​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 23 July 2011

சித்தன் அருள் - 38


அந்த வயதான தம்பதிகளைப் பார்க்கும் பொழுது, எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.

"எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்தி விடுங்கள்.  உங்கள் காலில் விழுந்து மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்" என்று கண்ணீர் மல்க, உருக்கமாக கேட்டனர்.

"எந்தக் கல்யாணம்?" என்று கேட்டேன்.


"என் பெண்ணின் திருமணம்" என்றார்கள்.

"நான் பகவான் இல்லை.  அகத்தியர் ஒரு சித்தர்.  அவர் நல்ல வழியைத்தான் கட்டுவார். உங்களது பிரார்த்தனை சிறப்பாக இருந்தால் உங்களது மகளது திருமணம், நீங்கள் விரும்பியபடியே நடக்கும்.  கவலைப்பட வேண்டாம்" என ஆறுதல் கூறினேன்.

அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது.  அகத்தியர் எப்படியாவது என் மகளது திருமணத்தைத் தடுத்தே ஆக வேண்டும்.  நாங்களும் பார்க்காத ஜோதிடர் இல்லை.  செய்யாத பரிகாரம் இல்லை. கடைசியாகத் தான் உங்களிடம் நாடி வந்திருக்கிறோம்.- என்றார் அந்த பெரியவரின் மனைவி.

நான் சிரித்துக் கொண்டே கேட்டேன்."உங்கள் பெண்ணிற்கு வயது முப்பத்திரண்டு.  நன்றாகப் படித்து விட்டு கை நிறைய சம்பாதிக்கிறாள்.ஆசிரியையாகக் கல்லூரியில் பணியாற்றுகிறாள் என்று சொல்கிறீர்கள்..

ஆமாம்......

உங்களால் அவளுக்கு ஏற்ற வரனை பார்க்க முடியவில்லை.  அவளுக்கும் வயது எரிக் கொண்டே போகிறது.  அவளாக விரும்பும் பையனை அவள் திருமணம் செய்துகொள்ளட்டுமே இதில் என்ன தவறு?

இல்லை, இதில் தான் எங்கள் குடும்ப மானமே இருக்கிறது.  அவன் வேறு மதத்தைச் சேர்ந்தவன்.  அவன் தங்கை இன்னொரு மதத்தைச் சேர்ந்த ஒருவனைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள்.  இது எங்களுக்கு பிடிக்கவில்லை.  நாங்கள் இந்து மதத்தைச் செர்ந்தவரிகள்.  இன்னும் சொல்லப்போனால் உயர் தர சைவ வெள்ளாளர்.

இருக்கட்டும். ஒரு வேளை உங்கள் மகளுக்கும், அந்த பையனுக்கும் ஏற்கனவே பல ஆண்டுகளாக தொடர்பு ருக்கிறது என்று சொல்கிறீர்கள்.  இதை எப்படி சட்டென்று அகத்தியரால் பிரித்து விட முடியும்? என்றேன் நான்.

அகத்தியர் தான் எத்தனையோ அதிசியங்களை நடத்திக் காட்டுகிறாரே.  எங்கள் விஷயத்திலும் அப்படி செய்து காட்ட வேண்டும் என்று சாசைப்பட்டு தான் ஊரிலிருந்து வந்து நான்கு நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறோம் - என்றனர்.

 நீங்கள் சொல்வது சரி. ஆனால், நூற்றுக்கு என்பது பேர்களுக்கு அகத்தியர் அருள்வாக்கு பலிக்கிறது.  இருபது பேரில் பத்து பேருக்கு தாமதமாக நடக்கிறது.  மீதமுள்ள ஐந்து பேருக்கு சில மாதங்கள் கழிந்து நடக்கிறது.  மேலும் உள்ள ஐந்து பேர்களுக்கு நடப்பதே இல்லை.  இதில் நீங்கள் எந்த ரகம் என்பதை அகத்த்தியர்தான் சொல்லவேண்டும் என்று நாடியை படிக்க ஆரம்பித்தேன்.

முன் ஜென்மத்தில் இன்னவனின் மகளும், அந்த இளைஞ்சனும் kanavan - மனைவியாக வாழ்ந்தனர்.  இடையில் ஏற்பட்ட கருத்து verupaadaal பிரிந்து விட்டனர்.  அந்த விட்ட குறை தொட்ட குறை தான் இந்த ஜென்மத்திலும் தொடர்கிறது, என்று அருள்வாக்கு தந்த அகத்தியர் சில பிரார்த்தனை மற்றும் பல பரிகாரங்களைச் செய்யச் சொன்னார்.

இந்த பிரார்த்தனைகள் எல்லாவற்றையும் நாங்கள் ஏற்கனவே செய்து விட்டோம், என்றனர் அவர்கள்.

முறைப்படி செய்யவில்லை என்பதைத் தான் அகத்தியர் சொல்கிறார்.  மீண்டும் ஒரு முறை செய்வதால் கெட்டு விடமாட்டீர்கள்.  ஏற்கனவே seitha பரிகாரத்தில் தெரிந்தோ தெரியாமலோ புஷ்பத் தீட்டு பட்டு விட்டது.  அது பிரேதத் தீட்டக இருப்பதால், பகவானுக்கு உங்கள் பிரார்த்தனை போய்ச் சேரவில்லை என்று அகத்தியர் விளக்கம் கூடிய பின்னர் அவர்கள் அரைகுறை மனதோடு கிளம்பிச் செர்ந்றனர்.

காதலன் காதலியைப் பிரிப்பது - சேர்த்து வைப்பது அகத்தியரின் நோக்கமல்ல.  அவர்கள் திருமணம் செய்து கொண்டால், எதிர்காலத்தில் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காக சில பரிகாரங்களை சூட்ச்சுமமாக கூறுவது வழக்கம்.  இதை நம்பிக்கை இல்லாமல், பணம் செலவழிகிறதே என்று வேறு விதமாகக் கணக்கிட்டு செய்யாமல் போனாலோ, இல்லை வெறுப்போடு தலை எழுத்தே என்று பிரார்த்தனை செய்கிறவர்கள் தான் எந்தவிதப் பலனையும் அடையாமல் வீழ்ந்து விடுகிறார்கள்.  பின்னர் அகத்தியனைப் பழி கூறுகிறார்கள்.  இது அர்த்தமே இல்லை. - என்று எனக்கு அறிவுரை கூறினார் அகத்தியர்.

பதினைந்து நாட்கள் கழித்து அந்த வயதான தம்பதிகள், ஒரு அதிகாலையில் என்னைத் தேடி வந்தனர்.

"நீங்கள் சொன்னபடி அத்தனை பரிகாரங்களையும் மீண்டும் செய்து விட்டோம்.  ஆனால் எந்த பலனும் ithuvarak கிட்டவில்லை.  இன்னும் சொல்லப்போனால், அவர்கள் இருவருக்கும் உள்ள நெருக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.  இன்னும் நான்கு நாட்களில் அவர்கள் பதிவுத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், தகவல் வந்து விட்டது.  அதனால் தான் அதிகாலை நேரமென்று பாராமல் உங்களைத் தேடி வந்திருக்கிறோம்.  எப்படியாவது இந்த கலப்புத் திருமணம் நடக்காமல் அகத்தியர் தடுக்க வேண்டும் - என்று ஒரே குரலில் முறையிட்டனர்.

அகத்தியர் அருள்வாக்கு பொய்த்து விட்டதா? என்று எனக்கே ஓர் அதிர்ச்சி.  யோசித்து பார்த்தேன்.  எங்கேயோ தப்பு நடந்திருக்கிறது.  இல்லையெனில் இவர்கள் பிரார்த்தனை செய்தும் ஏன் நடக்காமல் போயிற்று என்று நொந்து போனேன்.

எதற்கும் அகத்தியரிடம் இதுபற்றி கேட்டுவிடலாம் என்று நினைத்து நாடியைப் புரட்டினேன்.

ஈன்றெடுத்த இப்பெற்றோர்ருக்கு அவர்கள் விரும்பிய வண்ணமே அக்குலத்தில் தோன்றிய வரனுக்கும், இவர்கள் தம் மகளுக்கும் திருமணம் நடக்கும்.  இதில் பழுது இல்லை.  அகத்தியன் சொன்ன சொல் தப்பாது - என்று முடித்தார்.

கவலைப்படாதீர்கள்.  உங்கள் விருப்பப்படியே உங்கள் மகளுக்குத் திருமணம் நடக்கும் - என்றேன்.

"அதெப்படி சார், ஏன் பெண்ணுக்கும் அந்த வெட்டரு மத பையனுக்கும் நாளே நாள்ல பதிவுத் திருமணம் நடக்கும் என்கிறார்கள்.  அப்படியெனில் அந்தத் திருமணம் நின்று விடும் இல்லையா?"

"அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.  அகத்தியர் வெறும் ஒன்றும் சொல்லவில்லையே" என்றேன்.

"இது தான் நடக்கும், இது நடக்காது, என்று அகத்தியர் சொல்லவில்லையா?" என்று அடுத்த கேள்வி கேட்டார் அந்த பெரியவர்.

நான் அகதியரோடு நாற்ப்பது ஆண்டுகளாகப் பேசி வருகிறேன்.  அவர் என்ன சொன்னாரோ அதைத்தான் உங்களுக்குச் சொன்னேன்.  உங்களை மாதிரி எதிர் கேள்வி கெட்டு அகத்தியரோடு வாதம் செய்யும் சக்தி எனக்கில்லை.  ஆகவே நம்பினால் நம்புங்கள், நம்பாவிட்டால் போங்கள்" என்று சட்டென்று பேச்சைச் சுருக்கிக் கொண்டேன்.

ஏன் மீது கோபம் வந்ததால் பதிலேதும் பேசாமல் அவர்கள் கிளம்பிச் சென்று விட்டார்கள்.

ஐந்தாம் நாள் மாலை அந்த வயதான தம்பதிகள் மிகவும் சோர்ந்த முகத்தோடு வந்திருந்தார்கள்.  முகத்தில் ஈயாடவில்லை.

"என்ன விஷயம்?" என்று கேட்டேன்.

அகத்தியரை முழுமையாக நம்பித்தான் வந்தோம்.  ஆனால் ஏமாந்து விட்டோம்.  என் பெண்ணிற்கும் அந்த வேற்றுமதப் பையனுக்கும் நேற்றைக்கு பதிவுத் திருமணம் நடந்து விட்டது" என்றார் அந்தப் பெரியவர்.

எத்தனயோ பேர்களுக்கு பலவிதமான அற்புதங்களைச் செய்து வரும் மகரிஷி அகத்தியர்.  இவர்கள் விஷயத்தில் மட்டும் ஏன் சோதனை பண்ணிவிட்டார்? - என்று எனக்கே வருத்தமாயிற்று.

நான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டேனா? இல்லை எங்கே, என்ன தவறு நடந்தது என்று யோசித்துப் பார்த்தேன்.

கல்யாணம் என்னவோ நடந்து விட்டது.  இனிமேல் என்ன காரணம் சொன்னாலும் அது எடுபடாது என்று நோந்துபோனனா, இனிமேல் அகத்தியர் நாடியை யாருக்கும் படிப்பதில்லை என்றும் முடிவெடுத்துக் கொண்டேன்.

இருந்தாலும் வந்தவர்களுக்கு ஏதாவது பதிலோன்றைச் சொல்லியாக வேண்டுமே என்பதால் மறுபடியும் குளித்து பூசை பிரார்த்தனை செய்து கொண்டு அரைகுறை மனதோடு நாடியைப் புரட்டினேன்.

விதி என்பது மிகவும் அற்புதம்.  அதை சித்தர்களாகிய நாங்கள் மட்டும் பிரிந்து கொள்வோம்.  சில தெய்வீக ரகசியங்களை உடனடியாகச் சொல்ல முடியாது.  அகத்தியனை, அகத்தியன் மைந்தனாகிய நீயே இப்போது நம்பவில்லை என்னும் போது மற்றவர்கள் எப்படி நம்புவார்கள்?  என்று ஒரு கேள்வியைக் கேட்டு விட்டு நிறுத்தினார்.

இதைப் படித்ததும் நான் என் தவறை உணர்ந்து, அகத்தியரிடம் மன்னிப்புக் கேட்டேன்.

பின்னர் அகத்தியரே தொடர்ந்தார்...

வந்திருக்கும், பெரியவர்கள் அகத்தியர் சொன்னபடி எந்தப் பரிகாரமும் இன்னும் செய்யவில்லை.  செய்ததாக அகத்தியனிடமே பொய் கூறுகிறார்கள்.  இருப்பினும் உனக்காக யாம் பொறுத்தோம்.  வீட்டிருக்கு போகச் சொல்.  வாயிர்ப்படியில் வந்திருக்கும் மகளையும் மருமகனையும் வரவேட்ட்று ஆரத்தி எடுக்கச் சொல்.  பிறகு அங்கொரு அதிசயம் நிகழும்.  இதற்குப் பிறகாவது பிரார்த்தனையில் அவர்கள் நம்பிக்கை வைக்கட்டும்.  ஆனால் ஒன்று, யாராக இருந்தாலும் அகத்தியனிடம் உண்மையாக நடந்தால், அகத்தியனும் உண்மையாக உரைப்பான்.  ஏமாற்ற நினைத்தாலோ, அல்லது சோதிக்க நினைத்தாலோ அவர்களுக்கு அப்படியே திருப்பி அடிக்கும் - என்று வாக்கு கொடுத்தார்.

அவர்களிடம் நாடியில் வந்தது எல்லாவற்றையும் சொல்லாமல், வீட்டிற்கு செல்லுங்கள்.  மகளும் புதியதாக மணந்து கொண்ட மருமகனும் வருவார்கள்.  முகத்தை தூக்காமல், மனம் குளிர நடந்து கொள்ளுங்கள்.  எதோ ஒரு அதிசயம் நடக்கும் - என்று சுருக்கமாக முடித்துக் கொண்டேன்.

அவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியாது.  கிளம்பிப் போனார்கள்.  கொஞ்சம் நிம்மதியாக பெருமூச்சு விட்டேன்.  ஆனால், ஒன்று மட்டும் தெரிந்தது.  அவர்கள் நிச்சயம் அகத்தியரையோ, அல்லது என்னையோதிட்டி கொண்டு தான் சென்று இருப்பார்கள்.  வாழ்த்தி  இருக்கமாட்டார்கள்.

ஒரு நாள் காலையில் வீட்டுக்கதவு தட்டப்பட்ட சப்தம் கேட்டது.  கதவைத் திறந்து பார்த்த பொழுது, அந்த வயதான தம்பதிகள் கூடவே அவரது மகள், அவள் அருகே ஒரு இளைஞ்சன்.  புன்னகை பூத்து - கை நிறைய பழம் பூவோடு நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை அழைத்து உட்கார வைக்கும் போதே ஏதாவது ஒரு அதிசயம் நடந்திருக்கும்.  இல்லையென்றால் இவர்கள் முகத்தில் இவ்வளவு சந்தோஷக் கலை இருக்காது.  என்னைத் தேடி வந்திருக்கவும் மாட்டார்கள் என எண்ணிக் கொண்டேன்.

வந்ததும் வராததுமாக அந்தப் பெரியவர் ஸ்வீட் பாக்சை என்னிடம் கொடுத்து "அகத்தியருக்கு நமஸ்காரம்.  இதோ இவள் தான் என் பொண்ணு.  அது என் மாப்பிள்ளை" என்று அடையாளம் கட்டி, இந்த மாப்பிள்ளை வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்று நினைத்து தான் ஏற்க்க மறுத்தேன்.  நேற்று ராத்திரி, இவங்க என் வீட்டிற்கு வந்த போது ஆரத்தி எடுத்து வரவேற்றேன்.  அப்புறம் மாப்பிள்ளை பையனிடம் பேச்சுக் கொடுத்து விசாரித்த போது இவர், எனது ஒன்று விட்ட சகோதரியின் மகன் என்றும், பெயர் பிரசாந்த என்று தெரிந்தது.

என் ஒன்று விட்ட சகோதரி காலேஜில் படிக்கும் போது அந்தக் காலத்திலேயே வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரைக் கல்யாணம் பண்ணிவிட்டு சிங்கபூருக்குப் போயிட்டா.  அப்புறம் அவளைப் பற்றி எந்த தகவலும் இல்லை.  நாங்களும் அவளை அப்படியே கைவிட்டு விட்டோம்.  பின்னர் அவள், தன கணவரை இந்து மதத்திற்கு மாற்றி இருக்கிறாள்.  இதுவும் எனக்கு நேற்று தான் பிரசாந்த் மூலம் தெரிந்தது.

"வீட்டுக்குப் போ அதிசயம் நடக்கும்" என்றார் அகத்தியர்.  அதன்படியே நடந்து விட்டது.  இவர்களை நீங்கள் ஆசிர்வாதம் பண்ண வேண்டும்.  நாங்கள் ஏதாவது தப்ப நடந்து கொண்டிருந்தால் அதற்கும் அகத்தியர் மன்னிப்பு தர வேண்டும்" என்றார் அந்தப் பெரியவர்.

காதல் திருமணம் என்பது ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்ப்பட்டது என்றாலும், பெற்றோர் மனம் குளிர வேண்டுமானால் அவர்கள் விருப்பபடி அந்தந்த ஜாதியில் தான் திருமணம் நடக்க வேண்டும் போலிருக்கிறது.  எப்படியோ அகத்தியர் அருள்வாக்கு பலித்து விட்டது.  நானும் தப்பித்துக் கொண்டேன்.

1 comment: