அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
தினசரி கடமையாக, குறைந்த பட்சம் எஃதாவது ஒரு ஆலயம் சென்று மனமொன்றி வழிபடுவது நன்மையைத் தரும். அப்படியும் இல்லாதவர்கள் குறைந்தபட்சம், இரண்டு நாழிகையாவது காலையிலோ, மாலையிலோ இல்லத்தில் அமைதியாக நெய் தீபம் ஏற்றி, உயர்வான முறையிலே வாசனாதி திரவியங்களையெல்லாம் இட்டு, எஃதாவது இறை நாமாவளியை (சொல்லி) மனதிற்கு பிடித்த எந்த இறைவனின் வடிவத்தையாவது வணங்கி வருவது நன்மையைத் தரும். குறைந்த பட்சம் ஒரு மனிதனுக்காவது அவனுக்கு வேண்டிய நியாயமான உதவிகளை செய்வது இறைவனின் அருளை விரைவில் பெற்றுத்தரும். அடுத்ததாக தன் கடமைகளை மறக்காமல் நேர்மையாக ஆற்றுவது என்ற உறுதியை எடுத்துக்கொண்டு அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும். மனைவியாகப்பட்டவள் இல்லறக் கடமைகளை ஆற்றுவதும், கணவனாகப்பட்டவன் பணியில் உள்ள கடமைகளை ஆற்றுவதும், பிள்ளைகள் கல்வி கற்க வேண்டிய கடமைகளை ஆற்றுவதும், எதையும் ஒத்தி வைக்காமல் நேர்மையான முறையில் உடனுக்குடன் செய்கின்ற ஒரு பழக்கத்தை கடைபிடித்துக்கொண்டே இறை வழிபாடு, தர்மகாரியங்கள் செய்வது கட்டாயம் இறைவனை நோக்கி செல்வதற்கு மிக எளிய வழியாகும்.
" மனைவியாகப்பட்டவள் இல்லறக் கடமைகளை ஆற்றுவதும், கணவனாகப்பட்டவன் பணியில் உள்ள கடமைகளை ஆற்றுவதும் "
ReplyDeleteஅது அந்த காலம் இப்பொழுதெல்லாம் மனைவி அலுவுலக கடமையை ஆற்றுவதில் தான் ஆர்வமகா உள்ளார் . ஆண்கள்தான் இல்லற கடமையை செய்கிறார்கள் காலத்தின் கோலம் கலிபுருஷனின் லீலை !! . ஏதோ ஒரு சிலருக்கு நல்ல மனைவி அமைகிறது . பெரும்பாலானோர் சகித்துக்கொண்டுதான் வாழ்கிறார்கள் ....
மும்மூர்த்திகளுக்கும் இதே நிலைமைதான் என்று நினைக்கிறேன் !!! :p :P
ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
ReplyDelete