​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 11 May 2017

சித்தன் அருள் - 667 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒவ்வொரு சிறு பயணமோ, பெரு பயணமோ மூத்தோனை வணங்கி செல்வதும் அருகில் உள்ள ஆலயத்தில் எஃது தெய்வ வடிவம் இருந்தாலும் வணங்கி செல்வதும் குறிப்பாக காவல் தெய்வங்களை வணங்கி செல்வதும் சாலையோரத்திலே விதவிதமான ஆலயங்களைக் கட்டுவதில் எமக்கு உடன்பாடில்லை என்றாலும் கூட பல்வேறு எல்லை தெய்வங்கள் பல்வேறு எல்லைகளிலே அமர்ந்து ஆட்சி செய்வதால் குறிப்பிட்ட எல்லைகளிலே செல்லும்பொழுது இடைக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆலயமாக இல்லாமல் பழங்கால ஆலயமாக இருக்கும் பட்சத்தில் அங்கும் சென்று வழிபாடு செய்வது ஏற்புடையதாகும். பலமுறை யாங்கள் பலருக்குக் கூறியதுதான். அல்பொழுது பயணத்தை முற்றிலும் தவிர்ப்பதும், தவிர்க்க முடியாத நிலையில் மட்டும் இரவுப்பயணத்தை வைத்துக்கொள்வதும் ஏற்புடையதாகும். இறைவன் அருளாலே இஃதொப்ப மன உணர்வுக்கும், சுய சிந்தனைக்கும் பிற இறை சார்ந்த தூண்டுதலுக்கும் வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் சராசரியான மனித வாழ்வை விட்டுவிட்டு அமைதியான முறையிலே, சாத்வீகமான முறையிலே ஆழ்ந்த தியானத்தில் அஃது கைவரப்பெறுகிறதோ இல்லையோ அன்றாடம் சில நாழிகையாவது முயற்சி செய்ய வேண்டும். இஃதொப்ப யாங்கள் மனித நோக்கிலே எதனையும் பார்ப்பதில்லை. ஒரு பணிக்கு ஒரு மனிதனை வைக்க வேண்டுமென்றால் அனுபவம் இருக்கிறாதா? திறன் பெற்றவனா? என்று பார்க்கின்ற நிலை இருக்கிறது. அதனை குறை என்று நாங்கள் கூறவில்லை. இருப்பினும் கூட இறைவன் அருளாலே ஒருவரின் ஜாதக நிலை, ஆத்ம நிலை, மனோ நிலை, சந்திர பலம், இன்னும் ஜாதகத்தில் சந்திரன் நின்ற இடத்திலிருந்து நான்காமிடத்தின் நிலை, லக்னத்திலிருந்து நான்காமிடத்தின் நிலை, அஃதொப்ப ஆறாம் இடத்திலிருந்து, எட்டாம் இடத்திலிருந்து நான்காம் இடத்தின் நிலை – இவற்றையெல்லாம் கருத்தில் கொள்வதோடு இறையின் அருளாணையையும் கருத்தில் கொண்டே சிலவற்றை உணர்த்துகிறோம். அவ்வாறு உணர்த்தும்பொழுதோ, உரைக்கும்பொழுதோ வேடிக்கையாக இருக்கலாம் அல்லது இதனை ஏற்க இயலாது, இப்படியெல்லாம் பார்த்தால் வாழ இயலாது என்று தோன்றலாம். அதுதான் விதியென்பது. விதி அத்தனை விரைவாக நல்விஷயங்களை மதியில் ஏற்றவிடாது.

4 comments:

  1. விதி ila Ella neenga ellarum pantra sathi

    ReplyDelete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  3. Mr.Anbu.. If u r not interested in this, y r u seeing this blogspot. We have faith. Please dont disturb us

    ReplyDelete
    Replies
    1. திரு (மதி) மொளீஸ், விடுங்கள் திரு (மதி) அன்பு அரசி எனக்கின்னமோ கலியின் பிடியில் இருப்பதுபோல் தெரிகிறது. அதேபோல் குரு அகஸ்தியர் நம்மையெல்லாம் மாயை பீடிக்கின்றதா என்று சோதனை செய்வதற்காகவே இவர்களைப்போன்றவர்களை அனுப்புவார் (அவர்களும் மாயையின் பிடியினால் இப்படி பேசுவர்). நாம் நமது குரு அகஸ்தியரின் பாதம் பனிந்து இது போன்ற கருத்துக்களை சிறு கவலை கூட இல்லாமல் புறக்கணித்து சென்று கொண்டே இருப்போம். நன்றி.

      Delete