​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 27 January 2022

சித்தன் அருள் - 1077 - அன்புடன் அகத்தியர் - அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாசநாதர் ஆலயம்!






24/1/2022 அன்று குருநாதர் அகத்தியர் அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாசநாதர் ஆலய திருப்பணி குறித்து திருப்பணி குழுவினருக்கு உரைத்த மறு வாக்கு./ மற்றும் உலகத்திற்கு உரைத்த பொது வாக்கு. 

வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் பாதம் போற்றி !!போற்றியே!! செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே நலன்கள் மிஞ்சும் என்பேன்.

மிஞ்சும் என்பேன்.அப்பனே கவலைகள் இல்லை.

அப்பனே இன்னும் பல பல பல நிலைகள் அங்கு ஒளிந்து கொண்டிருக்கின்றது என்பேன். அப்பனே. 

அவைதன் அப்பனே நல் விதமாக அப்பனே எவ்வாறு என்பதையும்  கூட உண்மை நிலைகள் போகப்போக உங்களுக்கே தெரியும் என்பேன் அப்பனே.

சக்திகள் அவ்விடத்தில் குடிகொண்டிருக்கின்றன.

ஆனால் அப்பனே தானாகவே நல் விதமாகவே எழுந்து நிற்கும் என்பேன் அப்பனே சில சக்திகள்.

அதனால் அப்பனே பலப்பல மனிதர்களும் அப்பனே அங்கு வந்து அப்பனே முன் ஜென்மமதிலே அப்பனே பாப விமோசனம் பெற்று சென்றுள்ளனர் அப்பனே.

அப்பனே அவை மட்டுமில்லாமல் இக்கலியுகத்திலும் அப்பனே பாவம் அப்பனே அகற்றப்படும் என்பேன் அவந்தனை(ஈசனை) நம்பு.

(இவ்வாக்கு உரைத்தபோது கௌளி உரக்க ஒலி எழுப்பி கட்டியம் கூறியது.) 

அப்பனே இவையன்றி கூற நாகங்களும் அப்பனே பல எவ்வாறு என்பதையும் சொல்ல அடியில் அப்பனே புதைந்து இருக்கின்றது என்பேன்.

அப்பனே இவ்வாறு நாக கன்னிகைகளும் இருக்க அப்பனே நல் விதமாக அப்பனே ராகு கேதுக்களுடைய தோஷங்கள் இங்கே வந்தால் கழிந்துவிடும் என்பேன் அப்பனே விரைவில்.

அப்பனே எவை வேண்டும் எதனையும் என்று கூற அப்பனே விரும்பியதை நிச்சயம் கிடைத்துவிடும் என்பேன்.

முதலில் ராகு கேதுக்களின் தோஷம் அங்கே குறைந்துவிடும் என்பேன் அங்கே தங்கி வந்தால் போதுமானது என்பேன்.

அப்பனே இவையன்றியும் கூற அப்பனே நலமாக அப்பனே இவையன்றி கூற அப்பனே எதனை.    எதனையுமென்றும் மாசி மாதத்தில் அங்கே அப்பனே ஒரு நிமிடம் ஈசனும் பின் அம்பிகையும் வருவார்கள் என்பேன்.

அப்பனே இவையன்றி கூற இத்தலத்தில் பல மாற்றங்கள் உண்டு என்பேன் அப்பனே.

இன்னும் கூட அப்பனே பின் ஐம்பொன் சிலைகள் அப்பனே அடியில் புதைந்து கிடக்கின்றது என்பேன்.

அப்பனே இவையன்றி கூற ஞான நிலைகள் உண்டு என்பேன் அப்பனே.

ஆனால் அதனையும் சிவனே அப்பனே எவ்வாறு என்பதையும் கூட எப்பொழுது எழுப்ப வேண்டும்? என்பதையும் கூட எழுந்தருளும் என்பேன் அப்பனே கவலைகள் இல்லை.

அப்பனே நலமாக நலமாக எவை என்று கூறும் அளவிற்கு கூட அப்பனே சிலசில வினைகள் அப்பனை இவையன்றி கூற அப்பனே.

ஒரு ஜென்மத்தில் அப்பனேஎவ்வாறு என்பதையும் கூட உணர்ந்து அப்பனே இவையன்றி கூற அப்பனே அத்திருத்தலத்தை அமைக்கலாம் என்று நினைத்து நினைத்து அமைக்க முடியவில்லை என்பேன்.

அதனால் அப்பனே எதை என்று எதனையும் என்று அப்பனே நீங்கள் எவ்வாறு வந்து எதனையும் என்று கூற அப்பனே முன் ஜென்மத்தில் இருந்தே இவ்வாலயத்தை எழுப்ப எழுப்ப அப்பனே முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டது.

ஆனாலும் ஈசனிடத்தில் அப்பனே பின் உன் ஆலயத்திற்கு சேவை செய்யாமல் அப்பனே எங்களுக்கு மறுபிறவி எவ்வாறு என்பதை கிடைக்க வேண்டும் என்றே நீங்களும் அப்பனே வந்துள்ளீர்கள் இதனை என்றும் அறிந்தே. அதனால்தான் அப்பனே இப்பொழுது அவ் ஆலயத்தை நீங்கள் தன் முறையாக எப்படி விரும்பினீர்களோ இவ்வாலயத்தை அப்படி அமைத்துத்தான். அப்பனே நிச்சயம் அமைத்து விடுவீர்கள் முக்தியும் கிடைத்துவிடும் என்பேன்.

ஈசனும் கண்காட்சியாக அப்பனே ஈசனே நேரில் வந்து கடைசியில் காட்சியுமளிப்பான் என்பேன்.

அப்பனே நலமாக நலம் ஆக. 

இவ்வுலகத்தில் அப்பனே வரும் காலங்களில் அப்பனே பொய்யான மனிதர்களப்பா.

அப்பனே இதனையும் என்று ஈசன் அப்பனை தன் தன் ஆலயங்களை தானே எழுப்பிக் கொள்வான் என்பேன் அப்பனே.

இன்னும் உங்களுக்கும் பல தரிசனங்கள் உண்டு என்பேன் அப்பனே.

ஒன்றைமட்டும் சொல்கின்றேன் அப்பனே நீங்கள் அலைய வேண்டிய தேவை இல்லை என்பேன்.

ஏனென்றால் முன் ஜென்மத்திலே அலைந்து அலைந்து அப்பனே அலுத்து விட்டீர்கள் என்பேன் .

அதனால் உங்களுக்கு ஈசன் அங்கேயே கைலாயத்தில் போல் காட்சியளிப்பான் என்பேன்.

அப்பனே நல்படியாக அப்பனே நல் விதமாக அப்பனே பின் அப்பனே ஒன்றை மட்டும் சொல்கின்றேன் அப்பனே.

மாசி மாதத்தில்(மகா சிவராத்திரி அன்று) அப்பனே அன்னதானம் இடுவீர்கள் நீங்கள்.

அப்பனே அப்பொழுது ஈசனே அம்பிகையுடன் வந்து உணவருந்திச் செல்வான் என்பேன்.

அப்பனே நலமாக நலம் ஆக அப்பனே எவை என்று கூற அப்பனே நல் விதமாக அப்பனே ஈசனுக்கு சேவைகள் செய்து கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே விதமாக உங்கள் குடும்பத்தை ஈசனே பார்த்துக்கொள்வான் என்பேன்.

அப்பனே நலமாக நலம் ஆக இக்கலியுகத்தில் அப்பனே வரும் காலங்களில் அப்பனே மனிதர்களுக்கு மனங்கள் மாறும் என்பேன் பொதுவாகச் சொல்லி விடுகின்றேன் அப்பனே.

மாறும்பொழுது அப்பனே மாயையில் சிக்கிக் கொள்வான் என்பேன்.

மாயையில் சிக்கிக் க்கொண்டு அழிந்து விடுவான். இதுதானப்பா கலியுகத்தில் நடக்கப்போகின்றது என்பேன்.

ஆனாலும் அப்பனே இவற்றையெல்லாம் உணர்ந்து """" ஈசனே சரணாகதி""""" என்று வந்துவிட்டால் அப்பனே ஈசன் அவ் மாயைத்திரையை கிழித்து விடுவான் என்பேன்.அப்பனே.

ஆனாலும் மனிதன் மாயையை தான் நம்பி கொண்டிருக்கின்றான் அப்பனே.

அப்பனே நம்பிக்கொண்டு நம்பிக்கொண்டு மாயையில் விழுந்து அப்பனே தன்னைத் தானே மனிதன் அழித்துக்' கொண்டும்' !!மறு பிறவி!! மறுபிறவி!!! பிரயோஜனம் இல்லாமல் வந்து வந்து கஷ்டங்களைப் பட்டு பட்டு அப்பனே வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே.

இவையெல்லாம் யான் கண்கூடாக பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன்.

ஆனாலும் அப்பனே உண்மை பொருளை நம்பி விட்டீர்கள் நீங்கள். அப்பனே, இறையருள் பலமாக அப்பனே ஈசனே அனைத்தும் பார்த்துக்கொள்வான் என்பேன்.

""அவனுடைய சக்திகள்"" எவ்வாறு என்பதைக் கூட அப்பனே சொல்லமுடியாது என்பேன்.

அப்பனே அழிவுகள் வரும் என்பேன் அப்பனே அப்பொழுது கூட அவனின் சடைமுடியை ஈசன் அருளை பெற்றவர்கள் பிடித்துக்கொள்வார்கள் என்பேன் அப்பனே அதனால் துன்பம் இல்லை என்பேன் அப்பனே.

அப்பனே அழிவுகள் பலமாகவே வரும் என்பேன் அப்பனே வரும் வரும் காலங்களில் அப்பனே.

அதை மனிதன் மனிதனால் தீர்க்கமுடியாது என்பேன் அப்பனே.

""ஈசன் ஒருவனே "" என்பேன் அப்பனே.

அப்பனே அவையன்றியும் கூற மந்திரங்கள்!!! தந்திரங்கள்!!!
அப்பனே இவை சொன்னால் அப்பனே பின் நலமாக வாழ்ந்து விடலாம் என்றெல்லாம் மனிதன் கணக்கு தப்பாக போய்விடும் அப்பனே.

அப்பனே """ஈசன் ஒருவனே இவ்வுலகத்திற்கு""".

அதனால்தான் மூலனும் (திருமூலர் சித்தர்) அப்பனே அறிந்து அறிந்து அப்பனே ஒருவனே தெய்வம் என்றுகூட அப்பனே இதற்காகவே பல பிறவிகள் பின் மூலன் தெய்வத்தை உணர்ந்து உணர்ந்து தெய்வம் இருக்கிறானா?? இல்லையா?? என்றுகூட அப்பனே சில நேரங்களில் தவத்தின் வழியே அப்பனே ஆண்டாண்டுகளாக செய்து செய்து இறைவனை பார்த்தால் !!!யார் ? என்று கடைசியில் பார்த்தால்!!!

!!!! உண்மைப் பொருள் ஈசனே!!! என்று அவந்தனுக்கு(திருமூலருக்கு) விளங்கிவிட்டது.

அப்பனே இதுதான் அப்பொழுதுதான் அவன் மனம் அப்பனே """ஈசன் ஒருவனே""" அப்பனே ஆனாலும் எதனையும் என்று கூற அனைத்தும் கொடுக்கமுடியும் !!!அப்பனே இவ்வுலகத்திற்கு என்பதை கூட யாரால்?? கொடுக்க முடியும்!! என்பதைக்கூட உணர்ந்துவிட்டான் அப்பனே.மூலன்.

அதனால்தான் அப்பனே உணர்ந்து உணர்ந்து பல ஆண்டுகள் தவம் செய்து அப்பனே பல வரிகளில் சொல்லிட்டு போனான் ""ஒருவனே தெய்வன் அவன் தான் ஈசன்""!!!

அப்பனே ஆனாலும் அப்பனே மறைமுகமான அப்பனே பல அவதாரங்கள் அதற்குள்ளேயே எடுத்து விட்டான் ஈசன் என்பேன்.

ஒவ்வொரு யுகத்திலும் கூட இப்பொழுது கூட அவதாரங்கள் எடுத்துக்கொண்டே வந்து கொண்டே இருக்கின்றான் அப்பனே.

அதனால் அப்பனே மனிதன் பிழைப்பதற்காகவே அவை செய்!! இவை செய்!!! இவ்வாறு தரித்திரம் நீங்கும் என்பதையெல்லாம் தப்பாக பொய் கணக்கை போட்டு கொண்டு இருப்பான் ஆனால் அப்பனே!!!

உண்மை பொருள் எதுவென்றால் ஈசனை நாடுவது!!!!

அவந்தனை நாடி விட்டால் அப்பனே சிறிது குழப்பங்கள் வரும் சில கஷ்டங்கள் வரும்.

ஆனாலும் அப்பனே கைவிடமாட்டான் அப்பனே.

இதை பல உரைகளில் யாங்கள் தெரிவித்து விட்டோம் அப்பனே.

ஆனாலும் அப்பனே எவை என்று கூற இனிமேலும் பல திருத்தலங்கள் அப்பனே உலகத்தில் அழிந்து கொண்டிருக்கின்றது அப்பனே.

இவையெல்லாம் கூட அப்பனே மனிதனால் காக்க முடியவில்லையே??? என்பது வருத்தப்படவேண்டிய விஷயம் என்பேன்.

ஆனாலும் நம்பினோம் யாங்கள், சித்தர்களே மனிதன் எப்படியாவது என்று கூட அருள்கள் கொடுக்கின்றோம் என்று ஆனாலும் மனிதனுக்கு அருள்கள் கொடுத்து கொடுத்து அப்பனே அவன் திருடனாக இருந்து பொருள் சம்பாதித்து கொண்டானே தவிர அப்பனே போலியான பக்தியை காட்டிவிட்டான் அப்பனே இது தான் மனிதனுடைய இயல்பு என்பேன்.

அப்பனே அதனால்தான் மனிதர்களில் வரும் வரும் காலங்களில் மனிதனிடத்தில் உண்மை இல்லை என்பேன் அப்பனே.

அப்பனே இவ் தேசத்திலே அப்பனே பல திருத்தலங்கள் எதற்காக?? வடிவமைத்தோம் அப்பனே

இவ் தேசத்திலே பிறந்து விட்டால் பெரும் புண்ணியமப்பா.

அப்பனே அவ் ஆலயங்கள் இருக்க அப்பனே ஆனாலும் மனிதனின் செய்கைகளைப் பார்த்தால் மனிதன் வேண்டுவது தன் சுயநலத்திற்காகவே அப்பனே.

இதை பல வாக்குகளிலும் சொல்லிவிட்டேன் அப்பனே.

இவ்வாறு உணர்ந்து உணர்ந்து அப்பனே இன்னும் எதனை என்று கூறாத அளவிற்குக்கூட அப்பனே மனிதன் பொய்யைச் சொல்லி அப்பனே ஏமாற்றி விடுவான் அப்பனே.

ஆனாலும் அவந்தன் வந்தான் ஏமாறுகிறான் என்று கூட அவந்தனக்கு தெரியாமல் போய்விடும் என்பேன் அப்பனே.

அதனால் நல் விதமான ஆசிகள் உங்களுக்கும் அப்பனே உங்களை நல் விதமாக ஈசனை நல் முறையாக நெருங்கி விட்டீர்கள் அப்பனே சோதனைகள் கொடுத்தான் அப்பனே அதில் கூட நெருங்கி விட்டீர்கள் என்பேன் அதனால் தொந்தரவுகள் இல்லை அப்பனே கடைசியில் நிச்சயமாய் அப்பனே நீங்கள் எவ்வாறு என்பதைக் கூட பல திருத்தலங்களுக்கு செல்லலாம் என்றும் நீங்கள் நினைத்தாலும் உங்களால் செல்ல முடியாது என்பேன் அப்பனே.

எதனால் என்று கூட சொல்லிவிட்டேன் முன் வாக்கிலே யான்.

அப்பனே முற்பிறவியிலே பல ஆலயங்களுக்கு சென்று விட்டீர்கள் அனைத்து ஆலயங்களுக்கும் அதனால்தான் அப்பனே இப்பிறப்பில் அப்பனே எங்கும் செல்ல இயலாது என்பேன் அப்பனே.

அதனால்தான் முன்பே சொல்லிவிட்டேன் அப்பனே நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே ஈசனையும் அம்பிகையையும் தரிசிக்கலாம் என்பேன் அப்பனே.

அதுமட்டுமில்லாமல் முருகனையும் தரிசிக்கலாம் அவ் மலையில்(கோயிலுக்கு பின்புறம் இருக்கும் கைலாசகிரி யில்) மேலே நல் விதமாக அப்பனே.
(இவ் வாக்கு உரைத்த போதும் கௌளி சத்தம் ஒலித்து உத்தரவு இட்டது) 

அப்பனே இவையன்றி கூற நல் முறையாகவே அப்பனே அவ்மலை சாதாரண மலை இல்லையப்பா.(கைலாசகிரி) 

அப்பனே அங்கும் பல பல பல உண்மைகள் புதைந்து கிடக்கின்றது அப்பனே.

வரும் வரும் காலங்களில் அப்பனே அதுவும் அப்பனே நிரந்தரமாகும் என்பேன் அப்பனே.

அவற்றையெல்லாம் யான் சொல்லி விட்டால் அப்பனே மனிதன் அப்பனே அதையும்  பின் அழித்து விடுவான் என்பேன்.

அதனால்தான் யான்  இப்போது சொல்ல வில்லை அப்பனே வரும் வரும் காலங்களில் வாக்குகளாக சொல்கின்றேன் அப்பனே.

மனிதன் அப்பனே இக்கலியுகத்தில் பணத்தின் பின்னாலே ஓடுவான் என்பேன்.

பணம் தான் தெய்வம் என்று வணங்குவான் என்பேன்.

ஆனாலும் அவை தன் நிச்சயம் பின் காக்காது என்பேன்.

அப்பனே அவையன்றி கூற அப்பனே இறைவனே காப்பான் என்பது அப்பனே உண்மை.

ஆனாலும் அப்பனே மனிதனிடத்தில் பணங்கள் சேரும் ஆனாலும் பிரயோஜனம் இல்லை என்பேன் அப்பனே.

பணங்கள் சேரும்பொழுது அப்பனே பல வழிகளிலும் கர்மாக்களை சேர்த்து அப்பனே அவையன்றி கூற எதனையும் என்று கூற பணங்கள் எத்தனை எத்தனை விதமான பணங்கள் அப்பனே.

பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் வந்துவிட்டேன் புவியுலகில் அப்பனே.

தரித்திர மனிதர்கள் என்பேன் அப்பனே.

மனிதனுக்கு அப்பனே அறிவுகள் இல்லை என்பேன்.அப்பனே.

அப்பனே இவையன்றி கூற சிந்தனையில் அப்பனே இறைவனை வையுங்கள் அப்பனே நல் விதமாக மாற்றங்கள் ஏற்படும் என்பேன்.

ஆனாலும் கலியுகத்தில் மாயை அழித்துவிடும் என்பேன் அப்பனே.

மாயையில் சிக்கிக் கொள்ளாதீர்கள் அன்பு மகன்களே அப்பனே.

இப்பொழுதும் இதை நன்றாக உணர்ந்து அனைவருக்கும் சொல்கின்றேன் அப்பனே.

மாயை என்பது அப்பனே சிறு வேடம் என்பது அப்பனே.

அப்பனே  அது நடிக்க காத்துக் கொண்டிருக்கின்றது அப்பனே.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட அவ் மாயையில் இருந்து மீண்டு வருவதற்கு ஒரே காரணம் தான் உண்டு.

அதுதான் இறை பலம் என்பேன்.

அப்பனே இறை பலம் பெற்றுவிட்டால் அப்பனே நலன்களே மிஞ்சும் என்பேன் அப்பனே.

அப்பனே இன்னும் மனிதன் ஏமாற்று பேர்வழி என்பேன் அப்பனே.

அப்பனே மனிதனை யான் திருடன் என்பேன் அப்பனே.

ஏனென்றால் அப்பனே தன் வாழ்க்கைக்காகவே அப்பனே அனைத்தும் செய்து விடுகின்றான் அப்பனே.

அப்பனே அகத்தியன் சொல்கின்றான் அப்பனே பின் சித்தர்கள் சொல்கின்றார்கள் என்றெல்லாம் வரும் காலங்களில் அப்பனே பொய் பித்தலாட்டமிட்டு அப்பனே பணம் பறிப்பார்களப்பா.

அப்பனே சொல்கின்றேன் மக்களுக்கு.

யாரையும் நம்பி விடுதல் கூடாது என்பேன் அப்பனே.

அப்பனே இவையன்றி கூற அப்பனே நம்பி அப்பனே பிழைத்தது போதும் அவர்களும் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட எங்களை தவறாக பயன்படுத்தி அப்பனே பொருளீட்டி அப்பனே வசதி படைத்து விட்டார்கள்.

ஆனாலும் அவர்களுக்கும் கர்மங்கள் என்று தெரியவில்லை அப்பனே.

நிச்சயம் யாங்கள் இக்கலியுகத்தில் அவர்களுக்கும் தண்டனை கொடுத்துக் கொண்டு வருகின்றோம். அவ் தண்டனைகள் பார்த்தால் அப்பனே பின் அதிர்ச்சிகள். 

அப்பனே இவையன்றி கூற பின் வரும் காலங்களில் யாங்கள் கூட சித்தர்களுக்கு தலம் அமைப்போம்!!! புசுண்ட (காகபுஜண்டர்) முனிக்கு தலம் அமைப்போம் !!!!
போகனுக்கு தலம் அமைப்போம் 
இவ்வாறு தலங்கள் அமைப்போம் பல சித்தர்களுக்கு தலம் அமைக்க போகின்றோம் அகத்தியனுக்கும் தலம் அமைக்க போகின்றோம்.

எதனால்?? எந்தனுக்கு தலம்????????? 

சொல்லுங்கள் அப்பனே.

யான் தலங்கள் எவ்வாறு என்பதை கூட அவை எல்லாம் கேட்கவில்லை என்பேன்.

அன்பு தான் அப்பனே மனிதர்கள் நேர்மையாக நேர்மையுடன் வாழ வேண்டும் அப்பனே.

அப்பனே பின் பொய் கூறாமை அப்பனே. 

தர்ம சிந்தனையுடன் வாழ வேண்டும்.  அதுதானப்பா அப்பனே திருத்தலம்.

அப்பனே திருத்தலம் எங்கே? உள்ளது அப்பனே உன் மனதிலே உள்ளது அப்பனே.

உன் மனம் நன்றாக இருந்தால் அங்கே யான் குடி கொள்வேன் அப்பனே.

மற்ற இடங்களில் எல்லாம் யான் குடிகொள்ள போக மாட்டேன் என்பேன்.

அப்படி அவ் தலங்களை அமைத்தாலும் அப்பனே அங்கெல்லாம் உண்மைப் பொருள் இல்லை என்பேன்.

அப்பனே எதற்காக திருத்தலம் அமைப்பீர்கள் என்பதை கூட

யான் எந்தனுக்கு ஏதடா ??அப்பனே யானே ஒரு பரதேசி. (சர்வ லோக சஞ்சாரி) என்பேன்.

எந்தனக்கு இவ்வாறு தலங்களை அமைப்பதா???????? 

அப்பனே சித்தர்கள் எவ்வாறு என்பதை கூட மனித இனத்தை காக்க வந்தவர்கள் அப்பனே. அதனால் அப்பனே அவை இவை என்றெல்லாம் சொல்லி பொய் கணக்கை கொண்டு சித்தனை தரிசிக்கலாம் முத்தியைப் பெறலாம் சித்தருக்கு இவ் மந்திரம் சொன்னால் சித்தன் வருவான் பித்தன் வருவான் என்பதை எல்லாம் மனிதனின் பின் பைத்தியக்கார குணம் என்பேன் அப்பனே.

அப்பனே எவ்வளவு சொன்னாலும் மனிதன் திருந்த போவதாக இல்லை என்பேன் அப்பனே.

தரித்திர மனிதன் அப்பனே மனிதனை இனிமேலும் அப்பனே இவையன்றி இப்படியே சென்று கொண்டிருந்தால் ஒவ்வொரு விதத்திலும் கஷ்டத்தை யாங்களே கொடுத்து விடுவோம்.

அப்பனே எவ்வாறு என்பதை கூட மக்களை அப்பனே யாங்களே பேணி காப்போம் என்பேன் அப்பனே.

இவையன்றி கூற அப்பனே பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே.

அப்பனே பின் எந்தனுக்கு தலம் அமைத்து விட்டு யான் அகத்தியனுக்கு பூஜைகள் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் அதைச் செய்ய வேண்டும் அவை செய்ய வேண்டும் இவை செய்ய வேண்டும் என்றெல்லாம் அப்பனே காசுகள் பறித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

அதை யான் கேட்டேனாடா?? முட்டாள் மனிதனே!!!

இல்லை என்பேன்.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட உண்மை நிலையை புரிந்து அப்பனே என்னுடைய அடியார்கள் இதைத்தான் சொல்லவேண்டும் இனிமேலும் அப்பனே அப்பொழுதுதான் ஆசிகள்.

நேர்மையாக நட.

நல் உணர்வை நல் உணர்வை மனதில் எண்ணி இப்படி இரு.

இப்படி நெறிமுறைகள் பயன்படுத்து.

இப்படி இருந்தால் சரியான பாதையை வகுத்து விடலாம்.

பின்  நல்லெண்ணங்கள் அப்பனே.

தர்மங்கள் அப்பனே காக்க செய்ய வேண்டும்.

அப்பொழுதுதான் என்னுடைய தரிசனம் நிச்சயம் கிடைக்கும் என்பேன்.

அதை விட்டுவிட்டு யான் திருத்தலம் அமைக்கின்றேன். அங்கு பரிகாரங்கள் செய்கின்றேன் இவ்வாறு செய்கின்றேன் அவ்வாறு செய்கின்றேன் குறைகள் நீங்கும் என்றால் அப்பனே தரித்திரம் உந்தனக்குத்தான். அப்பனே அங்கு யான் இருக்க மாட்டேன் அப்பனே.

அப்பனே சித்தர்கள் எளியவர்கள் என்பேன். அப்பனே நீங்கள் எங்களை காக்க தேவையில்லை.

யாங்கள் தான் உங்களை காக்க வேண்டும் அப்பனே.

அதனால் கடைசி ஒரு வாய்ப்பையும் சொல்லி விடுகின்றேன்.அப்பனே.

அதனால் அதைச் செய்கின்றேன் இதைச் செய்கின்றேன் என்றெல்லாம் மக்களை ஏமாற்றாதீர்கள் என்பேன்.

அப்படியிருந்தும் மனிதர்கள் அப்பனே பின் தவறான வழியில் பொருளீட்டி விட்டு பணம் சேர்ந்துவிட்டதென்பதற்கிணங்க அப்பனே இவ்வாறு என்று கூட அவந்தனுக்கு அப்பனே மனம் சந்தோஷம் இல்லை என்பேன் அப்பனே.

மனதில் குழப்பங்கள் அதனால் திருத்தலம் கூட பின் எவ்வாறு என்பதை கூட நினைத்து பார்க்கும் அளவிற்கு கூட 

அப்பனே திருத்தலம் என்பது அப்பனே "தானாகவே சுயம்பாகவே"" எழுந்தருள!!! வேண்டும் என்பேன் அதுதான் நன்மையப்பா.

அதனால் நீங்கள் அப்பனை எவ்வாறு என்பதையும் கூட அதுவும் அப்பனே அங்கும் சுயம்பு இருக்கின்றது அப்பனே.

ஈசனே அமைத்துக் கொள்வான் என்பேன்.

 அப்பனே இதனால் அப்பனே நலன்களே பாரிக்கும் என்பேன் அப்பனே. 

அப்பனே இக்கலியுகத்தில் அப்பனே மனிதனின் செய்கைகள் அப்பனே ஒவ்வொன்றாகவே பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே.

அப்பனே அப்பனே எவ்வாறு என்பதை கூட நினைத்துப் பார்க்கும் பொழுது அப்பனே """என்னையே"" எவ்வாறு என்பதையும் கூட.............பின் பரவாயில்லை. 

அகத்தியன் பெயரைச்சொல்லி ஏமாற்றி கொண்டோம் அகத்தியன் என்ன பார்க்கத்தான் போகின்றானா?? என்ன?? பார்க்கவா போகின்றான்??? என்றெல்லாம் கூட என்னை வைத்து அப்பனே பொருளீட்டி விட்டார்கள்.

ஆனால் அது ""கர்மா ""என்று அவந்தனக்கு தெரியவில்லை அப்பனே.

அப்பனே சொல்லுகின்றேன் அப்பனே இன்னொரு விஷயத்தையும்!!!!

அப்பனே ஒரு குரு இருந்தான். அந்த குரு அமைதியாகவே இருந்து வந்தான் ஓர் இடத்தில் தவம் செய்து கொண்டிருந்தான்.

ஆனாலும் சீடர்களும் கூட அப்பனே அங்கே தங்கி இருந்தார்கள் அங்கேயே கூட பல சீடர்கள்.

ஆனாலும் சீடர்களுக்கு சந்தேகம் !!!குருவானவன் ஏன்?? இப்படி கூட எவ்வாறு என்பதையும் கூட இவன் தவம் செய்து கொண்டிருக்கின்றானே இவனுக்கு வேலை எதுவும் இல்லையா என்று கூட.

ஆனாலும் சீடர்களின் நினைப்பு குருவிற்கு புரிந்துவிட்டது.

ஆனாலும் சீடர்களோ பின் எவ்வாறு என்பதை கூட பின் குருவிற்கு அப்பனே பொய்யான பக்தியைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனாலும் இவையன்றி கூற இதனையும் என்று கூற குரு நன்றாக அறிந்து விட்டான்.

ஆனாலும் சீடன் மெது மெதுவாக பின் குருவைப் பார்த்து 

!!!நன்றி குருவே!!!

அப்பனே அனைத்தும் நீதான் என்றெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டு இருந்தனர்.

ஆனாலும் குருவும் கண்டுகொள்ளவில்லை.

ஒருநாள் அப்பனே  இவையன்றி  கூற குருவும் அப்பனே பின் சீடர்களுக்கு சொல்லிவிட்டு சென்றுவிட்டான். யான் எவை என்று கூற நீங்கள் இங்கேயே இருங்கள் நான் ஒரு மாதம் கழித்து விட்டு பின் இவை என்று கூற மனிதர்களை பார்த்து விட்டு வருகின்றேன் என்று.

ஆனாலும் அதற்குள்ளே சீடர்கள் எவ்வாறு என்று கூட நினைத்து பார்க்கும் அளவிற்கு குரு தான் போய் விட்டானே!!!! அவன் திரும்ப வர மாட்டான் என்று எண்ணி யான்தான் குரு எந்தனுக்கு அனைத்தும் தெரியும் என்றெல்லாம் பல மனிதர்களை உருவாக்கி பின் எவ்வாறு என்பதையும் கூட பல மனிதர்களை சேர்த்துக்கொண்டு அதைச் செய்கின்றேன் இதைச் செய்கின்றேன் என்றெல்லாம் ஏமாற்றி பிழைப்பு நடத்தி பின் இவர்களும் பின் பின் எவ்வாறு என்பது கூட பின் பணம் சேர்த்து வைத்து விட்டார்கள் .

ஆனாலும் பின் இவர்களுக்கு குரு திரும்பவும் வரக்கூடாது வரக்கூடாது என்று எண்ணங்கள்.

ஆனாலும் குரு இவர்களின் மனநிலையை அறிந்து விட்டான். 

சரி பிறகு பார்ப்போம் என்று குருவும் பல ஆண்டுகள் வரவில்லை.

ஆனாலும் பின் இவர்களும் எவ்வாறு என்பதையும் கூட சந்தோச பட்டு விட்டார்கள்.

குரு வரவில்லை!!! குரு வரவில்லை!!! வரவில்லையே!!!! யாம் தான் பின்  நம்தனக்கும் அனைத்தும் வந்துவிட்டதே என்று எண்ணி ஆனந்தப்பட்டார்கள். 

ஆனாலும் குருவும் அனைத்தும் உணர்ந்தவன் ஆனாலும் ஒரு நாள் திடீரென்று வந்து விட்டான்.

ஆனாலும் சீடர்கள் எவ்வாறு என்பதையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

பார்த்துக்கொண்டு எவ்வாறு என்பதையும் கூட அப்பொழுது கூட குருவிற்கு இவரை எவ்வாறு என்பதைக்கூட இங்கு என்று கூட குருவே இங்கு அமர்ந்து இரு யாங்கள் அனைவரும் உங்களுக்கு பாலபிஷேகம் கால்களுக்கு பாத அபிஷேகம் செய்து மரியாதை செய்கின்றோம் உள்ளே சென்று அனைத்தும் எடுத்து வருகின்றோம் என்று கூறிவிட்டு அனைவரும் உள்ளே சென்றார்கள்.

ஆனால் உள்ளே சென்ற சீடர்கள் பின் குருவை பழிவாங்க இவ்வாறு குருவே திரும்பவும் வந்து விட்டானே இவந்தனை இங்கேயே நசுக்கி சாகடிப்போம் இவந்தனை விட்டுவிட்டால் நம்தனக்கு ஏதும் வராது என்று கூட இவர்கள் யூகித்துக் கொண்டார்கள்.

ஆனாலும் குரு அனைத்தும் அறிந்து கொண்டுதான் இருக்கின்றான். 

ஆனாலும் இவ் சீடர்கள் பின் நல் முறையாக நீ அதைச் செய் இதைச் செய் என்றெல்லாம் பின் எதை என்று கூட யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது....

அப்பனே அங்கு காற்றோட்டம் வந்துவிட்டது வெள்ளங்கள் வந்துவிட்டது பின் அப்பனே அவர்கள் சேர்த்த பொருள்களெல்லாம் அடித்துச் சென்றுவிட்டது.

ஆனாலும் அப்பனே இவர்களும் அப்பனே அவ் வெள்ளத்தில் மிதந்து அப்பனே.... 

குருவே!!!  குருவே!!!! 

எங்களை காப்பாற்று!!! காப்பாற்று!!! என்றெல்லாம் குருவே!!! குருவே!!! உங்களுக்கு நாங்கள் உண்மையாக இருந்தோம் இப்படி எல்லாம் கை விட்டு விட்டாயே என்றெல்லாம் குரு !!வா!  வா.  வா! வந்து எங்களை காப்பாற்று கூக்குரலிட்டு பயந்து கத்தினார்கள்.

ஆனாலும் இவையன்றி கூற அனைத்தும் பின் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கின்றது பணங்கள் சம்பாதித்து வைத்த பொருள்கள் பல செல்வங்கள் பல தங்கங்கள் வைரங்கள். ஆனாலும் இவற்றின் மீது பின் இவையன்றி கூற பின் அறியாத ஆனாலும் குருவும் கூட அமைதியாக தியானித்துக் கொண்டு இருந்தான்.

ஆனாலும் இவர்கள் ஒரு விதத்தில் அப்பனே இவையன்றி கூற பின் குரு குரு என்று குருவானவன் வரவில்லையே என்று அதி விரைவிலே ஆனாலும் இவர்கள் ஐந்து பேரும் அப்பனே குருவே நீ குருவே இல்லை பொய்யான குரு நீ இல்லை நீ இல்லை என்றெல்லாம் திட்டித் தீர்த்துக் கொண்டே... அப்பனே அப்படியே வெள்ளத்தில் சென்றுவிட்டார்கள் அப்பனே.

இப்பொழுது புரிகின்றதா?? இதிலிருந்து அர்த்தம் என்ன சொல்கின்றது!!, என்ன செய்கின்றது!! என்று அப்பனே!!!

அவன் அவன் கர்மா அவந்தன்.. அவன்தான் அனுபவிக்க வேண்டும் என்பேன் அப்பனே.

அப்பனே போலியாக நடித்துக் கொண்டு இருந்தாலும் குருவிற்கு தெரிந்துவிடும் அப்பனே.

ஆபத்துக்காலத்தில் அப்பனே இவையெல்லாம் உதவாது என்பேன்.

அதனால் தான் உண்மையாக நேசியுங்கள் அப்பனே.

அனைத்தும் சேரும் அப்பனே இறைவனையே தரிசனம் செய்யலாம் தரிசிக்கலாம் என்பேன்.

உங்களுக்கு நிச்சயம் அப்பனே நீங்கள் செய்த புண்ணியம் அப்பனே பலம் மிகுந்தது என்பேன்.

அப்பனே அங்கேயே ஈசன் நிச்சயம் காட்சியளிப்பது மெய்யே.

அனைத்தும் கொடுப்பான் உங்களுக்கு அப்பனே.

நல் விதமாக அவந்தன்(ஈசன்) திருக்குடிலையும் அப்பனே அவந்தனே  அமைத்துக் கொள்வான் என்பது மெய்யே. அப்பனே

நல் விதமாக சித்தர்கள் யாங்களும் அங்கே வருவோம் அப்பனே.

நல் விதமாக எது தேவையோ!! அவை எல்லாம் மனிதர்களுக்குள்நுழைந்து அதையெல்லாம் செய்ய வைப்போம் .

நீங்கள் ஒன்றும் கவலை பட அவசியம் இல்லை என்பேன்.

அப்பனே நீங்களும் ஒவ்வொருவரும் அப்பனே எவ்வாறு என்பதை கூட இதனையே சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே .

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நீங்கள் கருவியாக இருந்தால் மட்டுமே போதுமானது.

மற்றவை எல்லாம் யாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் அப்பனே .

இதனடியில் பல சக்திகள் மிதந்து கிடக்கின்றது.

அவையெல்லாம் மேலே எழும்பும் என்பேன்.

அப்பனே கவலைகள் இல்லை கவலைகள் இல்லை அப்பனே நல் முறையாக மீண்டும் அப்பனே அதி விரைவிலேயே அங்கே வந்து பல வாக்குகள் சொல்கின்றேன் அப்பனே.

ஆலயம் முகவரி மற்றும் விபரங்கள். 


அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் ஆலயம். 
பள்ளித்தெரு கிராமம். 
ஆம்பூர் வட்டம் திருப்பத்தூர் மாவட்டம். 

முருகன் கோயில் முகவரி 

அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், கைலாசகிரி. 
கெடம்பூர், ஊமராபாத் அஞ்சல்,
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம்,
தமிழ்நாடு - 635808
தொலைபேசி
+91 9080776377.

இங்கு அருள் பாலித்து வரும் உமா மகேஸ்வரி உடனுறை ஸ்ரீ கயிலாயநாதர் கற்கோயில் கருவறை மகாமண்டபம் நடராஜர் விநாயகர் முருகர் வள்ளி தெய்வானை நந்திதேவர் நால்வர் நவகிரகம் பைரவர் சண்டிகேஸ்வரர் சண்டிகேஸ்வரி உள்ளிட்ட அனைத்து மூர்த்திகளுக்கும் தனி சன்னதி மற்றும் ராஜகோபுரம் கருங்கல்லால் திருப்பணி செய்ய உள்ளது.

பக்தகோடிகள் தங்களால் இயன்ற பொருள் உதவி நிதி உதவி அளித்து இச் சிவாலய திருப்பணி புண்ணியத்தில் பங்கு பெறுமாறு பக்தியுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு சிவனடியார் திருப்பணி குழு மற்றும் ஊர் பொதுமக்கள்.

கோயில் பூசாரி தொடர்பு எண் : பழனி சிவனடியார்.
7373422236

நிதி உதவி செய்ய வேண்டிய முகவரி.

SRI UMAMAHESHWARI KAILAYANATHAR TRUST. (REG NO :BT 796788.)
ACCOUNT NUMBER : 60342083334.
BANK: BANK OF MAHARASHTRA. 
AMBUR BRANCH. 
IFSC CODE NO: MAHB0001603.

CONTACT MOBILE NO. 9943301891. 9787140075.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள் .............. தொடரும்!

Monday, 24 January 2022

சித்தன் அருள் - 1076 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே

சமீபத்தில் குருநாதர் அகத்திய பெருமான் அடியவர்கள் வாக்குரைப்பின் போது சில பொதுவான உபதேசங்களை கூறியிருந்தார். அதை பற்றிய ஒரு தொகுப்பு.

அப்பனே இவ்வுலகம் மிகவும் விசித்திரமானது விசித்திரமான இவ்வுலகத்தில் மனிதர்கள் விசித்திரமானவர்கள் என்பேன்.

அப்பனே மனிதர்கள் பணம் ஈட்டுவதற்காக பலவழிகளிலும் தொழில் செய்து ஈட்டுகின்றனர்.

அவ் தொழில்களில் முறையாக நேர்மையாக நடந்து பின் சம்பாதித்து வாழ்தல் வேண்டும்.

ஏழையின் வயிற்றில் அடித்து வாழ்வது சிறப்பாகாது. அது கடைசியில் பெரும் கர்மங்கள் ஆக மாறி விடும்.

அப்பனே அனைவரும் எப்படி எப்படியோ சம்பாதிக்கிறார்கள் அவர்கள் அனைவரும் நன்றாக தான் இருக்கின்றார்கள் என்று யாரும் நினைக்க கூடாது.

இதிலும் கூட சூட்சமங்கள் உள்ளது.

உங்கள் மனசாட்சிக்கு எதிராக எதையும் செய்யக் கூடாது என்பேன்.

அப்படி செய்தால் அப்பனே பின்வருவது பாவக் கணக்கில் என்பேன்.

அப்பனே எவை என்று கூற அப்பனே சொல்கின்றேன்

ஒரு சீடன் ஒரு குருவிடம் சென்றானாம் .

அப்பனே சீடன் குருவிற்கு அனைத்தும் செய்து கொண்டிருந்தான் ஆனாலும் குருவினிடத்தில் சீடன் நற்பெயரை எடுத்துக் கொண்டான்.

ஆனாலும் எடுத்துக் கொண்டதற்கு இணங்க சீடன் பின் இவ்வாறு நினைத்தான்.

பின் குரு இருக்கின்றான் அனைத்துமே நம்தனக்கு செய்துவிடுவான். என்று.

ஆனால் இவை என்று கூற அவந்தனக்கு தவறு எவ்வாறு என்பது கூட தெரியவில்லை. ஆனால் நான் தவறு செய்தாலும் குரு மன்னித்து விடுவார். நாம் தான் குருவிற்கு அனைத்தும் செய்து விட்டோமே என்று. 

ஆனாலும் ஒருநாள் இவன் தெரியாமல் குருவிற்கு குருவிற்கு தெரியாமலே எவ்வாறு என்பதையும் கூட பின் அனைத்து தவறுகளையும் செய்துவிட்டு. தைரியமாக வந்து குருநாதா உந்தனுக்கு நான் பல வகையிலும் எப்பொழுதும் கடை நாள் வரையிலும் கடைபிடிக்க வேண்டும் உந்தனுக்கு சேவை செய்ய வேண்டும் இவை என்று கூற இப்படி சொன்னானாம்.

ஆனாலும் குரு உணர்ந்து விட்டான்.

இவன் என்ன செய்வான் என்பது கூட.

ஆனாலும் குரு மௌனமாக காத்துக்கொண்டிருந்தான் ஆனாலும் இவந்தன் குருவிற்கு தெரியாமலேயே அனுதினமும் செய்து வந்தான் தவறுகளை.

ஆனாலும் இவன் செய்வது குருவிற்கு தெரியாது என்று கூட இவன் நினைத்துக் கொண்டிருந்தான்.

ஆனால் குரு அனைத்தும் அறிந்தவன் என்பதுகூட இவந்தனக்கு தெரியாமல் போய்விட்டது.

ஆனாலும் சேவைகள் செய்யட்டும் செய்யட்டும் என்று கூட பின் குருவும் அமைதியாக பொறுத்து இருந்தான். இவந்தனும் பல தவறுகளை செய்துவிட்டு குருவிற்கு பல சேவைகளை செய்து வந்தான்.

ஆனாலும் கடைசியில் இவன் செய்த தவறுகள் இவந்தனக்கு வினையாக வந்துவிட்டது.

கை கால் முடக்கம் என்று கூட கண் பார்வை மங்கிவிட்டது.

ஆனாலும் குருவினடத்தில் அப்பொழுது வந்தான்.

குருவே உந்தனக்கு பல சேவைகளை செய்தேன் பலவற்றை யான் செய்து கொண்டே இருக்கின்றேன். ஏன் எனக்கு இந்த நிலைமை என்று கேட்க.

ஆனாலும் குரு சொன்னான் அப்பனே நீ செய்தது அனைத்தும் எந்தனுக்குத் தெரியும்.

ஆனாலும் நான் கண்டுகொள்ளவில்லை.

ஆனாலும் முன்பே நீ நினைத்தாய் யான் செய்து வருவது நல்லது என்று கூட.

ஆனாலும் எவை என்று கூறும் அளவிற்கு கூட என்னிடத்திலேயே நீ இவ்வாறு என்று கூட சொல்லாமல் செய்து கொண்டிருந்தாய்.

அப்பனே இப்பொழுது இதனை அனுபவிக்கின்றாயா!!! எதனை??  இதுதானப்பா விதி.

விதி தன்னில் அப்பனே பின் அவரவர் செய்த பின் கர்மத்திற்கு தண்டனை அனுபவித்து ஆக வேண்டும் என்பதே .
அப்பனே இதை எவை என்று கூற  குருவும் தடுக்க முடியாது என்பதே இயல்பு அப்பனே.

இதைப் பற்றி மேலும் விரிவாகக் கூறுகின்றேன் அப்பனே.

அப்பனே இதையன்றி கூற அப்பனே யான் கூறிவிடுகின்றேன் அப்பனே.

அப்பனே ஓர் குருவிடம் அப்பனே ஒரு சீடன் நன்கு வாழ்ந்து வந்தான் என்பேன்.

வாழ்ந்து வந்தான் என்பேன்.

குருவிற்கு தேவையானதை அனைத்தும் செய்வித்தான் என்பேன்.

ஆனாலும் அப்பனே இவையன்றி கூற அப்பனே சீடன் அப்பனே பின் ஏழ்மை நிலையில் இருந்தான்.

ஏழ்மை நிலையில் இருந்த போதிலும் குருவிற்கு முறையாக குருவிற்கு சேவை செய்ய முடியவில்லை அப்பனே.

அப்பனே இவை என்று கூற பின் திரும்பவும் சீடன் குருவிடம் வந்தான் என்பேன்.

வந்து குருவே என்னால் எதையும் செய்ய முடியாது உந்தனக்கு.

உந்தனக்கு ஏனென்றால் யான் அனைத்தும் இழந்து விட்டேன். இழந்துவிட்டேன் எவை என்று கூற என்னிடத்தில் ஏதுமில்லை என்று.

ஆனாலும் குருவானவன் பின் மௌனத்தை காத்துக் கொண்டிருந்தான்  இவன் என்ன செய்கின்றான் என்று.

ஆனாலும் சீடனோ பின் குருவிற்கு ஏது எதை செய்வது என்று கூட தெரியாமல் வாழ்ந்து வந்தான்.

ஆனாலும் இவையன்றி கூற பின் ஒருநாள் குருவும் மாண்டு விட்டான் என்பேன்.

மாண்டு விட்டான் என்பேன் அதனால் சீடன் எவ்வாறு என்று கூற நினைத்து பின் குருவானவன் மாண்டு விட்டான் எந்தனக்கு யாரும் துணை இல்லை.

துணை இல்லை என்று கூட நினைத்து விட்டான் ஆனாலும் குருவானவன் மாய்ந்து விடவில்லை.

மாய்ந்து விடவில்லை இவன் எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பூமிக்கடியில் இருந்து கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான் பின் உடம்பு தான் மாண்டு விட்டதே தவிர. அவன் ஆன்மா மாண்டு விடவில்லை.

ஆனாலும்  இவந்தனக்கு(சீடன்) சில தவறான எண்ணங்கள் வந்துவிட்டது.

ஏன்? நம்தனக்கு எவ்வாறு என்பதையும் கூட பணம் பொருட்கள் சேர்த்து நம் குருநாதருக்கு விதமாக திருத்தலம் அமைக்கலாம் என்று.

ஆனாலும் இவை என்று கூற அனைவரிடத்திலும் பின் கையேந்தினான். 

கையேந்தி சில காசுகள் வந்துவிட்டது.

ஆனாலும் குறுக்குப்புத்தியால் பின் ஏன் இவ்வளவு மனிதர்களிடத்தில் யான் பிச்சை எடுக்க வேண்டும்?

ஆனாலும் இவையன்றி கூற பல இல்லங்களுக்குச் சென்று நல் விதமாக கொள்ளையும் அடித்தால் எவ்வாறு என்பதை கூட இதனையும் என்று பார்த்தால் நம்தன் குருவிற்கு பெரிய திருத்தலமே அமைத்து விடலாமே என்று எண்ணி பல பல இல்லங்களிலும் கொள்ளை அடித்தான்.

ஆனாலும் பெரிய நல் விதமான செல்வங்கள் சேர்த்துக் கொண்டான் சேர்த்துக் கொண்டான் என்பதற்கிணங்க அனைத்து செல்வங்களும் அவந்தனக்கு வந்துவிட்டது.

வந்துவிட்டதற்கிணங்க பின் குருவிற்கும் செய்தான் திருத்தலத்தையும் அமைத்தான் நன்றாகவே.

நன்றாகவே அமைத்து திடீரென்று அவந்தனக்கு பல சோதனைகள் வந்துவிட்டது.

பல சோதனைகளும் வந்துவிட்டது என்பேன்.

அவந்தன் பின் இல்லத்திலும் பின் சுலபமாக தேவை என்று கூற அவந்தன் மனைவிக்கும் நோய்கள் வந்து விட்டது நோய்வாய் பட்டு விட்டாள். பிள்ளைகளுக்கும் கஷ்டங்கள் ஆகிவிட்டது.

எவை என்று கூற திரும்பவும் எவ்வாறு என்பதையும் கூட அவன் ஆலயத்திற்கு வந்து அமர்ந்தான்.

குருவை திட்டி தீர்த்தான் என்பேன்.

உன்னைத்தான் நான் நம்பிக்கொண்டிருந்தேன் உன்னையே நம்பி இருந்தேன். நம்பியே இருந்தேன் உந்தனக்கு ஆலயத்தையும் எழுப்பினேன். இவையெல்லாம் செய்துவிட்டு பின் எவை என்று வீணடித்து பின் நீ எந்தனக்கு ஏதும் செய்யவில்லையே??

இவ்வாறு யான் கஷ்டப்படும் பொழுது எவ்வாறு என்பதையும் கூட எந்தனுக்கு உதவிகள் இல்லையே நீ உதவிகள் செய்ய வில்லையே என்று.

நீ பொய்யே!!! 

உந்தனக்கு இறையருளே இல்லை.

நீ ஒரு குருவே இல்லை என்றெல்லாம் திட்டி தீர்த்தான்.

ஆனாலும் தவறு இவன் மேலே இருக்கிறது. என்று கூட எண்ணிக்கூடப் பார்க்கவில்லை.

ஆனாலும் அப்போது கூட அடியிலிருந்து குரு பார்த்துக்கொண்டே இருந்தான் இதையெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தான்.

ஆனாலும் இவையன்றி கூட குருவிற்கு இவந்தன் பிரச்சினையை தீர்க்க தெரியும்.

ஆனாலும் விட்டு விட்டான் இவன் செய்த தவறுகள் இவனையே வாட்டுகின்றது என்பது. அப்பனே இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்பனே இவை என்று கூற இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன். 

அப்பனே குருவானவன் அப்பனே பின் சீடனானவன் ஒரு மரத்தடியில் பின் இருவரும் உட்கார்ந்து இருக்கின்றனர்.

அப்பனே குருவானவனுக்கு மட்டும் உணவு அருந்த அனுதினமும் ஓராள் வந்து உணவை வைத்து கொண்டிருந்தார்கள்.

சீடனும், சீடனுக்கு இல்லை உணவு.

ஆனாலும் சீடன் பார்த்துக் கொண்டேதான் இருந்தான் நம் குருவிற்கு மட்டும் உணவு வருகின்றதே நமக்கு உணவு வரவில்லையே என்று.

ஆனாலும் சில நோக்குகளையும் பார்த்து பார்த்து இவை என்று அளவு அறியாமல் சீடனும் காத்துகொண்டு இருந்தான்.

பின் வரவில்லை வரவில்லை என்று கூட.

எத்தனை என்று குறிப்பிட்ட அளவிற்கு கூட ஒரு நாள் சீடன் கேட்டு விட்டான்.

குருவே உந்தனக்கு மட்டும் பின் நல் உணவு மனிதன் எடுத்துக்கொண்டே வருகின்றான். எந்தனுக்கு ஏன்? வரவில்லை? என்று.

அப்பொழுது குரு சொன்னான்.

அப்பனே நீ செய்த கர்மாப்பா!! என்று கூட.

ஆனாலும் குருவோ நல் விதமாக பக்கத்தில் அமர்ந்து இருக்கின்றவனை அவனின் கர்மாக்களை நீக்கலாம் ஆனால் ஏன் நீக்கவில்லை என்று கூட நீங்கள் நினைக்கலாம்.

அவரவர் செய்கின்ற கர்மாக்களை அவரவர் அனுபவித்தே தீரவேண்டும்.

அப்பனே இவையன்றி கூற மனிதன் நினைத்தால் அனைத்தும் நிறைவேறும் என்பேன். நிச்சயம் நேர்மையாக நடந்தால் அனைத்தும் சாதிக்க முடியும் என்பேன்.

அப்பனே அவரவர் செய்த வினைகளுக்கு அவரவர் கஷ்டப்பட்டே தீரவேண்டும் அப்பனே.

அப்பனே நிச்சயம் இவ்வுலகத்தில் நல்விதமாக ஒன்றை மட்டும் சொல்கிறேன்

கர்மத்தை செய்தால் நிச்சயம் கர்மத்தை அனுபவிக்க வேண்டும்.

புண்ணியங்கள் செய்தால் அதற்குரிய பலன்கள் நிச்சயம் அனுபவிக்க வேண்டும் அப்பனே.

அப்பனே கலியுகத்தில் நீதி நேர்மை நியாயம் தர்மம் இவையெல்லாம் அகன்று விட்டது என்பேன் அப்பனே.

ஆனாலும் அப்பனே சில பொருள்கள் அப்பனே சில தினங்களுக்குள் அப்பனே பின் எவை வேண்டும் என்று கூட ஒதுக்கி பதுக்கி வைத்து கொண்டிருக்கின்றார்கள் ஆனாலும் பின் அவையெல்லாம் அப்பனே வாழ்க்கைக்கு உதவும் என்று மனிதர்கள் சந்தோசப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் கடைசியில்  அவைகள் எதுவும் உதவுவது இல்லையப்பா.

நீங்கள் நேர்மையான வழியில் நடந்து கொண்டு புண்ணியத்தை சம்பாதித்துக் கொண்டால் அவ் புண்ணியத்தை யாராலும் தடுக்க முடியாது அப்பனே.

அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே என்னை நம்பியவர்களே அப்பனே யான் தான் பெரியவன் நான் தான் பெரியவன் அனைத்தும் எந்தனுக்கு தெரியும் என்று கூட அப்பனே போலியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அதனால்தான் சொன்னேன் அப்பனே . என்னுடைய பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று.

ஆனாலும் அப்பனே ஒன்றிணைந்தால் அப்பனே நலமாகும்.

ஆனால் ஒன்றிணைய மாட்டார்கள் மனிதர்கள் பொய்யே என்பேன்.

அப்பனே யான் உரைத்த மருந்துகளை அவரவர் இஷ்டத்திற்கு செய்து வருகின்றார்கள் என்பேன் ஆனாலும். இதற்கு தகுந்தாற்போல் அப்பனே பின் நல் விதமாக மூலிகைகளைப் பயன் படுத்துவதற்கு  குரு மந்திரமும் தேவை என்பேன் அப்பனே ஆனாலும் அதை அப்பனே யாரும்  உணர்வதில்லை என்பேன் அப்பனே.

ஆனாலும் அப்பனே யான் சொல்லியதை அப்பனே நிச்சயமாய் உண்ணுக. அதற்கும் அப்பனே நல் விதமாக வாக்குகள் உண்டு என்பேன் அப்பனே.

ஆனாலும் யாங்களும் கூட தேர்ந்தெடுத்த கொண்டே இருக்கின்றோம் அப்பனே யாராவது மனிதன் நல் விதமாக செய்து தருவானா? என்று கூட. அப்பனே ஆனாலும் அனைத்து மனிதர்களுமே அப்பனே பணத்தின் மீதே மோகம் கொண்டால் அப்பனே.

ஒன்றை மட்டும் சொல்கின்றேன் அப்பனே சித்தர்கள் வந்து அப்பனே எவ்வாறு என்பதையும் கூட அப்பனே சித்தனை வணங்கி வணங்குவதற்கும் தகுதிகள் வேண்டும் அப்பனே.

அது எவ்வகை தகுதியென்றால் அப்பனே எந்தனுக்கு ஏதும் தேவையில்லை என்று வந்துவிட்டால் அப்பனே யாங்கள் கொடுப்போம் அனைத்தும் கூட.

அதை யாராலும் தடுக்க முடியாது அப்பனே.

இதைத்தான் இனிமேலும் யாங்கள் செய்யப் போகின்றோம்.
பொறுத்திருந்து பாருங்கள்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

Friday, 21 January 2022

சித்தன் அருள் - 1075 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


கருடனுக்குத் திருமால் பின்வருமாறு கூறினார்.

யமதூதர்களால் பாசக் கயிறால்  கட்டுண்டும் அவர்களிடம் உதையுண்டும்  செல்லும் ஜீவன், தன் மனைவி மக்களோடு பூமியில் வாழ்ந்த காலத்தில் அடைந்திருந்த இன்பத்தை நினைத்து நினைத்துத் துன்பமடைந்து, பசியாலும் தாகத்தாலும்  மெலிந்து சோர்வுற்று, இளைத்து மிகவும் ஈன ஸ்வரத்தோடு "ஐயகோ! நம்மோடு வாழ்ந்திருந்த மனைவி மக்கள் எங்கே? நம் பெற்றோரும் உற்றோரும் மற்றோரும் எங்கே? உறவினர்கள் எங்கே? நண்பர்கள் எங்கே? ஏவலாளர் எங்கே? எல்லோரும் நம்மைத் தன்னந் தனியாக இந்த யம படர்களிடம் சித்திரவதை படும்படி விட்டு விட்டார்களே! பொய் ஓலை எழுதுதல் முதலிய தீய தொழில்களைப்  புரிந்து, மாற்றார் பொருள்களை மதி நுட்பத்தால் கவர்ந்தோமே; அப்பொருள்களாவது  இப்போது என்னிடம் இருக்கிறதா? ஊரையடித்து உலையில் போட்டோமே! உழைத்தவன் உழைப்பை உறிஞ்சி, உற்றாரையெல்லாம் சுகிக்க வைத்தோமே! பிறரை நயமாக வஞ்சித்து, அவர்களது பொருளைக் கவர்ந்து நம் குடும்பம் வாழ வேண்டும் என்று மனசாட்சிக்கு மாறாக நடந்து பொருள் சேர்த்து சுகத்தைக் கொடுத்தோமே! அப்போது சுகத்தை அனுபவிக்க நம்மோடு கூடிக் குலவியவர்களாகிய நம் மனைவி, மக்கள், சுற்றத்தார் இவர்களில் யாரவது ஒருவர், இப்போது என்னோடு வந்தார்களா? என்னைத் தனியே போக விட்டு, இந்த எம படர்களால் அழைத்துச் செல்லப்படும் இத்தகைய கொடிய பாதைகளில் அவதிப்படும்படி என்னை விடுத்து, அவர்கள் மட்டும் நம் வீட்டிலிருந்து சுகம் அனுபவிக்க நாம் ஏன் பிறர் பொருளை வேண்டினோம்.  நாம் செய்த வஞ்சனையைச் சிறிதும் அறியாமல், நம்மை நல்லவன் என்றோ, பிறர் உள்ளத்தைப் புரிந்து கொள்ளும் உயர்ந்தவன் என்றோ நம்பிச் சீவாதாரமாகிய பொருளை நம்மிடம் இழந்தோர்களுடைய வயிறு எவ்வாறு எரிந்ததோ, அதுபோல இப்போது நம் வயிறு பற்றியெரிகிறதே? இனிமேல் என்ன செய்வோம்? ஏது செய்வோம்? என்று அலறித் துடிப்பான் .

அப்போது அவனை இழுத்துச் செல்லும் யமதூதர்கள், அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து "அட மூடா! இப்போதுதான் உனக்கு புத்தி வந்ததோ? உனக்குத்தான் உலகம்! உனக்குத்தான் மனைவி மக்கள்? உனக்குத்தான் உற்றார் உறவினர், உன் வாழ்க்கைத் தான் உலகில் வாழத்தக்கவன் வாழ வேண்டிய வாழ்க்கை! உன் மனைவி மக்களே உனக்கு நித்யம் என்று அறன் செய்யாமல் அதர்மம் செய்து ஆடம்பரமாகப் பூவுலகில் வாழ்ந்தாயே? அத்தகையவர்கள் உனக்கு இப்போது செய்யும் உதவியாதடா? நீ செய்த புண்ணிய பாவமே உனக்கு இவ்வுலகில் இன்பத்தையும் துன்பத்தையும் தர வல்லன! பூமியில் நீ வாழ்ந்த காலத்தில் தேய்த்தலிலும், துருத்துதலிலும் உன் உடலுக்கு மகிழ்ச்சியும் உன் உள்ளத்திற்கு இன்பத்தையும் தந்ததாக யார் யாரையோ போற்றி அவர்களுக்குப் பொருள் கொடுத்து, உழைத்தவன் தனக்குரிய ஊதியத்தை உன்னை கெஞ்சிக் கேட்டாலும் "மனிதாபிமான உணர்ச்சியோடு வர்த்தகம், தொழில் முதலானவற்றையெல்லாம் இணைக்கக் கூடாது" என்று ஏதேதோ உனக்குத்தான் சாதுர்யமாகப் பேசத் தெரியும் என்று பேசி அவனை அனுப்பி, இச்சைக்குரியவள் எந்த நேரத்திலும் இவ்வுடலுக்கு இன்பந் தருபவள் என்றெல்லாம் விலைமகளை உன்னுடையவளாகவே நினைத்துப் போற்றிப் புகழ்ந்த உன் மனிதாபிமானம் மங்கையபிமானம் ஆயிற்றே.  அதனை இணைத்துத் தொழில் புரிந்தாயே! அத்தகையவர்கள் இப்போது எங்களிடம் நீ படுகின்ற அடியின் தழும்புப் புண்களைத் தடவியாவது கொடுக்க முன் வந்தார்களா? பிறர் பொருளை அபகரித்தல் முதலிய அதர்மங்களைச் செய்யாமல் தர்மம் செய்தவனாயின் உனக்கேன் இப்போது இந்தக் கேடு வருகிறது? எங்கள் கைகளில் அகப்பட்டு நீயேன் விழிக்க வேண்டும்? நீ ஏன் இப்போது தவித்துத் துடித்துக் கதற வேண்டும்? இப்போது ஏன் எங்களை விழித்துப் பார்க்கிறாய்?" என்று பேரொலியுடன் கண்டித்து, மீண்டும் பாசத்தால் நையப் புடைத்து முசலத்தால் புடை புடையென்று புடைப்பார்கள்!

"கருடா! தீய தொழில் புரிந்தோர் அடையும் கதியைப் பார்! பிறகு அந்தச் சேதனன் சிறிது தூரம் காற்றில் வழியிலும் சிறிது தூரம் புலிகள் நிறைந்த வழியிலும் யமகிங்கரர்களுடன்    சென்று ஓரிடத்தில்  தங்கி, இறந்த இருபத்தெட்டாம் நாளில், பூமியிலுள்ள தன் புதல்வனால் செய்யப்படும் ஊனமாகிய ஸ்ரார்த்த பிண்டத்தைப் புசித்து முப்பதாம் நாளன்று யாமியம் என்ற நகரத்தை சேர்வான். அங்கு பிரேதக் கூட்டங்கள் கூட்டங் கூட்டமாகக் குடியிருக்கும். புண்ணிய பத்திரை என்ற நதியும் வடவிருட்சமும் அங்கு உள்ளன.  சிறிதளவு நேர சிரம பரிகாரத்தை முன்னிட்டு, யமகிங்கரர்களின் உத்தரவுக்குப் பயந்து அவ்யாமியம் என்ற 'நகரத்தில் சிறிது காலம் தங்கியிருந்து விட்டு இரண்டாவது மாசிக பிண்டத்தை அருந்தி, இரவிலும் பகலிலும் யமகிங்கரர்களால் இழுத்துச் செல்லப்பட்டு, யாருக்கும் பயத்தை ஏற்படுத்தும் ஆரண்யத்தின் ஊடே சென்று, வழி நடக்கும் வேதனையோடு ஓவென்று ஓலமிட்டு அழுது, தூதர்கள் செய்யும் கொடுமையால் மிகவும் வருந்தித் துன்பமுறச் செல்லும் வழியில் திரைபக்ஷிக மாசிக பிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற அரசனுக்குரிய சௌரி என்ற நகரத்தைச் சார்ந்து, அங்கு மூன்றாம் மாசிக பிண்டத்தை புசித்து அப்பால் சென்று, வழியிலே பொறுக்கமுடியாத குளிரினால் மிகவும் வருந்துவான். அங்கு எமகிங்கரர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து, வருந்துகின்ற அந்த ஜீவனின் மீது கற்களை எறிவார்கள். அந்தக் கல்மழையினால் வருத்தம் அடைத்து குரூரன் என்ற வேந்தனின் ஆளுகையிலிருக்கும் குருரபுரம் என்ற பட்டினத்தை அடைந்து அங்கு ஐந்தாவது மாசிக பிண்டதையுண்டு, அப்பால் நடந்து கிரௌஞ்சம் என்ற ஊரையடைந்து அந்த ஊரில் ஆறாவது மாசிக பிண்டத்தை உண்டு, அரை முகூர்த்தகாலம் வரை அங்கே தங்கியிருந்து, சிரமபரிகாரம் செய்து கொண்டு பிறகு யாவரும் பயப்படும்படியான பயங்கர வழியிலே செல்வான்.  அந்த வழியிலே போகும்போது முன்பு பூமியில் தான் வாழ்ந்ததெல்லாம் நினைத்து நினைத்து வாய் விட்டுப் புலம்புவான்.  அப்போது யமபடர்கள் சினம் கொண்டு அவ்வாயிலேயே புடைப்பார்கள்.  அடுத்தடுத்து அந்த ஜீவன் யமகிங்கரர்களால் துன்பப்பட்டு வருந்திச் செல்லும் வழியில் அஞ்சத்தக்க ரூபமுடைய படகோட்டிகள் பதினாயிரம் பேர்கள் கூட்டமாக அவன் முன்பு ஓடி வந்து, தீப்பொறி பறக்க விழித்து "ஏ, ஜீவனே! உன்னை குறித்து எப்போதாவது வைதரணி கோதானம் என்ற தானத்தை செய்திருந்தாயானால், இனி நீ கடந்து செல்ல வேண்டிய வைதரணி நதியை நீ  இனிதாகக் கடக்க, நாங்கள் உனக்கு உதவி செய்வோம்.  இல்லாவிட்டால் அந்த நதியிலே உன்னைத் தள்ளிப் பாதாளம் வரையிலும் அழுத்தித் துன்பப்படுத்துவோம்.  ஓ  ஜீவனே! அந்த வைதரணி நதி, நூறுயோஜனை நீளமுடையது.  நதியென்றால் நீர் பாயும் என்று நினைத்துவிடாதே! அந்த நதியிலே தண்ணீரே இராது! இரத்தமும் சீழும், சிறுநீரும், மலங்களுமே நிறைந்து துஷ்ட ஜந்துக்களிலும் கொடிய ஜந்துக்கள் வாழும் இடமாக இருக்கிறது. நாற்றம் அறியும் நாசியில்லாத பிராணியும் அந்த நதியின் துர்நாற்றத்தைப் பொறுப்பது அரிது!  ஜீவனே! நீ பூவுலகில் உடலோடு வாழ்ந்த காலத்தில் உன் கையால் கோதானம் செய்திருந்தாயேயானால், ஒரு பசுவானது இங்கு வந்த உன்னை இந்த நதிக்கப்புறம் சேர்த்து விடும்படிச் செய்யவேண்டும் என்பதற்கு அடையாளமாக எங்களருகே வந்து நிற்கும். அத்தகைய தானத்தை நீ செய்திராவிட்டால் அந்த அடையாளப் பசுவும் வரமாட்டாது. நீ அந்த வைதரணி நதியிலே விழுந்து கிடந்து, நீண்ட நெடுங்காலம் முழ்கி தவிக்கவேண்டும்.!" என்று ஓடக்காரர்கள் கூறுவார்கள். 

"ஓ, வைனதேயனே!  அத்தகைய வைதரணி நதியை, பூவுலகில் வாழ்ந்து வாழ்நாள் முடிந்து இறந்து எமலோகம் செல்லும் வழியில் கடக்கவேண்டிய நிலை ஒவ்வொரு ஜீவனுக்கும் இருப்பதால், பாரத வருஷத்தில் பிறந்து வாழ்கின்ற ஜீவன்கள் அந்த நதியைக் கடக்கும் பொருட்டு, அந்த வைதரணி கோதானம் என்ற  தானத்தைச் செய்ய வேண்டும். அந்த ஜீவன், பூவுலகில் வாழ்ந்த காலத்தில் செய்யாமற்போனாலும்  அவனிறந்த பிறகு அவன் குலத்தில் பிறந்த அவன் மகனாவது அவனைக் குறித்துச் செய்யவேண்டும். அப்படிப்பட்ட வைதரணி கோதானத்தைச் செய்திருந்தால், அந்த ஜீவன், அந்த நதியைக் கடந்து நமனுக்கு இளையோனாகிய விசித்ரன் என்பவனது பட்டினத்தைச் சார்ந்து, ஊனஷானி மாசிகப்பிண்டத்தை உண்டு, அங்கிருந்து புறப்படும் போது ஏழாம் மாசிகப் பிண்டத்தை உண்ணும் போது சில பிசாசுகள் அவன் முன்பு பயங்கரத் தோற்றத்துடன் தோன்றி, அந்த ஜீவனைப்பார்த்து, "அட  மூடனே! நீ பூவுலகில் வாழ்ந்திருந்த போது உன்னைப் பெரிய மனிதன் என்று நம்பி வந்து, உன்னை யாசித்தவர்களுக்கு  ஒன்றும் கொடுப்பதற்கில்லை என்று உன் வாய்க்குவந்தபடி இழித்தும் பழித்தும் பேசி அனுப்பினாய் அல்லவா?  இப்போது உன் பசிக்கென்று, உனக்காக மாதந்தவறாமல் மாசிக ஸ்ரார்தத்தைச் செய்து, உன் கைக்குக் கிடைத்து, நீ ஆவலோடும் பசியோடும் புசிக்கத் துடிக்கும் இந்த அன்னம் நீ உண்பதற்கு உரியதல்ல, அதை எங்களிடம் கொடுத்துவிடு!" என்று பலவந்தமாகப் பிடுங்கிப் பறித்துக் கொண்டு சென்று விடும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

Thursday, 20 January 2022

சித்தன் அருள் - 1074 - குருநாதர் அருளிய குழந்தைகளுக்கான மருத்துவம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே

குருநாதர் அகத்தியர் தன்னுடைய ஒவ்வொரு பொது வாக்கிலும் எதிர்வரும் காலங்களில் புதுப்புது நோய்கள் வியாதிகள் வரும் அந்த நோயிலிருந்து உங்களை காத்துக் கொள்ள எவ்வித மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று 30 விதமான மூலிகையை எடுத்துக்கொள்ள உரைத்து இருந்தார்.

அவைகளை முறையாக பயன்படுத்தி உண்டு வந்தாலே எவ்வித குறைகளும் இல்லை என்று உரைத்து இருந்தார்.

சிறு குழந்தைகளுக்கு சிறியோர்களுக்கு எவ்வித மருந்துகள் கொடுப்பது என்று குருநாதர் அகத்தியரிடம் கேள்வியாக கேட்ட பொழுது;

அப்பனே இவை என்று கூற சிறிதளவு மிளகு சிறிதளவு சீரகம் பின் நல் விதமாக பாலில் இட்டு காய்ச்சி அதனுடன் இவையன்றி கூற சிறிதளவு மஞ்சள் சேர்த்து அனுதினமும் கொடுத்து வந்தால் எவ்வித குறைகளும் வராது என்று உரைத்திருக்கிறார். 

அகத்தியர் அடியவர்கள் அனைவரும் குருவின் வாக்கை பின்பற்றி இதுபோன்று பின்பற்றி குழந்தைகள் அனைவருக்கும் கொடுத்து வரவும்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!

Tuesday, 18 January 2022

சித்தன் அருள் - 1073 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் தரும் "கடைசி வாய்ப்பு"!


""" கடைசி வாய்ப்பு """

17/01/2022 அன்று பௌர்ணமி திதியில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.

ஆதி சிவனின் திருத்தாள் போற்றி!!!! போற்றியே!! உந்தனை பணிந்து உரைக்கின்றேன் அகத்தியன்.

அப்பனே வரும் வரும் காலங்களில் சிறப்புக்கள் இல்லை அப்பனே.

மனிதர்களுக்கு ஒவ்வொரு விதமாக கஷ்டங்கள் வாட்டும் என்பேன் அப்பனே.

இவையன்றி கூற ஆனாலும் அப்பனே மனிதன் இனிமேலும் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அப்பனே அழிவுகள் தான் பலம் என்போம். 

அப்பனே சித்தர்களும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் மனிதனை காக்க.

ஆனாலும் மனிதன் அப்பனே தன் சுயநலத்திற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

இப்படி வாழ்ந்தால் அப்பனே எப்படி?? நன்மைகள் நடக்கும் என்பதைக்கூட அதனால்தான் அப்பனே யான் பல மனிதர்களுக்கும் வாக்குகள் உரைப்பதில்லை அப்பனே.

இவையன்றி கூற அப்பனே இனிமேலும் சுயநலத்திற்காக எதையும் கேட்காமல் அப்பனே இறைவனே நீ !!நீயே என்று பின் நல் விதமாக நல் மனசாட்சியோடு பின் வருபவர்களுக்கே எந்தனது வாக்கு சித்திக்கும் என்பேன். அப்பனே.

அப்பனே ஒழுக்கங்கள் இல்லை

அப்பனே வரும் காலங்களில்.

அப்பனே சித்தர்கள் யாங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே.

அப்பனே இதுபோலவே பின் போய்க்கொண்டு இருந்தால் அப்பனே அனைத்தும் அழிந்துவிடும் என்பேன்.

அப்பனே புதுப்புது வியாதிகள் அப்பனே நோய்கள் அப்பனே விதவிதமான கஷ்டங்கள் இவையெல்லாம் மனிதனுக்கு வரும் என்பேன்.

ஆனாலும் எதையும் எதிர்பார்க்காமல் அப்பனே நல் விதமாக எங்களையும் நல் விதமாகவே வணங்குபவர்களுக்கு அப்பனே யாங்களே வழி நடத்துவோம்.

ஆனாலும் புரியாமல் புரியாத மனிதர்கள் பொய்யான மனிதர்கள் 
தரித்திர மனிதர்கள் தரித்திர மனிதன் அப்பனே இவையன்றி கூற அப்பனே மனிதனை பார்த்தால் சித்தர்களுக்கெல்லாம் கோபம்தான் வருகின்றது என்பேன் அப்பனே.

அப்பனே மனிதர்களின் லீலைகள் அப்பனே சொல்லப்போனால் அப்பனே கருமமடா!!!! தரித்திரமடா!!!!

இவையெல்லாம் எவை என்று கூற அப்பனே ஒழுங்காக இறைவன் படைத்துவிட்டான் மனிதனை இவையன்றி கூற ஆனாலும் மனிதன் என்னவோ மாயைகளில் சிக்கி கொண்டிருக்கின்றான்.

அப்பனே பரிகாரங்களும் வரும் காலங்களில் பலிக்காது என்பேன்.

எதனால் என்பதைக்கூட அப்பனே நீ ஒழுக்கமாக இருந்தால் மட்டுமே அப்பனே முதலில் இவையன்றி கூற அதை தான் யாங்கள் முதலில் சொல்வோம்.

அப்பனே இவையெல்லாம் நிச்சயமாய் என் பக்தர்களுக்கு போய் சேர.

அப்பனே ஆனாலும் தேடிக்கொண்டுதான் தேடிக் கொண்டுதான் அப்பனே இருக்கின்றோம்.

ஆனாலும் மதிப்பதில்லை சித்தர்களின் வாக்குகளை அப்பனே.

இதை ஏன்?? சொல்லிக் கொண்டு இருக்கின்றேன்.

இவை செய்தால் அவை நடக்கும் அவை செய்தால் இவை நடக்கும் என்பதெல்லாம் பொய்யாட்டம்!! பித்தலாட்டம்!! அப்பனே.

அப்பனே வீணாக தண்டனைகள் பெற வேண்டாம் என்பேன் அப்பனே.

மனிதனுக்கு கடைசி ஒரு வாய்ப்பை யான் தருகின்றேன்.

திருந்துங்கள்!!! திருந்துங்கள்!!! திருந்துங்கள்!!!

அப்பனே திருந்தாவிடில் ஈசனே அடித்து விடுவான் என்பேன்.

அப்பனே வரும் காலங்களில் அப்பனே எவை என்று கூற அப்பனே நல்லவையே நடக்காது என்பேன்.

அப்பனே மனிதர்களுக்கு.

அப்பனே என் பேச்சைக் கேளுங்கள்.

அப்பனே சித்தர்கள் யாங்கள் அப்பனே மனிதன் இப்படி வாழ்கிறானே!!!? என்றுகூட யாங்கள் பலமுறை வருத்தங்கள் வருத்தங்கள் வருந்திக் கொண்டே இருக்கின்றோம்.

அதனால்தான் அப்பனே இப்புவியில் இறங்கி வந்தோம்.

ஆனாலும் மனிதன் அப்பனே பொய்யான வார்த்தைகள் சொல்லி சோதனைகள் இறைவனே இல்லை என்ற நிலைமை சித்தர்களே பொய் என்ற நிலைமை அனைத்தும் பொய் என்ற நிலைமை.

அப்பனே உருவாக்குகின்றான். அப்பனே திருத்தலங்கள் பலப்பல !!!அப்பனே அதில்கூட அப்பனே வருமானங்கள் ஈட்டுகின்றான் அப்பனே.

எப்படி? நல்லது நடக்கும்???!!!

அப்பனே உண்மையானவர்களை யாரும் கண்டு கொள்ளுவதில்லை அப்பனே.

பொய்யானவர்களைத்தான் தேடி சென்று அப்பனே பணம் வரும் என்று கூட எவ்வாறு என்பதை அப்பனே என் பக்தர்கள் ஒன்றிணைய வேண்டும்.

அப்பனே இவ்வாறு இணைக்கா விடிலும் அப்பனே நிச்சயம் யானே கஷ்டங்கள் ஏற்படுத்துவேன் அப்பனே.

என் கோபத்திற்கு ஆளாகாதீர்கள் அப்பனே.

அன்பு கருணை மிகுந்தவன் அகத்தியன்.

ஆனாலும் அதை மீறி அப்பனே என்னையே வணங்கிக்கொண்டு அப்பனே தரித்தராட்டங்கள் பித்தலாட்டங்கள் இவையெல்லாம் செய்கின்றனர்.

நியாயமா???? அப்பனே!!!

சிறிது மனசாட்சிக்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளுங்கள்.

அப்பனே நீ ""மனிதன்"" இல்லை!!!

அப்பனே நீ மாயையில் அழியக் கூடியவன்.

அதை மட்டும் தெரிந்து கொள்.

உணர்ந்து கொள்.

அப்பனே இவையெல்லாம் அப்பனே எவை ??என்று கூற!!! கூற!! 

அப்பனே கலியுக கடவுள்கள் அப்பனே முருகனும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான்.

பக்தர்கள் இருக்கட்டும் இருக்கட்டுமென்று.

ஆனாலும் இவையன்றி கூற "இன்னொருவன் வருவான் !!!எவ்வாறு என்பதைக்கூட ""மணிகண்டன்"" இவ்வாறு என்பதைக் கூட அவந்தனும்  அப்பனே நிச்சயமாய் அடித்து விடுவான். எவ்வாறு என்பதை கூட ஒழுக்கம் இல்லாமல் அப்பனே பெண்களும் சரி!!! ஆண்களும் சரி!!!.

அன்பு காட்டுங்கள் அப்பனே இவையன்றி கூற ஒழுக்கமற்று வாழ்கின்றான் அப்பனே .

 ஒழுங்காக பக்தியை கடை பிடிப்பதும் இல்லை

அப்பனே நீங்கள் ஒன்றை யோசித்துக் கொள்ளுங்கள்.

ஒழுங்காக பக்தியை கடைப்பிடித்தால் இவ்வுலகத்தில் அப்பனே உங்களால் அனைத்தும் மாற்ற இயலும் அப்பனே.

வரும் வரும் காலங்களில் அப்பனே இவையன்றி ன்று கூற நீங்கள் ஒழுங்காக வாழ்ந்துவிட்டால் யாங்களே  சித்தர்களே அப்பனே கையைப் பிடித்து இழுத்து செல்வோம்  அப்பனே. அதனை மேற்கொண்டால் .

நீங்கள் உங்கள் சுய நலத்திற்காக வேண்டினால் அப்பனே ஒன்றை உரைக்கின்றேன் அப்பனே நீ அப்பனே மாயை !!

திருமணம் செய்து கொண்டாய்  அது ஒரு மாயை.!!

அப்பனே பிள்ளையைப் பெற்றுக் கொண்டால் அது ஒரு மாயை அப்பனே அதனால் அப்பனே நீ கேட்கின்றாயா?? என்னை!! அப்பனே.

ஆனாலும் இவையெல்லாம் மாயைதான்.

அற்ப சுக வாழ்க்கைக்காக மனிதன் அழிந்து கொண்டு இருக்கின்றான்.

ஆனாலும் இவை என்று கூற அப்பனே சொல்கின்றேன் அனைத்தும் செய்துவிட்டு இறைவா என்று இருந்தால்
 முட்டாள்  மனிதனே!! தரித்திர மனிதனே!! இறைவன் என்ன?? உன் கைக்கூலியா????

அப்பனே திருந்தி கொள்ளுங்கள்.

அப்பனே எதையும் எதிர்பாராமல் இறைவா என்று இருங்கள்.

அனைத்தும் உந்தனக்கு வழங்குவான் என்பேன் அப்பனே.

அப்பனே பொய்யான பக்திகள்.

அப்பனே இப்பூலகத்தில் யான் வலம் வந்து கொண்டே இருக்கின்றேன்.

நல்லவர்கள் இல்லையப்பா.

அப்பனே நல்லவர்களை  தேடிக்கொண்டே இருக்கின்றேன் யான்.

ஒருவன் கூட நல்லவன் இல்லையப்பா.

என் பெயரைச் சொல்லி ஏமாற்றி ஏமாற்றுகின்றான் அப்பனே.

இவையெல்லாம் யான் விட்டு விடப் போவதில்லை அப்பனே.

சித்தர்களே அப்பனே இவையன்றி   கூற அப்பனே சில மனிதர்கள் மருத்துவத்திற்காக போராடுகின்றனர் சித்த மருத்துவத்திற்காக.

போகனும்(போகர் சித்தர்) கோபத்தில் இருக்கின்றான்.

இதை வைத்துக் கொண்டு எதை எதையோ தேடிச் செல்கின்றானா என்பதற்கிணங்க
போகன் அருள் இல்லாமல் எவ் வகை மூலிகையும் பலிக்காது என்பேன்.

அப்பனே இவையன்றி  கூற அப்பனே இன்னொரு முறையும் சொல்கின்றேன் செல்லமாக!!!!

திருந்துங்கள் அப்பனே!!!!

எவை என்று கூற தரித்திர வாழ்க்கைக்கு மனிதன் என்னென்னவோ செய்து வருகின்றான்.

அப்பனே உண்மை இல்லையப்பா, மனிதர்களிடத்தில்.

அப்பனே தன் நிலைகள் உயரவேண்டும் தன் தன் இனத்திற்கு இனம் சேர வேண்டும் புகழ் சேர வேண்டும் ஆனாலும் அனைத்தும் அழியக் கூடியது தான் கேட்கின்றான் மனிதன்.

அப்பனே உண்மைப்பொருள் தான் உலகத்தில் நிரந்தரமானது இறை அருள் என்பேன்.

அவ் இறையின்  அருளைப் பெற மனிதனே நீ கடுமையாக உழைக்க வேண்டும்.

அப்பனே பணம் சம்பாதிப்பதற்கு நீ கடுமையாக உழைக்கின்றாய். 

ஏன்??  இறைவன் அருளைப் பெறுவதற்கு நீ கடினமாக உழைப்பது இல்லை????

அப்பனே இறைவனை வணங்கி வந்தால் இறைவனை வணங்கினால் நிச்சயம் கஷ்டம் இதுதான் அப்பனே இவ் கஷ்டத்திலும் இறைவா இறைவா என்று உணர்ந்து கொண்டே இருந்தால் நிச்சயம் இறைவன் இறை பலங்கள் அதிகரித்து இறைவன் மூலமாக அனைத்தும் செய்து வைப்பான் உந்தனுக்கு.

நல் விதமாகவே உந்தனுக்கு எது தேவை என்று அதை விட்டுவிட்டு பொருள்கள் தேடிச் சென்றால் பணத்தின் பின்னே சென்றால் பணம்தான் அழிவிற்கு காரணம் என்பது. அதுவே உன்னை அழித்துவிடும்.

சுகத்திற்காக சென்றால் அவ் சுகமே உன்னை அழித்துவிடும்.

அப்பனே சுகத்திற்காக வாழ்பவன் மனிதன். ஆதலால் சுகத்தின் மூலமே அழிவு ஏற்படுகின்றது என்பதை சிறிது சிந்தித்துப் பார் அப்பனே.

அப்பனே நிச்சயம் இக்கலியுகத்தில் நல்லவை நடக்காது நடக்காது என்பேன். 

ஏனென்றால் அப்பனே பொய்யான மனிதனப்பா மனிதனுக்கு புத்தியும் போய்விட்டது அப்பனே.

திருடனப்பா திருடனப்பா மனிதன்.

திருடன் திருடன் காரியும் துப்புவேன் மனிதனை.

அப்பனே இல்லை ஒழுங்கு இல்லை மனிதன்.

அப்பனே ஆனால் சித்தர்கள் மனிதர்களுக்கு நல்லது செய்விக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் நிச்சயம் நல்லது செய்வோம் செய்வோம்.

ஆனாலும் தரித்திர மனிதன் அப்பனே லீலைகளை பார்த்தால் அப்பனே!!!

மனதில் உள்ள குறைகள் அப்பனே அனைத்தும் நீங்கும் அப்பனே அப்படி பக்தியாக நடித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!

திருந்திக்கொள் வேண்டாம் அப்பனே.

யாங்களே நோய்களை உருவாக்குவோம். இவை போன்று இருந்தால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே.

அப்பனே என் பக்தர்கள் அனைவரும் இதை உணர வேண்டும்.

பொய்யான பக்தர்களப்பா.

அகத்தியா அகத்தியா என்று சொல்லிச் சொல்லி ஏமாற்றுவார்களப்பா.

ஏமாற்றி பணம் பறித்து அப்பனே தன் சுகத்திற்காக திரிகிறார்களப்பா தேவையா இது மானங்கெட்ட மனிதா பொய் சொல்லி ஏமாற்றி பிழைப்பு நடத்துதல் வேண்டாம் வேண்டாம் என்பேன்.

சித்தர்களை சீண்டி பார்க்காதீர்கள்.

நிச்சயம் தரித்திர மனிதா வேண்டாம் என்பேன்.

மனிதனை இனிமேலும் எவை என்று கூற மனிதன் நலமாக பிறப்பதற்கு எவ்வாறு என்பதை கூட பல ஞானியர்கள் வந்து மனிதனை இப்படிச் செல்!! அப்படிச் செல்!! என்பதை எல்லாம் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆனால் மனிதனோ யாரோ!? சொல்லி விட்டு போனால் நம்தனக்கு என்ன?? என்று தான் இருக்கின்றார்கள்.

அதனால் இனிமேலும் யாங்களே வந்து நிச்சயமாய் மனிதனுக்கு கஷ்டம் தான் கொடுப்போம் கொடுப்போம் இதிலிருந்து எப்படி மீண்டு வருகிறீர்கள் என்று கூட யாங்களே சொல்வோம் கடைசியில். நீ ஒழுக்கமாக இருந்தால்.

அப்பனே எவை என்று கூற உந்தனக்கு ஏனடா?? இவ்வேலை??

மனிதனாக பிறந்தாயா!! வாழ்ந்தாயா!! சென்று விடு.

அதை விட்டுவிட்டு எதை எதையோ தெரிந்துகொண்டு கடைப்பிடிக்கின்றியே கருமம் பிடித்த மனிதா!! தரித்திர மனிதா!!

வீண் என்பேன் அப்பனே.

எவை என்று கூற அப்பனே உண்மை இல்லாமல் சில பூஜைகள் அனைத்தும் வேண்டாம். வேண்டாம் என்பேன்.

அன்புடன் செய்து வாருங்கள்.

ஆனால் அன்புடன் செய்து வருவது எவரப்பா??

எவரப்பா?? என்பேன் தன் தன் சுயநலத்திற்காகவே செய்து வருகின்றார்கள்.

அப்பனே ஒன்றைச் சொல்கிறேன் அடுத்தவரிடத்தில் அப்பனே அதைக் கொடு இதைக் கொடு என்றெல்லாம் அப்பனே உன் புத்தி எங்கேயடா!!!

அப்பனே உனக்கும் அனைத்து அருள்கள் கொடுத்திருக்கின்றேன்.

அப்பனே நீயும் முயற்சி செய்து அப்பனே உன்முயற்சியால் செய்த தர்மங்கள் தான் கடைசி வரையில் வரும் தர்மம் தலை காக்கும்.

அப்படி இல்லாமல் அப்பனே அனைவரிடமும் இருந்து பெற்று அப்பனே செய்தால் கர்மம் தான் உன்னை பிடித்துக் கொள்ளும்.அப்பனே. 

தெரிந்துகொள்ளுங்கள் அப்பனே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பனே.

அதைச் செய்தால் இவை நடக்கும் இதைச் செய்தால் அது நடக்கும் அப்பனே பொறுத்து பொறுத்து பார்த்து கொண்டேதான் இருக்கின்றேன் அப்பனே.

வேண்டாம் அப்பனே தரித்திரம்.

அப்பனே பார்த்துக்கொண்டே இருப்பது கலியுகத்தில் யாங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றோம் அப்பனே.

அப்பனே இவையன்றி கூற இன்னும் பல பல வழிகளிலும் கிரகங்களும் அப்பனே மனிதர்களுக்கு தீங்கு தான் செய்யும் என்போம்.

அப்பனே  அதனால் குரு பலம் வந்து விட்டது இவ் ராசிக்கு நலம்.அவ் ராசிக்கு நலம் என்பதெல்லாம் பொய்த்துப் போகும் என்பேன்.

அப்பனே எதனை என்று கூற இறைவன் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்களா???

அப்பனே நிச்சயம் ஈசன் ஒரு பாடத்தை நடத்துவான் என்பேன்.

நடத்தி இவ்வுலகத்தை நிச்சயம் அழிப்பான் என்பேன் அப்பனே.

தெரிந்துகொள்ளுங்கள் ஈசன் அழிப்பான்!! அழிப்பான்!! அழிப்பான்!! என்பேன். 

அப்பொழுதுதான் சில விஷயங்கள் நல்லோருக்கு தெரியவரும் நல்லோர்கள் வாழ்வார்களப்பா.

நல்லோர்கள் அப்பனே உறங்கி கிடக்கின்றார்களப்பா.

அப்பனை இவையன்றி கூற நிச்சயமாய் தீயவர்களை ஈசனே தன் நடனத்தால் அழிப்பான் அழிப்பான். இவைதான் நடத்த போகின்றது. 

அப்பனே ஈசன் திருத்தலத்திலே யான் பல திருத்தலங்களும் இப்போதுகூட போய்க் கொண்டே இருக்கின்றேன்.

பொய்யான பக்தியப்பா.

மந்திரங்கள் கூட சொல்லிக்கொண்டே  கோபத்தை உருவாக்குகின்றான்.

இறைவனா இல்லை இறைவன் இறைவனுக்காவது பயப்பட வேண்டும்.

ஆனால் இறைவனுக்கே பயம் இல்லை எதை என்று கூற இவ்வாறு அங்கு சென்றால் அவ் அருள்கள்  ஏற்படும் என்பது கருத்து. மனிதனுடைய கருத்து.

அவையெல்லாம்  வீணப்பா.வீணப்பா முதலில் நீங்கள் திருந்துங்கள் சரியான வாழ்க்கையை வாழ கற்றுக் கொண்டால்.

அப்பனே இனிமேலும் என்னை எவை என்று சுகம் வேண்டும் பணம் வேண்டும் இவ்வாறு அனைத்தும் நடக்க வேண்டும் என்றெல்லாம் என்னிடம் கேட்கக்கூடாது.

அப்பனே நீ ஒரு கனவு அப்பனே நீ அதை தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே எவை என்று கூற கனவு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்.

அப்பனே அழிவு களிலே அழிந்துவிடும் மனிதன் கனவு இதுதானப்பா விதி.

இதை வைத்துக்கொண்டு சிறிது காலத்திற்கு வாழ்ந்து பணத்திற்காக சில காலம் சுகத்திற்காக சில காலம் சண்டை களுக்காக சில காலம் நோய்களுக்காக சிலகாலம் இவையெல்லாம் அப்பனே வீண்  என்பேன் அப்பனே. 

அப்பனே யானும் எச்சரித்துக் கொண்டே இருக்கின்றேன்.

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் நன்றாக அப்பனே. 

இன்னும் பல உரைகளில் யான் உரைக்கின்றேன் அப்பனே.

நீ ஒழுங்காக வாழ்ந்து வந்தால் அப்பனே நான் உன் கையைப் பிடித்து அழைத்து செல்வேன்.

உந்தனக்கு என்ன வேண்டும் என்று கூட யான் அழகாக செய்வேன்.

ஆனால் அப்பனே அவையெல்லாம் இல்லையப்பா.

யாங்கள் தேடிக் கொண்டே இருக்கின்றோம். நல் மனிதர்கள் இருக்கின்றார்களா என்று.

போட்டிகள் பொறாமைகள் அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்.

என்னை வணங்குபவர்களில்  அப்பனே யான் பெரியவன் நீ சிறியவன் யான்தான் அகத்தியனுக்கு சிறந்தவன் என்றெல்லாம் அப்பனே வருங்காலமாக ஆகிவிட்டார்கள் என்பேன்.

அதனையும் வேரோடு அழிப்பேன்.

அப்பனே சித்தர்கள் யார் என்று வரும் காலங்களில் காண்பிப்போம்.

ஆனால் கஷ்டங்கள் வைத்துத்தான் காண்பிப்போம் என்பேன்.

அப்பனே கலியுகத்தில் அப்பனே யாங்களே வந்துவிட்டோம்.

அப்பனே இனிமேலும் அப்பனையே ஒழுக்கமாக வாழ்ந்தால் அப்பனே யாங்களே அழைத்துச் செல்வோம் என்பது மெய்.

அப்பனே இன்னும் பல வாக்குகள் வாக்குகளும் உண்டு என்பேன்.

ஆனால் மனிதன் திருந்துவதாக இருந்தால் அப்பனே நிச்சயம் யாங்களே வந்து அழைத்து செல்வோம் அழைத்துச் செல்வோம் என்போம்.

நல் விதமாகவே மற்றொரு வாக்கும் சொல்லுகின்றேன் அப்பனே இன்னும் சில சித்தர்கள் வந்து சொல்வார்கள் சொல்வார்களப்பா.

 சித்தர்கள் அப்பனே வாக்குகள் கேட்டு நல் முறையாக நடந்து விட்டால் அப்பனே பெருவாழ்வு வாழ்ந்திடலாம் அப்பனே.

முக்திக்காகவும் யாங்கள் அழைத்துச் செல்வோம்.

அப்பனே வேண்டாம் வேண்டாம் அப்பனே பொய்யானவை தேடிப்போக வேண்டாம் அப்பனே என்பேன்.

அப்பனே வரவர பலப்பல கெட்டவைகளும் இவ்வுலகத்தில் நடக்குமப்பா .

அப்பனே யான் முன்னே சொன்ன மூலிகைகளையும்  சரியான முறையில் எடுத்துக் கொள்ள ஒரு வியாதியும் வராது என்பேன்.

அதைக் கூட மனிதனுக்கு பயன்படுத்த தெரியவில்லை அப்பனே. 

இது என் பக்தர்களுக்கு நிச்சயமாய் சென்றிட வேண்டும் அப்பனே  அனைவரும் தெரிந்து கொண்டு நலமே பாரிக்க.

அப்பனே மீண்டும் வந்து உரைக்கின்றேன் அதற்குள்ளே ஒர் சித்தனும் வந்து உரைப்பான் என்பேன்.

ஓம்  லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................தொடரும்!

Monday, 17 January 2022

சித்தன் அருள் - 1072 - அன்புடன் அகத்தியர் - கைலாயநாதர் ஆலயம், பள்ளித்தெரு கிராமம், ஆம்பூர் வட்டம்!



சமீபத்தில் குருநாதர் உரைத்த பொது வாக்கு

வாக்குரைத்த ஸ்தலம்:-

அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் ஆலயம், பள்ளித்தெரு கிராமம், ஆம்பூர் வட்டம், திருப்பத்தூர் மாவட்டம். 

ஆதி சித்தனை மனதில் எண்ணி வாக்குகள் உரைக்கின்றேன் அகத்தியன்.

அப்பனே மிகவும் சக்தி வாய்ந்த ஸ்தலம் இது.

இவை என்று கூற இத்திருத்தலத்தில் இத்திருத்தலத்திற்கு வந்து அப்பனே தங்கி உறங்கி செல்பவர்களின் பின் தீவினைகள் அகன்று போகும் பவுர்ணமி நாளில் பின் இங்கு சிவ புராணத்தையும் கோளாறு பதிகத்தையும் பின் எவை என்று உணர 108 முறை ஓதி பின் அதனை நிர்வகித்து அமைதி காக்க பின் உடனே பின் திருமணம் கைகூடும்.

பின் கர்மங்களும் சிறிது சிறிதாக அகலுமப்பா 

அகலுமப்பா என்பேன். இவ் மலையிலும் பின் சித்தர்கள் ஞானியர்கள் வாழ்ந்த இடம்.

வாழ்ந்த இடம் என்றாலும் அப்பனே பல ஞானியர்கள் இங்கு மாய்ந்து பின்பு ஜீவசமாதி ஆகவும் அடியில் பின்பு எதனை மாய்த்துக் கொண்டார் என்பதும் இருக்கின்றனர்.

அதனால்தானப்பா அவனே தேர்ந்தெடுத்தான் ஈசனே என்பதை யான் பரிபூரணமாக இங்கு உரைக்கின்றேன்.

சிவராத்திரியன்று ஈசனே இங்கு வலம் வருவானப்பா.

அப்பனே இங்கு வருபவர்கள் நலன்கள் ஆக முன்னேற்றங்கள் உண்டு என்பேன்.

அப்பனே இவ்வுலகத்தில் பின் கலியுகத்தில் என்றாலும் தீயவைகள் அகன்றிட பின்பு அவந்தன்(ஈசன்) பல பல பல ரூபத்திலும் இவ் வையகத்தில் சோதித்து தான் கொண்டிருக்கின்றான்.

ஆனால் அதனை மனிதர்கள் ஏன் கண்டு கொள்வதில்லை என்றாலும் அப்பனே இருப்பினும் பின் ஈசனே பின்பு அங்கங்கு உருவெடுத்து எழுவான் என்பது திண்ணம்.

அப்பனே இவையன்றி பின் ஞானங்கள் தோன்றும் ஞானங்கள் தோன்றும் அப்பனே.

இத்திருத்தலத்திற்கு வருபவர்கள் என்னுடைய ஆசிகளும் சித்தர்களுடைய ஆசிகளும் பின்பு நலம் என்பேன்.

அப்பனே அனைத்தும் பொய் என்பேன்.அப்பனே இறைபக்தியை பிடித்துக் கொள்ளுங்கள் என்பேன். அவந்தனை நினைத்து  பின் 

ஈசனை நாடிவிட்டால் பின்  எடுத்துச் செல்வான் எங்கேயோ.!! அதுதான் உண்மையான வாழ்க்கை மற்றவையெல்லாம் போலியே என்பதை உணர்ந்து கொள்க.

அப்பனே  அதுபோல்தான் ஞானியர்கள் பலர் இவ் மலையை வலம் வந்து பின்பு இங்கேயே தங்கி சென்று இறைவன் இங்கு தான் இருக்கின்றான் என எண்ணியும் பின் முருகனும் இங்கே மேல் எழும்பி காட்சி அருளினான் முன்பே பல யுகங்களுக்கு முன்பே.

(கைலாயநாதர் கோயில் பின்புறம் சிறு மலை உள்ளது. மலையின் பெயர் கைலாசகிரி. மலையின் மேல் முருகன் கோயில் உள்ளது.) 

அப்பனே பின் எவை என்று பின்பு எதனை நீக்க அப்பனே பின்பு பரிபூரணமாக ஓடோடி வருவான் முருகன் . அப்பன் பின் பாசத்திற்கிணங்க. 

அப்பனே பல ஞானியர்கள் வாழ்ந்த இடம் இது.

பின் அவர்களின் ஆன்மாவும் பின் இங்கே அலை மோதுகின்றது அப்பனே இதனை குறைகள் தீர்ப்பதற்கு என்பதற்காக இல்லை பின் மனிதர்களின் ஒவ்வொரு குறையும் தீர்த்துக் கொண்டு தான் பின் வலம் வருகிறார்கள் என்பதற்கிணங்க. ஆனாலும் மனிதர்கள் கண்டுகொள்வது இல்லை.

மனிதன் இங்கு வந்து சென்றாலும் இறைவனிடத்தில் பின் கஷ்டங்களே நிரம்பி உள்ளது ஆனாலும் பின் ஏன்?? இறைவனை வணங்க வேண்டும்??!! என்று மனதை மாற்றிக் கொள்கிறார்கள்.

ஆனாலும் அப்பனே இவையன்று பின் உணர பின்பு இறைவனே கதி என்று நினைத்துவிட்டால் அப்பனே ஞானியர்களும் சித்தர்களும் இதற்கு மாற்றாக பின்பு எங்கு அழைத்துச் செல்ல வேண்டுமோ? அங்கு அழைத்துச் சென்று பின் கர்மாவையும் அழித்து விட்டு பின் மோட்ச கதியை அடைவார்கள் என்பதே திண்ணம் அப்பனே.

குறைகள் கொள்ளாதீர்கள்.

இங்கு எழுந்தருளி இருக்கின்றான் சிவன். இவந்தன் முன்னிலையில் யான் உரைக்கின்றேன்.

இவந்தன் சேவைகள் (கோயில் திருப்பணிகள்) செய்பவர்களுக்கும் இவந்தன்(ஈசன்) இக் கடைசி பிறவியாக ஏற்றுக்கொண்டு பின் மெய் சிலிர்க்க வைக்கின்றது மோட்ச கதியாக அடைந்து விடுவார்கள்.

அப்பனே அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் இங்கு.

அப்பனே பல ஞானியர்கள் இருக்கும் இடம்.அப்பனே பின் எவை என்று பின் நிரூபிக்க அப்பனே இங்கு தங்குதல் வேண்டும் அப்பனே.

இங்கு தங்குதல் சில பிரச்சினைகள் அகலும் அப்பனே.   பின் மெய் சிலிர்ப்பான் அப்பனே.

இவந்தனக்கும்(ஈசன்) இவந்தன் முருகனுக்கும் பின் இங்கு பிடித்தமான இடம். இடத்திலும் ஒன்றுதான்.

அப்பனே எவை என்று பின் எவை என்று பின் வள்ளி மலையில் காலை பின் இவையன்று அங்கு ஓர் பின் அதனை நிரூபித்து விட்டு அங்கே இருந்து பின் இங்கே ஓர் காலடி வைப்பான் முருகன். அதனால் இங்கேயும்.    அவந்தனக்கு சுலபமான வழிகள் இருக்கின்றன. (வள்ளிமலைக்கும் கைலாசகிரி மலைக்கும் ரகசிய வழிகள் உள்ளன.) 

அவந்தன்(முருகன்) சந்தோஷப்படுவதும் இங்கே .

அப்பனே இவ்வளவு எவ்வாறு அப்பனே உணர்வதென்று அப்பனே இணைத்தது யார் ?யார்? என்று எங்கெங்கு சென்றாலும் அப்பனே இறைவனுக்குத் தெரியும்!!! யார் ?மூலம் ?எதைச் செய்யலாம்? வெற்றி கொள்ளலாம். என்றாலும் அப்பனே  அவந்தனே(ஈசன்) இணைத்து அணைத்து கொள்வான் அனைவரையும்.

அப்பனே பின் முன் போன போக்கிலே அப்பனே பின் செல்லுதல் வேண்டாமப்பா. 

அப்பனே  பின் எவை என்று ஞானியர்கள் அருள் பரிபூரணமாக இங்கு இருப்பதால் அப்பனே பின் நன்றாக வணங்கி இங்கு துயிலெழுந்து  (தங்கி உறங்கி செல்லுதல் வேண்டும்))  விட்டால் அப்பனே பரிசுத்தமான ஆன்மாக்களுடன் அப்பனே பின் ஞானியர்களும் தொடர்புகள் வைத்துக் கொள்வார்கள்.

பின் அனைத்து குறைகளும் நீங்கி விடும் இது உண்மை.

அப்பனே மீண்டும் வந்து ஒரு தடவை வாக்கு உரைக்கின்றேன் இங்கு.

ஆலயம் முகவரி மற்றும் விபரங்கள். 

அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் ஆலயம். 
பள்ளித்தெரு கிராமம். 
ஆம்பூர் வட்டம் திருப்பத்தூர் மாவட்டம். 

முருகன் கோயில் முகவரி 

அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், கைலாசகிரி. 
கெடம்பூர், ஊமராபாத் அஞ்சல்,
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம்,
தமிழ்நாடு - 635808
தொலைபேசி
+91 9080776377.

இங்கு அருள் பாலித்து வரும் உமா மகேஸ்வரி உடனுறை ஸ்ரீ கயிலாயநாதர் கற்கோயில் கருவறை மகாமண்டபம் நடராஜர் விநாயகர் முருகர் வள்ளி தெய்வானை நந்திதேவர் நால்வர் நவகிரகம் பைரவர் சண்டிகேஸ்வரர் சண்டிகேஸ்வரி உள்ளிட்ட அனைத்து மூர்த்திகளுக்கும் தனி சன்னதி மற்றும் ராஜகோபுரம் கருங்கல்லால் திருப்பணி செய்ய உள்ளது.

பக்தகோடிகள் தங்களால் இயன்ற பொருள் உதவி நிதி உதவி அளித்து இச் சிவாலய திருப்பணி புண்ணியத்தில் பங்கு பெறுமாறு பக்தியுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு சிவனடியார் திருப்பணி குழு மற்றும் ஊர் பொதுமக்கள்.

கோயில் பூசாரி தொடர்பு எண் : பழனி சிவனடியார் 7373422236

நிதி உதவி செய்ய வேண்டிய முகவரி.

SRI UMAMAHESHWARI KAILAYANATHAR TRUST. (REG NO :BT 796788.)
ACCOUNT NUMBER : 60342083334.
BANK: BANK OF MAHARASHTRA. 
AMBUR BRANCH. 
IFSC CODE NO: MAHB0001603.

CONTACT MOBILE NO. 9943301891, 9787140075.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........... தொடரும்!

Saturday, 15 January 2022

சித்தன் அருள் - 1071 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


வைவஸ்வத பட்டணம்  என்ற ஒரு பட்டணமுண்டு.  அந்த பட்டணம் உயர்ந்த மாளிகைகள் ஒன்றொடு ஒன்று நெருங்கியதாகவும், யாவருக்கும் அச்சம் தரும் மிகவும் கோர ரூபமுடைய  அநேகம் பிராணிகளுக்கும் இருப்பிடமாகவும், துக்கத்தையே கொடுப்பதாகவும் அமைந்திருக்கும்.

பாவம் செய்தவர்கள் மிகப்பலர். அந்த நகரத்திலிருந்து அண்டத்தில்  முகடு கிழிய, இப்போதும் ஆ, ஆ, ஊ. ஊ என்று ஓலமிடுகிறார்கள். அங்கு வெப்பத்தால் கொதிக்கும் கொதிநீர்தான் காணப்படும் .  குடிப்பதற்கேற்ற  ஒரு துளி தண்ணீர் கூட அங்கு கிடைக்காது.  மேகங்களலெல்லாம் அருந்துத்துவதற்கு அருகதையற்ற ரத்தம் முதலியவற்றையே பொழிவதையாக இருக்கும். முன்பு இறந்த ஜீவன், பதிமூன்றாம் நாளன்று யமபுரியக்கு செல்வான்  என்று சொன்னேன் அல்லவா? அவன் நிலையை  கூறுகிறேன், கேள்.

குரங்கை கயிற்றால் பிணைத்து இழுத்து செல்வதை போல, யமகிங்கரர்கள்  பத்தாம்  நாள் பிண்டத்தாலான ஜீவனைப் பாசக் கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு  செல்லும் போது , அந்த ஜீவன் தன்  புதல்வனை நினைத்து , 

"ஐயகோ! என் அருமை மகனே! நான் கஷ்டத்தோடு அவதிப்படுகிறேனே! ஐயோ!  நான் என்ன செய்வேன்! என்ன செய்வேன்? சர்வேஸ்வரன் ஒருவன் உண்டென்றும் ஸ்வர்க்கம், நரகம் என்ற இடங்கள் உள்ளன என்றும், அவற்றிற்கு செல்ல நன்னெறி, தீயநெறி என இரு நெறிகள் உண்டென்றும் உலகில் உயிரும் உடலும் கொண்டு நான் வாழ்ந்த காலத்தில் உலக மக்களின் பிறப்பிற்கும் இறப்பிற்கும் அதற்கப்பாலும் உள்ள வாழ்வுக்கு இதமானவற்றை சொன்னவர்களோடு முரண்பட்டு, ஸ்ரீயப்பதி என்று ஒருவன் இருக்கிறானோ, கடவுள்  இல்லாமல் மனிதன் வாழ முடியாதோ, மற்றவைகளும்  உளவோ, இறந்த பிறகு இன்னவையெல்லாம்  உள்ளன என்று கற்பனை செய்து மயக்கத்தால் பிதற்றுகிறீர்களே என்று வன்கண்மை பேசி, சாதுக்களையும், ஞானங்களையும், பாகவத சன்யாசிகளையும் ஏசிப்பேசிப்  பரிகாசம் செய்தேனே! அவற்றின் பயனையெல்லாம் இப்போது நான் அனுபவிக்கிறேன்,  என் முயற்சியாலோ , என் உழைப்பாலோ, சக்தியாலோ , எதையும்  செய்ய முடியாமல் தனியனாய் தவியாய் தவிக்கிறேனே! மலை போன்ற  ஆயுதத்தால் யமகிங்கரர்கள் இரக்கமில்லாமல் என்னை அடித்து புடைக்கிறார்களே! 

அந்தோ! நான் பூமியில்  வாழ்ந்த காலத்தில் பெரியோர்களுக்கு ஓர் உதவியும் செய்தேன் அல்லேன்!  தீர்த்த யாத்திரைகள் செய்தேனல்லேன்! மாதவங்கள்  எதுவும் புரிந்தேனல்லேன்!

மாதவம் செய்த யோகியரையும், முனிவரையும் போற்றினேன் அல்லேன்! தண்ணீர் இல்லாத இடங்களில் தண்ணீர் பந்தல் எதையுமே வைத்தவன் அல்லேன்! ஒரு கிணறு வெட்டவில்லை! பசுக்கள் மேய்வதற்குரிய பசும்புல் பயிரிட்ட பூமியை வைத்திருக்கவில்லை! மந்தை வெளியை என் சொந்த நிலம் என்றேன்! இப்போது எந்த நிலமும் இல்லாமல், இருக்கும் உடலும் இல்லாமல் ஆவியாய் அவதியால் அலறித் தவிக்கிறேனே! பூமியில் வாழ்ந்த காலத்தில் தானம் செய்தேனல்லேன்! 

வேத சாஸ்திரங்களை பழித்தேன்! புராணங்களை  பொய்கள் என இகழ்த்தேன்! கல்வி கற்போருக்குக் கல்விச் சாலைகள் உண்டாக்க மறுத்தேன். இராமாயண, பாரத, பகவாதங்களையும் புராணங்களையும் கையால் எழுதியேனும், எழுதச் செய்தேனும், விலை  கொடுத்து வாங்கியேனும் அவற்றைப் படிக்க விரும்பியவருக்கு மனதார கொடுத்தேனல்லேன்! 

பெரியவர்கள் சொன்னதைக் கேட்கவுமில்லை . படிக்க வைத்தாவது புராண வசனங்களைக்  கேட்டதுமில்லை. ஸ்ரீஹரியின் புனித தினமாகிய ஏகாதசியில் உபவாசம் இருந்தேனல்லேன். 

நல்வினை, நற்செயல் ஒன்றைக்கூட கனவிலாவது நினைத்தேன் அல்லேன். தீவினைகளில் ஒன்றைக்கூட விடாமல், அத்தனையும் செய்தேன்! இப்போது என் செய்வேன்? யாரிடம் அழுது சொல்வேன்! என்று அழுது கூக்குரல் இட்ட  வண்ணம், ஒவ்வொரு குரலுக்கும் யமகிங்கரர் அவனைத் துன்புறுத்த, அவன் அவர்களால் யமபுரிக்கு இழுத்து செல்லப்படுவான்!" என்று திருமால் கூறியருளியதாகச் சூதபுராணிகர் கூறினார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!