​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 5 November 2015

சித்தன் அருள் -251- "பெருமாளும் அடியேனும்" - 28 - கலிபுருஷன் செய்த கலகம்!


"தங்களுடைய கணவர், இந்திரலோகத்தில் யுவராணியோடு தன்னை மறந்த நிலையிலிருக்கிறார்" என்று கருடாழ்வாரின் மனைவியிடம், கலிபுருஷனான அந்த "அதிதி"சொன்னதைக் கேட்டு, கருடாழ்வாரின் மனைவி, துடி துடித்துப் போனாள் .

தாம்பத்திய வாழ்க்கையில் தனக்கென்று ஓரிடம் கொண்டு, மற்றவர்களுக்கெல்லாம் ஓர் இலக்கணமாக வாழ்ந்துவரும் கருடாழ்வாரைப் பற்றி, கலிபுருஷன் சொன்னதால் "இருக்காது, இருக்கவே இருக்காது" என்று அவளுடைய உள்மனம் சொல்லிற்று.

ஆனால்.........

"கலியுகம் ஆரம்பித்துவிட்டது. இனி என்னென்ன நடக்குமோ?" என்று சில நாட்களுக்கு முன்பு கருடாழ்வார் தன்னிடம் சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது!

"அப்படி சொன்னவரே இன்றைக்கு கூடா ஒழுக்கத்தில் சென்று விட்டாரே" என்று ஒரு பதட்டம் எற்படத்தான் செய்தது.

அதே சமயம்.........

அதிதியாக வந்தவர், சாமான்யமானவரல்லர். இந்திரலோகத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை பற்றி, தெள்ளத் தெளிவாக தன்னிடமே இவர் சொல்கிறார் என்றால், இவர் தேவலோகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இல்லையேல், சித்த புருஷராக, மகரிஷியாக இருக்க வேண்டும். நேரடியாக நிஜ உருவத்தில் வர பயந்து, இப்படி மாறு வேடத்தில் அதிதியாக வந்திருப்பார் என்று பல்வேறு கற்பனையில் ஆழ்ந்தாள், கருடாழ்வாரின் மனைவி.

இவர் மட்டும் தப்பித்தவறி பொய் சொல்லியிருந்தால், பாம்பின் உடலை தன் கூறிய நகத்தால் கருடன் கீறிக் கொன்று விடுவதுபோல், இவர் கருடாழ்வாரால் பின்பு கொல்லப்படலாம். அதே சமயத்தில் இவர் சொல்வது ஒருவேளை உண்மையாக இருந்து விட்டால்? என்று மீண்டும் குழப்பமடைந்தாள் அவள்.

"தாயே" என்று கலிபுருஷனான அந்த வயதான அதிதி அழைத்தார்.

"சொல்லுங்கள் பெரியவரே"

"உண்ட வீட்டிற்கு துன்பம் விளைவிக்கும் செயலைச் செய்யமாட்டேன். நான் சொன்னது பொய்யாக இருந்தால், என் உயிர் தங்கள் கால் நகங்களாலேயே சின்னா பின்னமாகச் சிதைந்து கொல்லப்படட்டும்" என்று அழுத்தமாகச் சொன்னார்.

"பெரியவரே! உங்களை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. தாங்கள் இந்த வீட்டிற்குள் நுழைந்ததும் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று மட்டும் என் உள்மனம் சொல்கிறது!" என்றாள்.

"உண்மைதானே!"

"தாங்கள், அதிதி போல் முதலில் நடந்து கொள்ளவில்லை. தங்களுடைய பேச்சும், செயலும் வித்யாசமாக இருந்தது. எல்லோருக்கும் படியளக்கும் அந்த வேங்கடவனைப் பற்றி ஏதேதோ கூறினீர்கள்."

"என்ன கூறினேன்?"

"இந்த உலகை எல்லாம் காப்பாற்றக் கூடியவர் பெருமாள். அப்படிப்பட்ட பெருமாள்தான் இன்றைக்கு வேங்கடவனாக அருள் பாலித்து வருகிறார். அந்த வேங்கடவனுக்கு என் கணவர், தினம் தினம் சேவை செய்கிறார். அவரைத் தூக்கி சுமக்கிறார். படியளக்கும் பெருமாளுக்கு தாசானு தாசனாக இருந்து வருகிறார். அப்படிப்பட்ட சர்வலோக நாயகனுக்கு, தன்னை காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதா? என் கணவரா வேங்கடவனைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்? இந்த வார்த்தையை அதிதியான தாங்கள் சொல்வது எந்த விதத்தில் நியாயமாகும்?" என்று படபடவென்று பொரிந்து தள்ளினாள், கருடாழ்வாரின் மனைவி.

பெருமாள் மீது கொண்ட அளவற்ற பக்தியை கண்டு ஒரு நாழிகை மெய்மறந்து போன கலிபுருஷனான அந்த அதிதி, பின்னர் தன்னை சுதாரித்துக் கொண்டு, "அம்மணி! தாங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். என் காதில் வீழ்ந்ததைச் சொன்னேன். மற்றபடி தாங்கள் இதனை ஏற்பதும், எற்காமலிருப்பதும் தங்கள் விருப்பம்." என்றான் கலிபுருஷன் மிகவும் பவ்யமாக.

"அது சரி! தாங்களோ இங்கு அதிதியாக வந்தவர். அப்படியிருக்க எப்படி இந்திரலோக அந்தரங்க விஷயங்களைப் பற்றித் தெரியும்? இந்த மாதிரி செய்திகள் இறைவனுக்கும், தேவலோகத்திற்கும், முற்றும் துறந்த பூலோக முனிவர்களுக்கும் மட்டும்தான் தெரியும். அப்படியென்றால் தாங்கள் யார்?" என்றாள் சற்று கடுமையாக.

"தாயே! தங்களோடு எதிர்வாதம் செய்ய இந்த அடியேனால் முடியாது. அதை யானும், ஒரு போதும் விரும்பவில்லை. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யவும் மாட்டேன்" என்றான் கலிபுருஷன்.

"பின் எதற்க்காக என் கணவரைப் பற்றி அவதூறாகக் கூறினீர்கள்?"

"தங்கள் இல்வாழ்க்கை நல்லபடியாக அமையவேண்டும் என்பது ஒன்று. இன்னொன்று, தங்களின் கணவர் இந்திர லோகத்தில் நான்கு பேருக்கு முன்பு கேவலப் படக்கூடாது என்பதற்காகச் சொன்னேன். அவ்வளவுதான்" என்று மிகவும் நல்லவன் போன்று பேசினான், கலிபுருஷன்.

"தங்களது நல்லெண்ணத்திற்கு நன்றி!" என்று அதிதிக்கு விடை கொடுத்தாள் கருடாழ்வாரின் மனைவி.

"தாயே! தங்களுக்கு சகல விதமான மங்களங்களும் உண்டாகட்டும். ஒரே ஒரு விஷயம். இந்த அதிதி சொல்வது பொய்யல்ல. தங்கள் வீட்டிற்கு வரும் கருடாழ்வார் நெற்றியில் செந்தூரப் பொட்டிருக்கும். ஜவ்வாது மணம் உடல் முழவதும் காணப்படும். இது எப்படி வந்தது? என்று மட்டும் கேளுங்கள். அவர் பதில் சொல்லத் திணறுவார். பிறகுதான் நான் சொன்னது உண்மை என்று தெரியும்" என்றவன் விடுவிடுவென்று வெளியேறினான்.

"அடடா! இந்த அதிதி யார் என்று இதுவரை சொல்லவே இல்லையே" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் கருடாழ்வாரின் மனைவி.

சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த கருடாழ்வார் தம்பதியிடையே குடும்பத்தைச் சந்தேகப்படும்படி செய்து குழப்பத்தை உண்டு பண்ணிய சந்தோஷத்துடன் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் கலிபுருஷன்.

கருடாழ்வார் தன் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

சித்தன் அருள்................ தொடரும்!

9 comments:

  1. அக்னி லிங்கம் சாருக்கு வணக்கம். குருநாதர் அகத்தியரின் கேள்வி பதில் தொகுப்பு தஞ்சாவூர் கணேசன் சாரிடமிருந்து வந்து நீண்ட நாட்தள்ளிவிட்டது. அடுத்த தொகுப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  2. Om Agasthiyar paadha kamalangal potri..

    Ayya you have told that someone from mettupalayam who is telling Agasthiyar Naadi has come to kodaganallur. Ayya can you give his number to see Naadi. Thanks

    ReplyDelete
    Replies
    1. Vanakkam! I just met him. His name is Sri.Senthil I think. I did not get his number. Try in web.

      Delete
  3. swamiji ! Mettupalayam Agasthiya Naadi reader Sendhil No : 09585018295. I met him at Kodaganallur.

    ReplyDelete
  4. AGATHYAR DEVOTEES:MY HUMBLE REQUEST. PLEASE CONTACT IN CASE OF JEEVA NADI ONLY THOSE CITED BY GURU HANUMANDASHAN BY WAY OF HIS JEEVA NADI READING( ARTICLE;158,159, 160, 161) AND GET AGATHYA MUNNI'S TRUE BLESSINGS.

    ReplyDelete
  5. Agathyar DevotteeS' : My humble request. In case of Jeeva Nadi reading ,please follow the guidance given by guru Hanuman Dasan by way of his Nadi reading( article :(158,159, 160,161)and get Agathya Munnis Blessings.

    ReplyDelete