​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 26 November 2015

சித்தன் அருள் - 260 - "பெருமாளும் அடியேனும்" - 30 - சனீச்வர கலிபுருஷ சந்திப்பு!

ஒருவன் நல்லவனா அல்லது கெட்டவனா என்பதை அவனது செயல், பேச்சு மூலம் தெரிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவருக்கு நல்லகாலம் வந்துவிட்டதா அல்லது கெட்டகாலம் வந்துவிட்டதா? என்பதையும் அவரது நடவடிக்கை எடுத்துக் காட்டிவிடும்.

இத்தனை ஆண்டு காலமாக பெருமாளுக்கு தேவையான கைங்கர்யங்களைச் செய்து வந்த கருடாழ்வாரை திருமாலிடமிருந்து பிரித்து விடவேண்டும் என்று திட்டம் தீட்டினான், கலிபுருஷன்.

கருடாழ்வாரின் மனைவி இதற்கு பலிகடா ஆனாள்.  கலிபுருஷன் சொன்னதை நம்பினாள்.  அதுவரை அமைதியாக அடக்கமாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தவள், அதை அறவே மறந்தாள். கருடாழ்வாரின் மனதைப் புண்படுத்தும்படி நடந்துகொண்டாள்.

அப்படிச் சொன்னால் "கருடாழ்வார்" தன் தவற்றை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்த்தாள், பாவம் அவள். தவறு செய்தால் தானே கருடாழ்வார் அதை ஒப்புக்கொள்வதற்கு? கருடாழ்வார் அதை மறுத்தபோது, திருமலை வேங்கடவனை நாடிச் செல்லக் கூடாது என்று வழியையும் மறித்தாள்.

மற்ற எல்லாவற்றையும் கூட கருடாழ்வார் பொறுத்துக் கொண்டாலும் பொறுத்துக் கொள்வாரே தவிர, பெருமாள் தரிசனம் செய்யக் கூடாது என்று சொன்னதை மாத்திரம் அவரால் தாங்கிக் கொள்ள முடியாது.

எனவே, மனைவியின் கட்டுப்பாட்டை உதறித் தள்ளிவிட்டு, கருடாழ்வார் திருமலை வேங்கடவனைக் காணப் புறப்பட்டு விட்டார்.

வாழ்க்கையில் முதன் முதலாக நடந்த இந்த நிகழ்ச்சியைக் கண்டு கருடாழ்வாரின் மனைவி அதிர்ச்சி அடைந்தாள்.

கலிபுருஷனுக்கு ஒரு திருப்தி! "எப்படியோ நாம் போட்ட திட்டத்தில் ஒரு பகுதி வெற்றி அடைந்துவிட்டது. இன்னொரு பகுதி வெற்றி அடைய வேண்டுமானால் திருமலை வேங்கடவனுக்கும் கருடாழ்வாருக்கும் இடையே பகையை உண்டாக்க வேண்டும்" என எண்ணினான்.

எப்படி பகையை உண்டாக்குவது?

அவர்கள் இருவருக்கும் யுத்தத்தை ஏற்படுத்த முடியாது. வாக்குவாதம் ஏற்படவேண்டும். அந்த வாக்குவாதத்தில் கருடாழ்வார் மிகவும் தடித்த வார்த்தைகளைப் பிரயோகிக்கவேண்டும். அப்படி வார்த்தை தடித்துப் போனால், வேங்கடவன் வெகுண்டு எழுந்து கருடாழ்வாரை விரட்டி விடுவார்.

கருடாழ்வாருக்கோ மிகவும் ரோஷம் அதிகம். திருமாலிடம் கோபித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறிவிடுவார். அப்படி கருடாழ்வார், திருமலை வேங்கடவனிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டால், இனி பெருமாள் கருடாழ்வார் துணை இல்லாமல், வெளியே செல்ல வேண்டும்.

வேங்கடவன் தனித்து செல்லும் பொழுது, கலிபுருஷன் பெருமாளை வீழ்த்தி தன் அதர்ம செல்வாக்கை பூமியில் நிலை நிறுத்திவிடலாம் என்று கலிபுருஷன் ஆசையாக எண்ணி சந்தோஷப்பட்டான்.

அப்பொழுதுதான் கலிபுருஷனுக்கு சட்டென்று ஒன்று தோன்றியது.

சனிபகவான் துணையில்லாமல் கருடாழ்வாருக்கும் வேங்கடவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட முடியாது. ஏனெனில், வாக்கில் சனிபகவான் அமர்ந்துவிட்டால் போதும், எப்பேர் பட்டவர்களும் வீழ்ந்து விடுவார்கள் என்பதை உணர்ந்த கலிபுருஷன் சட்டென்று அங்கிருந்து சனிபகவான் இருப்பிடத்திற்கு வந்தான்.

நீளாதேவியோடு பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருந்த சனீஸ்வரனுக்கு ஏதோ ஒரு துஷ்டதேவதை மங்களமானஇடத்திற்குள் நுழைந்தால் என்ன அருவருப்பு ஏற்படுமோ, அதே போல் அவர் நாசியில் கெட்ட காற்று பட்டது.

ஒரு நாழிகை மௌனம் காத்து ஞானத்தால் பார்த்த பொழுது பூலோகத்தைக் கெடுக்க அவதாரம் எடுத்திருக்கும் கலிபுருஷன் தன் பக்கம் வந்திருப்பது தெரிந்தது.

கலிபுருஷனைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்த சனீச்வரன் இதுவரை கலிபுருஷனை நேரடியாகப் பார்த்ததில்லை. அவனைப் பார்க்க மனம் துடித்தது. சமீபகாலமாக திருமலையில் கலிபுருஷன் செய்து வரும் அட்டூழியங்களை அரசால் புரசலாக கேள்விப்பட்டிருந்தார்.

தன்னுடைய துணை இல்லாமல் எப்படி கலிபுருஷன் வெல்லமுடியும்? எல்லாக் கெடுதல்களுக்கும் தன்னை ஒரு சூத்திரதாரியாக பிரம்மன் படைத்த பொழுது கலிபுருஷனைத் தோற்றுவிக்க வேண்டிய அவசியமே இல்லை. என்னதான் அவன் ஆட்டம் போட்டாலும் வேங்கடவன் முன்பு நிற்க முடியவில்லை.

தோற்றுப் போனான்.

ஆனால்.......

"அன்றே கலிபுருஷன் என்னைத் தேடி வந்திருந்தால் அவனுக்குத் தோள்கொடுத்து தூக்கி விட்டிருப்பேன். பெருமாளும் அன்றே தோற்றுப் போய் திருமலையை விட்டே ஓடிப் போயிருப்பார். ம்ம்ம்! இதெல்லாம் கலிபுருஷனுக்கு எங்கே தெரியப் போகிறது? போதாதகாலம். சரியாக மாட்டிக் கொண்டான், போனது போகட்டும். இப்போதாவது கலிபுருஷனுக்கு புத்தி வந்ததே! அதுவரைக்கும் சந்தோஷம்!"

என்று தனக்குத் தானே சொல்லி சிரித்துக் கொண்டார். பிறகு தன் இரண்டு கண்களையும் அகல விரித்து கலிபுருஷனைப் பார்த்தார் சனீச்வரன்.

சனீச்வரன் பார்வை கலிபுருஷன் மீது பட்டதும் அவன் மெய் சிலிர்த்துப் போனான்.

"அடியேன் கலிபுருஷன்! ஈஸ்வரனுக்கும் ஈஸ்வரனாக விளங்கும் சனீஸ்வரனைத் தரிசனம் செய்ய வந்திருக்கிறேன். என்னை ஆசிர்வதிக்கவேண்டும்!" என்று சனீஸ்வரன் பாதத்தில் விழுந்தான்.

"ஆசிர்வாதம்தானே! தந்தோம்!" என்றவர் "எதற்காக என்னைக் காண வந்தாய்?" என்றார்.

"ஈஸ்வரா!"

"தவறு! சனீஸ்வரா என்று சொல்லும்" என்றார் சனீஸ்வரர்.

"அப்படியே ஆகட்டும் சனீஸ்வரரே! பிரம்மா என்னைப் படைத்து பூலோகத்திர்க்கு அனுப்பி கலியுகத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். ஆனால் கலியுலகம் தோன்றக் கூடாது என்று பூலோகத்தில் திருமலையில் கல் தெய்வமாக மாறி திருமால் என்னைத் தடுக்கிறார்".

"அப்படியா?"

"ஆமாம் பிரபு! பிரம்மா என்னைப் படைத்திருக்காவிட்டால் நான் ஏன் பூலோகத்திற்குச் செல்ல வேண்டும்? என்னையும் படைத்துவிட்டு என் தொழிலைக் கெடுக்கும் திருமாலையும் ஏன் திருமலைக்கு அனுப்பவேண்டும்?

"அதெல்லாம் இருக்கட்டும். பிறகு இது பற்றி பேசிக்கொள்ளலாம். இப்போது எதற்காக என்னைத் தேடி இங்கு வந்தாய்?" என்றார் சனீஸ்வரன்.

கலிபுருஷன் வந்த விஷயத்தை விளக்கத் தொடங்கினான்.

சித்தன் அருள்............. தொடரும்!

6 comments:

 1. நமஸ்காரம்,

  நான் கல்லார் சென்று குருவினை நாடி சென்றேன், குரு நாடி உரைத்தார்., நான் சென்றது மே 2015. நான் வாசி யோகம் கற்கவும்., குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதற்கு கேட்டு இருந்தேன்.

  முற்பிறவியில் யோக சாஸ்திரம் கற்று., பஞ்சச்டியில் தவம் இயற்றி இருக்கிறேன், எனது குரு சாந்தலிங்க சுவாமிகளால் மீண்டும் பிறவி எடுத்து வர உரைக்க பெற்றேன்

  குரு என்னை பாபநாசம், கல்யாண தீர்த்தம், செண்பகாதேவி அருவி., கடம்ப வனம், சதுரகிரி சென்று வர உரைத்தார். குடும்ப உறுபினர்கள் தன்வந்தரி ஔஷதத்தால் நோய்கள் குணமாகும் என்று உரைத்தார்

  நான் குரு உரைத்த இடங்களுக்கு செல்ல தயாரானேன், அன்று இரவு செய்திகளில் சதுரகிரியில் காட்டாற்று வெள்ளம், யாரையும் வனத்துறையினர் அனுமதிக்கவில்லை என்ற செய்தி அறிந்தேன், கல்லார் அம்மாவை தொடர்பு கொண்டு மற்ற இடங்களுக்கு சென்று அடுத்த முறை சதுரகிரி செல்லலாமா எனக்கேட்டேன், செல்லலாம் என்றார்கள்

  முதலில் குற்றாலம் செண்பகதேவி அருவிக்கு சென்று, சென்பகதேவியை தரிசித்து, மேலே அகத்தியர் குகையில் த்யானம் செய்ய சென்றேன்., அது அவ்வையார் குகை என்றும், அவ்வையார் அகத்தியரிடம் தனக்கு கடைசியில் இருக்க இங்கே இடம் வேண்டும் என்றும்., இங்கேயே கடைசியில் தங்கியதாக அங்கே இருக்கும் ஒரு பாட்டி கூறினார் (இது அவ்வையார் ஜீவா சமாதியாக இருக்குமோ?)

  இரண்டாவதாக கடம்ப வனம் சென்று., அத்திரி மகரிசி, அனுஷியா தேவி, கொர்ரக்கர் ஆசி பெற்று, பாபநாசம் செண்ட் இறைவன், இறைவியை தரிசித்து, கிருஷ்ணவேணி அம்மாவிடம் ஆசி பெற்று, கல்யாண தீர்த்தத்தில் அகத்தியர் , லோப முத்திரை ஆசி பெற்று வீட்டுக்கு வந்து விட்டோம்.

  மே மாதம் மீண்டும் வேலைக்கு பஹ்ரைன் சென்று விட்டேன்., சதுரகிரி செல்ல வேண்டும்., வேலை முழுதும் இதே எண்ணங்கள் தான், மீண்டும் அக்டோபர் மாதத்தில் தமிழ்நாடு வந்து சென்னை நண்பருடன் சதுரகிரி சென்றடைந்தோம். இப்பொழுது பிரதோஷம், அம்மாவசை / பௌர்ணமி மட்டும் தான் வனத்துறையினர் அனுமதிக்கின்றனர், அவர்களிடம் கேட்டு கருப்பசாமி , பேச்சியம்மன் கோயில் வரை சென்று, புலத்தியர், சட்டை நாதர் ஆசி பெற்று, மீண்டும் தீபாவளிக்கு மறுநாள் சதுரகிரி சென்று சந்தன மகாலிங்கம், சுந்தர மகாலிங்கம், சுந்தர மூர்த்தி ஆசி பெற்று வந்தேன்.

  எல்லாம் மாறி விட்டது சதுரகிரியில்., அகாஷ கங்கை நீரை நம்மால் அள்ளி பருக முடியாது, பாதுகாப்பிற்காக fencing கட்டியிருக்கிறார்கள், சந்தன மகாலிங்கம் to சுந்தர மகாலிங்கம் ஓடையில் இரும்பு பாலம் கட்டியிருக்கிறார்கள். பல கட்டட வேலை நடந்து கொண்டிருக்கிறது


  சிறிய வேண்டுகோள்
  நான் பிறந்த ஊர் பெரியகுளம் (தேனி மாவட்டம்), இந்த ஊரின் ஸ்தல வரலாறு வேண்டும்., நான் நிறை இடத்தில தேடுகின்றேன் கிடைக்கவில்லை., இன்டர்நெட் இலும் கிடைக்கவில்லை, இங்கே சுப்பிரமணியர் கோயில் வராக நதியில் இரு கரையிலும் ஆண் / பெண் மறுத்த மரம் இருக்கின்றது, ஒதிமலை குருக்கள் முருகன் பிறந்த ஊர் இது தான் என்ற கூறியது ஞாபகத்தில் இருக்கிறது!

  எங்களுக்கு ஓதியப்பர் அருளால், அகத்தியர், லோபாமுத்திரை அருளால், பெண் குழந்தை பிறந்திருக்கின்றது, சிவப்ரியா என பெயர் வைத்துள்ளோம்

  நமஸ்காரம்

  ReplyDelete
 2. Om Agatheesaya Namaha: Om Sairam: Om Namo Narayana:

  ReplyDelete
 3. Om Agathiyar Paadha Kamalangal Potri Potri....
  Ellam iraivan seyal...

  ReplyDelete
 4. Sir, where is "kadamba vanam"? Thank you.

  ReplyDelete
 5. OM LOBAMUTHRASAMETHA AGASTHEESAYA NAMAHA
  BY GURUNATHAR'S GRACE WE PLANNED TO MAKE A THIYANA MANDAPAM IN OUR NEW HOUSE AT VILLIANOOR PONDHICHERRY AT A SHORT PERIOD OF 33 DAYS. WE SUCCESSFULLY ACHEIVED THAT AT 29TH NOVEMBER 2015.
  GURUVE SARANAM

  ReplyDelete