6/9/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: சபரிமலை மணிகண்டன் சன்னதி.
ஆதிமூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே ஆசீர்வாதங்கள்!!
அப்பனே எப்பொழுதும் அதாவது அப்பனே இவ் மணிகண்டனின் ஆசிர்வாதங்கள் பரிபூரணமாக இருக்கின்ற பொழுது அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட பல வகையிலும் கூட வெற்றிகள் அப்பனே.
ஆனாலும் அப்படி சரியான வழியில் சென்று !! சரியானவற்றையெல்லாம் செய்திட்டு வந்தாலே... அப்பனே அதாவது நீதி நேர்மை.. சரியான வழியிலே அப்பனே தர்மத்தையும் கடைப்பிடித்து வந்தாலே.. உயர்ந்த இடத்தில் வைப்பானப்பா.
அனைத்தும் கொடுப்பானப்பா.
இன்னும் அப்பனே பல வழிகளிலும் கூட இவந்தனுடைய அப்பனே பின் அதிசயங்கள் இருக்கின்றது.
அவையெல்லாம் அப்பனே நிச்சயம் போக போக.. நிச்சயம் பின் சொல்வேன் அப்பனே.. இவ்வாறெல்லாம் என்று அப்பனே...
இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.. தெரிந்து கொண்டு பல வெற்றிகளை.. அப்பனே இவ் அழியும் உலகத்தில்.. நிச்சயம் அழியாத செல்வத்தை... அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம்.. நல்விதமாகவே அடைந்து... அப்பனே இவனுடைய (ஐயப்பனின்) அருளைப் பெற்று.. நீடூழி வாழலாம் என்பவையெல்லாம்!
அப்பனே அவை மட்டுமில்லாமல்.. எப்பொழுதும் அப்பனே ரகசிய.. நிச்சயம் தன்னில் கூட மரங்கள் எல்லாம் இங்கு உள்ளது என்பேன் .
அப்பனே இதில் தான் நிச்சயம் பிடித்தமான இவந்தனக்கு... நிச்சயம் தன்னில் கூட அழகாகவே அப்பனே மரத்தின் மீது ஏறி.. அமர்ந்து சரியான வழியில்... நல்விதமாகவே அனைவருக்கும் ஆசிகள்.. அப்பனே பின் இவந்தனும்.!!
அங்கேயே (மரத்தில்) நிச்சயம் தன்னில் கூட.. உறங்கி அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட நடப்பானப்பா!!
இவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அங்கு இருக்கும் அப்பனே.. அழகாகவே... இவன் அழகாக உறங்குகின்ற பொழுது.. சூரியனும் கூட அழகாக!!.. இவன் மீது அப்பனே... பின் அதாவது அவ் மரமானது சரியாகவே பல வகையிலும் கூட பின்.. நிச்சயம் தன்னில் கூட ஒளி... அப்பனே பல நன்கு எதை என்று அறிய அப்பனே...
சூரியனின் வெளிச்சத்தை அப்பனே.. நன்கு நன்கு அப்பனே நிச்சயம்.. ஈர்க்கும் சக்தி !!
அவ் ஈர்க்கும் சக்தியை அப்படியே வைத்துக் கொள்ளும் அப்பா அவ் மரங்கள்!!!
அப்பனே இவையெல்லாம் ஐயனின்.. திருவிளையாடல்களே என்பேன் அப்பனே..
இப்பொழுது எதை என்று அறிய அப்பனே...
அங்கு அய்யன் உறங்குகின்றான் என்றால்... இவையெல்லாம் நிச்சயம் அப்பனே... அதாவது சிறு குழந்தையாக.. அய்யன் இருந்த பொழுது அப்பனே... ஒவ்வொரு ஞானிகளும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அழகாகவே.. விளையாடுகின்ற பொழுது... அங்கங்கு நிச்சயம் எதை என்று அறிய நிச்சயம்.. அதாவது மரங்கள் தான் அதிகம் பிடிக்கும்.
( ஐயப்பன் பால்ய பருவத்தில்.... மரங்களில் ஏறி விளையாடுவதும் உறங்குவதும் அவருடைய திருவிளையாடல்கள்
அவர் ஏறி விளையாடுவதற்கும் உறங்குவதற்கும் சித்தர்களும் ஞானிகளும் கூடு விட்டு கூடு பாய்ந்து மரம் ரூபங்கள் எடுத்து நின்றனர் அந்த மரங்கள் இன்றும் இருக்கின்றன
)
அப்பனே இதனால் நிச்சயம் அவ் ஞானிகளே அப்பனே நிச்சயம் தன்னில் கூட மரங்களாகி நின்று அப்பனே.
அதாவது கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை கூட.. அப்படியே பின் நிச்சயம் தன்னில் கூட உடம்பை வைத்துவிட்டு.. அப்படியே நிச்சயம் பின் அது.. மரங்களாயின என்பேன் அப்பனே!!
இப்பொழுதெல்லாம் பின் நிச்சயம்.. அங்கு எவை என்று அறிய.. அப்பனே கீழிருந்து பல வழிகளிலும் கூட பின் மனிதர்கள்.. ஏறுகின்றார்கள் அப்பனே!! மேலே அப்பனே!!
(மலைக்கு மாலை அணிந்து சபரிமலை தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள்)
(சபரிமலைக்குச் செல்ல பல வழிகள் உள்ளன, அவற்றில் முக்கியமாக பெருவழிப்பாதை (எருமேலி வழி), வண்டிப் பெரியா பாதை, சாலக்காயம் பாதை, மற்றும் புல்மேட்டுப் பாதை ஆகியவை அடங்கும். பெருவழிப்பாதை ஐயப்பனின் யாத்திரைப் பாதை எனப் போற்றப்படுகிறது, மற்ற பாதைகளும் பக்தர்களால் பயன்படுத்தப்படுகின்றன.
முக்கியமான சபரிமலை பாதைகள்:
1. பெருவழிப்பாதை (எருமேலி வழி):
இது ஐயப்பன் தான் யாத்திரைக்காக சென்ற பாதை .
எருமேலி, பேரூர் தோடு, அழுதை, கல்லிடுங்குன்று போன்ற பகுதிகள் வழியாக இந்த பாதை செல்கிறது.
இந்த வழியே சென்றால்தான் ஐயப்ப யாத்திரை முழுமையடையும்
பெரிய பாதை என்பது எருமேலி, பேரூர் தோடு, காளைகட்டி, அழுதை, அழுதை நதி, கல்லிடுங்குன்று, இஞ்சிப்பாறை-உடும்பாறை, முக்குழி, கரிவலம் தோடு, கரிமலை, பெரிய யானை வட்டம், சிறிய யானை வட்டம், பம்பா நதி வழியாகப் பயணிக்கும் பாதையாகும்.
2. வண்டிப் பெரியார் பாதை:
இதுவும் பக்தர்களால் பயன்படுத்தப்படும் மற்றொரு பாதை ஆகும்.
3. சிறுவழிப்பாதை (புல்மேட்டுப் பாதை):
இது புல்மேடு வழியாகச் செல்லும் பாதை ஆகும்.
இதுவும் சபரிமலை யாத்திரைக்கு பயன்படுத்தப்படும் ஒரு வழியாகும்.
4. சாலக்காயம் பாதை:
பம்பா நதிக்கு அருகேயுள்ள இந்தப் பாதையும் ஒரு புனிதப் பாதையாகும்.
இந்த வழியில் புனித நீராடிய பிறகு, பக்தர்கள் நீலிமலை ஏறத் தொடங்குவார்கள். )
ஆனாலும் அப்பனே நிச்சயம்.. அதிசயங்கள் அப்பனே.. அவையெல்லாம் பின் எங்கு ?ஏது? என்பதை எல்லாம் அப்பனே வரும் காலத்தில் யான் செப்புவேன் அப்பனே.
இப்பொழுது செப்பினாலும் அப்பனே.. அதனையும் கூட பாழாக்குவார்கள்.. மனிதர்கள் அப்பனே!!
இதனால் அப்பனே சூரியனின் பின் நிச்சயம்.. சரியான வெளிச்சத்தை அதாவது.. அப்பனே பின் பன் மடங்கு.. அவை நிச்சயம் ஈர்த்துக் கொள்ளுமப்பா!!
இதனால் அப்பனே நிச்சயம் எப்பொழுதும் அப்பனே பின் அனைத்தும்.. அதாவது அவ்வாறு ஈர்த்து.. உலகத்தில் வாழும் பின் அனைத்திற்கும் காரணம் பின் சூரியனின்.. அதிக ஆற்றலே!!!
அவ் ஆற்றலை அப்பனே இவ்வாறாக அவ் மரங்கள் ஈர்த்துக் கொள்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதர்கள். (மலை மீது செல்லும் பக்தர்கள்). அப்பனே நிச்சயம் செல்வார்கள் என்பேன் அப்பனே!!
அதாவது வந்தும் சென்றும் அதாவது மேலேயும் கீழேயும் ஏறுவார்கள் இறங்குவார்கள் அப்பனே...
அப்பொழுது அவ் மரத்திலே.. உறங்கிக் கொண்டிருப்பான் அப்பா அய்யன்.
அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட.. வெப்பமானது அதிக அளவு அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அவ் மரங்கள்.. வெளியேற்றும் என்பேன் அப்பனே.
அவ் வெப்பம் நிச்சயம் மனிதர்களிடையே படுகின்ற பொழுது அப்பனே புண்ணியங்கள்.. புண்ணிய ஆத்மாக்கள் ஆகின்றார்கள் என்பேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே சிலரால்... ஏன் முடியவில்லை?? என்றால் அப்பனே!!
நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் பாவம் அதிக அளவு இருக்கின்ற பொழுது.. அப்பனே நிச்சயம் தன்னில்.. எதை என்று அறிந்தும் கூட அவ் வெப்பமானது நிச்சயம் அவ்வாறு விடுகின்ற பொழுது... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பல வகையிலும் கூட கரைகின்றது.
அப்பனே அவையிலும் கூட புண்ணியங்கள் பல மடங்கு இருக்கின்ற பொழுது அவ் வெப்பம் நிச்சயம் தன்னில் கூட... மனிதனிடத்தில் படுகின்ற பொழுது அப்பனே நிச்சயம்.. அவை தன் அப்படியே பன்மடங்கு இல்லத்திற்கு பின் எடுத்துச் செல்கின்றான் என்பேன் அப்பனே.
இதனால் அவனால் பல மனிதர்கள் பயனடைகின்றார்கள் என்பேன் அப்பனே.
அதனால்தான் சரியாக பின் அதாவது தியானத்தையும் கூட அப்பனே... சரியான வழியில் கூட அப்பனே பின் உடம்பை.. சரியாக பயன்படுத்திக் கொண்டு அப்பனே ஆற்றல்களோடு வந்தால்.அவ் வெப்பம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... ஐயனே மனிதரிடத்தில் அதாவது..அவ் மரங்களே மனிதரிடத்தில் கொடுக்கும் என்பேன் அப்பனே.
இதனால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே... இதனால் அவனவன்
(மலைக்கு மாலையிட்டு விரதமிருந்து இருமுடி கட்டி ஐயப்பன் தரிசனம் முடிந்து வீட்டிற்கு செல்பவர்கள்)
பின் இல்லத்திற்கு செல்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் பரிசுத்தமான ஆற்றல் எப்பொழுதும் ஒரு பத்து அல்லது இருபது நாட்கள் அப்பனே... அப்படியே இருக்கும் அப்பா...
இதனால் அப்பனே பின் அவனால் பலர் பலனடைகின்றார்கள் என்பேன் அப்பனே.
அப்பனே பின் அதனால்தான் பின் நிச்சயம் தன்னில் கூட சரியான வழியில் அப்பனே நிச்சயம் ஐயனை... விரதங்கள் இருந்து.... எப்படி ஒரு மனிதன் வாழ வேண்டுமோ அப்படி எல்லாம் இருந்தாலே. உடம்பை சரியாக கவனித்துக் கொண்டு அப்பனே... உடலில் சில தாதுக்கள் அதிகமாக.. இருந்தால்தான் பின் அவ் வெப்பத்தையும் கூட நம்மால் பின் நிச்சயம் பெற முடியும் அப்பா!!
அதனால்தான் நிச்சயம் வகுத்திருக்கின்றார்கள் இவ்வாறெல்லாம் நிச்சயம் இருக்க வேண்டும் (விரத முறைகள்)
அதாவது நிச்சயம் தன்னில் கூட விரதம் மேற்கொள்ள வேண்டும் இப்படித்தான் பின் இருக்க வேண்டும்!!
பின் எதையும் எண்ணக் கூடாது!!
பின் ஐயனை மட்டும் எண்ணிக் கொண்டே வரவேண்டும் என்றெல்லாம் அப்பனே.
அப்படி எண்ணிக் கொண்டு வந்தாலே உடம்பில் நிச்சயம் தன்னில் கூட.. சில வழிகளிலும் கூட இருக்கும் தீய கதிர்கள் நிச்சயம் தன்னில் கூட வெளியேற்றப்பட்டு.. அப்பனே அவை அப்படியே...இவ் மலை ஏறுகின்ற பொழுது.. நிச்சயம் அப்பனே
அவ் மரத்தை சொன்னேனே!!!...அவ் வெப்பமானது.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே..
அப்பனே பின் இவ்வாறாகவே.. அதாவது இவ்வாறாக இருந்தால் மட்டுமே உடம்பு ஈர்க்கும் அப்பா.
அப்படியே ஈர்க்கின்ற பொழுது...அவை தன் அப்பனே இல்லத்திற்கு அப்படியே எடுத்துச் செல்கின்ற பொழுது.
ஆனாலும் அப்பனே தற்பொழுது மனிதர்கள் அப்படி இல்லையப்பா!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட சென்று விட்டு... விரதத்தை அப்பனே பின் அப்படியே முடித்து விடுகின்றார்கள் என்பேன் அப்பனே.
ஆனாலும் அவ் வெப்பமும் பயனில்லாமல் சென்று விடுகின்றது என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் விரதத்தை பின் இல்லத்திற்கு அப்பனே.. செல்கின்ற பொழுதும்.. அப்படியே ஒரு பத்து, இருபது நாட்கள் அமைதியை காத்தருள வேண்டும் என்பேன் அப்பனே.
இப்படி இருந்தால் நிச்சயம் இன்னும் சுகங்கள் தேடி வரும் அப்பா... இன்னும் மாற்றங்கள் கிடைக்குமப்பா.
அப்பனே இது போல் பல மரங்கள் உள்ளது என்பேன் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அவையும் கூட.. ஒளிரும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இருட்டில் கூட.
அப்பனே இன்னும் அதிசயங்கள் பல அப்பனே பின் நிச்சயம் இருக்கின்றது என்பேன் அப்பனே...
அது மட்டும் இல்லாமல் அங்கு தான் அப்பனே அவ் வெப்பத்தை தேடி பல சிறுத்தைகளும் கூட.. அப்பனே புலிகளும் கூட இன்னும் பல ஜீவராசிகளும் வரும் அப்பா.
ஏன்? எதற்கு? என்றால் அப்பனே நிச்சயம்.. இங்கு வந்தாலே அப்பனே பரிசுத்தமான உடம்பில் பின் பல வியாதிகள் இருந்தாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஒவ்வொரு உயிரினத்திற்கும் பசி என்ற வார்த்தை அப்பனே நிச்சயம் இருக்கின்றது என்பேன் அப்பனே.
அங்கு நெருங்குகின்ற பொழுது நிச்சயம் தன்னில் கூட.. அவையெல்லாம் மாறுகின்றது என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட.
இவ்வாறு தான் அப்பனே நிச்சயம் அனைத்தும் பின் அதாவது கட்டுப்படுத்தி வந்தால் அப்பனே.. பின் உள்ளத்தையும் உடம்பையும் அப்பனே கட்டுப்படுத்தி வந்தால் அப்பனே அவ் ஆற்றல் உங்களுக்கும் கிட்டுமப்பா!!
அப்பனே அவ் ஆற்றல் பின் உங்களுக்கு கிட்டுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவை நிச்சயம் ஒரு பத்து நாட்கள்.. மீண்டும் இதைத்தான் செப்புகின்றேன் அப்பனே.. கிடைக்கும் அப்பா.
இதனால் நீங்கள் நிச்சயம் தன்னில் கூட.. அவ்வாறு நீங்கள் செல்கின்ற பொழுது இல்லத்தில் உள்ள அனைவருக்குமே அவ் ஆற்றல் கிடைக்குமப்பா.
நீங்களும் கேட்பீர்கள் அல்லவா அப்பனே.. எங்களுக்கு கிடைக்கவில்லையே என்று அப்பனே... இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... பல விஷயங்கள் அப்பனே இல் சபரி தன்னில் கூட அமைந்துள்ளது.. என்பேன் அப்பனே... நிச்சயம் இன்னும் அப்பனே அவையெல்லாம்..யாங்கள் அப்பனே வெளிக்காட்டுவோம் என்போம் அப்பனே.
இவ்வாறு வெளிக்காட்டுகின்ற பொழுது.. அப்பனே மக்கள் நிச்சயம் தன்னில் கூட.. இன்னும் திருந்துவார்கள் என்பேன் அப்பனே... அவ்வாறு திருந்தவில்லை என்றால் அப்பனே.. கலியுகத்தில் நிச்சயம் அப்பனே பின் வாழ முடியாத காலங்களாகவே வந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே.
இதனால் பின் நிச்சயம் கலியுகத்தில் அப்பனே நிச்சயம்.. காலம் வாழ முடியாத காலம்...
ஆனாலும் அப்பனே வாழ முடியும் அப்பனே காலமாக..யாங்கள் சித்தர்கள் யாங்கள் செய்வோம் அப்பனே
பல வாக்குகளாக அப்பனே நிச்சயம் ரகசியங்களாக செப்புவோம் அப்பனே.
அதனால் தர்மத்தை கடைப்பிடித்து உடம்பை அப்பனே பேணிக்காத்து.. அப்பனே பின் உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொண்டு.. அய்யனின் தரிசனத்தை கண்டாலே போதுமானதப்பா.
அப்பனே பின் இல்லத்தில் ஒருவன் கண்டால் அப்பனே பின் அவன் மீண்டும் அப்பனே அதாவது ஐயனை தரிசித்துச் சென்றால் இல்லத்தில் அனைவருக்குமே.. ஆசிர்வாதங்கள் அப்பனே.
பல நோய்களும் மறையும் அப்பா.
ஆனாலும் சரியான வழியில் அப்பனே பின் நிச்சயம் இருக்க வேண்டும் என்பேன் அப்பனே.
நிச்சயம் இன்னும் ஐயனின் லீலைகள் இன்னும் பரப்புகின்றேன் அப்பனே இன்னும் பொறுத்து இருந்தால் அப்பனே
ஆசிகள் ஆசிகள் இப்பொழுது.... ஆசிகளப்பா!!!
சபரிமலைக்கு மாலையிட்டு எப்படி கார்த்திகை மாதம் தொட்டு மண்டலகால விரதம் இருந்து பக்தர்கள் வாழ்கின்றார்களோ அதே போல வாழ்க்கை முழுவதும் விரத நெறியை கடைப்பிடித்து வாழ வேண்டும்.
சபரிமலை ஏறி ஐயப்பனை கண்டு மழையில் இருந்து இறங்கியவுடன் மனிதர்கள் அசைவ உணவு உண்பது அவர்கள் சராசரி வாழ்க்கையை வாழ்வது என இப்படி இருந்தால் அழிவுகள் தான் வரும் கஷ்டங்கள் தான் வரும்.
இதைப் பற்றி ஏற்கனவே நம் குருநாதர் சபரிமலை தன்னில் வைத்து....
19/7/2022 ல் சித்தன் அருள் 1163... வாக்கில் விரதம் என்பது என்ன? எப்படி இருக்க வேண்டும்? என்பதை தனது பற்றி வாக்கில் உபதேசம் செய்துள்ளார். மீண்டும் ஒருமுறை படிக்க நன்று.
அது மட்டும் இல்லாமல் 7/1/2023 சித்தன் அருள் 1257 ல் சபரிமலை 18 படிகள் தத்துவ ரகசியங்கள் ஐயப்பனின் அனுக்கிரகம் குறித்து குருநாதர் வாக்குகள் உரைத்துள்ளார் அனைவரும் மீண்டும் ஒருமுறை படித்து உணர்ந்து கொள்ளவும்.
ஹரிஹரசுதன் ஐயப்பன் முதல் முறையாக ஜீவனாடியில் வந்து வாக்குரைத்த வாக்கு
சித்தன் அருள் 1802... வெளிவந்துள்ளது அனைவரும் மீண்டும் ஒருமுறை படிக்கவும்.
ஐயப்பன்... மீது சித்தர்கள் கொண்ட பாசம் நடந்த திருவிளையாடல்கள் ஐயப்பன் ஜீவசமாதி குறித்து அனைத்தையும்
சித்தன் அருள் 1751.. மேக்கரை புலஸ்தியர் வாக்கில் படித்து தெரிந்து கொள்ளலாம்
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Ohm Agatheesaya Namaha !!
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete