அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
பிறர்பொருட்டு ஒவ்வொரு மனிதனும் பிரார்த்தனை செய்ய வேண்டும், பிறர் நலம் குறித்து எண்ண வேண்டும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் ஜீவ அருள் ஒலையிலே வாக்கு என்று வரும்பொழுது ஒவ்வொரு மனிதனும் அந்தந்த குறிப்பிட்ட ஆத்மாவும் அதற்கேற்ற கிரகநிலையைப்பெற்று முழு சரணாகதியோடு இன்னும் சரியாகக் கூறப்போனால் ஒரு கிரக நிலை இருக்கும்பொழுது இந்த ஜீவ அருள் ஒலையை ஒரு மனிதன் ஏற்பான், நம்புவான். ‘ இதுதான் எனது வாழ்க்கையின் லட்சியம், உயிர்மூச்சு ‘ என்று கூட கருதுவான். சில சமயம் அவனது ஊழ்வினையால், பாவ வினையால் கிரக நிலைகள் மாறும்பொழுது இந்த வாக்குகளையே புறக்கணிப்பான், நம்ப மறுப்பான். பிறகு மீண்டும் நம்புவான், பிறகு புறக்கணிப்பான். சராசரி மனிதனின் நிலை இவ்வாறு இருக்க பிறர் பொருட்டு நீ பிரார்த்தனை செய்யலாம். ஆலயம் செல்லுமாறு அறிவுரை கூறலாம். ஆனால் ‘ சித்தர்கள் ஒரு ஒலையிலே வந்து வாக்கைக் கூறுகிறார்கள். அங்கே சென்று உனக்காக வாக்கினைக் கேட்டேன். இவ்வாறு பரிகாரம் வந்திருக்கிறது ‘ என்று சொன்னால் அதனை 100 – க்கு 99 விழுக்காடு மனிதர்கள் ஏற்க மாட்டார்கள், நம்ப மாட்டார்கள். உன்னையும் ஏளனம் செய்வார்கள். பொதுவாக உனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இது பொருந்தும். எனவே பிறர் பொருட்டு பிரார்த்தனை செய்வது ஏற்புடையது.
No comments:
Post a Comment