​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Wednesday, 27 July 2011

சித்தன் அருள் - 41


நான்கு வருஷமாகக் கடன், அடைக்க முடியாமல் திண்டாடுகிறேன்.  எல்லா நகை, வீடு, மனை அனைத்தும் விட்ட்ரகிவிட்டது.  தினமும் கடன்காரர்களது தொல்லை தாங்க முடியவில்லை.  தற்கொலை செய்வதைத்தவிர வேறு வழி இல்லை.  எனக்கு ஏதாவது ஒரு நல்ல வழியைக் காட்டுங்கள்.  அகத்தியரை நம்பி வந்திருக்கிறேன் என்று வந்தார் ஒருவர்.

மிகவும் கஷ்டப்படுகிறார், என்பதை அவரது உருவ அமைப்பு காட்டியது.  சவரம் செய்து பல நாட்களாக இருக்கும்.  கையில் கடிகாரமோ, மோதிரமோ இல்லை.  சலவைச் சட்டையை அவர் சமீபகாலமாகவே போடவில்லை என்பது தெரிந்தது.

அவர் வந்தது ஒரு நள்ளிரவு நேரம்.  பொதுவாக நள்ளிரவு நேரத்தில் சுபகாரியம் பற்றி அகத்தியர் சொல்வதில்லை.  பலர் வலியுறித்திக் கேட்டிருக்கிறார்கள்.  ஆனால் அவர்களுக்கு நல்ல காரியம் நடந்ததாகவும் எனக்கு நினைவில்லை.  இருந்தாலும் அவரின் நிலைமை மிகவும் பரிதாபனாக இருந்ததால் இரக்கத்தை வரவழைத்துக் கொண்டு ஜீவநாடியைப் பிரித்தேன்.

இவன் கூட நட்போடு சேர்ந்து பொல்லாத தொழிலொன்றை செய்யப்போகிறான்.  மனைவியும் குழந்தைகளும் இவனது போருப்பட்ட்ரத் தன்மையினால் தனியே சென்று விட்டனர்.  இந்தத் தொழில் நல்லதல்ல.  விடு என்று சொன்னாலும் விட மாட்டான்.  தற்சமயம் பணிபுரிகிற அலுவலகத்திலே தொடர்ந்து பணி புரியட்டும்.  காலம் கனியும், பிறகு வாழ்க்கையில் அருமையான முன்னேற்றம் ஏற்படும்.  அதுவரை எந்த முயர்ச்சியிலும் இறங்க வேண்டாம், என்று அகத்தியர் அறிவுரை கூறினார்.
அய்யா, எனக்கு நிறைய கடன் இருக்கு.  அதை அடைக்கிரவரைக்கும் அந்தத் தொழிலைச் செய்ய அனுமதி கொண்டுங்கள்.  கடன் அடைந்ததும் அந்த தொழிலை விட்டு விடுகிறேன் என்று அவர் கெஞ்ச மறுபடியும் அகத்தியரிடம் வேண்டினேன்.

ஞானத்திற்கு வழி கேள் சொல்கிறேன்.  கர்மவினைக்கு வழி கேள் காட்டுகிறேன்.  ஆனால் பொல்லாத அந்தத் தொழிலுக்கு மாத்திரம் அகத்தியன் ஒரு பொது துணை போக மாட்டான்.  எனவே அந்தப் பொல்லாத தொழில் வேண்டாம் என்று மறுபடியும் கூறி விட்டார்.

ஆனால் வந்தவருக்கு இது பிடிக்கவில்லை.  எரிச்சல்பட்டார்.

சார், தப்ப நெனைக்காதீங்க.  அகத்தியர் சொன்னதை பொய்யாக்கிக் கட்டுகிறேன்.  அதன் தொழிலைச் செய்து பெரிய மனிதனாக மாறிக் கட்டுகிறேன், என்று ஆவேசம் கொண்டவன் போல் பேசினார்.  நான் ஒன்று பேசவில்லை.  இப்படிப்பட்டவர் எதற்காக அகத்தியரை நோக்கி வர வேண்டும்? என்று யோசித்தேன் பின்னர்.

நல்ல படியாக முன்னுக்கு வந்தால் சரி, என்று அப்படியே விட்டு விட்டேன்.  வந்த நபரும் உடனடியாக அங்கிருந்து சென்று விட்டார்.

இரண்டு மாதம் கழிந்திருக்கும்.

அன்றைக்கு அகத்தியரிடம் சவால் விட்ட அதே நபர், சிரித்த முகத்தோடு ஸ்கூட்டரில் வந்து இறங்கினார்.  முதலில் எனக்கு அடையாளம் தெரியவில்லை.  அவரது பேச்சு நடை, உடை பாவனைகலப் பார்க்கும் பொழுது, வசதியானவர் போல் தோன்றியது.  முகத்தில் சந்தோஷக் களையும் காணப்பட்டது.

"ஞாபகமிருக்க?" என்று என்னெதிரே வந்து அமர்ந்தார்.  நானும் பெயருக்கு தலை ஆட்டினேன்.

"ஆபிசுக்கு லீவு போட்டு புதிய தொழிலில் இறங்கினேன்.  கடன் பெருமளவு அடைந்து விட்டது.  இழந்த நகை, வீடு மீண்டும் என் கைக்கே வந்து விடும் போலிருக்கிறது.  நான் சவுக்கியமாக இருக்கிறேன்.  இன்னிக்கு இந்தப் பக்கம் ஒரு கல்யாணத்திற்காக வந்தேன்.  அப்படியே உங்களையும் பார்த்து விட்டுப் போகலாமே என்று வந்தேன்" என்றார் அவர்.

"ரொம்ப சந்தோசம்.  எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.  அவாளவு தான்" என்று முடித்துக் கொண்டேன்.

"இல்லை சார்!  அன்னிக்கு அகத்தியர் இந்தத் தொழிலைச் செய்ய வேண்டாம் என்றார்.  அகத்தியர் பேச்சை கேட்டிருந்தால் இந்நேரம் நான் தற்கொலை தான் செய்து கொண்டிருப்பேன்.  நல்லவேளை புதிய தொழிலை ஆரம்பித்ததால் தப்பித்தேன்" என்று அலட்சியமாகவும், அகத்தியருக்குச் சவாலாகவும் சொல்லி விட்டு "இனிமேல் அகத்தியரை நல்வாக்கு சொல்லச் சொல்லுங்கள்" என்று எனக்கும் அறிவுரை கூறி விட்டு சிட்டாய்ப் பறந்து விட்டார்.

இதைக் கேட்டதும் எனக்கு வேதனை ஏற்பட்டது.  அகத்தியருக்கும், எனக்கும் இப்படியொரு அவமானம் ஏற்பட்டு விட்டதே என்ற கலக்கம் பிறந்தது.  எனினும் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டேன்.

இரு வாரம் சென்றது.

ஒரு நடுத்தர வயது பெண்மணி அரக்கப் பறக்க என்னை நோக்கி ஓடி வந்தாள்.  கழுத்தில் மஞ்சள் கயிற்றைத் தவிர வேறு எந்த நகையும் இல்லை.  காதும், கையும் வெறுமையாக காட்சி அளித்தது.  பதறி அடித்து வேகமாக வந்ததால், முகமெல்லாம் வியர்வை.  நெற்றியிலிருந்து குங்குமம் கூட அந்த வியர்வையால் நனைந்து அறையும் குறையுமாக காணப்பட்டது.

"யார் நீங்கள்?"  என்ன விஷயமாக இப்படி பதறியபடி வந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

என் கணவரை நீங்கள் காப்பாற்ற வேண்டும் என்று திரும்ப திரும்பச் சொன்னாலே தவிர அவள் கணவர் யார்?  அவரை காப்பட்ட்ரும் அளவுக்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது.  அப்படி என்ன பொல்லாத தப்பை அவர் செய்துவிட்டார்?" என்று முதலில் ஒன்றுமே எனக்குப் புரியவில்லை.

இந்தப் பெண்ணுக்கு என்னை எப்படித் தெரியும்? எங்கிருந்து வருகிறாள்? யார் சொல்லி இந்தப் பெண் என்னைத் தேடி வந்தாள் என்ற கேள்விக்கும் விடை கிடைக்கவில்லை.

சிந்தனையுடன் அகத்தியரிடமே கேட்போமே என்று நாடியை பிரித்தேன்.

"இந்த பெண்ணின் பெயர் கலாராணி.  அன்றைக்கு அகத்தியரிடம் சவால் விட்டுப் போனாரே, அவரது மனைவி.  மாநில அரசாங்கத்தில் நான்காம் தர கடைநிலை ஊழியராக பணியாற்றிக் கொண்டிருந்த அந்த நபரின் பெயர் மணிவண்ணன்."

வேலைக்குச் சேர்ந்த புதிதில் கை நிறைய பணம் பலவழிகளில் வந்ததால் எத்தனை கெட்ட பழக்கங்களும் உண்டோ, அத்தனைக் கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையான மணிவண்ணனை பல வழிகளிலும் திருத்த முயன்றாள் கலாராணி.  முடியவில்லை.  கடன் ஏற்பட்டது.  எல்லாவற்றையும் இழந்தாள்.  அப்படி இருந்தும் மணிவண்ணன் திருந்தாததால் மனம் வெறுத்து தன குழந்தைகளோடு கிராமதிர்க்குச் சென்று விட்டாள்.

மூன்று நாட்களுக்கு முன்பு, மணிவண்ணனை கஞ்சா வியாபாரம் செய்த பொது கையும் களவுமாகப் பிடித்தது போலீஸ்.  கூட இருந்தவன் புத்திசாலித்தனமாகத் தப்பிவிட்டான்.  போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விட்டு விசாரணைக்காகக் கிராமத்தில் இருந்த கலாராணி வீட்டிற்கு வந்த பொழுதான் மணிவண்ணனைப் பற்றிய உண்மை தெரிந்தது.  ஜெயிலுக்கு போய் பார்த்திருக்கிறாள்.

பணத்திற்கு ஆசைப்பட்டு கஞ்ச வியாபாரத்தில் இறங்கினேன்.  இந்தத் தொழில் செய்ய வேண்டாம் என்று அகத்தியர் ஜீவநாடியில் சொன்னபோது அதையும் எதிர்த்துத் திமிரோடு செய்தேன்.  அகத்தியருக்கும் சவால் விட்டேன்.  சரியாக மூன்றாவது மாதத்தில் தொல்லையில் மாட்டிக் கொள்வான் என்று அகத்தியர் சொன்னது இன்றைக்குச் சரியாகப் போயிற்று.  நான் மாட்டிக் கொண்டேன்.  கூடச் சேர்ந்தவன் தப்பித்துக் கொண்டான் என்று மணிவண்ணன் தன மனைவி கலாராணியிடம் கதறி அழுதிருக்கிறான்.

இன்றைக்கு நான் தப்பு செய்யவில்லை.  நண்பனுக்ககச் செய்தேன்.  என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி, அகத்தியர் ஜீவநாடி படிக்கும் என்னை சந்திக்கும்படி மணிவண்ணன் தான் கலாரணியை அனுப்பி இருக்கிறான் என்று பின்னர் அறிந்து கொண்டேன்.

அவளிடம் கேட்டேன்.  "ஏனம்மா! உங்களுக்கும், உன் கனவா மணிவண்ணனுக்கும் நிறைய இடைவெளி ஏற்பட்ட பின்னர் எதற்காக இப்போது பதறி அடித்து ஓடி வருகிறீர்கள்?  நீங்கள் ரெண்டு பெரும் சேர்ந்து வாழக்கூட இல்லையே?" என்றேன்.

அவள் சொன்ன ஒரே பத்தி "என்ன இருய்ந்தாலும் அவரு என் புருஷன்.  தப்பு செய்திருக்கிறார்.  அவர் என்னை மறந்து கெட்ட வழிக்குப் போனாலும் இப்போ ஜெயில்ல இருக்கார்.  அவருக்கு இப்போதாவது புத்தி வந்தாள் பொது, அவருக்காக நான் என் உயிரைக்கூட கொடுத்து ஆகணும்" என்று கலாராணி சொன்னபோது வியந்து போனேன்.

"அம்மா உங்க புருஷன் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கரு.  சட்டப்படி பத்து வருஷமோ எவ்வளவோ எனக்குத் தெரியாது.  ஜெயில்ல தான் இருக்கணும்.  அவரை எப்படி அகத்தியர் காப்பற்ற முடியும்?"

"அய்யா! இதெல்லாம் எனக்கு தெரியாது.  என் புருஷன் சொல்லித்தான் நான் உங்க கிட்டே வந்தேன்.  எப்படியாவது எம்புர்ஷனை காப்பாத்தணும்.  அவரு உங்களை ரொம்ப நம்பிக்கிட்டிருக்கரு.  அகத்தியர் கிட்டே சுவடி பார்த்து எதாவது சொல்லுங்கய்யா" என்று கெஞ்சினாள்.

விஷயம் தெரியாமல் பேசுகிறாளே, இவளது பதிபக்தியைப் பாராட்டுவதா? இல்லை கிராமத்து நம்பிக்கையைப் போட்ட்ருவதா? இல்லை ஜெயிலில் அடைபட்டு கிடக்கும் மணிவண்ணனது வேண்டுகோளை ஏற்று ஜீவநாடி படிப்பதா? என்று ஒரு வினாடி குழம்பிப் போனேன்.

சட்டச் சிக்களைப் போக்கி, தப்பு செய்த மணிவண்ணனைக் காப்பாற்ற அகத்தியர் ஒரு அரசியில் செல்வாக்குள்ள தலைவரா?  இல்லை கோர்ட்டில் வாதாடி ஜெயிக்க புகழ்பெற்ற கிரிமினல் வழக்கறிஞ்சரா?  இல்லை சட்ட அமைச்சரா? என்றால் இல்லையே! பின் எப்படி ஜீவநாடியை எடுத்து மணிவன்னை ஜெயிலிலிருந்து விடுவிக்க முடியும்?  இப்படிப்பட்ட தர்மசங்கடமான நிலையை எப்படி சமாளிப்பது என்று தடுமாறிப் போனேன்.

என்னால் அகத்தியர் ஜீவநாடியைப் பிரித்து மணிவன்னுக்காக போய் சொல்ல முடியாது.  அதே சமயம் கலாரநியையும் சமாதானமும் செய்தாக வேண்டும்.  இதை எல்லாம் யோசித்து.......

நடப்பது நடக்கட்டும், நமக்கு சிறிதும் சஞ்சலம் வேண்டாம், அகத்தியர் என்ன அருள்வாக்கு கொடுக்கிறாரோ அப்படியே கொடுக்கட்டும் என்று நிதானமாக எடுத்து ஜீவநாடியை படிக்க ஆரம்பித்தேன்.

"அன்றே அகத்தியன் சொன்னான்.  இப்படியொரு பொள்ளத் தொழில் வேண்டாம் என்று.  ஆனால் அவனோ செவிமடுத்துக் கேட்டு விட்டு, அகத்தியனை அலட்சியமாக எண்ணினான்.  ஆனால் இன்றைக்கோ நீண்ட நாள் வெளியே வராதபடி சிறைக் கம்பிக்குள் அடைபட்டு ஒவ்வொரு நிமிடமும் அழுது கொண்டிருக்கிறான்.  வீம்பும், வைராக்கியமும் ரத்தம் நன்றாக உடலில் ஓடும் வரை தான்.  இதை எவருமே எண்ணிப் பார்க்க நினைப்பதில்லை.  மணிவண்ணனும் இப்படித்தான்.

வழியைக் கட்டினோம்.  மீறினான்.  புலியின் குகைக்கும் விழுந்தான்.  அன்னவனின் மனைவியும் சரி, அவனும் சரி, இதுவரை இறை பக்தியோடு ஒரு நாலாவது வாழ்ந்திருக்கவில்லை.  எனவே இவர்கள் வேண்டுகோள் ப்ரார்த்தனையாகாது.  எனினும் மணிவண்ணனை அவனது ஈன்றோர் செய்திட்ட பிரார்த்தனை தான் காப்பாற்றும்.  அதுவும் இப்போதைக்கு அல்ல மூன்றண்டுகளுக்குப்பின்.  அதுவரை பொறுமை காக்க", என்று முடித்துக் கொண்டார்.

மூன்றாண்டுகளுக்குப்பின் எப்படியோ விடுதலையாகி வெளியே வந்த மணிவண்ணன் இப்பொழுது தமிழ்நாட்டின் எல்லையோரத்தில் ஓர் ஆஸ்ரமம் நடத்தி ஏராளமான ஏழை மாணவ, மாணவிகளுக்கு ஆன்மீகப் பணி, இறை பணி செய்து வருகிறார்.  கூடவே அவரது மனைவி கலாராணியும் இருக்கிறார்.  இருவரும் இப்போது சிவா தீட்ச்சை பெற்று விட்டார்கள்.  எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை தன அச்ரமதிர்க்கு வரும் அனைவரிடமும் கூசாமல் சொல்லி அகத்தியர் வாக்கு பற்றி பக்தியோடு ஆனந்தப் பட்டுக் கொண்டிருக்கிறார் மணிவண்ணன்.

1 comment: