​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 1 July 2025

சித்தன் அருள் - 1889 - அன்புடன் அகத்தியர் - சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 6




அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 6

ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ்தொடர் சத்சங்க வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

1. சித்தன் அருள் - 1867 - பகுதி 1
2. சித்தன் அருள் - 1869 - பகுதி 2
3. சித்தன் அருள் - 1876 - பகுதி 3
4. சித்தன் அருள் - 1879 - பகுதி 4
5. சித்தன் அருள் - 1881 - பகுதி 5 )

குருநாதர் :- அப்பனே இறைவன் அனைத்தும் கொடுத்திருக்கின்றான். அதை சரி முறையாக மனிதன் உபயோகிக்கத் தெரியாமல் , அப்பனே செய்து கொண்டிருக்கின்றான். அவ்வளவுதான். அப்பனே அதை யார் ஒருவன் சரியான வழியில் பின்பற்றுகின்றானோ , அப்பனே அனைத்தும் தெரிந்துவிடும் அப்பனே. அப்பனே பின்பற்றவில்லை என்றால் அப்பனே, அடிபட்டு மீண்டும் இறைவனிடத்தில் வருகின்றான். ஆனால் சிறிது தாமதமாகத்தான் கிடைக்கும் அனைத்தும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா?

அடியவர்கள் :- புரியுதுங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( புண்ணியப் பாதையில் சென்றால், உங்கள் புண்ணியமே உங்களை உயர்த்தி வைக்கும்.)

குருநாதர் :- அப்பனே பின் உயர்த்தி வைக்கும் அப்பா. பாவம் இதுபோல்தான் அப்பனே, அப்படியே கீழே தள்ளுமப்பா. அவ்வளவுதான். ஆனால் இங்கு பாவத்தைப் பற்றி யான் உரைக்கவில்லை. 

அப்பனே ஒருவன் ஒருவனிடத்தில் கூட அப்பனே புண்ணிய அணு ஒன்று இருக்கின்றது அப்பா. அதை யாரும் உபயோகிக்கவில்லை. அதை உபயோகித்தாலே போதுமானதப்பா. அது செயல்பட ஆரம்பிக்கும் என்பேன் அப்பனே. அதை செயல்படுத்திவிட்டால் அப்பனே, நிச்சயம் புண்ணியக் கணக்கு தொடங்கிவிடும் என்பேன் அப்பனே. ஆனால் மனிதன் எதை செயல்படுத்துகின்றான் என்றால் பாவ அணுவை செயல்படுத்துகின்றான் இக்கலியுகத்தில். 

அடியவர் :- நல்ல அணு இருக்கு இல்லைங்களா, அதை activate பன்னனும். அதை activate பன்னத்தெரியாமல்தான் இவங்க இரண்டுபேரும் …

குருநாதர் :- அப்பனே இப்பொழுது சொன்னாயே, அப்பனே நல்ல அணு என்று, அது செயல்படத் துவங்கிவிட்டால் கஷ்டங்கள் முதலில் தோன்றுமப்பா. 

அடியவர் :- இப்போ அது தெரியாமல்தான் இவங்க இரண்டு பேரும் பினாத்திகிட்டு இருக்குறாங்களா? 

சுவடி ஓதும் மைந்தன் :- (விளக்கங்கள் ) 

குருநாதர் :- அப்பனே அதேபோல்தான் அப்பனே, பாவ அணுவும் கூட செயல் பட்டுவிட்டால் முதலில் சந்தோசம் அடைவார்கள். இப்பொழுது சொல் அப்பனே. சந்தோசம்
 வேண்டுமா? துன்பம் வேண்டுமா? நீயே. 

சுவடி ஓதும் மைந்தன் :- (சிரிப்புடன்) ஐயா இப்ப சொல்லுங்க ஐயா. உங்கள் கணக்கில் எடுத்து வந்துவிட்டார். 

அடியவர் :- ( சிரித்துக் கொண்டே) துன்பத்தில்தான் இருக்கேங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா அது செயல்பட ஆரம்பிச்சிருச்சு ஐயா. இப்ப நீங்க சொல்லுப்பா என்று கேட்கின்றார். 

அடியவர் :- என் பிள்ளைக்கு , activate பன்ன (இதை செயல்படுத்த) என்ன வழி? 

குருநாதர் :- அதனால்தான் அப்பனே இத்தனை வாக்குகள் சொல்லிக்கொண்டிருக்கின்றேன் அப்பனே.

அடியவர் 5 :- இந்த வயதில் maturity அவங்களுக்கு வந்திடுது. இதை எப்படி அவங்க எடுத்துக்குவாங்க? 

குருநாதர் :- அப்பனே ஏன் இவ்வாறு அவள்தன் எவ்வாறு இவ்வாறு கூறுகின்றாள் என்று அவள்தனுடம் கேள். சொல்வாள் அப்பனே. யான் பார்த்துவிட்டேன் அவளை சிறு வயதிலிருந்தே. 

அடியவர் 7 :- ( தனது வாழ்க்கையை அங்கு எடுத்துரைத்தார். பல கஷ்டங்கள், மிகவும் சோகமான உயிரிழப்பு, வேதனைகள், அவமானங்கள், அடுக்கடுக்காக சோதனைக்கு மேல் இல்லற வாழ்வில் சோதனைகள், அடிகள் என் கேட்பவர்களை நிலை குலையச் செய்யும் தனது துயரமான கண்ணீர் வாழ்வை எடுத்துரைத்தார்கள். இப்படிப்பட்ட கடும் சூழ்நிலையிலும் அனுதினமும் தர்மம் செய்வதை விடவில்லை இவ்வடியவர். அடியவர்கள் புரிதலுக்காக இங்கு இவ் வாக்கை உலகறிய வெளியிடுகின்றோம்.) 


என்னுடைய திருமண வாழ்க்கைக்கு முன் ரொம்ப ரொம்பவே சௌபாக்கியமாக இருந்தேன். கல்யாணத்திற்குப் பிறகு பணமிழந்து , நகையிழந்து , எங்க அப்பாவை இழந்து , எங்க அண்ணனோட திருமண வாழ்க்கையை இழந்து ( வாழ்வின் வலி தாங்காமல் அழுதே விட்டார் ) என் ஒரு கல்யாணத்தினால் எல்லாமே இழந்தேன். சொந்த பந்தம் சுற்றார் எல்லாமே என்னை தூற்றினார்கள். என் குழந்தை அப்பா இல்லாமல் 5 வருடம் வாழ்ந்தது. ஒவ்வொருதடவையும் நான் அப்பாவைக் கூப்பிட்டு வந்தேன். நான் எந்த இடத்திலும் தப்பான முடிவு எடுக்கவில்லை. எங்க அப்பா, எனக்குச் சொல்லிக் கொடுத்ததை மெனக்கெட்டு பக்குவம். இறைவன் உன்னை வந்து கஷ்டப்படுத்தவில்லை. உன்னை வந்து நல்வழிப்படுத்துவதற்காக (இவ்வளவு கஷ்டங்களை) உனக்கு கொடுக்கின்றார். உன் கர்மா குறையுது என்று வைத்துக்கொள். எனக்கு அதனாலதான் கஷ்டம் வர வர என்னை இறைவன் சுத்தப்படுத்துகின்றார் என்று நான் நம்புகின்றேன்.  இப்ப நான் பக்குவமாக இருக்கக் காரணம், அவங்க சொன்ன மாதிரி கொஞ்சம் நஞ்சம் இல்ல. நிறைய பட்டுவிட்டேன். என் அப்பாவை இழந்தேன். என் அண்ணனோட திருமண வாழ்க்கையை நான் இழந்தேன். ( அண்ணனுக்கு திருமணம் ஆகவில்லை இவ்தங்கை அவர் அண்ணன் இல்லத்திலிருந்ததால்) அந்த கர்மாவுக்கு நான் தான் காரணம் என்று நினைச்சு, நினைச்சு நான் ஒவ்வொருத்தருக்காகப் புண்ணியம் பன்னனும் என்று நினைச்சு,  தான தர்மத்தை செஞ்சு , கையில காசு இல்லைன்னாலும் நான் பிச்சை எடுத்தாவது நான் தான தர்மம் செஞ்சுகிட்டு இருக்கேன். இத்தனைக்கும் காரணம், எனக்கு கல்யாணத்துக்கு முன் இதெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது. நான் நிறைந அடி வாங்கினேன். கொஞ்ச நஞ்சம் அடி இல்ல. தூங்காமல் உட்கார்ந்திருக்கேன். இத்தனை தாண்டி வந்ததனால்தான் (ஞான வார்த்தைகள் ) இத்தனை சொல்ல முடியுது. 

குருநாதர் :- அப்பனே அனைத்தும் உங்களுக்குக் கொடுத்தால் தாங்கிக் கொள்ள மாட்டீர்கள் என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே இவ்வாறு துன்பத்தில் மிதந்தால்தான் அப்பனே, உண்மை நிலை தெரிந்து கொள்வார்கள் அப்பனே. யான் அருகிலேயே இருப்பேன் அப்பனே. அதனால்தான் சொல்லிவிட்டேன். இவள் அருகிலேயே இருக்கின்றேன் என்று. 

(நம் கருணைக்கடல் நடத்திய அற்புதம் - இப்படி கஷ்டத்தில் மிதந்த இந்த அடியவரின் துணைவர், மாமியார், நாத்தனார் என்று அனைவரின் இதயங்களை நம் குருநாதர் கனிய வைத்து, இவ்வடியவர் வாழ்வை மிக அழகாகத் தூக்கி நிறுத்திக் கனியவைத்து,  இனிமையாக்கி விட்டார்கள். ) 

அடியவர் 7:- என்னுடைய கர்மா ஜாஸ்திங்க. இவ்வளவு கஷ்டப்பட்டு இங்க வந்திருக்கின்றேன். என் மூலம் அவங்களுக்கு இன்று செய்தி கூற வைத்துள்ளார் அகத்தியர். உங்க பிள்ளைகள் அந்த அளவு கஷ்டப்பட மாட்டாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ ஏன் அகத்தியர் இவங்களை கஷ்டம் வராமல் காப்பாற்றவில்லை? சொல்லுங்க ஐயா? 

அடியவர் 4 :- சந்தேகம்ங்க ( ஏன் இந்த கஷ்டம் என்று )

அடியவர் 7 :- அது நான் செஞ்சது ( முன் ஜென்ம கர்மா). இன்றைக்கு வந்திருக்கு. நான் தான் கொடுக்கனும். அதுக்கு தெய்வத்தைக் குறை சொல்லித் தப்பு இல்லை. நான் இன்னுக்கு அதெல்லாம்  (எனது கர்மாக்களை) clear செய்துவிட்டேன் என்று நம்புகின்றேன். என்னை அவர் காப்பாற்றவில்லை என்று நினைக்கவில்லை. எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்திருக்கின்றார் என்று நான் சந்தோசப்படுகின்றேன். (முன் ஜென்ம பாவ கர்மா முழுவதையும்) ஒட்டுக்க இறக்கியிருந்தால் என்னால தாங்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகக் குடுத்து பக்குவப் படுத்தி இருக்கின்றார். 

குருநாதர் :- அம்மையே கவலையில்லை. யானே இருக்கின்றேன் நல்விதமாக. வழியும் ஆனாலும் இவ்வளவு நாட்கள் எதை என்றும் புரியாமல்  கூட , ஆனாலும் அம்மையே இது கடை பிறப்பு. இதனால்தான் ஒன்றாகச் சேர்ந்து விட்டது. எவ்பரிகாரமும் போதவில்லை இதற்கு.

இன்னும் இதை அனுபவிக்கவில்லை என்றால் அடுத்த பிறப்பு, அடுத்த பிறப்பு என்று சென்றிட்டு எதை என்றும் அறிய அறிய.  அதனால்தான் எனை நம்பியவர்களை முதலில் சமநிலைப்படுத்திவிடுவேன். 

ஞானியவன் எப்படி ஆகின்றான் என்று கூறு?

அடியவர் 4 :- சிரமம் பட்டுதான் வரவேண்டும்.  ஆனால் அந்த அனுபவத்துக்கு வரனும்ல? 

குருநாதர் :- (ஒரு அடியவருக்கு உரைத்த மகத்தான தனி வாக்குகள். அதில் புண்ணியங்களே அவரை இயக்க உள்ளது என்ற சித்த ரகசியங்களை விளக்கமாக எடுத்துரைத்தார்கள். அதன் பின் )

அப்பனே இங்கு இறைவன் எங்கு இருக்கின்றான்?

அடியவர் 4 :- (அப்படிச் செய்ததே) இறைவன்தான் activate செய்திருக்கின்றார். 

குருநாதர் :- அப்பனே பாவ, புண்ணியங்களப்பா.   யான் சொல்வேன். (…………..)  

அப்பொழுது பாவம் செயல் பட்டுக்கொண்டிருக்கும் பொழுது இறைவன் அதாவது என்ன பரிகாரங்கள் செய்தாலும் அப்பனே செயல்படுமா என்ன? 

அப்பனே பாவம் என்பது இப்பொழுது வெயில் அங்கு போய் உட்கார் பார்ப்போம். 

அடியவர் 4 :-  அதை அனுபவத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

குருநாதர் :-  அப்பனே அப்படித்தான் அவன் பாவத்தில் மிதந்திருக்கின்றானப்பா. ஆனாலும் யான் அமைதியாக இருந்தேன் அப்பனே. அப்பனே முன் ஜன்மத்திலிருந்தே அதாவது பிறவியில் பிறவியிலிருந்தே அவன் என் பக்தன்தானப்பா. அதனால்தான் அப்பனே ………….. 


( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024 ஆம் ஆண்டு ஈரோட்டில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…..) 


(-------------------------------------------------

வணக்கம் அகத்திய மாமுனிவர் அடியவர்களே!!!

உலகம் அழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது.... இதனை தடுக்க குருநாதர் மதுரை சத்சங்கத்தில் அனைவரும் செய்து வரவேண்டிய வழிபாட்டு முறைகளை குருநாதர் அவசர உத்தரவாக வந்திருக்கின்றார் அதை நினைவூட்டல் பதிவு.
 

சித்தன் அருள் - 1884 - அன்புடன் அகத்திய மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் 22.06.2025 :-

ராகு கிரகம் மற்றும் கேது கிரகம் புவியை நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. இதனால் நிச்சயம் அழிவுகள்.  வரும் ஆறு ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள். இந்த அழிவுகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அழிவை தடுத்து நிறுத்த வேண்டும்.

1) அனைவரும் சேர்ந்து நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சிவபுராணத்தை பாடுதல் வேண்டும். மக்கள் அனைவரும் 50 /100 / 200 / 500 /1000 அளவில் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை இறைவனிடம் சிவபுராணம் ஓதி பிரார்த்தனை செய்ய வேண்டும். பூமியை தாக்க வந்து கொண்டிருக்கும் ராகுவானவனை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி  இவ் சிவபுராணம் பாடல் இதை ஓதுதல் வேண்டும். கோளாறு பதிகம், தேவாரம், திருவாசகம் விநாயகர் அகவல் படிக்க வேண்டும். 

2) அனுதினமும் உங்கள் இல்லங்களில்  நவகிரக தீபம் ஏற்றி ,  நவகிரக காயத்ரி மந்திரம் ஓதி , மற்றவர்களுக்காக இந்த உலகம் நன்மை பெற வேண்டும் என்று  வழிபாடு செய்ய வேண்டும். 

3) பாவத்தை நசுக்கும் பாபநாசத்தில், மற்றும் திருவண்ணாமலையில் இவ்வாறு அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை சிவபுராணம் பாடினால், தியானங்கள் செய்தால், மக்களுக்கு நடக்கும் அழிவுகள் குறைக்கப்படும்.

4) புண்ணிய நதிகள் இருக்கும் கரையோரங்களில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி சென்று சிவபுராணம் பாராயணம் செய்ய வேண்டும். நீரால் ஏற்படும் அழிவை இப்படி தடுக்க வேண்டும்!. நதிக்கரையோரம் இருப்பவர்கள், கடலோரம் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்து, சிவபுராணம் படித்து வரவேண்டும். 

5)அனைவரும் ஆடி மாதம் பூர்த்தியாகும் வரை அம்பாள் ஆலயத்திற்கு சென்று அபிராமி அந்தாதி அம்பாளின் பாடல்களை பாடி வந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பு பெறும். 

இவ் வழிபாட்டினை அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்து,  மற்றும் இல்லங்களில்  நவகிரக தீபம் ஏற்றி ,  அனைவரும் முடிந்த வரை ஒன்றாக இணைந்து சேர்ந்து அனைவரும் இந்த உலகம் நன்மை பெற பாடுபடுவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!