​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 28 May 2017

சித்தன் அருள் - 681 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

சுருக்கமாக நாங்கள் கூறவருவது என்னவென்றால் மனித உடம்பெடுத்த ஆத்மா, தன்னை ஆத்மா என்று உணராத வரையில் ஒரு மனிதன் எதைப் பெற்றாலும், எத்தனை உயர்வை உலகியல் ரீதியாகப் பெற்றாலும், அதனால் யாதொரு பலனுமில்லை. தன்னைத்தான் உணருகின்ற வகையில் எவனொருவனுக்கு ஒரு பிறவி அமைகிறதோ, "இது பாவம், இது புண்ணியம், இதை செய்யலாம், இதை செய்யக்கூடாது" என்ற தெய்வீக அறிவு கடுகளவேனும் எந்தப் பிறவியில் ஒருவனுக்கு உதயமாகிறதோ, நவக்ரகங்கள், ஞானியர்கள், பிறவி – இது போன்ற விஷயங்களில் ஓரளவேனும் ஈடுபாடு ஒருவனுக்கு எந்தப் பிறவியில் ஏற்படுகிறதோ அந்தப் பிறவிதான், மெல்ல, மெல்ல இறைவனை நோக்கி அழைத்து செல்லக்கூடிய முதல் படிகட்டு என்பதை புரிந்து கொண்டிட வேண்டும். ஆனால் அப்படி உணர்ந்த மனிதர்கள் கூட பல்வேறு தருணங்களில் மனசோர்வை அடைந்து "இப்படியெல்லாம் இது போன்ற விஷயத்தை பேசிப்பேசி உலகியல் ரீதியாக தோற்று விட்டோமே? இதெல்லாம் தெரியாத ஒரு மனிதன் நல்ல முறையில் வெற்றி பெற்று உயர்ந்த பதவியில் இருக்கிறானே? எல்லா சுகங்களையும் நுகர்கிறானே?" என்று மற்ற மனிதர்களோடு தம்மை ஒப்பிட்டுப் பார்த்து, தான் பின்பற்றி வரும் கொள்கை தவறு எனவும், தான் நடந்து வரும் பாதை தவறு எனவும் எண்ண வேண்டிய நிலைமைக்கு ஆட்பட்டு குழப்பத்தில் வாழத்துவங்குகிறான்.

4 comments:

  1. வணக்கம் திரு கார்த்திகேயன் அவர்களே
    மீண்டும் "சித்தன் அருள்" சொல்ல வந்ததில் (நீண்ட இடைவெளிக்குப் பின் )
    மிக்க மகிழ்சசி .
    அகத்திசாய நமஹ
    அன்புடன் sv

    ReplyDelete
  2. மன்னிக்கவும், திரு எஸ். வீ அவர்களே. தவறு நடந்துவிட்டது. அதை பிரசுரித்தது அடியேன் தான். Administrator நிலையில் ஏதோ ஒன்றை திருத்திய பொழுது, கவனிக்காமல் திரு.கார்த்திகேயன் அவர்கள் தொடர்பில் வெளியிட்டுவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.

    இப்படிக்கு

    அக்னிலிங்கம்

    ReplyDelete