​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 3 September 2020

சித்தன் அருள் - 901 - ஆலயங்களும் விநோதமும் - கிருஷ்ணர் கோவில், அம்பலப்புழை, கேரள மாநிலம்!


பிரளய கால முடிவில், தற்போது குருவாயூரில் பிரதிஷ்டை செய்துள்ள விக்கிரகம், முதலில் கரை சேர்ந்த இடம், அம்பலப்புழை என்பர். பின்னர் அந்நியர் படையெடுப்பிலிருந்து குருவாயூரப்பன் விக்கிரகத்தை காப்பாற்ற, குருவாயூரிலிருந்து, அம்பலப்புழையில் கொண்டு வந்து மறைத்து வைத்ததாகவும் தகவல் உள்ளது. அம்பலப்புழை = அம்பலம் (கோவில்) + புழை (ஆறு). மிகுந்த நீர் வளம் நிறைந்த பூமி. 

எப்படியாயினும், அம்பலப்புழை என்பது, பகவான் கிருஷ்ணர் சிறு குழந்தையாக ஓடி விளையாடிய இடம். இங்கு கிருஷ்ணரை, உண்ணிக்கிருஷ்ணன்/உண்ணிக்கண்ணன் என்றழைப்பர். சிறு குழந்தை என்பதே இதன் அர்த்தம். கிஷ்ணர் ஓடி விளையாடின இடமாதலால், இன்றும் அந்த அதிர்வலையை உணர முடியும். மிக உயரமான அரசமரம் அவர் சுற்றி ஓடி விளையாடி அவர் கரம் பட்டது. ஒவ்வொரு சிறு கல்லும், கிருஷ்ணர் பாதம் பட்டது. கிளிப்பாட்டு என்கிற முறையில், ராமாயணமும், மகாபாரதமும் இங்குதான் இயற்றப்பட்டது. அனைத்து உபசாரங்களுடன் நித்ய பூஜையை பகவான் கிருஷ்ணர் இன்றும் ஏற்றுக்கொள்கிற இடம். தென்றலாக, வேகமாக கோவில் பிரகாரத்தில் காற்றடித்தால், நடந்து செல்கிற பக்தர் கூட, நின்று விடுவார். பகவான் ஓடி விளையாடுகிற பொழுது வெளிவிடுகிற மூச்சு காற்று எனவும், அவர் விளையாட்டுக்கு நாம் இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்கிற ஒரு எண்ணமும்தான் காரணம்.

இங்கு இறைவனுக்கு, அரிசியை பாலில் வேகவைத்து, பாயாசமாக நிவேதிக்கிறார்கள். "அம்பலப்புழை பாயாசம்" உலகில் முதன்மையானது, அத்தனை ருசியானது. ஏன் என்றால், அது இறைவன் ஏற்றுக்கொண்டு பிரசாதமாக திருப்பி தருவதினால். வேறு எங்கும் இதுபோல் கிடைக்காது. பக்தர்களுக்கு முன்பதிவின் பேரில், இந்த பாயாசம், நிவேதனத்துக்குப் பின் கிடைக்கிறது.

நித்ய பூஜையின் முடிவில், பூஜாரி வெளியே வந்து மூன்று முறை "வாசுதேவோ" என கூவி அழைப்பார். கிருஷ்ணரை சிறு குழந்தையாக பாவித்து பூஜைகள் செய்வதால், மாலையில் அவர் விளையாட சென்றுவிடுவதாகவும், இரவில், அவரை கோவிலுக்குள் அழைக்கும் விதமாக, எந்த பக்கம் சென்றிருந்தாலும்,"உள்ளே வா  போதும் விளையாடியது! இருட்டி விட்டது" என்கிற தாயின்  மனோபாவத்துடன் பூஜாரி அழைப்பார். அடியவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.
சரி! இங்கு நமக்கு என்ன செய்தி?

ஒருமுறை இந்த கோவிலுக்கு சென்று, உண்ணிகிருஷ்ணன் ஓடி விளையாடி அவன் பாதம், கைபட்ட இடங்களை எல்லாம், உணர வேண்டும். ஒரு முறை கோவில் பிரகாரத்தில் சுற்றி வந்தாலே போதும். நல்ல அனுபவங்கள், அதிர்வலைகள் கிடைக்கும்! இறைவனை நமக்கு தாங்கும் விதமாக, குழந்தையாக உணரலாம். இன்றும், அவன் தரிசனம்/அருள், எல்லாவற்றிற்கும் மேலாக அவன் கர ஸ்பரிசம் பட்ட அதிர்வலைகளை உணர்பவர்கள், ஏராளம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............. தொடரும்!

3 comments:

  1. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ ����

    ReplyDelete
  2. Om sri lobamudhra thayar samedha agasthia peruman thiruvadigale potri

    ReplyDelete