​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 23 September 2025

சித்தன் அருள் - 1941 - நவராத்திரிக்காக அகத்தியப்பெருமான் அருள்வாக்கு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் அகத்தியப்பெருமானை நாடியில் சந்தித்து அவர் வாக்கை கேட்கிற பாக்கியம் உருவானது. பல விஷயங்கள் கூறப்பட்டாலும், நவராத்திரி காலத்தை பற்றி அவர் கூறிய பொழுது,

"இவ் நவராத்திரியில் அம்பாள் வீட்டுக்கு வருவாள். ஆகவே, பெண்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் தேவையான சீர்களை செய்வது நன்று. அம்மையே வந்து பெற்றுக் கொண்டு, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், அருள் புரிவாள்." என்றார்.

ஆகவே, நவராத்திரி தொடங்கிவிட்ட நிலையில் அகத்தியர் அடியவர்கள் அனைவரும் தங்களால் இயன்ற வழிகளில், மேற்கூறியபடி நன்மை செய்து, தாயின் அருளை பெற்றுக் கொள்ளவும். வாங்கும் பொருட்களை அருகில் உள்ள ஏதேனும் ஒரு அம்பாள் கோவிலில் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, தாயிடம் வந்து வாங்கிக்கொள்ளும் படி விண்ணப்பித்து, பின் கொடுக்கவும். 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. Friday, 30 September 2022
    சித்தன் அருள் - 1190 - அன்புடன் அகத்தியர் - அகத்தியரின் நவராத்திரி வாக்கு!

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. இறைவா நீயே அனைத்தும்.
    இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்.

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

    (1)நவராத்திரி வாக்கு
    https://www.youtube.com/watch?v=zpYXIbTe_R0&list=PLr-rfmzhELfpOCuDGJZhLaGYCHHxIH2K4&index=1

    (2) சுக்கிர கடாட்சம் பெறும் நவராத்திரி ரகசியங்கள்
    https://www.youtube.com/watch?v=tuTXHEDs8Ws&list=PLr-rfmzhELfpOCuDGJZhLaGYCHHxIH2K4&index=2

    (3)நவராத்திரி எதற்காக கொண்டாடுகிறார்கள்?
    https://www.youtube.com/watch?v=dhnjL-8qcgA&list=PLr-rfmzhELfpOCuDGJZhLaGYCHHxIH2K4&index=3

    (4)நவராத்திரி சூட்சும ரகசியங்கள்
    https://www.youtube.com/watch?v=qnkDoDPvw9Q&list=PLr-rfmzhELfpOCuDGJZhLaGYCHHxIH2K4&index=4

    (5) நவராத்திரி வழிபாட்டு ரகசியங்கள்
    https://www.youtube.com/watch?v=o9wZB4GIDb8&list=PLr-rfmzhELfpOCuDGJZhLaGYCHHxIH2K4&index=5

    (6)புரட்டாசி, ஐப்பசி மாதத்தில் முன்னோர்கள் வழிபாடு.காவிரி நதி - ரகசியங்கள்
    https://www.youtube.com/watch?v=nZf6y4kVppo&list=PLr-rfmzhELfpOCuDGJZhLaGYCHHxIH2K4&index=6


    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம் !
    சர்வம் சிவார்ப்பணம் !

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete