​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 13 November 2015

சித்தன் அருள் - 254 - சுப்ரமண்ய சஹஸ்ரநாமம் !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!


மகா சஷ்டியை நோக்கி சென்று கொண்டிருக்கும் இரண்டாவது நாளான இன்று முருகரை பற்றி சிவபெருமான் பார்வதி தேவியிடம் உரைத்ததை உணர்வோம்.

 1. நம் குமாரனே எல்லா தேவ வடிவும் (சமஷ்டி தேவதை). எல்லா உலக வடிவும் (சமஷ்டி பிரபஞ்சமும்), எல்லா உயிர்களின் வடிவமும் (விராட் ரூபி) ஆக விளங்குகிறான். அதனால் அவனே சாக்ஷாத்கார பிரம்மமாவான்!
 2. ருத்திர கோடிகள் அளவற்றவையில் இவனே மஹா சம்ஹார காரண ருத்திரன்.
 3. இவனே ஸ்ரீகண்ட ருத்திரக் கடவுளின் சக்தியான மஹா விஷ்ணு.
 4.  மஹா விஷ்ணுவின் நான்கு மூர்த்தங்களில், இவன் வாசுதேவ மூர்த்தி,
 5. எல்லா பிரஜாபதிகளுக்கும் இவன் பிரமன்.
 6. ஒளியுள்ள பொருட்களில் இவன் அக்னி தேவன்.
 7. திக் பாலகர்களில் இவன் "ஈசானன்".
 8. அக்னியில் "சிவாக்னி"
 9. அக்ஷரங்களில் பஞ்சாக்ஷரம்.
 10. வித்யைகளில் பர வித்யை.
 11. யோகங்களில் அஷ்டாங்க யோகம்.
 12. ஞானங்களில் இவன் சிவ ஞானம்.

ஆண்டியாகப் போன முருகரிடம் சிவபெருமான் அன்புடன் கூறியதாவது.....

"மைந்தா! நானும், சக்தியும் நீயன்றோ! தத்வமசி வாக்கியப் பொருள் நீ என்ற படி, என்னுடைய ஐந்து முகங்களும், தேவியின் ஒரு முகமும் சேர்த்து உனக்கு ஆறு முகங்களாயிற்று! என்னைக் குறித்து செய்யப்படும் வழிபாடும், நின் அன்னையைக் குறித்து செய்யப்படும் பூஜையும் உனக்கேயாகும். உன்னை பூஜித்தவர் எங்கள் இருவரையும் பூஜித்தவராகிறார்."

அகத்தியப் பெருமான் தரும் பரிசாக, உங்களுக்கு "சுப்ரமண்ய சஹஸ்ரநாமாவளி" என்கிற ஒலிநாடாவை கீழே உள்ள தொடுப்பில், இன்று தருகிறேன்.

எல்லோரும் இன்புற்று வாழ வேண்டிக் கொண்டு........ 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சுப்ரமண்ய சஹஸ்ரநாமம் @ Mediafire 

3 comments: