வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
தீபாவளியை அகத்தியரின் அருளால் இனிதே கொண்டாடியிருப்பீர்கள். நானும் அவ்வாறே இனிதாக கொண்டாடியதில், இந்த வார "சித்தன் அருள் - பெருமாளும் அடியேனும்" தொகுப்பை தட்டச்சு செய்து தயாராக வைக்க மறந்துவிட்டேன். ஆதலால், இந்த வார "பெருமாளும் அடியேனும்" தொடருக்கு ஒரு வார இடைவேளை விட்டுவிட்டு, அடுத்த வாரம் தரலாம் என்று நினைத்தேன்!
திடீரென அகத்தியரின் குரு சுப்ரமண்யரின் "மகா சஷ்டி" ஞாபகம் வர, எத்தனையோ அன்பர்கள் என்னென்னவோ விஷயங்களுக்காக விரதமிருப்பார்களே! அவர்கள் எண்ணம் ஈடேற முருகரின் அருள் எப்பொழுதும் அவர்களை சூழ்ந்திருக்க ஏதேனும் செய்ய வேண்டுமே என்ற எண்ணம் தோன்றியது.
ஆம்! "சத்ரு சம்ஹார யாகம்" முதன் முதலில் பஞ்சேஷ்டியில் அகத்தியரால், முருகரின் உத்தரவால், அம்பாளின் அருகாமையில், அகத்தியப் பெருமானால் நடத்தப்பட்டது. அதில் எத்தனையோ விதமான மந்திரங்கள் கூறப்பட்டாலும், முதன்மை வகித்து, எண்ணம் ஈடேற வைத்தது "சுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி" எனப்படுகிற சுலோகம்தான்.
அகத்தியப் பெருமானிடம் வேண்டிக் கொண்டு அந்த ஸ்லோகத்தை தேடத்தொடங்கினேன். விரைவில் அது கைவல்யமானது. அந்த ஸ்லோகத்தை, உங்களுக்கு, "மகா சஷ்டிக்கு" முன்பாக அகத்தியர் உங்கள் அனைவருக்கும் அளித்த பரிசாக கீழே உள்ள தொடுப்பில் தருகிறேன். பெற்றுக் கொள்ளுங்கள். இந்த மந்திரத்தை, ஜெபிப்பதால், அல்லது கேட்பதால் அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். எல்லாம் ஜெயமாகும்.
உங்கள் இல்லங்களில், தினமும் இது ஒலிக்கட்டும், இறை அருள், அகத்தியப் பெருமான் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொண்டு ...........
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
We all are blessed. Thank you very much. I will be more thankful if I could get the "Lyrics" in Tamil
ReplyDeletesir, thank you very much for this moola manthiram
ReplyDeleteDear Sir, The Manthira link is not downloaded, u can please share it with me (gopalayogabala@gmail.com).
DeleteThank you,
Dear Sir, the above link is not able to download, so please share the manthira to my mail gopalayogabala@gmail.com ,Thank you, Om agathiswaraya namaga...
DeleteSir, It is available. With too much of people accessing it, normally google drive gives such a message. I could not send it thro gmail since it is around 65 MB. I am planning to give another link in some other site. After uploading the same, i will provide the link in Siththan Arul
Deletehttp://www.mediafire.com/listen/i3eand1wtlsdvai/Sri_-_Subramanya_Moola_MantraThrisadhi.mp3
Delete@ Mr Gurumurthy : The lyrics are available in the following link : http://stotram.co.in/subrahmanya-trishati-namavali/
ReplyDeleteசத்ரு சம்ஹார திரிசதியை இயற்றியது யார் ஐயா?
ReplyDelete