வணக்கம்!
இந்த தொடர் திடீரென்று முடிவு பெற்றதில் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். எனக்கும் ஆச்சரியம் தான். எப்படி இத்தனை தொகுப்பை உங்கள் முன் தமிழில் வழங்க முடிந்தது என்று. இதை தொடங்கும் முன்னர் ஒரு நிமிடம் த்யானத்தில் அகத்தியரிடம் "அய்யனே! எனக்கு பெரியவர் கூறிய விஷயங்களை பிறருடன் பகிர்ந்துகொள்ள உத்தரவு வேண்டும்! எந்த புகழும், பொருளும் எதிர் பார்த்து அல்ல. உங்கள் பெருமைகளை உரைக்க வேண்டும். இதுவரை சித்தர்களை பற்றி எழுதியதில்லை. உத்தரவு கொடுங்கள்" என்று கேட்டு விட்டு சென்று விட்டேன்.
அன்று மாலை, மனம் ஏனோ ஒரு நிலை படவில்லை. எந்த தகவலும் இல்லை. சித்தரோ பயங்கர கோபக்காரர் என்று தெரியும். ஏதாவது ஏடாகூடமாக சொல்லப் போக, எக்கச்செக்கமாக மாட்டி கொண்டு விடுவேனோ என்கிற பயம் வேறு. எதை சொல்லலாம், எதை சொல்லக்கூடாது என்று கூட தெரியாத நிலை. சற்று நேரத்துக்கு பின் மனம் ஒன்று பட, குளித்து விட்டு சிறிது நேரம் தியானம் செய்யலாம் என்று அமர..........
யாரோ பக்கத்தில் நின்று சுத்த தமிழில் "எமது ஆசிகள் உமக்குண்டு" என்று சொல்வது கேட்டது. மனம் காலையில் வேண்டுகோளை வைத்ததை மறந்து விட்டது. இது என்ன இப்படிப்பட்ட சுத்த தமிழை எங்கோ யாரோ சொல்ல கேட்டிருக்கிறோமே என்று நினைத்து, யோசிக்க, திடீரென்று நினைவுக்கு வந்தது. ஆம்! இது அகத்தியர் எங்கோ யாரையோ ஆசிர்வதித்ததை நினனைவு கூர்ந்தது. உணர்ந்ததும், உடல் முழுவதும் புல்லரித்து போயிற்று.
அட! நமக்கு கூட ஆசிர்வதிக்கிறாரே! எவ்வளவு பெரியவர் என்று வியந்தேன். உடனே, விஷயங்களை நினைவுக்கு கொண்டு வர முயற்ச்சிக்க, மடை திறந்த வெள்ளம் என எதோ ஒன்று உடலெங்கும் பரவியது. நன்றி கூறி, நீங்களே நல்ல நேரம், நாள் பார்த்து இதை குழுவில் தெரிவிக்க வையுங்கள் என்று கூறி விடை பெற்றேன்!
முதல் தொகுப்பை தட்டச்சு செய்ய அத்தனையும் தவறாக வந்தது. அந்த நிமிடத்தில் குருவை நினைக்காமல் தொடங்கிய தவறு புரிந்தது. ஒரு நிமிடம் கண் மூடி அவர் பாதங்களை நினைத்து "கூட இருந்து வழி நடத்த வேண்டும்!" என வேண்டிக்கொண்டு மறுபடியும் தொடங்க எல்லாம் சரியாக வந்தது.
அத்துடன் ஒரு தயிரியமும் உள்ளே புகுந்தது! அவர் ஆசி இருக்க எதை பற்றி கவலை பட வேண்டும்! முன் செல்வோம் என உணர்ந்து ஒரு வழியாக முதல் தொகுப்பை முடிக்க, நிறைவாக வந்தது.
மறு நாள் காலை. அது ஒரு வியாழக்கிழமை! குருவாரம்! நல்ல உறக்கத்தில் இருந்த போது யாரோ தட்டி உணர்த்துவது போல உணர, எந்த தூக்க மிச்சமும் உடலில் இல்லாமல் தெம்பாக எழுந்து உட்கார்ந்தேன். மனம், முன் தினம் நடந்ததை மறந்து விட்டது.
ஒரே கேள்விமயம் தலைக்குள். யார் அது? எதற்காக? என்ன செய்ய வேண்டும்? ஒன்றுமே புரியவில்லை. இன்று என்ன கிழமை என்று மனம் யோசிக்க, குரு வாரம் என்று மனதில் வந்தது. அட! நாம் தானே அவரிடம் நல்ல நேரம் நாள் பார்த்து இந்த தொடரை போட அருள வேண்டும் என வேண்டினோம். அதான். இப்பொழுது எழுப்பி......... கடிகாரத்தை பார்க்க மணி நான்கு. பிரம்மா முஹுர்த்தம் ஆரம்பமாக போகிற நேரம்.
உற்சாகத்துடன் எழுந்து குழுவில் பதித்தேன். நல்ல நேரம், நாள் ஹ்ம்! அனைத்தையும் அவர்கள் வழங்குகிறார்கள். நம் மனதில் நேர்மை இருந்தால் உதவி கிடைக்கும் என்று உணர்ந்தேன். இருந்தாலும் மனதில் எதோ ஒன்று நெருடியது! எங்கிருந்தோ ஒரு பிரச்சினை வரும் என மனது சொல்லியது. சரி வரும்போது பார்க்கலாம் என்று விட்டுவிட்டேன். அடுத்த வாரம் குரு வாரத்தில் அதே போல் நான்கு மணிக்கு விழிப்பு வர, தொடர்ந்து பிரம்ம முஹுர்த்தத்தில் வழங்க முடிந்தது. இப்படி ஐந்து வாரங்கள் சென்ற போது, "போதும் அய்யா - இனிமேல் எனக்கு நேரம் கிடைக்கும் போது போடுகிறேன்" என்று சொல்லி வியாழக்கிழமை எழுப்பி விடுவதை நிறுத்தினேன்.
வந்தது பிரச்சினை. வேறு எங்கிருந்தும் அல்ல. குழுவிலிருந்து. மனம் தளராமல் அகத்தியர் மேல் பாரத்தை போட்டு முடிந்த அளவு உங்களுக்கு தெரிவித்தேன். இந்த குழிவில் ஒரு அன்பர் எனக்கு தனிப்பட்ட மெயில் போட்டிருந்தார். அவர் ஒரு வலைபூ உருவாக்குவதாகவும் அங்கு யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம் என்றும் எழுதி இருந்தார். சரி! நம்மிடம் உள்ள ஆன்மீகம் சம்பந்தமான விஷயங்களை கொடுப்போம் என்று நினைத்து ஒரு கேள்வி கேட்க - கிண்டலாக பதில் வந்தது. போகட்டும் என்று விட்டு விட்டேன்.
இந்த தொடரை எழுதும் போது நிறைய ஆச்சரியமான விஷயங்கள் நடந்தது. எல்லாம் அவர் செயல். மின்சாரம் இருக்காது. நாளை போட வேண்டுமே, என்ன செய்ய என்று யோசித்தால், பத்து நிமிடத்தில் மின்சாரம் வரும். நெட் இல்லை என்கிற நிலை இருந்தால் "என்ன அய்யா! எதோ கொஞ்சம் உதவி செய்யக்கூடாதா?" என்று கேட்டால், பத்து நிமிடத்தில் நெட் தொடர்பு கிடைக்கும். இந்த தொடரை தொடங்கும் முன் அகத்தியர் சித்தரை பற்றி நான் அறிந்தது மிக குறைவு. ஆனால், இது தொடர, எங்கிருந்தோ முன் பின் தெரியாதவர் அறிமுகமாகி அவரை பற்றிய நுணுக்கமான தகவலை தந்துவிட்டு செல்வார். அதை விசாரித்து போனால், ஆச்சரிய படும்படி அது உண்மையாக இருக்கும். இப்படி பல நிகழ்ச்சிகள்.
திரு ராஜாஜி அவர்கள் "சக்கரவர்த்தி திருமகன்" என்ற எளிய ராமாயணத்தை எழுதி முடித்த பின் அவரிடம் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார்.
"இதை எழுதி முடித்தபின் உங்கள் மன நிலை என்ன?"
அதற்கு அவர் பதில்
"எழுதி முடிக்கும் வரை எனக்கு வேலை இருந்தது. நேரமே போதவில்லை. ஆனால் இப்பொழுது என் மனது வெறுமையாக உள்ளது. இனி அல்லது அடுத்தது என்ன என்று யோசிக்க கூட மனம் முன் வரவில்லை"
இதை தொகுத்து முடித்த பின் (எனக்கு தெரிந்தவரையில்) அந்த வெறுமை நிலையை என்ன என்று நான் உணர்ந்தேன். யாரோ உள்ளிருந்து சொன்னார்கள். அதை உங்களுக்கு தெரிவித்தேன். அவ்வளவு தான்!
மிக சிறந்த பணியை செய்து முடித்த திருப்தி! அதில் என்பங்கு என்று ஒன்று இல்லை!
இருப்பினும், ஒன்று தான் என் மனதில். நாடியை பற்றி தெரிந்துகொள்ள விதியில் இடம் இருக்க வேண்டும் என்று அகத்தியர் பல இடங்களில் கூறியுள்ளார்.
அகத்தியர் திருவிளையாடலை அறிந்துகொள்ள உங்களில் நிறைய பேர் விதிக்கப்பட்டுள்ளீர்கள்.
இன்று வரை பொறுமையாக வாசித்து, கிரகித்து கொண்டதில் நன்றி!
இந்த தொடர் .................. அகத்தியர் பாதம் சரணம்!
ஐயா வணக்கம்,
ReplyDeleteஎன் பெயர் ரமேஷ்குமார். நான் தற்போது சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறேன். உங்களது வலை பூவில் இடம்பெற்ற சித்தன் அருள் பகுதி ஐம்பதையும் முதல் தடவையிலேயே படித்து விட்டேன். மிகவும் அருமையாக இருந்தது. எனக்கு சிறு வயதில் இருந்தே ஆன்மிகத்திலும், சித்தர்கள் மீதும் மிகுந்த ஈடுபாடு உண்டு. சிறு வயதில் இருந்து எனது ஆசையே எதாவது மலையில் சென்று தவம் இருக்க வேண்டும், இறைவன் அருள் பெற வேண்டும் என்பதே. இப்பொழுது கூட என்னால் இயன்ற பொழுது திருப்பதி, பத்ராசலம், திருவண்ணாமலை, பழனி, வெள்ளியங்கிரி மலை போன்ற இடங்களுக்கு சென்று எனது ஆன்மிக ஈடுபாட்டை தொடர்ந்து வருகிறேன். எனக்கு உங்கள் தொடரை படித்த பிறகு, என்னுடைய முன் வாழ்க்கை பற்றியும், என் எதிர்காலத்தை பற்றியும் அகத்திய மாமுனிவரின் ஜீவ நாடி மூலமாக தெரிந்து கொண்டு, எனது ஆன்மிக தேடலை தொடர விரும்புகிறேன். தயவு செய்து என்னை பற்றி ஜீவ நாடியில் தெரிந்து கொள்ள நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தாங்கள் வழி காட்ட விரும்புகிறேன்.
எனது மின் அஞ்சல் முகவரி ramesh.moon@gmail.com
இப்படிக்கு,
ஆன்மிக மற்றும் என்னை பற்றிய தேடலுடன்,
ரமேஷ்குமார்.
ஐயா,
ReplyDeleteஎன் பெயர் பாலா. உங்கள் வெப்சைட் சமீபத்தில் எனக்கு தெரிந்தது.
விடாமல் தொடர்ந்து படித்து வருகிறேன். இன்று ஒரு நாள், நாள் முழுவதும் படித்தேன்.
அவ்வாறு படித்ததில் பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
உங்கள் பாதத்தில் எந்தன் தலையை வைத்து வணங்குகிறேன். எல்லாம் ஆசான் என் குருநாதர் அகத்தியர் என்று சொன்ன போதிலும் உங்களை எழுத வைத்ததிலிருந்து
உங்களுக்கு உள்ள பாகியத்தை எண்ணி பெருமைபடுகிறேன். நீங்கள் நாடி பார்க்க வரும் அன்பர்கள் பிரச்சனையை உங்கள் பிரச்சனையாக நினைத்து அவருக்காக வேண்டி ஆசானை வணங்கும் தன்மைக்கு என்றும் தலை வணங்குகிறேன்.
அகத்தியர் சொல்லே மந்திரம். அவரை யார் உளமார சரண் அடைகிறார்களோ அவர்களை ஒரு நாளும் கை விட்டதில்லை. அனுபவித்தவர்களுக்கே இது தெரியும்.
ஐயா ,
ReplyDeleteஎன் பெயர் ராஜா உங்கள் வெப்சைட் சமீபத்தில் எனக்கு தெரிந்தது.
ஜீவ நாடி பற்றி தெரிந்து கொண்டென் நான் ஒரு சிவ பக்தன் தற்போது சவுதி அரேபியாவில் வேலை பார்கிறேன் எனது ஊர் மதுரை மாவட்டம் சதுரகிரி மலை அடிவராத்தில் சாப்டுர் நான் மாதம் ஒரு முறை அல்லது இரு முறை (அமாவாசை) &(பொவுர்னமி) சதுரகிரி சுந்தரமாகலிங்கம் கோவிலுக்கு செல்வென் சமிப காலமகா என்க்கு பல பிரச்னை எனது முன் ஜென்மம் பற்றியும் இப்பொது இருக்கும் பிரச்சனை தீரவும் தயவு செய்து என்னை பற்றி ஜீவ நாடியில் தெரிந்து கொள்ள நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தாங்கள் வழி காட்ட விரும்புகிறேன். அகத்தியரின் பாதம் தொட்டு வணங்குகிறேன்
எனது மின் அஞ்சல் முகவரி paraja_ib@yahoo.co.in
இப்படிக்கு,
raja.p
Om Agatheesaya Namah
ReplyDeleteநமஸ்தே ஐயா,
ReplyDeleteநான் லோகநாதன்.ஜி.
நான் சமீபத்தில் சித்தன் அருள் blogspot பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதை படித்து வருகிறேன். இன்று தான் இந்த பதிவைப் பார்த்தேன். நான் படிக்க படிக்க எனக்கும் நான் என்னைப் பற்றியும் இனி என்ன செய்ய வேண்டும் என தெரிந்து கொள்ளவும், நான் விரும்பும் வாழ்வை வாழ அகத்தியர் மகான் அருள் பெறவும், இந்த நாடியை பார்க்க விரும்புகிறேன். எனக்கும் எங்கு பார்க்கலாம் என வழி காட்டுங்கள்.
நன்றி.
லோகநாதன்.ஜி
Anbu aiyaa, thangal thayauoorndu enakku nadi parkka vali kattuverkala.
ReplyDeleteEnadu mugavari shivsidhi@gmail.com