​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 19 November 2012

மகா சஷ்டி - அவர்கள் வாக்கு - 6


இன்று கந்த சஷ்டி.  சுப்பிரமணியர் சூரனை வதைத்ததாக கூறுவார்.  இங்கு ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.  அன்பை மட்டும் பார்த்து அதுவே சிவம் என்று உரைத்த முருகர் ஒரு உயிரை அழித்திருப்பாரா? இல்லை.  சூரனுக்குள் இருந்த கெட்ட குணங்களை அழித்து நல்ல குணங்களாக மாற்றினார்.  இதை புரிந்து கொள்ள முடியாத நம்மவர் தான் சூரன் பொம்மையை உருவாக்கி அவன் தலையை சுப்பிரமணியர் கொய்வதாகவும் உடனே அதிலிருந்து சேவல் வெளிப்படுவதாகவும் நடத்தி சந்தோஷப்படுகின்றனர்.  சைவம் என்கிற உணவு முறையை போதித்து சாத்வீக குணங்களை வளர்த்து அதிலிருந்து அன்பினால் உலகை வளர்க்க வேண்டும் என்று உபதேசித்த சுப்பிரமணியர் ஒரு அழிவு என்கிற நிலையை உருவாக்கி இருப்பாரா என்று யோசிக்க வேண்டும்.  சூர சம்ஹாரம் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் கெட்ட எண்ணங்கள் வரும் போது சுப்பிரமணியர் நடத்துகிறார் என்பதே உண்மை.  ஏன் என்றால், கெட்ட எண்ணங்கள், வெளியுலக நிகழ்ச்சிகளால் நமக்குள் வருகிறது.  சுப்பிரமணியர் என்பது "வெளி உலக ஞானம்".  புரியும் என்று நினைக்கிறேன்.

எல்லோரும் எல்லா நலமும் பெற்று அமைதியுடன் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த "அவர்கள் வாக்கை" இன்றைய கந்த சஷ்டியுடன் நிறைவு செய்கிறேன்.

ஓம் சுப்ரமண்யாய நமஹா!

2 comments:

  1. Destruction is for the body not for the Aatma which is the true self. So it is ok if senthil andavan destructs ones body and mind.

    ReplyDelete