"எத்தனை ஆசிகள் யாங்கள் வழங்கினாலும், தனத்தையே குறிகொண்டு வாழ்பவரை யாங்கள் கரை சேர்ப்பதில்லை. சிறப்பான சிந்தை, உயர்ந்த குணம், எவருக்கும் உதவுதல், எதிரிக்கும் உதவுதல் என்ற மனம், மனத்தால் அணுவளவும் சூது இல்லாமல் இருப்பது, வாரி வாரி வழங்குவது போன்ற குணங்கள், எம்மை அருகே சேர்க்குமப்பா. மனம் ஒன்று நினைக்க, வாக்கு ஒன்று சொல்ல, செயல் ஒன்று செய்ய வரும் மாந்தர்களை யாங்கள் நன்றாக அறிவோம். அப்பனே! சரணாகதி அடைந்தால்தான் தேற முடியும். எம்மை பணிந்தாலும், பணியாவிட்டாலும் இறையை பணிய வேண்டும். எம்மை ஏற்றாலும், ஏற்காவிட்டாலும், இறையை ஏற்கவேண்டும். வெறும் வழிபாட்டை மட்டுமல்ல, சத்தியத்தை ஏற்கவேண்டும். ஏற்பதென்றால் மந்திர உருப்போடுவது மட்டுமல்ல, மனம் குன்றா தானம் அளிப்பதையும் ஏற்க வேண்டும். எம்மிடம் கணிதம் பார்த்தால், இறையிடம் கணிதம் பார்த்தால், யாங்களும் கணிதம் பார்க்கவேண்டிவரும். - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
அகத்தியர் அறிவுரை!
அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment