​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 6 August 2011

சித்தன் அருள் - அரிய விஷயங்கள்!


ஐம்பத்தி ஒன்று அத்யாயத்திலிருந்து என்னை கவர்ந்த அறிய விஷயங்களை உங்கள் பார்வைக்கு தருகிறேன்! படித்து பயன் பெறுங்கள்! 

சித்தர்களின் பெருந்தன்மை - (மனிதன் திருந்தமாட்டான் என்று தெரிந்தும்)


ஒரு சமயம் சித்தர்கள் அனைவரும் இறைவனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள்.  "யாரெல்லாம் தங்களை நாடி, பிரச்சினைகளை சொல்லி, சரணடைந்து விடுகிறார்களோ, அவர்கள் முற்பிறவியில் எவ்வளவு கொடுமைகாரர்களாக இருந்தாலும், அவர்கள் இப்பிறவியில் தண்டனை அடையாமல் காப்பாற்றி அருள வேண்டும்." இறைவனும் சித்தர்களது வேண்டுகோளை ஏற்றார்.  அடுத்த வினாடியே தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஓலை சுவடி மூலம் பாவத்தை தீர்க்க, கஷ்டங்களை போக்க, வியாதி கொடுமைகளை போக்க, குடும்பத்தில் காணப்படும் பிரமஹத்தி தோஷம் போக்க வழிமுறைகளை செந்தமிழ் பாட்டில் எழுதி வைத்து விட்டார்கள். 

பழனி நவபாஷாண சிலையின் மகத்துவம்!

"அகத்தியனை முழு அளவில் நம்பி இங்கு வந்ததால், அவன் குடித்த விஷத்தை நவபாஷான முருக பெருமானுடைய விபூதியும் சந்தனமும் முறியடித்துவிட்டது.இந்த விஷத்தை அருந்தினானே, அதுவே நவபாஷான விபுதியோடும், சந்தனத்தோடும் கலந்து நீண்ட காலமாக இருந்து வந்த அவன் நோய்க்கு நல்லதொரு மாமருந்தாக மாறிவிட்டது" என்றார்.

கண் பார்வைக்கு கொல்லிமலை மூலிகை:-

"நேத்திர தோஷ நிவர்த்தி புஷ்பம்" என்று ஒன்று மூணு வருஷத்துக்கு ஒரு முறை கொல்லி மலை காட்டில் விளையும்.  அந்த புஷ்பத்தை எடுத்து அதன் சாற்றை பிழிந்து தினமும் ஒரு சொட்டு கண்ணில் விடவும்.  தலையிலும் தேய்க்கணும்.  இதோடு வேறு சில மூலிகைச் சாற்றையும் அந்த கொல்லிமலைச் சித்த வைத்தியர் கொடுப்பார்.

இந்த வைத்தியத்தை சரியா தொண்ணூறு நாட்கள் செய்து வந்தால் போதும், கண் பார்வை துல்லியமாக தெரியும்.  கடைசிவரை ஆபரேஷன் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.

அதர்வண வேதத்தை பற்றி:

அதர்வண வேதம் என்பது துஷ்ட தேவதைகளை கட்டுபடுத்தும் மந்திரங்கள் கொண்டது.  மேலும், மந்திர சக்தியால் நல்ல தேவதைகளை வரவழைத்து நல்ல காரியங்களை செய்வதாகும்.

ஒருவரை கெடுக்க நினைத்து செய்யப்படும் "பிரயோகம்" முதலில் எதிராளிக்கு வேகமாகச் செயல்பட்டாலும், அந்த குறுப்பிட்ட காலம் முடிந்தது, யார் இதை ஏவி விட்டார்களோ அவர்களை நூறு மடங்கு வேகத்தில் தாக்கும்.  இந்த தாக்குதல் படு பயங்கரமாக இருக்கும்.  இதற்க்கு மனோ பலம் வேண்டும்.  பயம் இருக்க கூடாது.  அதோடு யாருக்காக எந்த காரியத்தையும் செய்ய ஆரம்பித்தாலும், முதலில் தன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டு கொள்ள வேண்டும்.  இதை செய்ய தவறினால், அவர்களுக்கு பெரும் பதிப்பு ஏற்படும்.  

நட்டு சர்க்கரையில் அகத்தியரின் பரி பூரண அருள்:-

நாட்டுச் சர்க்கரையை கொஞ்சம் வாங்கி வரச்சொல்லி தன் மேஜையில் இருந்த டிராயரை திறந்து ஒரு மெல்லிய செப்புத்தகட்டில் ஒரு ஊசியை வைத்து இப்படியும் அப்படியுமாக கோடு போட்டார்.  பின்னர் அந்த நாட்டுச் சர்க்கரையை ஒரு இலை மீது வைத்து ஏதோ சொல்லி மந்திரித்து அதனை அந்த பெண்ணின் வாயில் போட்டு சிறிதளவு சாப்பிட சொன்னார்.

"நாட்டு சக்கரைக்கு அத்தனை விசேஷமா?"

 "ஆமாம்.  அதில் அகத்தியரின் ஜீவ மந்திரம் கலந்திருக்கிறதே.  அது தான் முக்கிய காரணம்".

அகத்தியர் அருளின் ஒரு பகுதி:-

"இன்றைக்கு அவர் பிறப்பிலே இஸ்லாம் மதத்திலே பிறந்திருந்தாலும், முன் ஜென்மத்தில் கொல்லி மலையில் சித்த வைத்தியனாக பல காலம் வாழ்ந்தவன்.  அப்போது அவனுக்கு கண்ணப்பன் என்று பெயர்.  அகத்தியனான எனக்கு கொல்லி மலையில் சிலை எழுப்பி பால் அபிஷேகம் செய்து மகிழ்ந்தான்.  கடைசிவரை சித்தனாக வாழ வேண்டும் என்று நினைத்தான்.  முடியவில்லை.

முன் ஜென்மத்தில் தன்னிடம் வைத்தியம் பார்க்க வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததால் அவனது பெயர் கெட்டது.  தொழிலும் கெட்டது.  கடைசியில் அவன் மரிக்கும் பொழுது அகத்தியனை நோக்கி வணங்கியதால் இந்த ஜென்மத்தில் மறுபடியும் பிறந்தான்.

சாகும் முன்பு "அடுத்த ஜென்மத்திலாவது அகத்தியன் கருணையோடு சித்த வைத்தியம், அதர்வண வேதம் சூட்சுமம் படித்து மக்களுக்கு உதவ வேண்டும்" என்று கேட்டான்.  அதற்கு அகத்தியனும் மனமிரங்கினோம்.  அதன் விளைவு தான் இன்றைக்கு எண்பத்தைந்து வயதிலேயும் இளம்காளை போல்துடிப்புடன் செயல் படுகிறான்.  அவனைபோன்ற குருபக்தி இருப்பவர்களுக்கு மட்டுமே நாலாயிரத்து பதினெட்டு வகை சூட்ச்சுமங்களை அகத்தியன் வழங்குவான்" என்று முடித்தார் அகத்தியர்.

எல்லோருக்கும் ஒரு தெளிவான எச்சரிக்கை:-

பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே.  அவனுக்கு பகவான் எந்தச் சமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது.  சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்".

சிதார் மாயம்:-

அது சரி, அப்புறமா அந்த கொல்லிமலை சித்தர்கிட்டே போனாயா?" என்றேன்.

"ஒரு தடவை போய் வந்தேனுங்க.  அதுல பாருங்க ஒரு ஆச்சரியம்.  நான் எங்கே அவரைப் பார்த்தேனோ, அந்த இடத்துல இப்ப குடிசையும் இல்லை - சித்த வைத்தியரும் இல்லை.  அக்கம் பக்கத்லே விசாரிச்சதிலே இதுவரை அங்கு குடிசை போட்டு எந்த வைத்தியரும் குடி இருக்கலைன்னு சொல்றாங்க.


போகரை காண்பதெப்படி

அன்றைக்கு மாடசாமியின் முன் தோன்றி மருந்து கொடுத்த அந்த சித்த மருத்துவர் யார்? என்ற கேள்வியை அகத்தியரிடம் பின்பு ஒரு நாள் கேட்டேன்.

"என் அருமை சீடன் போகன்தான் அவன்.  அகத்தியனின் வேண்டுகோளுக்கு இணங்க அவனே நேரில் வந்து கொடுத்த மருந்துதான் அது.  இது அவர்கள் செய்த புண்ணியம்" என்றார் அகத்தியர்.

அப்படி என்றால் எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்குமா?

"கிடைக்கும்.  போகன் இன்றும் கொல்லிமலையில் உலாவிக் கொண்டிருக்கிறான்.  உண்மையில் போகனை வணங்கிக்கொண்டு போனால் ஏதாவது வைத்தியர் வேடத்தில் போகன் வந்து மருந்து கொடுத்து அவர்களது உயிரைக் காப்பாற்றுவான்".

"அப்படி என்றால், எப்படி போகரை அடையாளம் கண்டு கொள்வது.  எல்லா வைத்தியர்களும் போகரைப் போன்றே காணப்படுவார்களே!  யார் உண்மையான வைத்தியன்? விளக்க வேண்டும்" என்றேன்.

"கண்களில் ஒளிவட்டம் பளிச்சென்று தென்படும்.  துளசி மணம் யாரிடத்தில் தோன்றுகிறதோ அல்லது ஜவ்வாது கலந்த விபூதியின் வாசனை யாரிடத்தில் தோன்றுகிறதோ அவன் தான் போகன்"

மற்ற வைத்தியர்கள் எல்லாம்?

"போகனின் சிஷ்யர்களாக இருந்து, இளம் வயது முதல் சித்த வைத்தியத்தில் கரை கண்டவர்கள்.  அவர்கள் தினமும் போகனை வணங்கியே வைத்தியம் செய்வதால், அந்த சித்த வைத்தியர்களுடைய மருத்துவமும் பலிக்கும்" என்றார் அகத்தியர்.


ராமர் தரிசனம்:-

"ராம பக்தர் ராமதாஸ் பற்றி அறிந்து இருப்பாய்.  அரசாங்க கஜானாவைக் கொள்ளைஅடித்து ராமபிரானுக்கு, ராமதாஸ் கட்டிய கோவில் இது.  இதனால் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அவர் செய்தது தவறு என்பதால் அதற்குரிய தண்டனையைப் பெற்றாலும், அவர், தன் மீது கொண்ட பக்தியைக் கண்டு மெச்சினார் ராமர்.  ராமதாஸ் இருந்த சிறைக்கு ராமர் வந்து மங்களகரமாக காட்சி கொடுத்த நாள் இன்று தான்."

ராமார் காட்சி கொடுத்த அந்த புனித நாளன்றும் கோதாவரியில் வெள்ளம் வெகுண்டோடியது.  அதே போல் இன்றும் எதிர்பாராத விதமாக வெள்ளம் ஓடுகிறது.  ராமதாசுக்கு காட்சி கொடுத்த பின்னர், சீதா, லட்சுமணன், அனுமன் சகிதம் அவர் இந்தக் கோவிலுக்கு வந்ததும் இதே தினத்தில் தான்.  அந்த புனிதமான நாளன்று உனக்கும் அந்த பாக்கியம் கிடைக்கட்டும் என்று தான் இங்கு வரவழைத்தேன்."

 இன்னும் ஒன்றை நாழிகையில் இங்குள்ள கர்ப்ப கிரகத்திற்குள் ராமார் அரூபமாக வருவதால், கண்ணை மூடிக் கொண்டு த்யானம் செய்.  எந்த விதக் காரணம் கொண்டும் கண்ணைத் திறக்காமல் ராமரையே நினைத்திரு.  உன் நினைவலையில் ராமார் வருவதைக் காணலாம்.

ஒரு நாழிகையே அவரது தரிசனம் இங்கு கிடைக்கும், பின்பு, படி வழியாக இறங்கும் ராமர், கோதாவரி தாய்க்கு பூக்களால் நமஸ்காரம் செய்வார்.  தீப ஆரத்தியும் கட்டுவார்.  அதையும் உன் த்யானத்தில் பார்க்கலாம்.  அந்த தீப வழிபாடு முடிந்த பின்னர், கோதாவரி அன்னையின் ஆவேசம் தணியும்.  நான்கு மணி நேரத்தில் வெள்ளமும் வடியும்.  பிறகு, நீ இறங்கிச் செல்லலாம்" என்று அகத்தியர் அருள் வாக்கு அருளினார்.

அகத்தியருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, ராமரை நோக்கி த்யானத்தில் ஆழ்ந்தேன்.

அகத்தியர் ஜீவா நாடியில் கூறியது போல், சரியாக ஒன்னரை நாழிகை ஆனதும் பூட்டியிருந்த கார்ப கிரகம் திறக்கப்பட்டது.  யாரோ உள்ளே செல்வது போல் தோன்றியது.  அபூர்வமான மலர்களின் வாசனை மூக்கை துளைத்தது.  வாசனை திரவியங்களுக்கு நடுவே வேத மந்திர கோஷம் மங்களமாக காதில் விழுந்தது.

ஆஜானுபாகுவான உருவம் மெல்ல, கருவறையிலிருந்து வெளியே வர, அதனை தொடர்ந்து மூன்று உருவங்கள் சட்டென்று வெளியேறியது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது.

கண்ணை மிக நன்றாக மூடிக் கொள்ள, ராம மந்திரம் தானாக என் நாவிலிருந்து வெளியே வந்தது.  பரவசமுடன் த்யானத்தை தொடர்ந்தேன்.

கோவில் கருவறையில் இருந்து வெளியே வந்த அந்த நான்கு பெரும் கோதாவரி நதிக்கரையில் நிற்பது போலவும், கோதாவரி அன்னைக்கு மங்கள ஆரத்தி கட்டுவது போலவும் என் மனக்கண்ணில் தோன்றியது.  சில வினாடிகள் கழித்து, அந்த காட்சி கண்ணிலிருந்து மறைந்தது, மெல்ல கண்ணைத் திறந்தேன்.

அகத்தியரின் அறிவுரை:-

நம்பிக்கையோடு செய்கின்ற காரியங்கள் அத்தனையும் வெற்றி பெரும்.  தீட்டு கலந்த பக்தி, தெய்வ நம்பிக்கை இல்லாத பக்தி; முழுமையான மனதோடு அன்னதானம் செய்யாமை; நடந்ததற்கும், நடந்து கொண்டிருப்பதற்கும், இனி நடக்கப்போவதற்கும் எல்லாமே இறைவன் என்ற எண்ணம் இல்லாமல் பேசுவது, செயல்படுவது போன்ற எண்ணங்களை, செயல்பாடுகளை எவனொருவன் விட்டு விடுகிறானோ அன்று முதல் அவன் அதிஷ்டசாலியாகிறான்.

அகத்தியர் அருளிய தண்டனை:-

இன்று முதல் இன்னும் இருபத்தேழு நாட்கள் நான் உன் கண்ணில் தோன்றி யாருக்கும் அருள்வாக்கு தரமாட்டேன். அதோடு மட்டுமின்றி அறுபடை வீடு தன்னை சுற்றிவந்து அங்கிருக்கும் எம்மை நோக்கி நூற்றி எட்டு தடவை விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். இப்படிச் செய்யாவிடில் இனி அகத்தியன் உன்னிடம் இருக்க மாட்டான் என்று சாட்டையடி அடித்தார்.
வேறு வழியின்றி நானும் அறுபடைவீடு சென்று விட்டு நூற்றி எட்டு தடவை ஒவ்வொரு கோவிலில் காணப்படும்  அகத்தியரை வணங்கி விட்டு வந்தபின்பு தான் அகத்தியர் என்னிடம் மீண்டும் வந்தார்.
அகத்தியர் உபதேசம்:-
யார் எந்த வீடிற்கு குடி போனாலும் முதலில் யாகம் செய்து விட்டுப் போவது தான் நல்லது.  இது எல்லோருக்கும் உகந்தது.  அதோடு மற்ற மதத்தினர் அவரவர் நம்பிக்கைகேர்ப்ப பிரார்த்தனை செய்வது உத்தமம் என்றார்.

பொதுவாக அகத்தியன் யாம், இப்படி பட்ட அதர்வண விஷயங்களை சொல்வதில்லை.  எமக்கும் அதில் பூரண நம்பிக்கையும் இல்லை.  ஏனெனில் பிரார்த்தனையை விட சக்தி எதுவுமில்லை.  அதர்வண வேதம் தான் உலகளாவிய சக்தி என்றால் கோவில், மசூதி, தேவாலயம் எதற்கு?  தேவையே இல்லை.  பெரும்பாலோரே இந்த மாதிரியான செய்வினை செய்வதில்லை.  அப்படி மீறிச் செய்பவர்களது குடும்பத்தினர் உருப்படியாக வாழ்வதில்லை, என்று சொன்னார்.

மேலும் அதர்வண வேதத்தைப் பற்றியும் அந்த யந்திரத் தகடு பற்றியும் தகவல் சொன்னதால் நாற்ப்பத்தைந்து நாட்களுக்கு தீட்டு வந்து விட்டது.  எனவே, நாற்ப்பத்தைந்து நாட்கள் தீட்டு முடியும் வரை யாருக்கும் எந்த விதப் பலனும் சொல்லப் போவதில்லை என்றார்.

நாற்ப்பத்தைந்து நாட்கள் ஓலைச்சுவடியை சோட்டனிக்கரை பகவதி ஆலயத்தில் கொண்டு வைக்குமாறும் எனக்கு ஆணை இட்டார்.  இதனைக் கேட்ட பிறகு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

அகத்தியரின் உதவி:-

"அன்னிக்கு நான் உங்க கிட்ட வந்த போது என் மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டு துடிச்சு போயிருக்க.  அப்போ யாரோ ஒரு சன்யாசியும், அவரது மனைவிய்ம் வீட்டுப் பக்கம் வந்திருக்காங்க.  என் குழந்தைகளை தள்ளி போகச் சொல்லி, அந்த சந்நியாசி மனைவி என் பெண்டாட்டிக்கு பிரசவம் பார்த்திருக்காக.  அந்த அம்மா கையைக் தொட்டதும் என் மனைவிக்கு பிரசவ வலி தெரியவில்லை.  எந்த விதமானக் குறையும் இல்லாம ஒரு பிள்ளைக் குழந்தை பிறந்திடிச்சு.  என் மனைவி உயிருக்கும் ஆபத்தில்லை.

இன்னொரு அதிசயத்தை கேளுங்க.

வாசலில் உட்கார்ந்து ஜெபம் பண்ணின அந்த சந்நியாசி சில பிரசவ மருந்துகளைப் பொட்டலம் பொட்டலமாகக் கட்டி கொடுத்திருக்காரு.  பிரசவம் முடிஞ்சதும் அந்த அம்மாவும், சந்நியாசியும் எந்த வித பிரதி உபகாரமும் வாங்காம போயிட்டாங்களாம்.  இப்போ சொல்லுங்க வந்தவங்க அகத்தியரும், லோப முத்திரையும் தானுங்களே" என்றான் மிக்க சந்தோஷத்துடன்.
தவறு செய்தவர்களுக்கும் திருந்தியதால்அருளும் அகத்தியர்:-
அந்தப் பெண்மணி பதினான்கு ஆண்டு காலம் சிறைத்தண்டனை பெற்று அதை அனுபவித்து விட்டு இப்போது தான் செய்த தவறுக்குப் புண்ணியம் தேடிக் கொள்ள அடிக்கடி அகத்தியரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டு முதியவர்களுக்காக, அநாதைகளுக்காக ஆஸ்ரமம் நடத்துகிறார்.

2 comments:

  1. கண் பார்வைக்கு கொல்லிமலை மூலிகை:-

    "நேத்திர தோஷ நிவர்த்தி புஷ்பம்" - I am looking for this pushpam. Hanumath dasan ayya read about this pushpam for my dad 5 years back.ayya said this pushpam will cure the eye diseases of my dad. If you know more information about this pushpam or kolli malai siddha vaidyar, please let me know. my email id is : sivjothie@gmail.com

    thanks
    Jhothi.

    ReplyDelete