​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 8 November 2012

சித்தன் அருள் - 98 - போகர் தரிசனம்!


"பேஷ்கார் பேச ஆரம்பித்தால் வெகு நேரமாகும்.  அதற்குள் சாப்பிட்டுவிட்டுப் போகலாமே" என்று அஹோபில மேலாளர் சொன்னபோது, எனக்கிருந்த மனசூழ்நிலையில் தொலைந்த "நாடி" என் கைக்கு கிடைத்தால் போதும் என்றிருந்தது.  சாப்பிடக்கூடிய சூழ்நிலையில் இல்லை.  ஒரு வேளை இந்த வழியாகத்தான் நாடி என் கைவிட்டுப் போகவேண்டும் என்று இருந்தால் ஒருவிதத்தில் நல்லது தான்.  ஆனால் "வேங்கடவனின் பாதத்தில் வைத்துவிட்டுவா" என்று உத்திரவு இட்டதால் அதைச் சரியாகச் செய்ய முடியாமல் போய் விட்டதே என்ற கவலை தான் இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவித்தது.

மேலாளர் சாப்பிட்டுவிட்டு வரும்வரை காத்திருந்தேன்.

லக்ஷ்மி நரசிம்ஹர் சன்னதியில் மனதார வேண்டிக் கொண்டு மேலாளர் "ரெடி" ஆனதும் அவருடன் அரக்கப் பறக்க ஓட்டமும் நடையுமாக பேஷ்காரைப் பார்க்கச் சென்றேன்.

அவர் எதற்காகக் கூப்பிட்டு அனுப்பினாரோ தெரியாது.  ஆனால் என் மனதுக்கு மாத்திரம் "ஓலைச்சுவடி" சம்பந்தமாக இருக்கும் என்று உள்ளுணர்வு சொல்லியது.

"அடடே! இந்த ஆளைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்.  இவர் எப்படி?" என்று பேஷ்கார், என்னைக் கண்டதும் அஹோபில  பொறுப்பாளரிடம் சொன்னது எனக்குப் புளகாங்கிதமாக இருந்தது.

"அஹோபில மடத்திலே தங்கியிருக்கிறேன்" என்றேன் அடக்கமாக.

"என்ன விஷயம் - என்னை வர சொன்னீர்கள்" என்று கேட்டார் மடத்து மேலாளர் பேஷ்காரரிடம்.  இரண்டு பேரும் வெகுநாள் நண்பர்கள் என்று அப்போது தெரிந்தது.

"இதோ இந்த ஓலைச்சுவடியைப் பாரும்" என்று டிராயர் உள்ளே இருந்து ஓலைச்சுவடியை எடுத்து எங்கள் இரண்டு பேரிடம் காண்பித்தார்.

அதைப் பார்த்ததும் அது என்னுடையது என்று தெரிந்தது.  போன உயிர் திரும்பி வந்தது.

"இது எப்படி உங்கள் கைக்கு வந்து சேர்ந்தது?"

அதயேன் கேட்கிற.  யாரோ ஒருத்தன் இப்படியும் அப்படியும் குதிச்சுண்டு இந்த ஓலைச்சுவடியைத் தூக்கிண்டு கோயிலுக்கு வந்திருக்கான்.  பார்க்க பைத்தியம் மாதிரி இருக்கானேன்னு இங்கே வேலை செய்யறவா அவனைத் துரத்திண்டு போயிருக்கா.  சட்டென்று அவனை காணல்ல.அப்போ அந்தச் சமயம் பார்த்து, பெருமாளுக்கு அலங்காரம் பண்ண பூக்கூடையைத் தூக்கிண்டு பட்டாச்சாரியார் வந்திருக்கார். கோயில் கருவறையிலே அந்தப் பூக் கூடையை வச்சு ஒவ்வொரு பூமாலையாக எடுக்கும் போது இந்த ஓலைச்சுவடியைப் பார்த்து என்னவோ ஏதோன்னு நெனச்சுண்டு அதை பெருமாள் பாதத்திலே வச்சு எடுத்துட்டு அப்புறமா என்கிட்டே கொண்டு வந்து இப்பத்தான் கொடுத்துட்டுப் போனார்" என்றார் பேஷ்கார்.

"பெருமாள் பாதத்திலே இது இருந்ததே அது போதும்" என்றேன் உற்சாகத்தோடு.

"ஒரு நிமிஷமா அரை நிமிஷமா ஒண்ணே கால் மணிநேரம் இந்த ஓலைச்சுவடி பெருமாள் பாதத்திலே இருந்துருக்கு" என்று பேஷ்கார் சொன்னதும் எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

ஒரு நிமிஷம் இந்த ஓலைச்சுவடி பெருமாள் பாதத்திலே இருந்தாலே போதும் என்று நினைத்தவனுக்கு அகஸ்தியர் ஒண்ணே கால் மணி நேரம் தன ஜீவ நாடியாம் ஓலைச்சுவடியோடு பெருமாளின் திருப்பாதத்தில் இருந்திருக்கிறார் என்றால் இது ஆச்சரியமான விஷயம் இல்லையா?

இப்படிப்பட்ட அற்புதம் நடக்குமென்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.  இது தெய்வச் செயல்.  அகஸ்தியரின் கருணை.  என்னுடைய பிரார்த்தனைக்குக் கிடைத்த பரிசு - என்று தான் எண்ண வேண்டும்.

பேஷ்கார் சொல்லச் சொல்ல என் மனம் இறைவனுக்கு ஆயிரமாயிரம் நன்றிதனைச் சொல்லிக் கொண்டிருந்தது.

அகஸ்தியர் நாடி மலர்க்கூடையோடு பெருமாள் சந்நிதியில் நுழைந்தது பெருமாளுக்கு மலர் அலங்காரம் நடக்கும்வரை - அந்த ஓலைச்சுவடியைப் பெருமாளின் பாதத்தில் வைக்க வேண்டும் என்ற எண்ணம் அந்தப் பட்டாச்சாரியாருக்குத் தோன்றியது எப்படி? என்று நினைத்து நினைத்துப் பார்த்த பொழுது "அகஸ்தியர் என் கைவிட்டுப் போகமாட்டார்" என்று சந்தோஷமும் நம்பிக்கையும் ஏற்பட்டது.

நிறைய சோதிக்கிறார்.  அதையும் தாங்கி அவரிடம் சரண் அடைந்துவிட்டால் பல்வேறு அற்புதங்களையும் நிறைவேற்றிக் காட்டுகிறார் என்றாலும் அகஸ்தியரை நாடிவரும் அத்தனை பேர்களுக்கும் நல்லது நடந்தால் எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்குமே என்ற ஏக்கம் தான் என் மனதில் தொற்றி நின்றது.

நூற்றுக்கு எண்பது பேர்களுக்கு அகஸ்தியர் நல்வழிகாட்டி, அவர்களது விதியை அனுகூலமாக மாற்றிக் காட்டியிருக்கிறார் என்பது உண்மை.  எனக்கு உள்ள தாக்கம் எல்லாம் பாக்கி இருபது பேர்களுக்கும் அந்த மாதிரி நற்பலனை அடைய வேண்டும் என்பது தான்.

சிலபேருக்கு ஏன் சரியாக நடக்கவில்லை என்பதை அகஸ்தியரிடம் நானே கேட்டு வருத்தப்பட்டிருக்கிறேன்.  அதற்க்கு என் மீது முழு நம்பிக்கை கொண்டு வரவில்லை, இரண்டாவதாக பொறுமை அவர்களுக்கு இருப்பதில்லை மூன்றாவதாக விதையை விதைத்த உடனே மரமாக வளர்ந்து உடனே கனியும் கையில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.  நான்காவதாக நாடி படிக்கும் பொழுது அவர்களது பெயர், பெற்றோரின் பெயர், முன் ஜென்ம பலன் எல்லாவற்றையும் சொன்னால் தான் அது உண்மையான நாடி! இல்லையென்றால் இது ஜீவநாடி அல்ல! என்று எண்ணுகிறார்கள்.  அகஸ்தியர் நாடியை வைத்துப் பிழைப்பதாக அல்லது ஏமாற்றுவதாக என் மைந்தனான உன்னையும் நினைக்கிறார்கள்.  இப்படிப்பட்டவர்களுக்கு நான் எப்படி வழிகாட்ட முடியும்.  அதனால் தான் அவர்கள் வேண்டுகோள், எதிர்பார்ப்பு எல்லாமே தள்ளிப் போகிறது.  இதுதான் சூட்சுமம்" என்று பின்னர் ஒருநாள், மடை திறந்த வெள்ளம் போல் என்னிடம் அகஸ்தியர் சொன்னது இன்னமும், உண்மையாகத்தான் இருக்கிறது 
இது ஒரு புறமிருக்க .....

மிகுந்த சந்தோஷத்தோடு பெருமாள் பாதம்பட்ட இந்த ஜீவ நாடியை வாங்கி கண்ணில் ஒற்றிக் கொண்டேன்.  அஹோபில மட மேலாளருக்கும் திருமலைக் கோயில் பேஷ்காரருக்கும் நன்றியைப் பலமுறை சொன்னேன்.

"எனக்கும் நாடி பார்க்கவேண்டுமே, இப்பொழுது முடியுமா?" என்றார் பேஷ்கார்.

"திருமலைக் கோயிலில் த்வஜ  ஸ்தம்பத்திற்கு முன்பு அகஸ்தியரின் ஜீவநாடி படிக்கும் பாக்கியம் எனக்கு இருக்குமேயானால், அதற்கான உத்திரவை அகஸ்தியர் கொடுத்தால் பேஷ்காருக்கு மாத்திரமல்ல அத்தனை பேருக்கும் படிக்க நான் தயார் என்றேன்.

"இதற்கெல்லாம் கூட அகஸ்தியரிடம் உத்திரவு வாங்க வேண்டுமா, என்ன?" பேஷ்கார் கேட்டார் 

"ஆமாம்" என்று சொல்லி, ஆறுமாதகாலம், நாடிபடிக்க அகஸ்தியர் எனக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவங்களை எல்லாம் சொன்னேன்.

"அப்படியானால் எப்பொழுது எனக்குப் பாக்கியம் கிடைக்குமோ அப்போது கேட்டுக் கொள்கிறேன்" என்றார் பவ்யமாக.

ஐந்து நிமிடம் வேங்கடவனை மனதார வேண்டி அகஸ்தியரிடம் உத்தரவை எதிர்பார்த்தேன் 

"திருமாலின் பாதத்தில் என்னுடைய ஓலைச்சுவடி வைத்தது கண்டு மகிழ்ச்சி அடையும் உங்களுக்கு இந்த ஓலைச்சுவடி எப்படி பெருமாளின் பாதத்திற்குப் போனது என்ற கதையைச் சொல்கிறேன் கேள்."

திருமாலின் பொற்பாதத்தில் வைப்பதற்கு முறையாக யாரும் என்றைக்கும் அனுமதி தரமாட்டார்கள் என்பது அகஸ்தியருக்கும் தெரியும்.  ஒரு விளையாட்டு செய்யலாமென்ற எண்ணத்தோடு தான் உனக்கு நான் கட்டளையிட்டேன்.  எனது சிஷ்யர்கள் பலருண்டு.  அவர்களுள் போக சிஷ்யனைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பாய்.  மங்கோலியச் சித்தன் அவன்.  முருகப் பெருமானை நவ பாஷாண சிலையாக வைக்க வேண்டும், அவன் தரிசனம் எனக்கு மட்டுமல்ல ஆயிரக்கணக்கான பூலோக மக்களுக்கும் கிட்ட வேண்டும் என்று ஒரு பௌர்ணமி அன்று பழனிமலையில் யாம் போகனை வேண்டினேன்.

எனது வேண்டுகோளை  போகனும் ஏற்றான்.  இந்தப் பழனி மலையிலேயே முருகப் பெருமானுக்கு நவ பாஷாண சிலையை உருவாக்கிக் காட்டுகிறேன் என்ற போகர் அதனை ஒன்பது வருடங்களாகப் போராடி போராடிச் செய்து காண்பித்தான்.  இதைக் கண்டு யாம் பெரிதும் உவகையுற்றோம்.  அந்த போகனுக்கும் திருமலை தரிசனம் செய்ய வேண்டும்  என்ற எண்ணம்  ஏற்பட்டது.  அவன் இங்கு வந்திருக்கும் போதுதான், உன் கையிலிருந்த எனது ஒலைக்கட்டைக் கண்டான்.  அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.  உன் கையிலிருந்த ஒலைக்கட்டைப் பித்தனாக மாறி, பிடுங்கிக் கொண்டவன் திருமாலுக்கு அலங்காரம் செய்யும் மலர்க்கூடைக்குள் சேர்த்தான்.  பின்னர் வழிபட்டான்.  அந்தப் போகனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.  அவன் தான் திருமாலின் கருவறைக்குள் இக்கட்டையும் நீண்ட நேரம் வைத்த்திருக்க  உதவினான் அவனும் இப்பொழுதான் திருமாலை தரிசனம் செய்து செல்கிறான்"  என்று மாத்திரம் சொல்லிவிட்டு அகஸ்தியர் காணாமல் போனார் 

பிறகு எத்தனையோ தடவை படிக்க முயன்றும் அகஸ்தியர் வரவில்லை.

இந்தச் செய்தியைப் படிக்கப் படிக்கக் கேட்டு கொண்டிருந்த பேஷ்காரும் அஹோபில மேலாளரும் மெய்  மறந்து போனார்கள்  சித்தர்களும் முனிவர்களும் திருமாலை அவ்வப்போது வெவ்வேறு உருவத்தில் வழிபாட்டு வருகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான் 

ஆனால் 

பெருமாளின் கருவறையில் ஒன்றே கால் மணி நேரம் அகஸ்தியரின் ஜீவநாடி பெருமாளின் காலடியில் இருந்ததற்கும்  பெருமாளின் திருக்கல்யாண அலங்கார வைபவத்தை போகனும் கண்டு சென்று இருக்கிறார் என்ற தகவலும் கிடைத்த பிறகு  நான் நானாக இல்லை.

இந்த பாக்கியத்தைப் பெற்ற அகஸ்தியரின் ஜீவநாடி இந்தப் பூலோக மக்கள் அனைவருக்கும் நல்ல வழியை காட்டி மனதை நிம்மதியாக மாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.

இதற்காக என் தந்தை மன  வருத்தம் அடைந்தாலும் பரவாயில்லை ஊரார் உலகத்தோர்   கேவலமாகப்  பேசினாலும் பரவாயில்லை, அகஸ்தியரின் பாதங்களைக் கெட்டியாகப் பிடித்து கொள்ள வேண்டும் என்ற வெறிதான் தோன்றியது.

உண்மையில் "போகர்" தான் அந்த மொட்டையனாக வந்தவரா? என்ற சந்தேகம் அஹோபில மேலாளருக்குத் தோன்றிற்று.  ஏனெனில் அவர் தீவிரமான வைணவர்.  லக்ஷ்மி நரசிம்மரையும், வேங்கடவனையும் தவிர வேறு யாரையும் நம்புபவர் அல்லர்.  எனவே அவர் அகஸ்தியர் சொன்னதையும் "போகர்" வந்ததையும் சிறிது கூட நம்பவில்லை.  நான் கதை விடுவதாகத் தான் நம்பினார் என்பது எனக்குப் பின்னால் தான் தெரிந்தது.

ஆனால் அன்று இரவு அஹோபில மடத்தில் ராத்திரி பன்னிரெண்டு  மணிக்கு நடந்த சம்பவம்.  அப்பப்பா! இன்றைக்கும் மெய் சிலிர்க்க வைக்கிறது.

சித்தன் அருள்.................. தொடரும்!

10 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக !
    ஓம் அகத்தீசாய நமக !
    ஓம் அகத்தீசாய நமக !

    மன்னிக்கணும். கமெண்ட் பகுதியில் CAPTCHA எடுத்துவிட்டால் நல்லா இருக்கும், அது சில சமயம் சரியாக பார்க்க முடியவில்லை.சில சமயம் அந்த காரணத்திற்காக கமெண்ட் செய்ய முடிவது இல்லை. எப்படியும் நாங்க செய்யும் கமெண்டை தாங்கள் படித்து பார்த்து தான் போடுகிறீர்கள். அதை எடுத்தால் சிரமம் இல்லாமல் கமெண்ட் செய்ய ஏதுவாக இருக்கும் என்று எண்ணுகிறேன். தவறாக இருப்பின் மன்னிக்கவும்

    தங்களின் இந்த சேவை தொடரட்டும்...நன்றி வணக்கம் சாமிராஜன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சுவாமி!

      தாங்கள் கூறியதில் எந்த குறையும் இல்லை. ஒவ்வொரு தொகுப்பின் கடைசியில் "கமன்ட்" "நோகமன்ட்" என்று இருப்பதை "கிளிக்"இனால் உங்கள் பொன்னான வார்த்தைகளை பதிவு செய்யலாம். அதில் எதுவும் பிரச்சினை இருப்பதை நான் காணவில்லை. ஆனால் யார் தங்கள் எண்ணங்களை பதிவு செய்தாலும் அதை நான் சரி சொன்னால் தான் அங்கு பதிவு செய்யப்படும். இது ஒரு பாதுகாப்புக்கு, ஏன் என்றால், அகத்தியரையும் அந்த பெரியவரையும் பழித்து பதில் போடுகிற நிறைய பேர்களும் இங்கு இருக்கிறார்கள். பலமுறை நான் அந்த மாதிரி காமண்டை அழித்துவிட்டிருக்கிறேன். என்ன செய்ய! அவர்கள் கர்மா. நான் யாரையும் இதையெல்லாம் நம்ப வேண்டும் என நிற்பந்தப்படுத்துவதில்லை. இருந்தாலும் எல்லாரும் படிக்கும் அளவுக்கு மோசமான வார்த்தைகள் வந்தால் அதை நான் அனுமதிப்பதில்லை.

      தாங்கள் எழுதும் எண்ணங்கள் எப்போதும் தெளிவாக இருப்பதை பார்த்திருக்கிறேன். நன்றி!

      கார்த்திகேயன்!

      Delete
    2. மதிப்பிற்குரிய திரு. கார்த்திகேயன் அவர்களே வணக்கம். தங்களின் தெளிவான / விரிவான பதிலுக்கு நன்றி.
      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் நமது வாசகர்களுக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.
      நன்றி வணக்கம் சாமிராஜன்.

      Delete
  2. Ayya, is it possible to load some divine message for our reading for 6 days of Maha Skanda Shasti? It will be a blessing to begin the day with guru's blessing.

    ReplyDelete
  3. வணக்கம் நந்தகுமார்!

    நல்ல எண்ணம். முயற்சி செய்வது மட்டும் தான் என் செயல். அவர் அருளினால், தர முடியும் என்று திண்ணமாக நம்புகிறேன். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று!

    கார்த்திகேயன்

    ReplyDelete
    Replies
    1. நல்ல முயற்சிக்கு அகத்தியர் எப்பொழுதும் துணை இருப்பார். தயவு செய்து முயற்சி செய்து எங்களுக்கு அமுதத்தை தாருங்கள்.
      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் நமது வாசகர்களுக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.
      நன்றி சாமிராஜன்.

      Delete
  4. Dear friends,

    Maha Skanda Shasti is here. Time to celebrate the grace and love of our lord going to shower on us for this 6 holy days.

    Aum Sharavanabhava

    ReplyDelete
  5. ஒம் அகத்திசாய நமஹ

    ReplyDelete
  6. ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி !

    ReplyDelete