​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 15 May 2017

சித்தன் அருள் - 669 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தினசரி கடமையாக, குறைந்த பட்சம் எஃதாவது ஒரு ஆலயம் சென்று மனமொன்றி வழிபடுவது நன்மையைத் தரும்.  அப்படியும் இல்லாதவர்கள் குறைந்தபட்சம், இரண்டு நாழிகையாவது காலையிலோ, மாலையிலோ இல்லத்தில் அமைதியாக நெய் தீபம் ஏற்றி, உயர்வான முறையிலே வாசனாதி திரவியங்களையெல்லாம் இட்டு, எஃதாவது இறை நாமாவளியை (சொல்லி) மனதிற்கு பிடித்த எந்த இறைவனின் வடிவத்தையாவது வணங்கி வருவது நன்மையைத் தரும். குறைந்த பட்சம் ஒரு மனிதனுக்காவது அவனுக்கு வேண்டிய நியாயமான உதவிகளை செய்வது இறைவனின் அருளை விரைவில் பெற்றுத்தரும். அடுத்ததாக தன் கடமைகளை மறக்காமல் நேர்மையாக ஆற்றுவது என்ற உறுதியை எடுத்துக்கொண்டு அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும். மனைவியாகப்பட்டவள் இல்லறக் கடமைகளை ஆற்றுவதும், கணவனாகப்பட்டவன் பணியில் உள்ள கடமைகளை ஆற்றுவதும், பிள்ளைகள் கல்வி கற்க வேண்டிய கடமைகளை ஆற்றுவதும், எதையும் ஒத்தி வைக்காமல் நேர்மையான முறையில் உடனுக்குடன் செய்கின்ற ஒரு பழக்கத்தை கடைபிடித்துக்கொண்டே இறை வழிபாடு, தர்மகாரியங்கள் செய்வது கட்டாயம் இறைவனை நோக்கி செல்வதற்கு மிக எளிய வழியாகும்.

2 comments:

  1. " மனைவியாகப்பட்டவள் இல்லறக் கடமைகளை ஆற்றுவதும், கணவனாகப்பட்டவன் பணியில் உள்ள கடமைகளை ஆற்றுவதும் "

    அது அந்த காலம் இப்பொழுதெல்லாம் மனைவி அலுவுலக கடமையை ஆற்றுவதில் தான் ஆர்வமகா உள்ளார் . ஆண்கள்தான் இல்லற கடமையை செய்கிறார்கள் காலத்தின் கோலம் கலிபுருஷனின் லீலை !! . ஏதோ ஒரு சிலருக்கு நல்ல மனைவி அமைகிறது . பெரும்பாலானோர் சகித்துக்கொண்டுதான் வாழ்கிறார்கள் ....


    மும்மூர்த்திகளுக்கும் இதே நிலைமைதான் என்று நினைக்கிறேன் !!! :p :P

    ReplyDelete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete