​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 23 July 2011

சித்தன் அருள் - 36


"சார்! எனக்கு வேறொன்றும் வேண்டாம்.  இதற்கு முந்தய பிறவியில் நான் எங்கு பிறந்தேன். எவ்வாறு வாழ்ந்தேன்.  இப்பொழுது அந்த இடம் எங்கிருக்கிறது.  என் கூட பிறந்தவர்கள் யார்?  அவர்கள் இப்போது மீண்டும் பிறந்திருக்கிறார்களா?  அப்படியானால் நான் அவர்களைச் சந்தித்து பேசமுடியுமா?..........

இதை மட்டும் அகத்தியர் எனக்குச் சொன்னால் போதும்.  அதற்காக எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் காத்திருக்கிறேன்.  அகத்தியரிடம் கேட்டு சொல்ல முடியுமா? "  என்று கைகூப்பி கேட்டார் ஒரு இளைஞ்சர்.

இப்படிப்பட்டக் கேள்விகள் எனக்குப் புதியது அல்ல.  இத்தனை வருட அனுபவத்தில் அகத்தியர் இதற்க்கெல்லாம் பதிலளித்து இருக்கிறார்.

முன் பிறவியைக் கேட்பதால் இவனுக்கு என்ன ஆதாயம்?  என்றெண்ணினேன்.

எனது யோசனையை தயக்கமாக நினைத்தவன், இன்னிக்கு வேண்டாம் சார், உங்களுக்கு எப்பொழுது முடியுமோ அப்போது என்னக் கூப்பிட்டு அனுப்புங்கள், வருகிறேன், என்று சொல்லி ஒரு விசிடிங் கார்ட் கொடுத்தான்.

மலேசியாவைச் சேர்ந்த அவன் பெயர் ராஜ்மோகன்.  பல கோடிக்கு சொத்து இருக்கிறது.  அப்பா, இவன் பெயருக்கு அத்தனை சொத்துக்களையும் எழுதி வைத்து விட்டு பெரும் வியாதியால் சமீபத்தில் இறந்து போயிருக்கிறார்.

அவனுடைய தாயோ பல வருஷங்களுக்கு முன்பே காலமாகி விட்டதால் அவனுடைய சொத்துக்களை குறி வைத்து உறவினர் கூட்டமொன்று இவனைத் தன் வலைக்குள் சிக்க வைக்க முயன்று கொண்டிருக்கிறது.  ஆனால் ராஜ்மொஹனுக்கோ ஆன்மீகப் பற்றும், ஜீவ நாடிகளின் மீது அளவற்ற நம்பிக்கையும் இருந்ததால் பெரும்பாலும் அவன் தமிழ்நாட்டிலே, சுற்றி கொண்டிருக்கிறான் என்பதை அவனாகவே என்னிடம் சொன்னான்.

அவனுக்கு பதில் சொல்வதில் தயக்கம் இல்லை.  ஆனால் பலவிதமான தர்ம சங்கடங்களும் இருப்பது எனக்குத் தெரியும்.

எதற்காக முன்ஜென்மம்குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாய்? என்று கேட்டேன் நான்.

"அவர்கள் முகத்தைப் பார்க்க வேண்டும், அந்த சகோதர-சகோதரியோடு ஒன்றாக மோர் சாதமாவது சாப்பிட்டு ஆனந்தமாக பேசி சந்தோஷமாக பொழுதைக் கழிக்க வேண்டும்" என்றான் அவன்.

"அப்புறம்"

"அவர்களுக்கு பண உதவி தேவைப்பட்டால், அவர்கள் சங்கடத்தில் இருந்தால், அவர்களுக்கு என் மலேஷியா நாட்டு சொத்தை விற்று உதவ வேண்டும்.  எனக்கு அப்பா-அம்மா இல்லை.  கூடப்பிறந்தவர்கள் யாருக் இல்லை, எனக்கு என் முற் பிறப்பு விஷயங்கள் தெரிய வேண்டும்.  அவ்வளவு தான்" என்றான் அடக்கத்தோடு.

அகத்தியரிடம் எதற்கும் முதலில் உத்தரவு கேட்டு விடுவது என்றும், அவர் அனுமதி கொடுத்தால் இவனுக்கு நாடி படிப்பது என்றும் நினைத்தேன்.

ஒரு வேளை அகத்தியர் மறுத்தால் "அய்யா எனக்கு இது பற்றி தெரியாதையா.  வேறு இடத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி ஆளை அனுப்பிவிட முடிவெடுத்தேன்.  இதையடுத்து அகத்தியரை பிரார்த்தனை செய்த படி ஜீவ நாடியை பிரித்தேன்.

"இவனுக்கும், அகத்தியனுக்கும் முன் ஜென்மம் முதலே நெருங்கிய தொடர்பு உண்டு.  எனவே அருள்வாக்கு சொல்லலாம்.  ஆனால் இங்கு வைத்து அல்ல.  ஓடுகின்ற புனிதமான நீரில் முட்டளவு நிண்டு கொண்டு விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் படிக்கலாம்" என்றார் அகத்தியர்.

இதைக் கேட்டதும் அவனுக்கு பரம சந்தோசம்.

சில மாதங்கள் கழித்து நான் அகத்தியர் ஜீவ நாடியோடு காவிரிக்கரைக்கு புறப்பட்டேன். அவனும் வந்தான்.  அவன் மனதில் காணாததை கண்டுவிட்ட மகிழ்ச்சி.

எனக்கோ இதன் பின் விளைவுகள் நல்ல படியாக முடிய வேண்டுமே என்ற கவலை.

முன்னிரவு நேரம், குளிர்ந்த காதற்று.  சலசலவென்று காலுக்கு அடியில் காவேரி நதி.  நடிங்கிக்கொண்டே படிக்கலானேன்.

"இவன் பெயர் சுந்தரம்.  முன் ஜென்மத்தில் இதே பெயரில் திருவரங்கத்தில் ஒரு வீதியில் பதிமூன்றாம் வீட்டில் ஆணி மாதம் பதினெட்டாம் தேதி பகல் பன்னிரண்டு மணியில் பிறந்தான்.  இவன் தந்தை பெயர் வேங்கடவன்.  தாயாரின் பெயர் அமிர்தவல்லி.  இவனுக்கு கூட பிறந்தவள் ஒரே தங்கை.  அவள் பெயர் பத்மா.  மிகச் சாதாரண குடும்பம்.  வைதீகம் தான் தொழில்.

பத்மாவுக்கு பதினாறு வயதிலேயே ஒருவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொடுத்தார்கள்.  மாமியார் கொடுமையினால் பத்மா இளம் வயதிலேயே மனப்புண் நோய் தாக்கி இறந்து போனால்.

தங்கையின் மறைவுக்குப் பின்னால் மனம் நொடிந்து போன சுந்தரம், யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டில் இருந்து வெளியேறி ராணுவத்தில் சேர்ந்தான்.  பல ஆண்டு காலம் சேவை புரிந்தான்.  தங்கையின் நினைப்பினால் மனம் வெம்பிய அவன் திருமணம் செய்யவில்லை.

இடைப்பட்ட காலத்தில் ஒரு நாள் கூட சுந்தரம் பெற்றோரை எண்ணிப் பார்க்கவில்லை.  அவர்கள் மனம் புண்பட்டது. புத்திர சோகம் வாட்டியதால் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்து போனார்கள்.

அவர்கள் மனம் வருந்தி சுந்தரத்தை நினைத்து சாபமிட்டே இறந்ததால், இன்றைக்கு சுந்தரமாகிய ராஜ்மோகன், பெற்றோரை இழந்து அன்பிற்காகத் தவிக்கிறான்.  முன் செய்த வினை இந்த ஜென்மத்தில் ராஜ்மொகனை திருப்பித் தாக்குகிறது" என்று சிறிது இடைவேளை விட்டார் அகத்தியர்.

ஜீவ நாடியிலிருந்து கண்ணை எடுத்து ராஜ்மொகனை பார்த்தேன்.  அவன் இதை கேட்டு முன் ஜென்மத்தில் பெற்றோரை தவிக்கவிட்ட பாவத்தை நினைத்து கண்ணீர் சிந்தி அழுது கொண்டிருந்தான்.

ராஜ்மோகன் நிதானத்திற்கு வரும் வரை அமைதி காத்தேன்.  பிறகு மீண்டும் அகத்தியர் ஜீவனாடியைப் பிரித்தேன்.

"நீண்ட நாட்களுக்குப்பின் பெற்றோரைக் காண ராணுவத்திலிருந்து வந்த சுந்தரம், பெற்றோர் மறைந்து விட்டதையும், தான் வாழ்ந்த வீட்டை வேறொருவர் வாங்கி, வசித்துக் கொண்டிருப்பதையும் அறிந்து அப்படியே கால் போன போக்கில் சென்று சடைசியில் திருவரங்கத்தில் மரித்தான்.  இப்பொழுது, ராஜ்மொகனாக மீண்டும் பிறந்திருக்கிறான்" என்று தனது இரண்டாவது கட்ட நிலையை முடித்துக் கொண்டார்.

இத்தனையும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்ட ராஜ்மோகன் "நான் எப்பொழுது இறந்தேன்" என்று அகத்தியரிடம் கேட்க முடியுமா?" என்று கேட்டான்.

இது எனக்கு எரிச்சலை தந்தது.  இருந்தாலும் பொறுமையை கைகொள்ள வேண்டும் என்று பல்லைக் கடித்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

பிங்கள வருஷம், தை மாதம், விசாக நட்சத்திரத்தில் காலை பதினொன்று மணி" என்று அகத்தியர் சொன்னார்.

அவன் எதையோ கணக்கிட்டுப் பார்த்துவிட்டு சரியாக பத்து மாதம், அதே விசாக நட்சத்திரத்தின் நான்காம் பாதம் காலை பதினோரு மணிக்கு நான் சிங்கப்பூரில் பிறந்தேன்.  எவ்வளவு சரியாக இருக்கிறது" என்று ஆச்சரியப்பட்டு போனான்.

அதாவது சுந்தரமாக முன் ஜென்மத்தில் பிறந்த அவன், இறந்த நாளை அகத்தியர் துல்லியமாகச் சொன்னதும் - அவன் இறந்த பத்தாவது மாதத்தில் இப்போது அதே நட்சத்திரத்தின் கடைசி பாதத்தில் அடுத்த நிமிடத்தில் பிறந்திருக்கிறான், என்ற அகத்தியர் கூற்று சரியாகப் போயிற்று.

எனக்கே இந்த விஷயம் ஆச்சரியத்தைத் தந்தது.  இது எப்படி சாத்தியம் என்று மீண்டும் படிக்க ஆரம்பித்தேன்.  என் மீது கோபம் கொண்ட அகத்தியர், உடனே என்னிடம்.........

"அகத்தியன் மீது நம்பிக்கை இல்லையென்றால் இன்றே இவன் நகருக்குள் சென்று பிறப்பு இறப்பு பதிவேடு செய்யும் நிலையத்திர்க்குச் சென்று பரிசோதித்துக் கொள்ளலாம்" என்றார்.

இந்த வார்த்தைகள் அகத்தியர் எனக்கு கொடுத்த சாட்டையடி என்பது உண்மை.

அதன் பின்னரும் அகத்தியர் தொடர்ந்தார்.

"முன் ஜென்மத்தில் இவனுக்குத் தங்கையாகப் பிறந்த பத்மா இந்த ஜென்மத்தில் இதே ஸ்ரீரங்கத்தில்......... தெருவில் நாலாம் என்ன வீட்டில் பிறந்து வளர்ந்து வருகிறாள்.  அவளுக்கு வயது பத்தொன்பது.  இப்போது அவளது பெயர் பத்மஜா... இதையும் வேண்டுமானாலும் சோதித்துப் பார்த்துக் கொள்க" என்று அத்தோடு முடித்துக் கொண்டார்.

இதை எத்தனை பேர்கள் நம்புகிறார்களோ இல்லையோ நான் முழுமையாக நம்புகிறேன் என்ற ராஜ்மோகன் இன்றைக்கு நாம் எப்படியாவது ஜனன - மரண ஆபிசுக்குப் பொய் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தான்.

மறுநாள் காலை மணி பதினொன்று இருக்கும்.  நானும் அவனும் ஒன்றாக இணைந்து

ஸ்ரீரங்கத்திலுள்ள ஜனன மரண அலுவவலகத்திர்க்குச் சென்று சுந்தரம் என்ற பெயருடைய நபர், பிங்கள ஆண்டு தை மாதம் விசாக நட்சத்திரம் அன்று இறந்தாரா?  அதற்கான ஆதாரம் பதிவேட்டில் உள்ளதா? என்று கேட்டோம்.

மிகவும் கஷ்டப்பட்டு அந்தப் பதிவேட்டைக் கண்டு பிடித்து பார்க்கும் பொழுது - கூட்டு எழுத்தில் எழுதப்பட்ட எழுத்தில் சுந்தரம் என்று குறிப்பிட்டு மரணம் அடைந்த தேதி உள்பட முழு விவரமும் விலாவாரியாக எழுதப்பட்டிருந்தது.  எல்லாம் சரியாக இருந்ததால் எங்கள் இருவருக்கும் ஆச்சரியம்.

சுந்தரம் பற்றிய செய்திகள் குறிப்பிடபட்டிருந்தது மிகப் பெரிய ஆச்சரியம் தான்.

இப்படி எல்லாம் கூட அகத்தியர் சொல்வாரா? என்று என்னை நானே கேட்டுக் கொண்டு வியந்து போனேன்.

இது எல்லோருக்கும் கிடைக்க கூடிய பாக்கியமா? என்றால் அது அவரவர் அதிர்ஷ்டத்தையும், அகத்தியரின் கருணையும் பொறுத்தது என்று தான் சொல்ல முடியும்.

ஒரு முக்கியமானக் காரியத்தை முடித்த பின் ராஜ்மோகன் கேட்டான்.  "அடுத்தபடியாக என் தங்கை பத்மஜாவைப் பார்க்க வேண்டும்.  எனக்குத் துணையாக வாருங்கள்", என்று கையைப் பிடித்துக் கெஞ்சாத குறையாக கேட்டான்.

எனக்கும் பத்மஜாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.  பத்மஜாவும், ராஜ்மோகனும் முன் ஜென்மத்தில் அண்ணன், தங்கை என்ற விஷயத்தை அகத்தியர் தான் எடுத்துக் காட்டினார்.  இது என்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.  இந்த நிலையில் இப்பொழுது திடீரென்று தன்மோகன், பத்மஜா வீடிற்கு சென்று நான் முன் ஜென்மத்தில் உனக்கு அண்ணன், என்று சொன்னால், யாரேனும் ஏற்று கொள்வார்களா?  என்ற சந்தேகம் எழுந்தது.

மேலும் இளம் பெண்ணிடம் எதோ கலாட்ட செய்ய வந்திருக்கிறார்கள் என்று நினைத்து அவனோடு என்னையும் சேர்த்து அடி பின்னி விடுவார்கள்.

உண்மையில் முன் ஜென்மத்து அண்ணன் என்று சொல்லிக் கொண்டு என் வீட்டில் யாராவது வந்தால் நிச்சயம் நன் அனுமதிக்க மாட்டேன்.  அடுத்த நிமிடம் போலிசுக்கு போனே செய்து வந்தவனை உள்ளே தள்ளி விடுவேன்.  அப்படி இருக்க நானே ரன்மோகன் பத்மஜா வீட்டிக்குப் போனால் என்ன நடக்கும், என்று எண்ணிப் பார்த்தேன்.  அடிவயிறு பிசைந்தது.

"பத்மஜா வீட்டிற்கு ராஜ்மொகனுடன் நான் போவது சரியல்ல.  நைசாக கழற்றிக் கொள்ள வேண்டியது தான் நல்லது.  வேண்டுமானால் ராஜ்மோகன் மட்டும் போகட்டும்.  என்ன நடக்கிறது என்று பார்ப்போமே" என்று நினைத்தேன்.

ஆனால் விதி யாரை விட்டது.  ராஜ்மோகன் என்னையும் அழைத்துக்கொண்டு செல்வதில் தீவிரம் காட்டினான்.  சரியாக மாட்டிக் கொண்டு விட்டோம் என்பது மட்டும் மிக நன்றாகத் தெரிந்தது.

1 comment: