தலங்களுக்கு அழைத்துச் சென்று கொண்டே போயிருகின்றேன்.

அவந்தனும் கடைபிறப்பாக இப்புவிதனில் பிறந்திருக்கின்றான் அவந்தன் எதை என்று அறியாமலே நிச்சயம் அவந்தனுக்கும் இவ்வாக்குகள் போய்ச் சேரும் என்பேன்!!!!

அவந்தனும் படிப்பான்!!!
அவனே புரிந்து கொள்வான்!!!!

அப்பனே அவை மட்டும் இல்லாமல் இப்புவிதன்னில் அவந்தன்  எந்தனுக்கும் என் அன்பு பிரியமான லோபா முத்திரைக்கும் திருத்தலத்தையும் கட்டி இயற்றியுள்ளான் என்பேன் அப்பனே!!!!

இதனால் இன்னும் மறைமுகமான விஷயங்கள் சொல்லப் போகின்றேன் இவ்வுலகத்திற்கு!!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே ஒவ்வொன்றையும் நிச்சயம் எடுத்துக்காட்டாக நிச்சயம் என் பக்தர்கள் இன்னும் உலா வந்து கொண்டிருக்கின்றனர் அப்பனே.....எவையென்று கூற அதனால் நிச்சயம் சொல்கின்றேன் அப்பனே!!!

எதையென்று கூற கருணையோடு இறைவனை வணங்குங்கள் அப்பனே!!!

கருணை இல்லாமல் வணங்கினால் அப்பனே ஏதும் கிட்டாது என்பேன் அப்பனே....

இன்னும் நலன்கள் இவந்தனைப் பற்றி என்னென்ன செப்புவேன்?? அப்பனே!!!!!

இப்பொழுது கூட இவன் மேல்(ஐயப்பன்) நம்பிக்கை வைத்து விட்டால் !!!!!
இவந்தன் இல்லத்திற்கு வந்து அனைத்தும் செய்திடுவான்!!!!

அதை தகாத முறையில் பயன்படுத்திக்கொண்டால் தான் அப்படியே அழிவை ஏற்படுத்தி விடுவான் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

இதனால் நலன்கள் மேன்மை பெறும் மேன்மை பெற்று இன்னும் நலன்கள் நலன்கள் உண்டு உண்டு என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே குருவை எப்படி மதிக்க வேண்டும்???
எப்படி எல்லாம் உண்ண வேண்டும்?
எப்படி இறைவனை அதிகாலையிலும் மாலையிலும் வணங்க வேண்டும்??
எப்படியெல்லாம் துதி பாட வேண்டும்??......என்பதையெல்லாம் சரியாக நல்விதமாகவே நடந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!

போட்டி பொறாமைகள் நீக்க வேண்டும்!!!
பிறர் நலனை விரும்புதல்!!
பிற உயிரைக் கொல்லாமை இன்னும் நாணயம் இவை எல்லாம் இருந்தால்  நிச்சயமாக மனிதன் பிழைத்துக் கொள்வான் பிழைத்துக் கொள்வான் பிழைத்துக் கொள்வான்..அப்பனே!!!! 

அவையின்றி அப்பனே பின் மனிதன் எதையென்று நோக்கி செல்கின்றான் என்பதையும் கூட யான் அறிந்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!!

அவை மட்டும் இல்லாமல் என் பக்தராக இருந்தும் பொய் சொல்லி ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!

அதனால் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக எவை என்று கூற என் எதையன்றி கூற என் கருணை உள்ள பின் இவ் சபரிநாதனையே எடுத்துக்காட்டாக கூறலாம் என்பேன்!!!!

அதனால் அப்பனே சுத்தமாக எதை என்றும் அறியாத வண்ணம் அப்பனே நீ கடைப்பிடித்தால் நிச்சயம் வெற்றி உண்டாகும் அப்பனே!!!!

மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

எதையன்றி கூற ஆனால் அப்பனே நிச்சயம் உணர்ந்து விட்டால் சரி!!!
உணராவிட்டால் தண்டனைகள் அதிகம் கலியுகத்தில்!!! செப்பிவிட்டேன் அப்பனே!!

அப்பனே அதனால் அகத்தியன் பக்தனாக யான் இருந்தேனே!!!! இவ்வளவு கஷ்டங்கள் எந்தனுக்கு என்று சொல்லக்கூடாது சொல்லக்கூடாது சொல்லக்கூடாது சொல்லிவிட்டேன் .... இதனை மீண்டும் மீண்டும் யான் வாக்குகளாக சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

சரியான முறையில் பயன்படுத்துங்கள் அப்பனே கலியுகத்தில் அப்பனே ஏதேதோ நடக்கப் போகின்றது என்பதை கூட யான் எதை என்று அறிய...

அதனால் வரும் வரும் காலங்களில் செப்பிக்கொண்டே வருவேன் அப்பனே!!!

இன்னும் ஏராளமான சித்தர்களும் செப்புவார்கள் என்பேன் அப்பனே....

இதையென்று அறிய அதனால் அப்பனே  சரியாக வாழுங்கள்!!! வாழ்ந்து காட்டுங்கள்!!! எதை என்று அறியாமலே ஒழுக்கமாக வாழுங்கள் அப்பனே உயர் பதவியை அடையுங்கள் அப்பனே!!!!

இங்கு உயர் பதவி என்றால் மோட்ச கதி தான் என்று யான் சொல்வேன் அப்பனே!!!

இன்னும் மாற்றங்கள் அப்பனே எவை எவை என்று உணராத அளவிற்கும் கூட வரும் வரும் நாட்களில் அப்பனே உரைத்துக் கொண்டு வருவேன் அப்பனே!!!!!

நலம்!! நலம்!!! அப்பனே!!!
இன்னொரு வாக்கில் விரிவாகவே சொல்கின்றேன் அப்பனே ஒரு சூட்சமத்தை!!!!!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே நம் குருநாதர் அகத்தியபெருமான் இயற்றிய ஐயப்பன் பஞ்சரத்ன கீர்த்தனை நமது சித்தன் அருள் வலைத்தளத்தில் அன்புடன் அகத்தியர் 1062 ல் இசைக்காணொலியாக வெளிவந்துள்ளது நினைவில் இருக்கலாம்....அந்த கீர்த்தனை 

அகத்தியர் அருளிய ஐயப்ப பஞ்சரத்னமாலா - ஐயப்ப மந்திரம் அகத்தியர் அருளிய ஐயப்ப பஞ்சரதனமாலா தினமும் படித்து கருணைக் கடவுள்ஐயப்பனின் நல்லருள் பெற்றிடுவோம்.

ஐயப்பன் பஞ்சரத்ன மாலை!

அத்வைத வஸ்துவாய் ஆதி பரமாத்மனாய்
அசலனாய் அகுண குணணாய்
அமரருக்கதிபனாய் அடியவர்க்கெளியனாய்
சுத்த ஸத்துவ பரப்ரஹ்ம சாட்சாத்கார

ஜோதியாய் தோன்றும் உந்தன் துரிய
லீலா வைபவங்கள் பல என்று மறை
சொல்லுகின்றதேதுமறியேன்
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா

பித்தனாய் நினது புகழ் பேசித் திரிந்து நின்
பெருமையை நினைத்து பாடிப் பிதற்றுகின்றேன்

பிழை பொறுத்தாள வருவாய்
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
தத்துவமனைத்தும் ஒரு முத்திரை உரைத்திட
தந்த சற்குருநாதனே

சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா (1)

அந்தகாரத்திலே அருள் விளக்கேந்துவாய்
அடவியிலே வழி காட்டுவாய்

ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
அரவு பலி மிருகங்கள் அலகை பேய் குறள்
கள்வர் அணுகாது காத்து வருவாய்
வந்தனை புரிந்து மனமலரிட்டு வாழ்த்துவோர்

மரபெல்லாம் ஓங்க வைப்பாய்
மாறாத நோய்க்கொரு மருந்தாகி மாற்றுவாய்
மரணபயமும் போக்குவாய்
இவ்விதம் நீ புரியும் எண்ணிலா விளையாடல்

எண்ணித் துதிக்க வசமோ ஏறாத மலையேறி
எய்தும் மெய்யடியவரை ஏற்பதுன் பாரமல்லவோ
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
சந்தன சுகந்த சுந்தர சுதந்திர சித்த சங்க சற்குருநாதனே

சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா (2)

ஏந்து புகழ்சூழ்ந்த கனகாந்தகிரி ஓங்கி எழும்
ஏகாந்த ஜோதிமணியே

எண்ணுவோர் எண்ணியதெல்லாம்
பேரின்ப மழை பொழியும் முகிலே
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
நீந்தரிய பிறவிப் பெருங்கடல் கடத்தி

அருள்நிலை சேர்க்க வந்த துணையே
நெடும் பாலைவன வாழ்வில் நின்ற கற்பகமே
நிராலம்பமான மெய்ப்பொருளே
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா

மாந்தளிர் மடந்தையர் மருங்குற மகிழ்ந்தெம்மை

வாழ்விக்கும் கருணை வடிவே
வர நீல சேல சிங்கார சுகுமார
மதிவதனனே மணிகண்டனே
சாந்த சமரச சச்சிதானந்த சன்னதியில்
சரணமே சரணம் அருள்வாய்
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா (3)

நீயலாதென் குறைகள் கேட்பவருமில்லை ஒரு
நிழலில்லை என்று மனமோ நிலையில்லை
நினை அடையும் நியமங்களில்லை
நின் நினைப்பன்றி ஒன்றுமில்லை
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
ஆயிரம் பிழைகள் தனதடியவர் புரிந்தாலும்
ஆதரித்தருளும் அரசே அவதார மூர்த்தயே
அன்பான தெய்வமே ஆதி அய்யப்ப குருவே
தூயனே பம்பைத் துறைவனே சிவஞான ஜோதியே
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
ஈன்றவர் உன்னைத் தொட்டனைத்துய்ய நீ
யார் போன்றுளாயென சொல்லாது
தாயவள் மடித்தலம் இருந்து முத்திரை ஒன்று
தந்தை போல் வைத்த மகனே
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா (4)

அரியமறை புகழ்கின்ற அன்னதானம் செய்யும்
அருளாளர் வாழ்க வாழ்க
அனுதினமும் நின் கோவில் இலகு திசை
தொழுகின்ற அனைவரும் மகிழ்ந்து வாழ்க
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
விரத நியமங்களால் மெய் மறந்துனது பெயர்
விண்ணதிரவே முழங்கி வெற்பேறி வளர்படிகள்
மேலேறி வருகின்ற மெய்த் தொண்டர் வாழ்க
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா

தெரிய விளையாடி அற்புத சித்து காட்டும் உன்
திருநாம மகிமை வாழ்க
தேடும் இக்கவிமாலை பாடுவோர் இன்பச்
சிறப்பெல்லாம் ஓங்கி வாழ்க
சரியை கிரியா யோக ஞான சன்னதி
சரணம் சரணமே சரணம் ஐயா
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா (5)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........ தொடரும்!

7 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. சுவாமி ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 13 விஷயங்களை பற்றி அறிந்து கொள்ளலாம். தெரிந்து கொள்ள வேண்டியவை :

    1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை - முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

    2. மெத்தை, தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல், தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும்.

    3. பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம்.

    4. மற்றவர்களிடம் சாந்தமாகப் பழகவேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது.

    5. விரத நாட்களில் பெண்களை - சகோதரிகளாகவும் தாயாராகவும் கருத வேண்டும்.

    6. வீட்டிலிருக்கும் பெண்கள் மாதவிலக்கானால், அவர்கள் தனி அறையில் ஒதுக்குப்புறமாக பார்வையில் படாதபடி இருத்தல் வேண்டும். அப்படி வசதி இல்லாவிடில், மாலை அணிந்தவர்கள் வெளியில் எங்காவது தங்கியிருத்தல் நல்லது.

    7. விரத சமயத்தில் மாலை அணிந்தவர்களுக்கு மிகவும் துன்பங்கள் ஏற்படும் என்பதும், சோதனைகளுக்கு உள்ளாவார்கள் என்பதும் தவறான கருத்துகளாகும்.

    8. ஒருவேளை, அணிந்திருக்கின்ற ஒரே மாலை தவறுதலாக அறுந்துபோக நேரிட்டால், அதைச் செப்பனிட்டு அணிந்துகொள்ளலாம். இதில் தவறு ஏதுமில்லை. எந்தவிதமான தவறும் செய்யாமல் விரதத்தைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில், இப்படி மாலை அறுந்துவிட்டதே என்ற வீண் மன சஞ்சலமும் அடைய வேண்டியதில்லை.

    9. மாலை போடும் சமயத்தில் எந்தவிதமான பயமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருத்தல் கூடாது. அப்படி மனசஞ்சலம் ஏதாவது இருந்தால், மாலை போடுவதை தள்ளிப்போடுதல் நல்லது.



    10. ஐயப்ப விரதத்தில் வீட்டிலிருக்கும் மனைவி மற்றும் பிற பெண்களின் தொண்டும் அப்பழுக்கற்ற பக்தியும், மிகவும் உயர்வானதும் போற்றத்தக்கதும் ஆகும்.

    11. இருமுடி கட்டும் வைபவத்தை, தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ளுதல் நல்லது. வீடு சுபிட்சமாக இருக்கும். மங்கலமாகவும் இருக்கும்.

    12. மாலையணிந்து சபரிமலைக்குச் செல்லும் நோக்கங்கள் மூன்று: தன்னையே புனிதப்படுத்தி சத்தியமான பதினெட்டாம் படியில் ஏறி பகவான் ஐயப்பனைத் தரிசித்தல்; தன் புலன்களை எல்லாவகையிலும் கட்டுப்படுத்தி நெறியான வாழ்க்கை வாழ்ந்து மனம், உடல் இவற்றைத் தூய்மைப்படுத்துதல், தான் சுத்தமாக இருப்பதோடு அல்லாமல், வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சுத்தமாக இருக்கவைத்து அவர்களையும் பக்தி நெறிக்கு உட்படுத்துதல்.

    13. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து, தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து, இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து, ஒருமுகமாக வழிபட்டால், இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும். படிகள் ஏற ஏற, அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்துகொண்டே இருப்பார்கள் என்பதும் சத்தியம்!
    ஓம் ஐயப்பன் திருவடிகள் சரணம்.
    ஓம் அகத்தியர் திருவடிகள் சரணம்.


    ReplyDelete
  3. Please somebody translate to english

    ReplyDelete
  4. Here are 13 things devotees who fast for Swami Ayyappan must know. Things to know:
    1. It is better to avoid cutting hair, shaving, etc. from the day of evening till the end of fast.
    2. One should spread a Jamukalam on the floor without using mattress, pillow etc.
    3. It is best to keep silent by reducing speech.
    4. Be gentle with others. Do not speak to offend others.
    5. Women should be treated as sisters and mothers on fasting days.
    6. If women in the house are menstruating, they should be secluded in a separate room out of sight. If such facilities are not available, it is better for people wearing garlands to stay somewhere outside.
    7. It is a misconception that those who wear garlands during fasting will suffer a lot and will be subjected to trials.
    8. Perhaps, if the only garland worn accidentally gets cut off, it can be worn after pooja. There is nothing wrong with that. If one observes the fast without making any mistake, one does not have to feel the futile feeling that the garland got cut.
    9. There should not be any fear, doubt or guilt at the time of placing the garland. If there is any such anxiety, it is better to postpone the garlanding.
    10. Charity and unadulterated devotion of the wife and other women of the household during the Ayyappa Vratam is highly exalted and admirable.
    11. It is better to keep the Irumudi ceremony at home. The house will be beautiful. It will also create divine vibes.
    12. The purposes of going to Sabarimala are three:
    to sanctify oneself and ascend the true eighteenth step to visit Lord Ayyappan; To control one's senses in every way and live a moral life and to purify the mind and body,
    Not only to be clean, but also to keep the house and the people in the house clean and subject them to devotion.
    13. If one respects the evening and observes Vrata for a period of time in a proper and regular manner, discards the ego, puts full trust in the Lord, attains complete surrender, and worships single-mindedly, the Lord's favor will be obtained without loss. It is also true that they will continue to rise in their lives as they climb the steps! Om Ayyappan Thiruvadigal charanam. Om Agathiyar Thiruvadigal charanam!

    ReplyDelete
    Replies
    1. Please translate the post of shabarimala

      Delete
  5. எம்பெருமானே அகத்தீசா நின்தாளே... நின்தாளே... நின்தாளே சரணம் சரணம் சரணம்....

    ReplyDelete
  6. Ayya nowadays you are posting all vaaku which is very long. If you need help to type i can help you sir. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete