அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
தன் முனைப்பு இருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது ?
மற்றவர்களுக்கு இருக்கிறது என்று சொல்வதே தன்முனைப்பின் அடையாளம்தான். உலகிலே மிகவும் தீயவர் யார் ? மிகவும் நல்லவர் யார்? என்ற தேர்வு பஞ்ச பாண்டவர்களில் தர்மருக்கும், கௌரவர்களில் துரியோதனனுக்கும் வைத்தபொழுது, துரியோதனன் சென்று வந்து முனிபுங்கவர்களிடம் ‘ யாரைப் பார்த்தாலும் எனக்கு கெட்டவனாகத்தான் தெரிகிறார்கள். எல்லோரும் தீயவர்கள்தான். இந்த உலகம் தீயவர்களால்தான் நிரம்பப்பட்டிருக்கிறது ‘ என்று கூறினானாம். தர்மர் வந்து கூறும்பொழுது ‘இந்த உலகில் எல்லோரும் நல்லவர்களே. இருக்கின்ற ஒரே தீயவன் நான்தான்' என்று கூறினானாம். இந்த சம்பவத்திலிருந்து புரிந்துகொள்ள வேண்டியது என்ன? தன்னுடைய பார்வையில் எல்லாம் நல்லவைகளாகத் தெரியவே தன்னுடைய மனதையும், சிந்தனையையும், கருத்தையும் அனுமதித்தால் அதுவே சிறப்பாகும். ஒரு மகா பெரிய தீயவனிடமும் ஏதாவது ஒரு நல்ல குணம் இருக்கும். எத்தனை பெரிய நல்லவனிடமும் எஃதாவது ஒரு தீய குணம் இருக்கும். நல்லவனிடம் இருக்கின்ற தீய குணத்தை சீர்தூக்கிப் பார்த்து அவன் திருத்திக் கொண்டிய வேண்டும். தீயவனிடம் இருக்கக்கூடிய நல்ல குணத்தை அவன் மேலும் வளர்த்துக்கொண்டு அதன் மூலம் மற்ற தீய குணங்களை விட அவன் முயற்சி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment