​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 13 August 2026

சித்தன் அருள் - 2274 - சித்தர் புலம்பல்கள் - 3 !



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்கள் அனைவருக்காக!
 
  1. உண்ணும் முன் ஒரு பிடி உணவு, குருவை நினைத்து பறவைகளுக்கு - குரு எங்கிருந்தாலும் சிறந்த குருசேவை.
  2. யார் குரு - குருவே சிஷ்யனாவார், சிஷ்யனே குருவாவார். அதுவே சுவாமிநாதன்.
  3. கர்மவினை சேர உப்பே காரணம்.
  4. வாரம் ஒரு நாள் உப்பு நீர் ஸ்னானம், உடலில் சேர்ந்த எதிர் வினைகளை அறுக்கும். 
  5. பிறப்புக்கு வாசனையே காரணம்.
  6. நிறைவேறா ஆசைகளே வாசனையாய் உருவெடுக்கும்.
  7. ஹ்ருதய கமலத்தில் லிங்க தியானம், ஆத்மலிங்க தரிசனம்.  
  8. அனுபவமே குரு - உணர்ந்தபின் அதுவே இறை.
  9. உள்ளே பிராண அபான நடனம் சிவசக்தி நாட்டியம்.
  10. மனிதர் உண்ணும் உணவு, யாரோ போட்ட பிதுர் பிண்டம்.
  11. கனிந்து கொடுப்பது தோஷமற்றது, அதுவே இறைவனுக்கு பால் அபிஷேகம்.
  12. ஆக்ச்னா வலுப்பெற, மனம் அமைதியாகும், வார்த்தைகள் சுருங்கும்.
  13. சவத்தை சிவமாக்குவதே தினம் நீராடல்.
  14. நீர்நிலைகளில் உதிரும் இலைபோல் இறங்கி நீராட வேண்டும்.
  15. நீர் இல்லையேல், இவ்வுலகில் உயிர் இல்லை.
  16. அக்னிக்குள் நீர் உண்டு, நீருக்குள் அக்னி உண்டு.
  17. காற்றில் உணவுண்டு, காற்றை சுழட்டுபவன், இதை அறிவான்.
  18. காற்றால், உள்ளுக்குள் எட்டு போடுபவன் சித்தன்.
  19. பற்று அற்றவன் சித்தன், அவன் சாபம் விலகாது.
  20. சித்த சாபம், ஜாதகத்தில் கிட்டாது,
  21. குரு சாபம் விலக, சிஷ்யனாய் குருவுக்கு சேவை செய்.
  22. அன்னத்தை மிஞ்சிய தர்மமில்லை; சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்ரமணியத்துக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
  23. இருப்பவன், இல்லாதவனுக்கு கொடுக்கிறானா எனபதற்கே, ஒரு குடும்பத்தில் இரு நிலை சந்ததிகள்.
  24. மோரும் பாலும் ஒரு பொழுதில் உண்பது, உடலுக்கு ஆலகாலம்.
  25. நலம் விளைய, உணவில் சிவப்பு மிளகாய் தவிர். பச்சை மிளகாய் குறை, மிளகும் இஞ்சியும் சேர்.
  26. கடுகு, கடுகளவே, நலம் செய்யும்.
  27. குவளை நீரும், ஒரு இலையும், ஒரு பிடி திருநீறும், சிவம் தன்னை உணர்த்தும்.
  28. மனம் செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டா.
  29. பாரதம் கர்ம பூமி, மற்றவை போக பூமி.
  30. தர்மத்தை பிடி, அது உன்னை கரையேற்றும்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. அகத்தீசாய நம நன்றி அய்யா

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete