​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 22 November 2012

சித்தன் அருள் - 100 !


[வணக்கம் அகத்திய பெருமானின் தாள் பணியும் அடியவர்களே!

இறைவன் அருளாலும் அகத்தியரின் ஆசிர்வாதத்தாலும், இத்தனை நிகழ்ச்சிகளை பெருந்தன்மையுடன் பகிர்ந்துகொண்ட அந்தப் பெரியவர் நண்பரின் உதவியாலும், இந்த "சித்தன் அருள்" தொகுப்பு நூறாவது இலக்கத்தை இன்று எட்டியுள்ளது.  இதற்கு வலைபூ வாசகர்களாகிய உங்களின் ஆதரவும் ஒரு காரணம்.  பல வேளைகளிலும், போதும் இத்துடன் நிறுத்திக்கொள்வோம் என்று நினைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு அடியவரின் வார்த்தை உற்சாகத்தை தர தொடர்ந்து தொகுக்க முடிந்தது.  அகத்தியர் பல நேரங்களில் நம் வாழ்க்கையை செம்மை படுத்திக்கொள்வது எப்படி என்று பிறரின் பிரச்சினைகளுக்கு வழி சொன்னதின் மூலம் தெளிவு படுத்துகிறார்.

நடந்த விஷயங்களை தொகுப்பவன்  என்கிற முறையில் பல நேரங்களில் அகத்தியரையும், நாடியையும் பழித்து பதில் போட்ட வாசகர்களையும் நான் சந்திக்க வேண்டி வந்தது.  அவர்கள் எழுதிய விமர்சனங்களை நான் மதிக்கவில்லை.  நம்பியவர்களுக்கு உலகம் கையில் என்ற சொல்லுக்கு ஏற்ப, பதில் சொல்வதை தவிர்த்தேன்.  சற்றே அந்த நிகழ்ச்சிகளால் மனம் வருந்தினாலும், நிறைய பேர்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகள் என்னை தொடர வைத்தது என்னவோ உண்மை.  நேர்மையாக சொல்லப்போனால், தமிழ் முருகனுக்கு சொந்தம், நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ.  இது இரண்டையும் சேர்த்துக் கொடுத்தால், எது என்னுடையது?  அது தான் உண்மை.

தொடர்ந்து அகத்தியரின் அருள் வாக்கை வாசித்து வாழ்க்கையை செம்மை படுத்தி  கொள்ளுங்கள் என்று கூறி, மறுபடியும் உங்கள் அனைவருக்கும் நன்றியை சொல்லி....................... சித்தன் அருளை தொடருவோம்.] 

கிரேதா  யுகம் 17,28,000 வருஷங்களாக இருந்தது.  அதற்கும் பிறகு த்ரேதா யுகம் 17,96,000 வருஷங்கள் கழிந்தது.  மூன்றாவதாக துவாபர யுகம் 8,64,000 ஆண்டுகள் நடந்து முடிந்தது.  இப்பொழுது நடப்பது கலியுகம்.  இது 4,32,000 ஆண்டுகள்.  இதில் 5107 ஆண்டுகள் கழிந்திருக்கிறது.  பாக்கி 4,26,893 ஆண்டுகள் இன்னும் கழிய வேண்டும்.  இதோடு கலியுகம் முடியும் என்று புராணங்கள் சொல்லுகின்றன.  ஜோதிட சாஸ்திரமும் இதனை வலுவாகச் சொல்கிறது. [இந்த  வருட கணக்கு அவர் எழுதிய காலத்தையது.  மிச்சம் மீதி இன்றைய தியதிக்கு பார்த்தால் சரியாக வராது.  ஆகவே இதை அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள்.] 

கலியுகத்தில் கடவுளைக் காண இயலாது.  மற்ற யுகங்களில் பார்த்திருக்க முடியும் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.  அப்படிக் கலியுகத்தின் "தெய்வம்" வந்து ஆச்சரியமானச் செயல்களைச் செய்தால் கூட அதை இன்றைய தினம் சத்தியமாக யாரும் நம்பமாட்டார்கள்.  ஜனங்களை ஏமாற்றுகின்ற ஒரு வேஷம் தான் இது என்று பகுத்தறிவுவாதிகள் மட்டுமல்ல, ஆன்மீகவாதிகளும் அதிகமாக நம்புகிற காலம்.

இப்படிப்பட்ட காலத்தில், துவாபர, த்ரேதா, கிரேதா காலத்தில் நடந்த சம்பவங்கள், அவதாரங்கள், தெய்வீக நிகழ்ச்சிகள், சுனாமியாலோ அல்லது காலத்தினாலோ அழிந்து போயிருக்கும்.  அதை எப்படி இந்தக் கால நடைமுறைக்குக் கொண்டு வந்து நிலைநாட்ட முடியும் என்று கேள்வி கேட்கலாம்.  இதை தொல் பொருள் ஆராச்சியாளர்களும் கூட நிலைப்படுத்தலாம்.

இருந்தாலும் பிரார்த்தனை,  பக்திக்கும் பகவான் எந்த ரூபத்திலும் வந்து நம்மைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருப்பதினால் தான் ஆன்மீக நம்பிக்கை அதிகரிக்கிறது.

தெய்வத்தை, சித்தர்கள் துணை கொண்டு காணமுடியும்.  ஓலைச்சுவடியில் வரும் செய்திகள் இதற்கு அடிப்படையாக இருக்கும்.  இதுதான் வேறு எந்த நாட்டிற்கும் கிடைக்காத நற்பேறு  தமிழ் நாட்டிற்கு கிடைத்திருக்கிறது.  எல்லோருடைய எதிர்ப்பார்ப்பும் ஓலைச்சுவடியில் வருகின்ற படி நல்ல படியாக நடந்து விட்டால், பின்பு யாரும் கோயிலுக்கோ தெய்வத்தையோ அல்லது மகான்களது உபதேசங்களையோ வேத சாஸ்திரத்தையோ மதிக்கமாட்டார்கள்.  தொடர்ந்து மானசீகமாகப் பக்தியோடும் நடந்து கொள்ள மாட்டார்கள் என்பதினால் தான் சிலருக்குச் சில காரியங்கள் சொன்னபடி நடக்கவில்லை.

எதற்கெடுத்தாலும் ஓலைச் சுவடியில் அகஸ்தியர் வழிகாட்டுவார்.  பின்பு நான் ஏன் என் கர்மாபடி நடக்க வேண்டும்.  அவசியமே இல்லை என்று அகஸ்தியர் மீது அதிக நம்பிக்க வைத்து எதுவும் செய்யாமல் இருப்பது கூட இன்னொரு காரணம்.

அகஸ்தியர் போன்ற சித்தர்கள் வழியைக் காட்டலாம்.  ஆனால் வாயில் ஊட்டுவார் என்றோ நாம் செய்த கர்மவினைகள் கடன்கள் எல்லாவற்றையும் சட்டென்று உடனே போக்குவார் என்றோ எதிர்பார்க்க முடியாது.  ஆனால் மிகப் பெரிய இன்னல்களிலிருந்து எப்படியாவது காப்பாற்றுவார் என்பது மட்டும் உறுதி.  இது அவரவர் அதிஷ்டத்தைப் பொறுத்தது என்பதே அகஸ்தியர் நாடியிலிருந்து எனக்குக் கிடைத்த அனுபவம்.

நீங்களே கூட கேட்கலாம்.  "எல்லாமே காலம் வந்தால் சரியாகப் போய் விடும்" என்று பொறுத்திருக்கச் சொன்னால் அதற்கேன் "நாடி" பார்க்க வேண்டும்?  தேவையே இல்லை என்பது நியாயம்.

மனது பக்குவப் படுவதற்கும் நமது கர்மாகாலை அறிந்து அதன்படி நடந்து கொள்வதற்கும் எதற்காக நமக்கு இத்தகைய தடங்கல்? அதை எப்படி முறியடிக்க வேண்டும் என்பதோடு நமக்கு கிடைக்காத பாக்கியம் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் கிடைக்கட்டும் என்ற உயர்ந்த எண்ணமும் நமக்கு வரவேண்டும் என்பதற்காக் கூட சித்தர்கள் நமக்கு வழி காட்டலாம்.

தேவை இருப்பவர்கள் சித்தரை நாடி வரட்டும்.  நம்பிக்கை இல்லாதவர்கள் விலகி இருக்கட்டும்.  இதில் சித்தர்களுக்கு எந்தவித லாபமோ அல்லது நஷ்டமோ இல்லை என்பதும் உண்மை.

இத்தகைய விஷயங்களெல்லாம் மனதில் அசை போட்டுக் கொண்டு பகவான் அனுக்ரகம் செய்ததாக எண்ணி, லக்ஷ்மி நரசிம்மரையும் அஹோபில மலையையும் த்யானித்துக் கொண்டிருந்த பொழுதான், தன அறையிலிருந்து வெளி வந்த மேலாளர், "என் கையிலிருந்த ஓலைச் சுவடியை லக்ஷ்மி நரசிம்மர் சன்னதியில் வைத்து அர்ச்சனை பண்ணித்தறேன்" என்று சொன்னது எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

கொஞ்சம் கூட அகஸ்தியர் நாடியை நம்பாதவர், எப்படித் திடீரென்று மாறினார் என்பது வியத்தகு சம்பவம் என்பதால் அப்படியே விட்டு விட்டேன்.

மறு நாள் காலையில்........

அகஸ்தியரின் ஓலைச்சுவடிக்கு எப்படியெல்லாம் அர்ச்சனை செய்ய வேண்டுமோ அதெல்லாம் செய்தார்.  பின்பு பிரசாதத்தை எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தவர் "நான் பெருமாளைத் தவிர வேறு யாரையும் நம்பாதவன்.  லக்ஷ்மி நரசிம்மருக்கு இருபது வருஷம் கைங்கர்யம் செய்து வருகிறேன்.  கோயில்ல நேத்திக்குச் சாயங்காலம் நீ ஓலைச் சுவடியைப் படிக்கறச்சே எனக்கு இதுலே துளியும் நம்பிக்கை இல்லை.  பெருமாளை விட வேறு யாரும் உசத்தி இல்லைன்னு நெனச்சுண்டு வந்தேன்.  நேத்து ராத்திரி லக்ஷ்மி நரசிம்மரே அகத்தியரைப் பத்தி என்கிட்டே சொல்லி அவனைத் துச்சாதனம் பண்ணக் கூடாது.  அவன் எனக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவன்.  அவன் கையிலிருந்த ஓலைச்சுவடிக்கு மரியாதை கொடுத்து என் சன்னதியிலே வச்சு அர்ச்சனை பண்ணு" என்று அசரீரி மாதிரி சொல்லிட்டுப் போனார்.

மொதல்லே எனக்கு இது கனவு மாதிரி தோணிச்சு விட்டுவிட்டேன்.  பெருமாள் இந்தப் பிரகாரத்திலே மூன்று முறை வலம் வருவதா சொல்லுவா.  அதன்படி எனக்கு இரண்டாம் தடவையும் அப்படியே என் காதுல சொன்னமாதிரி இருந்தது.  எனக்கு தூக்கம் போயிடுத்து.  கண்ணை தொறந்து பார்த்தேன்.  மணி பன்னிரண்டு.  மூணாவது தடவையும் பகவான் பிரகாரத்தைச் சுத்திட்டுப் போகட்டும், அப்புறமா வந்து உங்ககிட்ட தகவல் சொல்லலாம்னு ஓடி வந்தேன்.  இது தான் நடந்தது" என்றார் அஹோபில மடத்து மேலாளர்.

நான் ஒன்றும் சொல்லவில்லை.

என் நினைவெல்லாம் "எப்படி அஹோபிலத்துக்கு செல்வது? என்றைக்குக்ச் செல்வது? அகஸ்தியர் நாடியோடு செல்வதா? இல்லையா? இதோ என் கண்ணெதிரே ஆனந்தமாகக் காட்ச்சியளிக்கும் லக்ஷ்மி நரசிம்மர் தானே அஹோபிலத்திலும் இருக்கிறார்.  இங்கேயே அவரது மென்மையான வாசனைத் தரிசனத்தைக் கண்ட பின்பு வேறு என்ன பாக்கியம் எனக்கு வேண்டும்?" என்று என்னை அறியாமல் எண்ணிக் கொண்டேன்.

கருவரையிலிருந்து அகஸ்தியரின் ஜீவ நாடியை எடுத்து பூ துளசியோடு என் கையில் கொடுத்தார்.  அதைக் கண்ணில் ஒற்றிக் கொண்ட போது, நேற்று இரவு நள்ளிரவில் என்னால் உணரப்பட்ட அதே பச்சைக் கற்பூரம் சந்தனம் கருந்துளசியின் மென்மையான கசப்பு, அந்த நாடியிலிருந்தும் உணர முடிந்தது.

என்னை அறியாமல் திகைத்துவிட்டேன்.

"சுவாமி, பச்சைக் கற்பூரம் கொடுத்திருக்கிறீர்களா?"

"இல்லையே"

"சந்தனம்"

"அரைத்து உக்கிராணத்தில் வைத்திருக்கிறேன்.  இன்னும் இங்கு கொண்டு வரவே இல்லையே"

"அப்படியானால் இந்தக் கட்டில் எப்படி அதன் நறுமணம் அற்புதமாகப் பரிமளிக்கிறது" என்று கோயில் மேலாளரும் அகோபில அர்ச்சகராகவும் இருக்கிற அவரிடம் கேட்டேன்.

"நான் தொட்டுப் பார்க்கலாமா?"

"தாரளாமாக"

அவர் என் கையிலிருந்த அகஸ்தியர் ஜீவநாடியை வாங்கி முகர்ந்து பார்த்தார்.  அடுத்த நிமிடம் வியந்து போனார்.

"இது நரசிம்மருடைய பிரசாதம் தான்.  பச்சை கற்பூரமும், துளசியும் சந்தன மனமும் அப்படித் தூக்குகிறது என்றால் இது தெய்வச் செயல்தான்.  தீர்த்தத்தில் கலப்பதற்காக பெருமாள் திருவடியில் வைத்த பச்சைக் கற்பூரம் இன்னும் அப்படியே அவர் பாதத்தில் இருக்கிறது.  அவருக்குச் சாத்துகிறபடி சந்தனம் அப்படியே சமையலறை உக்கிராணத்தில் இன்னும் அங்கேயே இருக்கிறது.  அதெப்படி இந்த மூன்றும் சேர்ந்து இந்த ஓலைச்சுவடிகள் அத்தனையிலும் ஒன்று சேர்ந்து வாசனையாக மூக்கைத் துளைக்கிறது" என்று சொல்லிச் சொல்லி அவரால் மீள முடியவில்லை.

"நானும் எத்தனையோ வருஷமா இந்த லக்ஷ்மி நரசிம்மருக்குக் கைங்கர்யம் செய்து வரேன்.  எனக்கு இப்படிப்பட்ட அனுபவம் இதுவரைக்கும் ஏற்பட்டதே இல்லை, இப்ப நான் ரொம்பவும் உங்களை நம்பறேன், அகஸ்தியரையும் நம்பறேன்" என்று புளகாங்கிதமடைந்து பேசினார்.

என்னால் வாயைத் திறக்க முடியவே இல்லை.

லக்ஷ்மி நரசிம்மரின் வாசனை கலந்த பிரசாதத்தோடு கூடிய அகஸ்தியருக்கு ஆயிரம் நன்றியைச் சொல்லி எல்லோரிடமும் விடைபெற்று எக்கச்சக்கமான சந்தோஷ எண்ணங்களைத் தாங்கிக் கொண்டு ஊருக்குத் திரும்ப பஸ் ஸ்டாண்டிற்கு வந்தேன்.

பஸ் ஸ்டாண்டில் பெருங் கூட்டம்.  வரிசையாக நின்று பஸ்சில் ஏறி, கீழ் திருப்பதிக்கு வர குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு மணி நேரமாகும் என்று தோன்றியது.

பஸ்சுக்காக காத்திருப்பதை விட பேசாமல் விறுவிறுவென்று நடந்தே போய் விடலாம் என்று திடீரென்று ஒரு உந்துதல் ஏற்பட எல்லாம் இனி லக்ஷ்மி நாராயணன் செயல் என்று எண்ணிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.  கொஞ்சம் தூரம் நடந்திருப்பேன்.

ஒரு அம்பாசிடர் கார் மெதுவாக என்னைத் தொடர்ந்து வந்தது.  ஒதுங்கிப் போன என்னைப் பார்த்து காரில் இருந்த ஒருவர் அழைத்தார்.  அவரை நான் முன்னே பின்னே இதுவரை பார்த்ததே இல்லை.  ஆனால் வசதிமிக்க பணச் செழுமையும் தெய்வீகக் களையும் காணப்பட்டது.  அவர் பக்கம் திரும்பினேன்.  "கீழே தான் போகிறீர்களா" என்றார் அவர்.

"ஆமாம்"

"நானும் கீழே தான் போகிறேன்.  காரில் இடமிருக்கிறது.  நீங்களும் ஏறிக் கொள்ளுங்கள்" என்றார்.

எனக்கு ஒரு பக்கம் ஏகப்பட்ட மகிழ்ச்சி.  நடந்து போய்க் கொண்டிருந்த எனக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா? அதுவும் யாரோ முன்னே பின்னே தெரியாதவர் தன காரை நிறுத்தி என்னை அழைத்துக் கொள்ள முன் வருவது சாதாரண விஷயமா? என்று ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் இவரை நம்பி காரில் ஏறினால் பின்னால் என்ன என்ன விளைவு ஏற்படுமோ? நான் மிக மிக அதுவும் நூறு மிகப் போட்டுக் கொள்ளலாம்.  அப்படி மிகச் சாதாரண மனிதன், வீ ஐ பீ கிடையாது.  பண வசதியும் இல்லை.  முகத்திலோ இரண்டு நாளாகத் தூக்கம் இல்லாமல் கண் சிவப்பாகி, தாடியும் மீசையும் கொண்டு காணப்படுவதால் சட்டென்று யாரும் என்னை மதித்து குட்மார்னிங் கூடச் சொல்ல மாட்டார்கள்.

பண வசதி படைத்த பலரோடு எனக்கு முந்தியிருந்த தொடர்பு கடந்த ஆறு மாதமாக இல்லை.  அகஸ்தியர் என்னை விட்டதாக எண்ணி, எல்லோருமே என்னை விட்டுவிட்டார்கள்.  அப்படிப் பணவசதி இருந்தவர்களும் அவரவர் சுயநலத்திற்காக என்னிடம் பழகினார்களே தவிர ஒரு சோதிடன் என்ற கண்ணோட்டத்திலே தான் வைத்திருந்தார்கள்.

வீட்டிலோ என்னைப் பிழைக்கத் தெரியாத முட்டாள் என்று முத்திரையை அட்டகாசமாகக் குத்திவிட்டதால் வேறுபட்ட மனிதனாகவே உலா வந்தவன்.  ஒரு  பணி இருக்கிறது  என்ற ஒன்றைத் தவிர மற்ற கௌரவங்கள் எதுவுமில்லை.  போதாகுறைக்கு "அகஸ்தியரும்" என் பக்கம் வரவே இல்லை. இப்படிப்பட்ட எனக்கு ஒரு பெரிய செல்வந்தரைப் போன்ற ஒருவர், தன காரில் கீழ் திருப்பதிக்கு கொண்டு விடுகிறேன் வருகிறாயா என்று கேட்டபொழுது எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை.   இருக்காதா  பின்னே.  அடுத்த நிமிடம் சட்டென்று காரினில் ஏறி அமர்ந்தேன்.  சிறிது தூரம் வரை மௌனமாகவே இருந்தோம், நாங்கள் இருவரும். பின் அவரே என்னைப் பற்றியும் என் கையில் காணப்பட்ட ஓலைச்சுவடியைப் பற்றியும் மெள்ளக் கேட்டார்.

இது போதாதா எனக்கு.

ஏதோ என்னை விட்டால் வேறு நாதியே யாருக்கும் இல்லை.  தலைமைச் சித்தர் இந்த ஓலைச்சுவடிக்குள் இந்த உலகத்தையே வைத்திருக்கிறார் என்றும் ரிஷிகேசத்தில் நான் தவம் செய்ததையும் இன்னும் பிற சொல்லக் கூடாதப் பெருமைகளையும் அவரிடம் அளந்து விட்டேன்.

இதற்கு இன்னொரு காரணம்.  எல்லோரும் என்னைக் கைவிட்டு விட்டு வேடிக்கை பார்த்த பொழுது தானாக வந்து காரில் ஏறச் சொன்னதால் மிகப் பெரிய அரச பதவி எனக்குக் கிடைத்தது போலவும் இவருடைய நட்பைத் தக்க வைத்துக் கொண்டால் கடைசிவரை கௌரவத்தோடும் பெருமையோடும் தலை நிமிர்ந்து வாழலாம் என்ற அசட்டு நம்பிக்கையும்தான்.

ஒரு அல்ப சுகத்திற்க்காக இப்படி அவர் காலடியில் விழும்படி நடந்து கொண்டு அசட்டுத்தனமாகப் பேசுகிறோமோ.  இது எங்கு கொண்டு வந்து விடும் என்பது தெரியாமல் இருக்கிறோமே என்று கொஞ்சம் கூட தெரியவில்லை.

அவர் நான் சொன்னதை எல்லாம் கேட்டு ரசிப்பது போல் கேட்டது எனக்குப் பெருமை தாங்க முடியவில்லை.

எல்லாம் பொறுமையாகக் கேட்ட அவர் "அதெல்லாம் சரி, இப்போ எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா? உங்கள் அகஸ்தியரைக் கேட்டு" என்றார்.

"எது வேண்டுமானாலும் கேட்கிறேன் சார்" என்று வேகத்தில் சொன்னேனே தவிர அகஸ்தியர் தன திருவாய் மலர்ந்து எதுவும் அருள மாட்டார் என்பதை அடியோடு மறந்து போனேன்.

"இரண்டு விஷயம்", ஒன்று இருபத்தி நான்கு வயதாகியும் என்னுடைய ஒரே மகள் இன்னும் புஷ்பவதியாக வில்லை.  எத்தனையோ வழிகளில் அறுவைச் சிகிர்ச்சைகள் செய்தும் பயனில்லை. மேல்நாடு சென்று வந்தும் பலன் கிட்டவில்லை.  புத்திர பாக்கியம் கிடைக்குமா? இல்லை அவளதுவாழ்க்கை இப்படியே தான் இருக்குமா? என் சொத்தை எல்லாம் திருப்பதிக்கோ அல்லது அநாதை ஆச்ரமத்திர்க்குக் கொடுத்து விடலாமா? என்பது ஒன்று.

இன்னொன்று எனது கால் எலும்பில் புற்று நோய் வந்திருக்கிறது.  இதையும் அகஸ்தியரால் குணப்படுத்த முடியுமா? அவரால் குணப்படுத்த முடியாமல் இருக்காது.  அப்படி குணப்படுத்த முடியாவிட்டால் இந்த நாடியைப் பற்றிச் சொல்வது எல்லாம் கட்டுக் கதை" என்பதை சொல்லி "நீங்கள் நாடியை இனியும் படிப்பது வீண், விட்டு விடலாம் என்பது என் கருத்து" என்று வெட்டொன்று துண்டு ரெண்டாக ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார்.

நான், நீண்ட நாட்களுக்குப் பின்பு இப்பொழுதுதான் வெல வெலத்துப் போனேன்.

சித்தன் அருள்..................... தொடரும்!

13 comments:

  1. _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

    வாழ்க வளமுடன்! வளர்க அருளுடன்!

    எல்லாம் வல்ல இறைவன், தென்னாடுடைய ஈசன் சிவனின் அருளால் மென்மேலும் எழுதி எங்களை போன்ற சிறுவர்களுக்கு இறை அருளை உங்கள் சித்தன் அருள் மூலம் வழங்கிட வேண்டும்.

    வியாழன் காலையில் முதலில் சித்தன் அருளை பருகி விட்டுதான் அடுத்த பகுதியில் நுழைவேன். ஆனால் வேலை மற்றும் எதோ காரணங்களால் கமெண்ட் போடுவதில்லை, கண்டிப்பாக என் போல் பல அன்பர்கள் இருப்பார்கள். நிறைய எழுதுங்கள், நாங்கள் கமெண்ட் போடாமல் படிக்கிறோம்.

    நீங்கள் சொல்வது போல் நமக்கு சித்தர்கள் வழியை காட்டுவார்கள், நாம்தான் வாழ்ந்து காட்ட வேண்டும். ஆனால், அன்பர்கள் சிலர், கடமையை செய்யாமல் பலனை எதிர்பார்க்கிறார்கள். என்னை பொருத்தவரை நாடி பார்க்கவே ஒரு கொடுப்பினை வேண்டும். ஏனெனில், பல வருடங்களாக அவனை நாடி, அவன் நாடி பார்க்க ஆசை, ஆனால், என் எண்ணம் நிறைவேறவில்லை. சந்தர்ப்பம் கிடைத்த பல அன்பர்கள், அதை சட்டை செய்யவில்லை எனும்போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.

    இந்த கலிகாலத்திலும் கடவுளை காண முடியும் என நான் நினைக்கிறேன். நம்முடைய அன்பு தூயதாய் இருக்குமானால் நாம் கண்டிப்பாக இறைவனை உணர்ந்து பின் பார்க்கலாம். இது சத்தியம்.

    எல்லாம் அவன் செயல்! அவன் அன்பு! அவன் கருணை!

    _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!



    ReplyDelete
  2. இறைபணியில் இன்னல்கள் வருதுபோல தான் இந்த கலிகாலத்தில் இறைவன் பற்றி பேசினாலே இன்னல்கள் வருகிறது! பழித்து பேசி தவறாக எழுதுபவர்களை பற்றி என்ன சொல்வது? நம்மை திருத்திகொள்ளவே பல யுகங்கள் எடுக்கிறது என்ற பொழுது, இப்படிப்பட்ட பெரியவர்களின் அனுபவங்களை தவறு என்று யூகிக்கும் முன் நமக்கு அந்த தகுதி இருக்கிறதா என்று சிந்தித்து பார்க்கவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

    நூறு என்பது ஒரு முக்கியமான எண் . உற்சாக படுத்தும் எண் கூட . ஷத என்று சம்ஸ்க்ருதத்தில் சொல்வார்கள். Century என்றாலே ஒரு பெருமை தான்! அதை தொடுவது சற்று கடினமான செயல். உங்கள் பதிவு 100ஐ எட்டியதற்கு என் வாழ்த்துக்கள்!! ஒரு ஒரு பதிவும் மறைந்த அந்த பெரியவர் நமக்காக ஒரு சில விஷயங்கள் சொல்லவருகிறார் என்று துல்லியமாக புரிகிறது! மறைந்தவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்க மாட்டாறா என்ற ஏக்கம் வருகிறது! எப்பேர்பட்ட வாழ்க்கை வாழ்த்திருக்கிறார்! அவருக்கு மானசீக வணக்கங்கள். மேலும் உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. உங்கள் ஆன்மிக பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தந்து அகத்தியர் பாதத்தில் அவைகளை சேர்ப்பிக்க அடியேனுக்கு வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் அவர் செயல்.

    ReplyDelete
  5. சித்தன் அருள் - 100 ! வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. valthukkal , agathiyar thiruvadigal potri

    ReplyDelete
  7. dear karthikeyan,
    like wind rain and sun the guru also ready to bless all equally
    but whoever faithful and respect to guru it is beneficial to them.
    they receive and feel the devineness of our guru agastier.you are doing the great service to the people to know the guru.please continue the work one day you also get the great blessings of guru don't worry about those valueless comments. thank you
    r.sivakumar

    ReplyDelete
  8. Ungal aanmegapani menmelum sirakka vendum, agathiyarin arul ellorukkum kitta vendum, endrum avarai potruvom - nandrigal Ravi.M.S

    ReplyDelete
  9. ஓம் அகதீஸ்வராய நமக!

    அன்புள்ளம் கொண்டு இறை அருளலும் அகஸ்தியர் ஆசியாலும் தொடரும் தங்களது இப்(இறை)பணியும் கொடுப்பினையே! மேன்மேலும் பல புண்ணிய ஆத்மாக்களும் இதன் மூலம் பயன் பெற இறையையும் கருணை வடிவான சித்தர்களையும் வேண்டுகிறேன்.

    அன்புடன்
    ஜோதிமுருகன்

    ReplyDelete
  10. நீங்கள் நினைப்பதுபோல் என்னிடம் நாடிகிடையாது. அது இருந்த ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பில் அவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். அவர் இன்று இல்லை. அவருக்கு பின் ஜீவ நாடியை வாசிக்க எவரையும் அகத்தியர் தேர்ந்தெடுக்கவில்லை. தகவல் கிடைத்தால் உங்கள் அனைவருடன் பகிர்ந்துகொள்கிறேன். அதுவரை சற்று பொறுமையாக இருங்கள்.

    கார்த்திகேயன்

    ReplyDelete
  11. 'கிரேதா' என்ற பதத்தை 'கிருத' (அ ) 'சத்ய' யுகம் என தயவு செய்து மாற்றவும்.

    ReplyDelete