​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 12 August 2026

சித்தன் அருள் - 2273 - அன்புடன் அகத்தியர் - சென்னை சத்சங்க வாக்கு - 05/07/2026 - பகுதி - 7!



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026  அன்று சென்னையில் நடந்த   அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 7

வாக்குரைத்த நாள், நேரம்  :-  05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 
………..
………..
………..

சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து? 

அடியவர் 18:- ( தனி கேள்வி ) அய்யா, தம்பி ______________ _______ _______   16 வருஷம் ஆகுது…. 

குருநாதர் :- தாயே இப்பொழுதுதான் அதைப் பற்றி எடுத்துரைத்து விட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  உனக்கு சொல்லிட்டாருமா.  கொஞ்சம் பொறுமா. ஏன்னா இதுல வந்து ஒருத்தங்க அப்படி எழுப்புவார் கரெக்டா வந்து…. பாருங்க ஒரே இதுல நாலு அஞ்சு பேர் அப்படியே எழுப்பி விட்டார் எல்லாரும்…. ஒன்னு.. ரெண்டு.. மூணு.. நாலு.. அஞ்சு ..ஆறு.. ஏழு.. எட்டு… ஒன்பது பேர்… அப்படியே எழுப்பி விட்டார் வந்து. அது உங்களுக்காக வந்து தெரிவிச்சிருக்காரு. அப்ப நீங்க ஒன்னு சில சில விஷயங்கள் உங்களுக்கு நீங்கள் தான் துணை. அப்ப பொறுத்துதான் ஆகவேண்டும். எல்லா விஷயங்களையும் பொறுத்துதான் ஆகவேண்டும். 

அடியவர் 19:- ஐயா இங்க ஆலயத்துக்கு போயிட்டு வரணும்னு சொன்னாரு ஐயா. அது என்னன்னு ….? 

குருநாதர் :- அப்பனே ஏது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று புரிய அப்பனே, காஞ்சி தன்னில் கூட அப்பனே பின் அனைத்து திருத்தலங்களுக்கு செல் அப்பனே. ஏனென்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அங்கு தர்மத்தை ஏந்திக் கொண்டிருந்தாய்  ஒரு பிறவியில் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ் ஞாபகமும் வந்திருக்கும் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே அங்கே  செல்.  ஒரு விடிவெள்ளி கிடைக்கும் அப்பா. 

அடியவர் 7:- காஞ்சிபுரம் போகணும் நீங்க….

சுவடி ஓதும் மைந்தன் :-  ( …………………. தனி விளக்கங்கள் ………………………………………) 

குருநாதர் :- அப்பனே பின்பு உரைப்பேன் 

சுவடி ஓதும் மைந்தன் :-  பின்னாடி உரைக்கிறேன் 

அடியவர் 20 :- ஐயா போன வாக்குல, எனக்கு கடனுக்கு ஒரு கோவிலுக்கும், அம்பாள் சிலை செய்ய சொல்லி வாக்கு கொடுத்திருந்தீங்க ஐயா அது?  

குருநாதர் :- தாயே நிச்சயம் தன்னில் கூட பின் எப்பொழுது எதனை பற்றி சொல்ல வேண்டுமோ அப்பொழுது நிச்சயம் யான் சொல்வேன். இப்பொழுது பொறுத்திருக்க… 

அடியவர் 21 :- அய்யா சபரி மலைக்கு ?

குருநாதர் :- அப்பனே எது என்று புரிய அப்பனே பின் இப்பொழுதுதான் சொன்னேன் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. பின் பாடலை பாடிக்கொண்டே போ, அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்பதான் சொன்னேன் எல்லாமே ஈசன் முடிவுதான்ப்பா. அவர் எடுக்குறதுதான்ப்பா எல்லாமேன்னு சொல்றாரு வந்து… 

அடியவர் 22  :- ஐயா சுழு முனைன்னா என்ன?  

குருநாதர் :- அப்பனே எது என்று கூற, பின்  நீ சென்று விட்டு வா அப்பனே. சொல்கின்றேன். 

அடியவர் 7  :- நீங்க போயிட்டு வந்தாதான் ( பதில் வாக்கு வரும் ) 

சுவடி ஓதும் மைந்தன் :- அதான். 

ஜோதிடர் அடியவர் 23 :- நீங்க தான் சூரியனோட ஆதிக்கம்… நீங்க இன்னொருத்தருக்கு வழிகாட்டணும்… உங்களுக்கு ஈசன் தான் வழிகாட்டணும்னு குருநாதர் சொல்லும்போது…. நம்ம வழிகாட்டுறது சரியா அப்படிங்கறது தெரியல ஜாதகத்துல… சில பலன்கள் எல்லாம் சொல்றேன்… 

===========================
# பாவங்களை தொலைக்க நீங்கள் என்னை தேடி வந்திருக்கின்றீர்கள்…
===========================

குருநாதர் :- அப்பனே எது அதனால்தான் கூட்டிட்டு வந்திருக்கின்றேன் அப்பனே பாவங்களை தொலைக்க எவை என்று கூற. நீங்கள் என்னை தேடி வந்திருக்கின்றீர்கள்… 

அடியவர்கள் :- ( கை தட்டல்கள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகேங்களா… அதனால்தான்ப்பா… உங்களுக்கு வந்து நீங்க வழிகாட்டணும். அதனாலதான் தெரியல உங்களுக்கு வந்து அதனாலதான் நீங்க வந்து இங்க வந்து நான் அந்த பாவத்தை ? 

அடியவர்  :- எடுக்கிறார் 

சுவடி ஓதும் மைந்தன் :-  எடுக்கிறார் எடுக்கிறார் வந்து… அதனாலதான் ஓகேங்களா 

அடியவர் 7  :- நீங்க வழிகாட்டலாம்… 

ஜோதிடர் அடியவர் 23 :- ஜாதகத்துல சொல்றதுக்கு… குருநாதருடைய ஆசீர்வாதம் வேணும். ஜாதக பலன்கள் சொல்லிக் கொடுக்கணும். அதுல குருநாதருடைய ஆசீர்வாதம் வேணும். 

===========================
# ஜாதகத்தில் எட்டில் ஏதாவது கிரகம் இருந்தால் என்ன ஆகும்? 
===========================

குருநாதர் :- அப்பனே யான் கேட்கின்றேன் அப்பனே எட்டில் அப்பனே நிச்சயம் ஏதாவது கிரகம் இருந்தால் அப்பனே என்ன ஆகும்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  நான் கேட்டுக்கின்றோம்பா… எட்டில்  ஏதாவது கிரகம்… லக்னத்துக்கோ… ராசியோ எட்டில் கிரகம் இருந்தா என்ன ஆகும் சொல்லுங்க? 

ஜோதிடர் அடியவர் 23 :- சனி பகவான் இருந்தா ஆயுள் தீர்க்கம்னு சொல்றோம்… இறை அனுக்கிரகம் இருந்தா… கேது பகவான் இருந்தா ஞானம். மறை ஞானம்… மறைகளை ஞானம் கிடைக்கும் அப்படின்னு சொல்லக்கூடியது. பொதுவா எட்டுல இருந்தா கஷ்டங்கள் நிறைய இருக்கும். 

குருநாதர் :- அப்பனே எது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட எட்டில் ஒரு கிரகம் இருப்பது அப்பனே அதிர்ஷ்டத்தை தரும் என்பேன் அப்பனே.  

குருநாதர் :- அனைத்து பாவங்களை போக்கி, மோட்சத்தை தரும் என்பேன் அப்பனே. 

===========================
# ஏன் பல ஜோதிடர்களுக்கு பாவம், தோல்வி, நோய்கள்  ஏற்படுகிறது ?
===========================
# ஏன் பல ஜோதிடர்கள்  குடும்பமும் பாழாகிறது ?
===========================

குருநாதர் :- ஆனால் ஜாதகனுக்கே கூட அவை தெரியாமல் அப்பனே ஓதிக்கொண்டிருக்கும் பொழுது, பின் பார்ப்பவனுக்கே பாவம் ஏற்படுகின்றது என்பேன் அப்பனே. இதனால்தான் பல ஜாதகக்காரர்கள் அப்பனே தோல்வியில் பின் வாழ்க்கை நடத்துகின்றார்கள் அப்பனே. கடைசியில் நோய்களும் வந்து விடுகின்றது. குடும்பமும் பாழாகின்றது.

சுவடி ஓதும் மைந்தன் :- எட்டில் இருந்தால் அதிர்ஷ்டம். 

அடியவர்கள் :- அதிர்ஷ்டம் 

சுவடி ஓதும் மைந்தன் :-  மொத்தம் பாவங்களும் இந்த ஜென்மத்திலே போயிட்டு? 

அடியவர்கள் :- மோட்சம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  மோட்சம் கிடைக்கும். ஐயா புரியுதுங்களா? 

===========================
# எட்டில் தர்மதேவன் இருந்தால் என்ன பயன் ? 
===========================

குருநாதர் :- அப்பனே சனி இருந்தால் என்ன பயன் சனி இருந்தால் என்ன பயன்?எட்டுல ?

ஜோதிடர் அடியவர் 23 :-  கர்மாக்கள் நிறைய அனுபவிக்கனும்… நோய் … 

குருநாதர் :-  அப்பனே எதை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இவன் தன் அப்பனே ஏது என்று புரிய பல பேர்களை கொன்றிருப்பான் அப்பா, எதை  என்று கூற பின்  நிச்சயம் தன்னில் கூட இப்பிறப்பில் இவனை கொல்ல  வருவார்கள் அப்பனே. இவனுக்கு விபத்துக்கள் அனைத்தும் நடக்கும் என்பது. இதனால்தான் அப்பனே எட்டில் அமர்ந்திருக்கின்றான். 

சுவடி ஓதும் மைந்தன் :-   சனி எட்டில் அமர்ந்தா என்ன ஆகுது?  ஒரு ஜென்மத்துல நிறைய பேர் கொன்னு இருக்கிறார் அவர் வந்து.. கொன்னு இருக்கிறார்… என்னது வந்து ? 

ஜோதிடர் அடியவர் 23 :-  கொலை பண்ணி இருக்கிறார் … 

சுவடி ஓதும் மைந்தன் :- கொலை பண்ணி இருக்கிறார் … அதனால எட்டுல அழகா சனி பகவான் வந்துட்டு.. என்ன பண்ணுவாரு?  இந்த ஜென்மத்துல பகையும் எல்லாம் ஏற்படுத்தி, அவனுக்கு வந்து என்ன ஏற்படுது?  என்ன பண்ணுவாரு ? 

அடியவர்கள்  :-   விபத்துக்கள் 

சுவடி ஓதும் மைந்தன் :- விபத்துக்கள் அதிகமா வரும். கண்டம் அதிகமா வரும். சொந்தக்காரர்கள்.. இது மாதிரி எல்லாம் வந்து என்ன பண்ணுவாரு வந்து ? 

குருநாதர் :-  அப்பனே இதற்கு பரிகாரம் கூறு?  

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க என்ன பரிகாரம் கூறுங்கன்றாரு.  எட்டில்… ஐயா இது வந்து உதாரணம் எக்ஸாம்பிள் ஓகேங்களா?  இப்ப எட்டுல சனி இருக்குது. இதுக்கு என்ன பரிகாரம் நீ சொல்லுவேன்னு கேக்குறாரு?  

அடியவர் :- இத சரி பண்றதுக்கு பரிகாரம் சொல்லுங்க ? 

ஜோதிடர் அடியவர் 23 :-   நிறைய உயிர்கள் காப்பாத்தணும்.  நிறைய உயிர்களுக்கு தான தர்மங்கள் செய்யணும். உயிர்களுடைய ஆசிர்வாதத்தை பெறணும் 

குருநாதர் :- அப்பனே பின் எட்டாவது இடம் அப்பனே பின் வேறு ஒருவனாக இருந்தால்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  எட்டிலே சனி இருந்து… அந்த வீடு வந்து வேற ஒரு இருந்தால் என்ன பண்ணுவ?   எட்டாம் இடம்தான்… வேற ஒருத்தரா வேற ஒருத்தர் இருந்தா என்ன பண்ணலாம்? ( எட்டாம் இடத்தின் அதிபதி வேறு இடத்தில இருந்தால் ?) 

அடியவர் 9:- ஆந்த  வீட்டுக்காரர் எங்க இருப்பாரு? 

ஜோதிடர் அடியவர் 23 :-  அந்த கிரகம் வேற இடத்துல… லக்னத்திலேயே இருந்தா…. மறுபடியும் கஷ்டங்கள் தான்…. எட்டு அப்படினாலே கஷ்டங்கள் ஞானங்கள் அது மூலமா இந்த பிறப்பு கடைசி பிறப்பு அப்படிங்கிறது 

===========================
# ஜாதகத்தில் எட்டாம் இடத்தின் ஆதி மூல பரிகாரம் - இதுவரை வெளிவராத ரகசியங்கள்….
===========================

குருநாதர் :-  அப்பனே இதற்கு அப்பனே சரியாக அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட மாதத்திற்கு ஒருமுறை அப்பனே பின் தர்மத்தை பின் நிச்சயம் பின் எவை என்று கூற திருத்தலத்தில் நிச்சயம் தன்னில் கூட ஏற்றால் அப் பாவம் பின் சரிந்து கொண்டே வரும் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒவ்வொரு மாதம் என்ன பண்ணனும்?  ஒவ்வொரு திருத்தலத்தில் போயிட்டு, பிச்சைக்கார வேஷம் போட்டுக்கிட்டு, அங்கேயே படுத்துகிட்டு, தர்மம் ஏந்தினா மட்டும்தான் இத் தோஷம் போகும். 

குருநாதர் :-  அப்பனே இன்னும் விளக்கங்கள் தருகின்றேன் புதுமை புதுமையாக அப்பனே. ஆனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் ஒருவன் அப்பனே சொல்லியது, அப்படியே சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, அப்பனே எப்படிப்பா நியாயம்? 

சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப ஜாதகம் எடுத்துட்டா…. இப்ப ஒருத்தர் சொல்றாரு என்றால் … அதையே ஃபாலோ பண்ணுவாரு ஓகேங்களா?  வந்து புரியுதுங்களா ஐயா வந்து? 

அடியவர் :-  ( பொதுவாக ) ஜாதகம் பார்க்க கூடாது

ஜோதிடர் அடியவர் 23 :-   வேற வளர்த்துக்கணும் அப்படி சொல்றரர்.

சுவடி ஓதும் மைந்தன் :- வளர்த்துக்கணும்ன்றாரு வந்து… அப்ப எட்டில் வந்து யாருக்கு சனி இருந்தா என்ன பரிகாரம்  ? 

ஜோதிடர் அடியவர் 23 :- மாசம் மாசம் கோவில்ல போய் கோவில்ல போய் பிச்சை எடுக்கணும்… திருவண்ணாமலையில போய் படுத்துக்கணும்…

சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான்.  அப்படி வந்தாதான் சனி பகவான் என்ன பண்ணுவாரு?  

அடியவர் 7:- விலகி போவாரு. நல்லது  செய்வார்.

===========================
#  ஜாதகத்தில் நவாம்சம் என்பது என்ன? - இதுவரை வெளிவராத ரகசியங்கள்…. 
===========================

அடியவர் 13 :-  இது நவாம்சத்துல இருந்தாலும் இப்படித்தானா? 

குருநாதர் :-  தாயே எது என்று கூற பின்  எவை என்று  கூற பின்  எப்படி எது என்று புரிய , அதாவது நிச்சயம் நவாம்சம் என்பது என்ன? 

சுவடி ஓதும் மைந்தன் :- நவாம்சம் என்பது என்ன? 

அடியவர் 7:- நவாம்சம்னு நீங்கதானே சொன்னீங்க?

அடியவர் 13 :- தெரியாது ஹாராஸ்கோப்… ஆனா ஆஃப்டர் மேரேஜ் வந்து நவாம்சத்தை பார்க்கணும்னு சொல்லுவாங்க. அதனால கேக்குறேன். எனக்கு தெரியாது.

குருநாதர் :-  தாயே எதையும் தெரியாமல் எவை என்று கூறப்பேன் எது என்று பார்ப்பது சரியா? 

சுவடி ஓதும் மைந்தன் :- எதுவுமே தெரியாமல் நவாம்சத்தை பார்ப்பது சரியான்றாரு வந்து? 

அடியவர் 13 :- அதாவது நவாம்சம் மேரேஜ்க்கு மேட்சிங்கு நவாம்சம் தான் முக்கியம்ங்கிறாங்க. ஆனா இன்னைக்கு நிறைய அஸ்ட்ராலஜர்ஸ் வந்து நவாம்சமே பாக்குறது இல்ல. ராசி கட்டத்தை மட்டும் பார்த்துட்டு தான், சொல்றாங்க. அது தப்புங்கிறாங்க.  அதனாலதான் நிறைய மேரேஜஸ் (பிரச்சினை ஆகுது)…

சுவடி ஓதும் மைந்தன் :-  நவ அம்சத்தை என்னன்றது கேக்குறாரு உங்கள? 

அடியவர் 7:-  அப்படின்னா என்ன நவாம்சம் வந்து?  

அடியவர் 13 :-  அந்த ஒரு லக்னத்தை வந்து ஒன்பதா பிரிக்கிறதுன்னு சொல்லுவாங்க. எனக்கு ரொம்ப தெரியாது. ஆனா… 

குருநாதர் :- தாயே  எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் “நவ அம்சம்” எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற “அ” வில் இருந்து அறம், புண்ணியங்கள் இன்னும் பல வகை உண்டு. அதையெல்லாம் செய்தால்தான், அதுவே பலிக்கும் எது என்று புரிய. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நவ அம்சங்கள் ஒன்னு இருக்குதாம். நமக்கு வந்து… ஒன்பது அம்சம். அந்த ஒன்பது அம்சம் நீங்க பண்ணனும் வாழ்க்கையில வந்து… 

குருநாதர் :-  எதை இப்படியும் சொல்லலாம் நிச்சயம் தன்னில் கூட பின் எது என்று கூற செருப்பு தானம்.  இதுவும் பின் அதாவது செருப்பு அம்சம் என்று.

சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகேங்களா செருப்பு. செருப்பு போடுறோம் இல்ல. 

குருநாதர் :-  எதை என்று கூட பின் ஆடை தானம். ஆடை அம்சம் என்றே சொல்லுவார்கள் 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆடை தானம்.. இது ஆடை அம்சம்.. 

குருநாதர் :-  அறிந்தும் குடை அம்சம். பெண்  அம்சம் எது என்று கூற. பின் கோமாதா. இப்படியே பின் நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் வாழ்க்கையில் ஒருவன் செய்தே ஆக வேண்டும்.  இப்படி செய்தால் மட்டுமே நிச்சயம் தன்னில் கூட அவையும் சரியாகும். 

அடியவர் :- நேத்து நைட் சொன்னது..குரூப்லேயும் சொன்னேங்க அய்யா நேத்து  … 

சுவடி ஓதும் மைந்தன் :-  அமாம். ஒருத்தருக்கு… ஒன்பது வாழ்க்கையில வந்து… ஒன்பது தானம் பண்ணனும். அப்ப பண்ணுனா அது என்னது? அப்பதான் வந்து நவ அம்சம். அப்பதான் உன் கிரகங்களையே வந்து நவ 

அடியவர் 7:- நவ அம்ச கிரகம் வேலை செய்யும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்படி இல்ல. நவ அம்சம் என்பதே இதுதாங்க ஐயா. ஓகே புரியுதுங்களா?  இதை பண்ணா மட்டும்தான் ஒவ்வொரு கிரகத்துவம் நீங்க பண்ணனும். அப்ப வந்து அது இது பண்ணி இது பண்ணால் மட்டும்தான்… குடை தானம் அப்புறம் என்னங்க சொன்னாங்க? 

அடியவர்கள் :- ஆடை தானம், பெண் தானம் ( கன்னிகா தானம் - வசதியில்லாதவர்களுக்கு திருமணம் செய்வித்தல் )  , 

குருநாதர் :-  எது என்று அறிய பின் எழுதுகோல் தானம் நிச்சயம் தன்னில் கூட 

சுவடி ஓதும் மைந்தன் :-  எழுதுகோல் கூட..

அடியவர் 7:- பேணா …

சுவடி ஓதும் மைந்தன் :-  பேணா கூட… பின் புக்கு இது கூட ஒரு தானம் தான்… புக்கு…  

குருநாதர் :-   எதை எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதனால தெரிஞ்சுக்கோங்க.. அறிஞ்சுக்கோங்க… 

===========================
# தர்மத்தின் வழியில் செல்ல செல்ல , கர்மத்தின் வலி குறையுமப்பா..
===========================

குருநாதர் :-   இவ்வாறாக நிச்சயம் செய்தால் மட்டுமே கிரகங்களும் வேலை செய்யும். இல்லையென்றால் நீங்கள் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். நல்ல நேரம் வரும். குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, எவை என்று கூற ராகு கேது பெயர்ச்சி, என்றெல்லாம். நிச்சயம் பின் நீங்கள் மாறாத வரையில் அதுவும் மாறாது. 

அடியவர் :- (குருநாதர் அகத்தியர்)  அய்யா வழிக்கு வந்துட்டாலே,   ஜாதகம் எடுக்குறது தேவை இல்லை…

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete