​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 1 August 2016

சித்தன் அருள் - 393 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"அடிப்படையில் லோகாயத விஷயங்களுக்காக வாழக் கற்றுக் கொண்ட மனிதன், எந்த குற்றத்தையும் செய்யத் தயங்குவதில்லை. குற்றம் செய்கின்ற யாருக்கும், எக்காலமும் இறைவன், உடனடியாக தண்டனை வழங்கியதாக சரித்திரம் இல்லை. இதைத்தான், மனிதன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறான்." - அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!

2 comments:

  1. தண்டனை எப்பொது தருவார் நாம் தண்டனை கிடைத்ததை அறிய முடியுமா

    ReplyDelete
    Replies
    1. தர்மத்துக்கு உட்பட்ட நினைத்த விஷயம் நடக்காமல் போவது, ஸ்தல யாத்திரை, கோவில் தரிசனம், தான தர்மம் இவைகளில் தடங்கல், உடல் உபாதைகள், உடல் சுத்தம், உள்ள சுத்தம் இல்லாமல் இருப்பது, ஆன்மீக விஷயங்களில் பங்கு கொள்ள முடியாமல் போவது, எளிய நல்ல விஷயங்களுக்கு கூட மிக பிரயத்தனப்பட்டு நிறைவேற முயற்சி செய்வது, ஒருவரின் வார்த்தைகளில் நன்மை இல்லாமல் இருப்பது போன்ற நிறைய விஷயங்களை கவனித்தால், எத்தனை எளிதாக, நமக்கு தெரியாமலேயே தண்டனை வழங்கப் படுகிறது என்பதை உணரலாம்.

      Delete