​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 19 November 2012

மகா சஷ்டி - அவர்கள் வாக்கு - 5


மும் மூர்த்திகளும் நாம் கேட்கும் வரங்களை வாரி வழங்கி நம்மை வாசனையில் சிக்க வைத்து மறுபடியும் பிறவி சூழலில் மாட்டிவிட்டு போய் விடுவார்.  அவர்களுக்கும் மேல் "பராபரம்" என்று ஒன்று உண்டு.  அதை காட்டும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை.  நான் சொல்லும் வழியில் சென்றால் "பராபரத்தை" கண்டு உணர முடியும் என்று சுப்பிரமணியர் தனது "சுப்பிரமணிய ஞானம்" என்கிற வெளிப்பாட்டில் கூறுகிறார் அகத்தியரிடம். அவர் இதை அகத்தியருக்கு மட்டும் தான் உபதேசித்துள்ளார்.  சுப்ரமண்யரோ, அகத்தியரோ நமக்கு உரைத்தால் அன்றி இதன் உண்மையை உணர முடியாது.  "பராபரத்தை" உணர்ந்தவன் பிறவித் தளையிலிருந்து விடுபடுகிறான்.

சுப்பிரமணியர் (சித்தர்களின் தலைவர்)

3 comments:

  1. Great information. Mikka Nandri

    ReplyDelete
  2. om kumaraya nama om kumaraya nama om kumaraya nama

    ReplyDelete
  3. "பராபரம் Means what sir

    ReplyDelete